Store
  Store
  Store
  Store
  Store
  Store

சிறந்த நடிகர் கமலா? ரஜினியா?


சினிமாவை நீங்கள் மதிக்கின்றிர்களா?

    செய்தி தாள்கள் புத்தகங்கள் தொலைக்காட்சிப் போலவே சினிமாவும் நல்ல ஊடகம்தான் அதை அவமரியாதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை

புத்தகங்களை படித்து முன்னேறியவர்கள் உண்டு சினிமாவை பார்த்து உருப்பட்டவர்கள் யாராவது உண்டா?

  புத்தகம் படிப்பவர்களெல்லாம் புத்திசாலி அவர்கள்தான் முன்னேற முடியும் என்று நினைப்பதே தவறுதலானது உருப்படியில்லாத மாயா வாதநூல்களை படித்து தானும் கெட்டு ஊரையும் கெடுத்தவர்கள் எத்தனையோ உண்டு இன்றைக்கு உலகையே மிரட்டிக் கொண்டிருக்கும் திவிரவாதிகளில் பலர் சினிமாவை பார்த்து வந்தவர்கள் அல்ல

  மாறாக தவறான தகவல்களை மையமாக வைத்து எழுதப்பட்ட புத்தகங்களையே படித்து வந்தவர்கள் என்பதை மறக்க முடியாது வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம் புத்தகம் படித்து கெட்டுப் போனவர்களின் எண்ணிக்கை எப்படி குறைவோ அப்படி சினிமா பார்த்து உருப்பட்டவர்கள் குறைவு என்று

   அதற்கு காரணம் சினிமா என்பதை  மனித சமூகம் கலையாக பொழுது போக்கு சாதனமாக மட்டுமே அதிகம் பயன் படுத்துகின்றது என்று சொல்லலாம்


சினிமாவினால் ஏற்பட்ட நன்மைகள் என்று எதாவது சொல்ல முடியுமா?

   நிச்சயம் சொல்லலாம் அளப்பறிய சோகம் தருகின்ற மரண நிகழ்வு ஒன்றை நாம் சந்திக்கின்றோம் துயரத்தால் இதயம் சுக்கு நூறக சிதறிக்  கிடக்கும் போது போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா  என்ற பாடலை கேட்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் கொஞ்சம் ஆறுதலாகவும் தெம்பாகவும் இருக்கும்

  மனிதனுக்கு வேறு என்ன தேவை ? துக்கத்தில் கிடக்கும் போது தூக்கிவிடும் படியாக ஒருவார்த்தை கிடைத்தால் போதாதா? பனைமரத்தைக் கூட ஒற்றைக் கையால் பிடுங்கும் சக்தி வந்துவிடுமே!

  பாசமலர் பாகப்பிவினை போன்ற படங்களால் ஈர்க்கப்பட்டு குடும்ப பொறுப்புக்களை திறம்பட கவனிக்க ஆரம்பித்த எத்தனையோ மனிதர்களை நான் அறிவேன் அதேப்போல கப்பலோட்டிய தமிழன் சிவகங்கைச் சீமை வீரப்பாண்டியக் கட்டப்பெம்மன் போன்ற திரைப்படங்கள் இன்றையச் சிறுவர்களுக்கு கூட சிறந்த பாடப்புத்தகமாக திகழ்கிறது

நீங்கள் சொல்வதெல்லாம் பழைய படங்கள் இப்போது அப்படிப்பட்ட படங்கள் எதுவும் இல்லையே?

  பொறுப்பான இயக்குநர் பலர் இப்போது கூட இருக்கிறார்கள் காலத்தால் அழியாத பாரதி படம் ஒன்றே இதற்கு நல்ல உதாரணம்

  படிக்க வேண்டிய வயதில் வேலைக்கு வந்து அல்லல் படுபவர்களைப்பற்றிய அங்காடித்தெரு காதலுக்கு உதவப் போய் சிலருடைய வாழ்க்கப் பாதையே மாறிப்போகும் யதார்த்தத்தை சொல்லிய நாடோடிகள் அண்ணன் தம்பி பாசம் குடும்ப ஒற்றுமை இவைகளை உள்ளபடி காட்டிய மாயாண்டி குடும்பத்தார் என்று எத்தனையோ புதிய படங்கள் கூட நல்ல விஷயங்களை பற்றிய ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை மக்கள் மத்தியில்  உருவாக்கியிருக்கின்றது

  மேலும் தற்போது பிரபலமாக உள்ள நடிகர்கள் கதையம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க தயாராக இல்லை தங்களது தனிபட்ட இமேஜ் வளரவேண்டும் என்பதற்காகவே நடிக்கிறார்கள் இதனால் மசாலாக் கதைகளே மீண்டும் மீண்டும் எடுக்கப்பட்டு திரையிடப்படுகின்றன இதனால்தான் தமிழ் திரைவுலகம் இன்னும் முன்னேறாமல் கிடக்கிறது

நவீன தொழில் நுட்பம் நமது சினிமாவை ஆக்கிரமைத்துள்ளது பற்றி?

    அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில் தவறில்லை ஆனால் அவைகள் நமது இந்திய கலையம்சத்தை சிதைக்காத வண்ணம் இருக்க வேண்டும் ஆனால் நிஜம் வேறுமாதிரியாக உள்ளது

  பலஇந்திய திரைப்படங்களை பார்க்கும் போது ஏதோ அந்நியத்தன்மை அதிகம் தெரிகிறது இத்தகைய நிலயை வளர்ச்சி என்று சொல்வதை விட வீக்கம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது

கடைசியாகா சம்மந்தம் இல்லாத ஒரு கேள்வி தற்போது தமிழ்நாட்டில் சிறந்த நடிகர் யார்?

  தமிழகத்திலும் சரி உலக அளவிலும் சரி நிரந்தரமான சிறந்த நடிகர் சிவாஜி கணேசன் தான் அவருக்கு இணை யாருமே கிடையாது  இருப்பினும் தற்காலம் என்று கேட்பதினால் கமல்ஹாசன் நல்ல திரைமசாலியான நடிகர் எனலாம் அவருக்கு அடுத்தப்படியாக சூர்யாவை சொல்லலாம் இந்த வரிசையில் நிச்சயம் ரஜனிகாந்தை சேர்க இயலாது கேட்பதற்கு கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை!


Contact Form

Name

Email *

Message *