( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

உயிர் பறிக்கும் வீடுகள்

  மிக நெருக்கமான ஒரு நண்பரை வெகு நாட்களுக்கு பிறகு சந்தித்தேன். அவர் நெற்றியில் இருக்கும் சந்தன பொட்டு அழகா? அல்லது அவர் சிரிப்பு அழகா? என்று போட்டி போட்டு கொண்டு பளிச்சென்ற இருக்கும் அவர் வேரோடு  பிடுங்கி போட்ட தக்காளிச் செடி வாடி வதங்கி கிடப்பது போல் சோர்ந்து போய் இருந்தார், மனிதர்களுக்கு வயது நாப்பதை கடந்து விட்டாலே வாசல்படி தேடிவந்து பல நோய்கள் ஆட்டமாய் போடுகிறாய் இரு இரு செமத்தியாய் கவனிக்கிறேன் என்று கடின பார்வை பார்த்துவிடுகிறது, அப்படிதான் நண்பருக்கு ஏதாவது வியாதிகள் தாக்கியிருக்குமோ என்று நினைத்தேன்.

    என் நினைப்பை அவரிடம் தயங்காமல் கேட்டும் விட்டேன், நோய் எல்லாம் ஒன்றுமில்லை முன்பு போலவே இப்போதும் காலை ஐந்து மணிக்கே எழுந்து விடுகிறேன். யோகாசனம். பிரணாயாமம். தியானம் எல்லாம் வழக்கமாக செய்கிறேன். பீடி சிகரெட் பழக்கமில்லை. சைவ சாப்பாடுதான் தலைவலி காய்ச்சல் என்று சின்ன சின்னப் உபாதைகள் வந்து போகுமே தவிர ஆண்டவன் அருளால் இதுவரை பெரிதாக நோய்கள் எதுவும் இல்லை, என்று சொன்னார்.


   மனிதனுக்கு வருகின்ற கஷ்டங்களில் முதன்மையானது நோய் தான். பணக்கஷ்டம் வந்தால் கூட முடிந்தவரை சமாளிக்கலாம். முடியாத போது எங்கேயாவது ஓடி ஒளிந்து கொள்ளலாம். உடம்புக்கு நோய் என்று வந்துவிட்டால் உடலை விட்டுவிட்டு எங்கே ஓடுவது? தலை சுமையையாவது சற்று நேரம் இறக்கி வைக்கலாம். நோய் சுமையை எப்படி இறக்கி வைக்க முடியும்? ஆகவே ஒரு மனிதனின் பெரிய கஷ்டம் நோய்தான் என்று இதுவரை நம்பி வந்தேன்.   

    கட்டு குலையாத மேனியை கூட செல்லரிக்க செய்துவிடும் நோய். ஆனால் இவரோ தனக்கு நோய் இல்லை என்கிறார். ஆனால் செல்லரித்த மரமாக நிற்கிறார். அப்படியென்றால் இவருக்கு என்ன பிரச்சனை? அவரிடமே மீண்டும் கேட்டேன் உங்களது பழைய தோற்றம் முழுமையாக காணாமலேயே போய்விட்டது. ஏதோ பெரிய பஞ்சத்தில் அடிப்பட்டது போல் காணப்படுகிறீர்கள் ஆளையே மாற்ற கூடிய துக்கம் வந்திருந்தால் மட்டும் தான் இப்படி இருப்பீர்கள்? என்ன காரணம் என்றேன்,

  நோய் மட்டும் தான் மனிதனை உருகுலைக்கும் என்று இல்லை, உடல் நோயை விட கொடியது மனநோய், உறுதியான இரும்புத் துண்டை தண்ணீர் துறுபிடிக்க வைத்து முற்றிலுமாக அழித்து விடுவது போல் மன துயரம் என்பதும் மனிதர்களை அழித்துவிடுகிறது. எனக்கு பணமில்லையே, பதவியில்லையே என்ற வருத்தம் கிடையாது. எனக்கென்று யாரும் இல்லையே என்ற கவலை தான் என்னை தின்று கொண்டு இருக்கிறது. பிறக்கும் போதே அனாதையாக பிறந்தால் அது பழகி போன துயரமாகி விடும்.  வளர்ந்து வரும் போது கூட வந்த சொந்தங்கள் ஒவ்வொன்றாக நம்மை விட்டு மறையும் துயரம் இருக்கிறதே அதை சாதாரண மனதுடைய மனிதர்கள் தாங்கி கொள்ளவே முடியாது.


         பிறந்தவன் எல்லாம் ஒரு நாள் இறந்து தான் ஆக வேண்டும் என்ற விதி எனக்கு தெரியும், சந்தனமும், ஜவ்வாதும் பூசி அலங்கரிக்கின்ற உடம்பு என்றாவது ஒரு நாள் மண்ணில் மக்க வேண்டும் அல்லது பிடி சாம்பலாக வேண்டும் என்ற நியதி நான் அறியாதது அல்ல. ஆறுதலும், அறிவுரைகளும் மற்றவர்களுக்கு சொல்லும் போது சுலபமாகவும் இருக்கிறது. சுகமாகவும் தெரிகிறது. ஆனால் நாம் பாதிப்படையும் போது ஆறுதல் மொழிகளெல்லாம் வெறும் சத்தமாகத் தான் கேட்கிறது. என்று விரத்தியுடன் பேசினார். அவர் பேச்சில் இருந்த துயர நெருப்பு கருத்தில் உள்ள குளிர்ச்சியை மறைத்தது. ஏதோ ஒரு பெரிய துயரத்தை அடுக்கடுக்காக அவர் சந்தித்தனால் தான் இப்படி பேசுகிறார் என்பதை புரிந்து கொண்டேன். அதற்கு மேல் அவரை கேள்விகள் கேட்டு தொல்லைபடுத்த நான் விரும்பவில்லை.

    மதிய உணவிற்கு பிறகு சற்றுநேரம் ஓய்வெடுத்துவிட்டு மாலைநேர பணிகளை நான் கவனித்து கொண்டிருந்தபோது மீண்டும் என்னிடம் வந்து  அவர் ஒரு பத்து நிமிடம் உங்களிடம் தனியாக பேசவேண்டும் என்றார். சிறிது நேரத்தில் நாங்கள் தனிமையானோம். அவர் பேச ஆரம்பித்தார் எனது தந்தையாருக்கும் அவரின் சகோதர்களுக்கும் நிலம் சம்பந்தமான பிரச்சனை வெகுகாலமாகவே இருந்து வந்தது. கோர்ட் வாய்தா என்று எனது அப்பா எப்போதுமே அலைந்து கொண்டிருப்பார்.

 ஒரு வழியாக சில பெரிய மனிதர்களின் சமதான முயற்சினால் எங்களுக்கு சேர வேண்டிய பங்கு சரியாகவே கிடைத்துவிட்டது. எனது தகப்பனாரின் நெடு நாளைய கனவு தாத்தாவின் தென்ன தோப்பிற்குள் சிறிய அழகான வீடு கட்டி வாழ வேண்டும் என்பது நிலம் கைக்கு வந்ததும் அம்மாவின் நகைகளையும் என் மனைவியின் நகைகளையும் விற்று தோப்பிற்குள் வீடு கட்டும் வேலையை ஆரம்பித்தார்.


    கட்டிட பணி அஸ்திவார அளவிற்கு பூர்த்தியான போது ஒரு நாள் இரவில் உறங்க போன அப்பா காலையில் விழிக்காமலேயே போய் சேர்ந்துவிட்டார். எந்த நோயும் அவருக்கு இல்லை. உடலை பரிசோதித்த டாக்டர் திடிரென்ற ஏற்பட்ட ரத்த அழுத்தத்தால் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் வெடிப்பு ஏற்பட்டு இருக்கும்  என்று சொன்னார். எதிர்பாராமல் ஏற்பட்ட மரணம் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல என்னை ஆக்கி விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் நான் தவித்த போது ஆறுதல் சொல்லிய அம்மா, அப்பாவின் ஆசைப்படி வீட்டை கட்டப் பார் என்று சொன்னார்கள். நின்று போயிருந்த வீட்டு வேலையை ஆறுமாதம் கழித்து மீண்டும் துவங்கினேன். சுவர்கள் மேல் எழும்பி கான்கிரிட் போட வேண்டியது தான் பாக்கியமாக இருந்தது.
   
    இந்த வேளையில் குளியலறைக்கு சென்ற அம்மா வழுக்கி கீழே விழுந்து கால் ஒடிந்து படுத்த படுக்கையானர். அப்பாவின் மரணம் என்பது சத்தமில்லாமல் வந்த வேதனையாகும். அம்மா அனுபவித்த வேதனையோ அணு அணுவாக என்னை கொன்றது. 60 நாட்கள் படுக்கையில் இருந்து புண்ணாகி துளிதுளியாய் மரணவலியை அனுபவித்து கண்ணை மூடினார்கள்.  


இத்தோடு என்னை பிடித்த துயரம் விட்டது என்று நினைத்தேன். அம்மா காலமாகி இரண்டே மாதத்தில் நன்றாக இருந்த என் மனைவி ஒரு நாள் ஜீரத்தில் விழுந்தாள் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டாள், என்னிடம் இருந்த பணம் எல்லாம் போனாலும் கவலை இல்லை. என் ஒரே மகன் தாயை இழந்து விட கூடாது என்று எத்தனையோ மருத்துவமனைகளில் சேர்த்து பெரிய பெரிய மருத்துவர்களை எல்லாம் வைத்து பார்த்தேன். கடவுளுக்கு இரக்கமே இல்லை. கடைசியில் என்னையும் என் மகனையும் அனாதையாக்கி விட்டார். இத்தனை துயரங்களை வரிசையாக சந்தித்த பிறகும் எனது தகப்பனாரின் கடைசி ஆசையான அந்த வீட்டை கட்டி முடிக்கவே நான் விரும்புகிறேன்.

    அமைதியாக இருந்த கடலில் திடிரென சூறாவளி ஏற்பட்டு கப்பல் தலை குப்புற சாய்ந்தது போல் என் குடும்பம் சாய்ந்தது. இந்த வீட்டவேலையை ஆரம்பித்து பிறகு தான் நான் நன்றாக இருந்தவரையில் வாஸ்து, ஜோதிடம்  என்பவைகளை நம்பியது இல்லை. வாழ்க்கையில் ஒன்றன் பின் ஒன்றாக பெற்ற அடி அவற்றிலும் ஏதாவது உண்மையாயிருக்குமோ? என்று என்னை எண்ண வைத்ததினால் தான் உங்களை தேடி வந்தேன். ஒரு வீட்டு வேலையை துவங்குவதினால் இத்தனை பாதிப்புகள் ஏற்படுமா? என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் தான் விள்க்கவேண்டும் என்றார்,

  நமது முன்னோர்கள் நமக்கு தந்த சாஸ்திரங்கள் எதுவுமே பொய்யில்லை. நமது குறை உடைய அறிவால் அவற்றை படித்துவிட்டு உண்மையை உணர முடியாமல் அவைகள் எல்லாம் மூடநம்பிக்கை  என்று வீணாக பேசிக் கொண்டு திரிகிறோம். வாஸ்து என்பதும், நல்ல புவியியல் விஞ்ஞானம் தான் வானத்தில் இருக்கும் மற்ற கிரகங்களுக்கு எப்படி ஈர்ப்பு சக்தி உண்டோ அதை போலவே பூமிக்கு உண்டு. பூமியின் உயிரோட்ட ஆதர்ஷனம் வடகிழக்கு திசையிலிருந்து தென்மேற்காக செல்கிறது. இந்த நிலையை அறிந்து அதற்கு ஏற்றாற் போல கட்டிடங்களை அமைத்து கொண்டால் வாழ்க்கையில் ஏற்படுகின்ற துன்பங்களிலிருந்து ஓரளவு தப்பித்து கொள்ளலாம்.


     இதற்கு விஞ்ஞான ஆதாரம் ஏதாவது உண்டா? அப்படி போவதை கண்ணால் காட்ட முடியுமா? என்று சிலர் கேட்கலாம். நமது உடம்பில் உஷ்ணம், குளிர்ச்சி போன்றவைகள் ஏற்படுவதை அனுபவ ரீதியாக நாம் அறிவோம். விஞ்ஞான பூர்வமான மருத்துவதுறை என்று கருதப்படுகின்ற அலோபதி மருத்துவம் அதை ஏற்று கொள்வதில்லை. எண்ணெய் தேய்ப்பதினால் ஏற்படும் பலனை கூட அவர்கள் ஒத்து கொள்வதில்லை, எனவே விஞ்ஞானத்தில் இதற்கு ஆதாரம் இல்லை. அவைகளால் பயன் என்பதெல்லாம் வெறும் கற்பனை தான் என்று ஒதுக்கி விட முடியுமா?

  அப்படி ஒதுக்கினால் கெடுதி ஏற்படுவது யாருக்கு? நிச்சயம் நமக்கு தான், விஞ்ஞான  உலகம் என்பது கண் முன்னால் உருவமாக தெரிகின்றதை மட்டுமே ஏற்று கொள்ளும், மற்றவைகளை ஏற்று கொள்ளாது. அதற்காக அவை பொய்யென ஆகிவிடாது. வாஸ்து என்பதும் அப்படி தான் அதனால் ஏற்பட்ட சாதக பாதகங்களை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும்.

    இந்தியாவின் கட்டிடகலை மரபு கி.மு.3000 ஆண்டுகளுக்கு முன்னாலே தோன்றிவிட்டது எனலாம். கட்டிடம் கட்டுவதில் மிக நீண்ட அனுபவம் உடைய பொறியாளர்கள் திட்டமிட்டப்படி ஒரு கட்டிடம் உருவாகும் போதும் உருவாக்கம் பெற்ற பிறகும் என்னென்ன நிகழ்வுகள் நிகழ்கின்றன என்பதை மிக ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தி கண்டறிந்து தான் வாஸ்து விஞ்ஞானமாகும். பிரபஞ்ச இயக்க முறையில் அமைந்திருக்கும் ஒழுங்கு பூமியை மட்டும் கட்டுப்படுத்தாமல் விடாது, 
  பிரபஞ்ச ஒழுங்கு என்ற ஆகர்ஷனம் முறைதவறி போனால் உலகத்தின் செயல்முறை முற்றிலும் அழிந்துவிடும். அதே போன்று தான் பூமியின் உயிர் சலனமும் ஆகும். கட்டிடம் ஒன்று கட்டி எழுப்ப நிலத்தை கீறும் போது அது சரியான கோணத்தின் நீள அகலத்தில் இருந்தால் அந்த கட்டிடத்திற்குள் நல்ல அதிர்வெலைகள் நிறைந்திருக்கும். குளறுபடியான அமைப்புகள் இருந்தால் நிச்சயம் எதிர் மறையான நிகழ்வுகள் தான் ஏற்படும் என்று விளக்கமாக சொல்லி அவர் கட்டிக் கொண்டிருந்த வீட்டின் வரைபடத்தை வாங்கி பார்த்தேன்.

    நான் எதிர்பார்த்த படியே நைறுதி என்ற தென்மேற்கு மூலையில் கழிவறைக்கான பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல் அந்த திசை நோக்கிய தண்ணீர் வழிந்து செல்வதற்கான வாட்டம் காட்டப்பட்டிருந்தது. வடமேற்கு திசையிலுள்ள வாயு மூளையில் சமையல்கட்டு அமைக்கப்பட்டிருந்தது. இந்த அமைப்பில் உள்ள வீடு வாஸ்து சாஸ்திரப்படி நிச்சயம் குறை உடைய வீடு தான், ஆனால் தொடர்ச்சியான மரணங்களை ஏற்படுத்துகின்ற அளவுக்கு குறையுடையதா என்றால் நிச்சயம் வீட்டில் குடிபுகும் வரை அப்படி நிகழ வாய்ப்பில்லை. அதனால் கட்டிட அமைப்பில் மட்டும் குறையில்லை.


    வாஸ்து என்பது ஒரு துண்டு நிலத்தை எட்டு பகுதிகளாக பிரித்து எந்தெந்த பகுதியில் என்னென்ன அறைகள் வைக்க வேண்டும் என்பதை சொல்வதாகும். இது சம்பந்தப்பட்ட மனையடி சாஸ்திரம் என்று ஒன்று உண்டு. அது ஒரு கட்டிடத்தின் நீள அகலத்தையும் மண்ணின் தன்மையையும் நிலத்தின் சொந்தகாரன் ஜீவன தொழிலையும் அடிப்படையாக வைத்து பல விஷயங்களை சொல்கிறது. அது மட்டுமல்லாமல் மண்ணுக்குள் மறைந்து மக்கி போகாமல் இருக்கும் மனிதன் மற்றும் விலங்குகளின் எலும்பு துண்டுகளின் தன்மைகளையும் ஆராய்ந்து பேசுகிறது.
 
   உணவுக்கு அறுசுவை இருப்பதுபோல மண்ணுக்கும் கார்ப்பு, துவர்ப்பு என சுவைகள் உண்டு. குறிப்பிட்ட மண்ணின் சுவை எதுவென அறிந்து அதற்கு ஏற்றாற்போல கட்டிடத்தின் நீள அகலத்தை கணக்கிட வேண்டும். அதே போல மனையின் கிழக்கு திசை சரியாக எட்டு டிகிரிக்குள் இருக்க வேண்டும். அதை தாண்டி இருந்தால் கட்டிடம் கட்டி முடிப்பதற்குள் பல சோதனைகள் வரும். மண்ணுக்கடியில் எலும்பு எதாவது இருந்தால் கூட இத்தகைய தொடர்சோதனைகள் வரலாம். இதையெல்லாம் கவனத்தில் வைத்து அந்த நண்பரிடம் உங்களது வீட்டின் வரைபடத்தில் பல குற்றங்கள் உள்ளன. அதை நீக்கி சரியான கோணத்தில் கட்டிட அமைப்பை கொண்டுவரவேண்டும். மேலும் மண்ணின் தன்மையை ஆராய்ந்தால் தான் சரியான முடிவுக்கு வரமுடியும். எனவே அந்த நிலத்திலிருந்து சிறிதளவு மண்ணை கொண்டு வாருங்கள் என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்.

    இன்று இருக்கின்ற இடநெருக்கடியிலும் பண பற்றாக்குறையிலும் ஒரு அடி நிலம் சொந்தமாக வாங்குவதே அரிது இதில் அந்த மண் என்ன சுவையுடையது அது கிழக்கு பகுதிக்கு எத்தனை டிகிரி நேர்கோட்டில் வருகிறது. மண்ணுக்குள் எலும்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை எல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்க யாரால் முடியும். இடத்தை வாங்கினோமோ? கடன் உடன்பட்டு வீட்டை கட்டினோமோ என்று தான் போக முடிகிறது. என சிலர் முணு முணுப்பதை நாம் அறியாமல் இல்லை. சரியான திசை உடைய மனை தான் அமைய வேண்டும் என்றால் பலருக்கு சொந்த வீடுகளே அமையாது. ஆனால் நிலம் எப்படி இருந்தாலும் கிழக்கு திசையை அனுசரித்து கட்டிடம் கட்டி கொள்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.


    சரி பக்கத்து வீடுகள் எப்படியிருந்தாலும் தெரு பார்ப்பதற்கு அழகில்லாமல் போனாலும் திசையை பார்த்து கட்டிடம் கட்டலாம். மண்ணின் சுவை எலும்பு போன்றவைகளுக்கு என்ன செய்வது? என நாம் குழம்புவோம் என்று எதிர்பார்த்து நமது முன்னோர்கள் மிக சுலபமான மாற்றுவழியை கண்டுபிடித்து சொல்லி இருக்கிறார்கள். மண்ணின் சுவை எதுவாகவும் இருக்கலாம். அதற்குள் எந்த எலும்பு வேண்டுமென்றாலும் புதைத்து கிடக்கலாம். அது என்ன ஏது என்று ஆராய்ந்து யாரும் மண்டையை குழப்பி கொள்ள அவசியமில்லை

  சிக்கலை உருவாக்கிய கடவுள் அதை தீர்ப்பதற்கான வழியையும் நிச்சயம் வைத்திருப்பார். சற்று நிதானமாக கவனித்தாலே அந்த வழி நமக்கு தெரிந்துவிடும். நமது தமிழ்நாட்டில் உள்ளவர்களும் சரி ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களும் வன்னிமரத்தை நன்கு அறிவார்கள். சின்ன சின்ன கிளைகளிலும் ரோஜா செடியில் உள்ளதை போன்ற சிறிய முட்கள் இருக்கும் அந்த மரம் பல சிவன் கோவில்களில் இன்றும் இருக்கிறது. அந்த மரத்திற்கு எலும்புகளை விரைவில் மக்க  வைக்கும் சக்தியும் மண்ணின் சுவை எதுவானாலும் அதை இனிப்பாய் மாற்றும் சக்தியும் உண்டு.

  அந்த மரக்கிளையில் எட்டு சிறிய துண்டுகளை நீங்கள் வீடுகட்ட போகும் மனையின் எட்டு திசைகளிலும் ஒன்று முதல் இரண்டு அடி ஆழத்தில் புதைத்து விட்டால் இரண்டு மாதத்தில் மண்ணின் தன்மை தோஷங்கள் நீங்கி நல்லதாக  மாறிவிடும். அதன் பிறகு நீங்கள் அதில் தாராளமாக வீடு கட்டி கொள்ளலாம். ஆனால் மிக கண்டிப்பாக கட்டிடத்தின் உள்ளமைப்பு தென்மேற்கு திசையில் படுக்கை அறையும், வடமேற்கு திசையில் கழிவறையும் வடகிழக்கு திசையில் பூஜை அறை தென்கிழக்கு திசையில் சமையல் அறையும் கண்டிப்பாக அமைய வேண்டும்.
   இவைகளில் மாறுபாடு இருந்தால் நிச்சயம் நல்ல பலன்களை நமது ஜாதகப்படி ராஜயோகம் பலன்களே வருவதாக  இருந்தாலும் குமஸ்தா பலன்களை தான் அனுபவிக்க முடியும். எனவே புதியதாக  வீடு கட்டுபவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்க நினைப்பவர்கள் நிச்சயம் இத்தகைய அமைப்போடுதான் வாங்க முடியும் என்ற சொல்ல இயலாது. அவர்கள்  கண எருமை விருச்சம், பூத வேதாள உப்பு. கருநொச்சி வேர் உட்பட இன்னும் பல மூலிகைகள் கலந்த விஷ்வா என்ற கூட்டு  மூலிகை கலவையை பயன்படுத்தினால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பதை பல அனுபங்களால் என்னால் சொல்ல இயலும்.

    அந்த நண்பர் சில நாட்களிலேயே தனது வீட்டு மண்ணை என்னிடம் கொண்டுவந்து கொடுத்தார் அதற்கு தக்க மாற்று ஏற்பாட்டை செய்து கொடுத்தேன். இன்று அவர் தன் மகனோடு புதிய வீட்டில் அப்பாவின் ஆசைப்படி சந்தோஷமாக வாழ்கிறார்.


 

+ comments + 8 comments

manak kashtam arumai. aththudan vaashthu koduththullathu mikavum arumai . vaallthukkal.

நல்ல ஆழமான, நீளமான பதிவு. சரளமான நடை.

அன்புள்ள திரு ராமானந்த குரு அவர்களுக்கு எனது தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.இந்த கட்டுரையை எனது மனையடி சாஸ்திரம் என்ற பதிவுக்கு இணைப்பாக கொடுத்துள்ளேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

i really observe these principles and enjoying the benefits
Sivakumar
Civil engineer
bahrain

thanks for following my blog...
but according to me you cant satisfy all the laws of vasthu... there has to be a flaw in that project, otherwise life will be very simple to live...

vaasthupadi oru pooranamaana veettai kattuvathu mudiyaatha kaariyam anbathu enathu thaazhmayaana karuththu... ethayo ondrai seithaal etho ondru kurai aagi thaan nirkkirathu...

மண்ணின் தன்மையை மாற்றவும், மறைந்து கிடக்கும் எலும்புகள் மக்கவும், மேலும் வாஸ்து குறைகளை களையவும் தாங்கள் கொடுத்துள்ள கருத்துக்கள் மிகவும் பயனுள்ள கருத்துக்களாகும். மேலும் முழுமையாக வாஸ்துவை கடை பிடிப்பது இயலாத காரியம் என்று கருத்துப் பதிவில் திரு. சூரியா ஜீவா குறிப்பிட்டிருப்பதும் உண்மையே!! குறைகளை முழுமையாக களையாவிட்டாலும்,முடிந்த மட்டிலும் களைவதும் நல்லதல்லவா!! மிக்க நன்றி.

pradeep
20:27

குபேர மூலைக்கிம் அக்னி மூலைக்கும் இடையில் under ground ல் store room போடலாமா.pls guide me


Next Post Next Post Home
 
Back to Top