( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மனம் எனும் வண்டியை நாம் ஓட்ட வேண்டும்


கேள்வி : மனிதன் ஏன் பாவம் செய்கிறான்?
                                       பழனி  குடியாத்தம்

    இறைவன் படைப்பில் மனிதனுடைய செயல்கள் மட்டும்தான் பாவபுண்ணிய கணக்கில்வரும் மற்ற ஜீவன்களுக்கு அத்தகைய சூழ்நிலை இல்லை, மனிதன் தன் மனத்திற்கு இதமளிக்கக் கூடிய செயல்களையே விரும்பிச் செய்கிறான், இன்னின்ன பொருள்களால் தனக்கு சுகம் வரும் எனக் கருதும் போது ஆசைவயப்படுகிறான், இந்த ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ளவே தவறு எனத் தெரிந்தும் ஆணவத்தின் போக்கில் பல பாவச் செயல்களைச் செய்கிறான், அதனால்தான் கௌதம புத்தர் ‘ஆசையே துன்பத்திற்குக் காரணம். ஆசையை ஒழித்தால் இன்பம் அடையலாம்’ என்றார், ஆசையை ஒழித்து பாவத்தில் ஈடுபடாமல் இருக்க வேண்டுமென்றால் மனம் எனும் வண்டியை நாம் ஓட்ட வேண்டும், அந்த வண்டி நம்மை ஓட்ட நாம் அனுமதிக்கக்கூடாது,

கேள்வி : ஆன்மீக வாழ்வில் (நிலையயில்) உயர்வடைய சிவனை வழிபடலாமா? விஷ்ணுவை வழிபடலாமா?
                                                                                      வாசுகி  சென்னை

    சிவனும். விஷ்ணுவும் தனித்தனியாகக் கூறப்பட்டிருந்தாலும் இறைவன் ஒருவன் தானே என்ற எண்ண ஓட்டத்தில் நீங்கள் இக்கேள்வியைக் கேட்டிருந்தால் அதை முற்றிலும் மாற்றிக் கொள்ளுங்கள், ஹரியும் சிவனும் ஒன்றுதான், இதில் எனக்கு எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை, ஆனால் ஹரியகா இருக்கும்போது ஒரு செயலலையும். சிவனாக இருக்கும்போது ஒரு செயலையும் செய்கின்றான், இது எப்படி என்றால் ஒருவன் தகப்பன் ஸ்தானத்தில் இருக்கும்போது ஒரு மாதிரியாகவும் மகன் ஸ்தானத்தில் இருக்கும்போது ஒரு மாதிரியாகவும் நடந்து கொள்கிறான் அல்லவா? நீங்கள் கேட்டிருப்பது ஆன்மீக வாழ்வில் முன்னேற யாரை வழிபடுவது என்பது தானே? எம்பெருமான் நாராயணனை வழிபடும் போது இவ்வுலக வாழ்க்கையில் துன்பங்களைக் களைகிறான், பரமேஸ்வரனை வழிபட்டாலோ பரவுலகத்திலும் ஏற்படும் துன்பத்தைக் களைகிறான், என்னைப் பொருத்தவரையில் தியானம். யோகம் ஆகியவற்றுக்கெல்லாம் சிவனே மூர்த்தி என்று கருதுகிறேன், வைணவ. சைவ பேதங்கள் எல்லாம் பக்குவமில்லாத மனிதர்களுக்குத்தான், ஏனென்றால் “இராமன் சிவபூஜை செய்கிறார்; சிவன் இராம நாமம் ஜெபிக்கிறார்”


+ comments + 5 comments

கடவுள் வழிபாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை இருந்தும் நம்பிக்கை உடையோருக்கு எனது வாழ்த்துகள்...அவர்களுக்கான பதிவு அருமை....

சிவாய நம..ஹ >>>
<<< நம சிவாய...
சித்தம் போக்கு சிவன் போக்கு...

manoharan
12:58

ஐயா வணக்கம் தங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்துவருகிறேன்
நான் ஒரு நாஸ்திகன் என்பதை மறந்துவிடுகிறேன் உங்கள் எழுத்தால்

nice article

அய்யா வணக்கம் ,

மனிதன் தான் சிற்பங்களை உருவாக்கி கடவுளாக வணங்க வைத்தான் என்றால், உண்மையான கடவுள் யார்? அவருடைய உருவம் என்ன?

ஜோதியே கடவுள் என்றால், சிவன் ,விஷ்ணு , ப்ரம்ஹா , பார்வதி , லட்சுமி , சரஸ்வதி , விநாயகர் , முருகன் , ஐய்யப்பன் ............ இன்னும் பல, இவர்கள் எல்லாம் யார்?

விளக்கம் தேவை.

இவன் ,

இந்து மார்க்கத்தை நேசிப்பவன்.
இந்து கலாச்சாரத்தை விரும்புபவன்.
கடவுளை உணர துடிப்பவன்.


Next Post Next Post Home
 
Back to Top