Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆண்கள் முட்டாளாவது எப்போது...?

  ப்படியொறு கேள்வியை வாசகர்கள் முன்னால் வைத்திருந்தோம் எதிர்பார்த்த அளவிற்கு பதில்கள் சுறுசுறுப்பாய் வரவில்லை ஒருவேளை தாங்கள் முட்டாளான விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள பல ஆண்களுக்கு வெட்கமோ என்னவோ வந்த சிலபதில்களில் சுவையானவற்றை பதிவு செய்து யோகி ஸ்ரீ ராமானந்த குருவின் காட்டமான ஆனால் நிஜமான பதிலையும் பதிவு செய்துள்ளோம்  

 
   ரக்கண்ணால் பார்ப்பாள் நமட்டுச் சிரிப்பு சிரிப்பாள் கால் விரல்களால் கோலம் போட்டு மனதை கிரங்க வைப்பாள் இத்தனை அழகிலும் சொக்கிப்போய் கல்யாணம் கட்டிக்கலாமா என்று கேட்டால் பேங்கில் பேலன்ஸ் எவ்வளவு என்பாள் பாருங்கள் அந்த நேரத்தில் நம்மாளு முழிப்பான் பாரு ஒரு முழி அப்பத்தான் ஆம்பிள்ளை வர்க்கமே முட்டாள் என்ற நெசம் தெரியும்  

                                                                                                                       மாணிக்கம்  திருச்சி


ரு பெண்ணை உண்மையாக காதலிக்கும் பொது.... 

                                                     P.V. Praveen Sundar  MCA, Mphil CS.,
  பொண்ணு பார்க்க போகும் போது தலைநிமிற மாட்டாங்க தப்பித்தவறி கல்யாணத்திற்கு முன்பு தனியா சந்திக்க வாய்ப்பு வந்தால் உதடு பிரியாம பேசுவாங்க நடந்து போனாக் கூட கொலுசு சத்தம் காதில் விழாது இதையெல்லாம் நம்பி அமைதியான பொண்ணுன்னு கல்யாணம் முடிச்சா மூனு மாசங்கழிச்சி நம்ம அம்மா கிட்ட போடுவாங்க பாரு ஒரு சண்டை அப்பத்தெரியும் ஆண் எப்போ முட்டாளா ஆனான்னு   

                                                                           தங்கவேல் ராஜா   மேட்டுபாளையம் 


  தோழுல சுமந்து நெஞ்சில போட்டு வளத்து அல்லும் பகலும் தூங்காம கால் கால்பணமாய் சேர்த்து கல்யாணம் கட்டிக் கொடுத்த உடனேயே எங்க வீட்டுக்கு போயிட்டு வரேன்ப்பா என்று புருஷனின் கையை பிடிச்சி நடந்து போவாப்பாரு நான் பெத்தப் பொண்ணு அப்பத்தான்யா ஆம்பிள்ள நெசமான முட்டாளு

                                                                                                  ராமஸ்வாமி  மதுரை 


 ப்போது ஒருவன் தன்னை புத்திசாலி என நினைத்து செயல்படுகிறானோ அப்போதே அவன் முட்டாளாகி விடுகிறான்

அதற்கு உதாரணம் தான் இந்த கதை  இது நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய கதை

டீ மாஸ்டர் தன் நண்பரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
‘இதோ வருகிறானே சின்னப் பையன் இவன் அடி முட்டாள்’

அப்படியா எப்படிச் சொல்ற?


‘இதோ பாரேன்’ என்று மேஜையில் ஒரு ஐந்து ரூபாய்
நாணயத்தையும் பத்து ரூபாய் நோட்டையும் வைத்தார்.
சிறுவன் உள்ளே வந்தான்.


’தம்பி இதுல உனக்கு எது வேணுமோ அதை எடுத்துக்கோ’
என்றார் மாஸ்டர்.


 சிறுவன் தயக்கமே இல்லாமல் ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்தான். சிறுவன் சென்றதும், ‘பாத்தியா சின்னப் பையன்றது சரியா இருக்கு. எத்தனை தடவை இப்படி கேட்டாலும் காசைத்தான் எடுப்பான் நோட்டை எடுக்க மாட்டான். அறிவே வளரல’ என்றார் மாஸ்டர்.நண்பர் கிளம்பிய போது, வெளியில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.


”ஏன்ப்பா பத்து ரூபாயை எடுக்காம அஞ்சு ரூபாய எடுத்த? “  என்றார்.


அதற்கு சிறுவன் தந்த பதில்,” எப்போ நான் பத்து ரூபாயை எடுக்கிறேனோ அன்னைக்கு இந்த விளையாட்டு நின்னுடும். அப்புறம் எனக்கு அஞ்சு ரூபா கிடைக்காது”

                                                                                       ஜோதி  பானு       ஆவடி

 
  னிதனது எதிர்பார்பில் தான் ஏமாற்றம் பிறக்கிறது ஏமாறுபவன்தான் நிஜமான முட்டாள் எதிர்பார்ப்பு குறைய குறைய மனிதனின் அறிவு செழுமை அடைகிறது வாழ்க்க நிறைவானதாக தெரிகிறது இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான விதி! இதில் எல்லாமே சமம்தான் .

  ஆனாலும் இந்தக் கேள்வி ஆண்முட்டாளாய் ஆவது எப்போது என்பதுதான் பலநேரங்களில் ஆண்கள் மற்றவர்களை முட்டாளக்கித்தான் பழக்கப்பட்டிருக்கிறான் உடலழகை மட்டுமே பார்த்து பெண்ணை தேர்ந்தெடுத்து விட்டு மனைவி தன்னை ஏமாற்றியதாக நடிக்கிறான் மனைவி பேச்சால்தான் தாய்தகப்பனை விட்டு பிரிவதாகவும் நடிக்கிறான் அண்ணன் தம்பியை பகைப்பதற்கும் பெண்ணே காரணம் என்று பொய் சொல்கிறான் ஆக இப்படி தன்னையும் சமூகத்தையும் ஏமாற்றும் ஆண் எல்லா நேரமும் முட்டாள்தான்

 
                                            

Contact Form

Name

Email *

Message *