Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஜனங்க எல்லாத்தையும் மறந்து ஓட்டு போடுவாங்க!    மது அரசியல் ஜாம்பவான்கள் தினசிரி உதிர்க்கும் கருத்து முத்துக்களை பொறுக்கி எடுத்து இடையில் எனது நையாண்டியையும் கோர்த்து வாசகர்களுக்காக ஒரு சின்ன மாலை கட்டியுள்ளேன் படித்து பாருங்கள் பரவாயில்லை யென்றால் மீண்டும் தொடர்வோம் முகம் சுழிக்க வைத்தால் இத்துடன் முடித்துக் கொள்வோம்

   மைச்சர் வீரப்பாண்டி ஆறுமுகம் சில நாட்களுக்கு முன் சைரன் பொருத்திய காரில் சிறைக்குச் சென்று சுரேஷைச் சந்தித்தார். ''கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவரை அமைச்சர் ஒருவர் சிறைக்குச் சென்று பார்ப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அமைச்சரின் இதுபோன்ற செயல் புலன் விசாரணைக்கு குந்தகம் ஏற்படுத்தும்.

  விபரம் தெரியாமல் யாரோ சொல்லுகின்ற கதையாக இருக்கிறதே! அமைச்சர் என்றால் ரௌடிகள் அடியாட்கள் குண்டர்கள் கொலைகாரர்கள் என்று உறவு வைக்காமல் இருக்க முடியுமா? அத்தகைய நட்பு இல்லாமல் பிழைப்பு நடத்த முடியுமா? சுற்றியிருக்கும் உறவுக்கும் கைத்தடிகளுக்கும் சோறு போடுவது யாறு? நான் அமைச்சர் சட்டப்படித்தான் நடப்பேன் குற்றவாளியை எல்லாம் ஜெயிலில் போய் பார்க்க முடியாதுன்னு நன்றி கெட்டத்தனமா நடந்து கொள்ள முடியுமா? மினிஸ்ட்டர் சாப் நீங்க நடத்துங்க உங்க ராஜ்ஜியத்தை கூட 100 ரூபாய் சேர்த்துக் கொடுத்தால் போச்சி ஜனங்க எல்லாத்தையும் மறந்து ஓட்டு போட்டுடூவாங்க! 


   லங்கையில் மனிதருக்கும், யானைகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்து வருகின்றன. உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.

   இலங்கை என்றாலே மோதல்தானா? இதுவரை புலிகளோடு மோதிய சிங்கள அரசாங்கம் இனி யானைகளோடு மோதினா நல்லாத்தான் இருக்கும் ஆனால் யானைகளுக்கு அந்த துணிச்சல் வருமா? வந்தாலும்தான் இந்தியா கொடுத்த குண்டை போட்டு முள்வேலிக்குள்ளே போட்டு அடைச்சு சாகடிச்சிடுவாங்களே!  ங்கிலாந்தின் தென்பகுதியில் உள்ள ஒரு ஊருடைய ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சமூகம் மொத்தமும் போப்பாண்டவர் வழங்கிய திருச்சபை மாற்ற யோசனையை ஏற்று ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு மாறுகின்றனர்.

  ஐயோடா நம்மூரு பாதிமாருங்க கல்லைக் கும்பிடாம கர்த்தரை கும்பிட வாங்கன்னு கூப்பிடுராங்க இங்கிலாந்தில் என்னன்னா கர்த்தரை விட்டுற்று கன்னிமரியா கூட போராங்களே! இது என்ன கொடுமை இந்தப் போப்பாண்டவரு சும்மா இருக்க மாட்டாரா எங்க ஊரு அல்லேலூயா கோஸ்ட்டிங்க இவருக்கு சாபம் கொத்தே கொன்னுடப் போராங்க ஜாக்கிரதை  


   சென்னை முகப்பேரில் திங்கட்கிழமை மாலை தொழிலதிபர் மகன் கீர்த்திவாசன் கடத்தப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

   நமது தமிழக முதலமச்சர் தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கெல்லாம் நல்லா இருக்கு திருட்டு கொள்ளை என்று எதுவும் இல்லைன்னு சொல்லியிருக்கார் அதனாலஇந்தக் கடத்தல் சமாச்சாரம் தமிழ்நாட்டில் நடந்ததாக இருக்கவே இருக்காது நல்லா யோசிச்சி பாருங்க மும்பை கல்கத்தா இப்படி எங்கையாச்சும் தான் நடந்திருக்கும் பெரியார் கொள்கைக்கார மனுஷன் ஆளக்கூடாதுன்னு எந்தப் பார்ப்பனனோ கதைகட்டி விட்டிருக்கலாம்   ற்போது இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக வரும் ஒபாமா,மும்பையில் பள்ளி மாணவர்களுடன் தீபாவளி கொண்டாட உள்ளதாக பாதர் தெரிவித்தார்.

 ஓபாமா கொண்டாடாத தீபாவளியா! அவரு கைவசம்தான் ஏகப்பட்ட பட்டாசு வைத்திருக்காரே பொழுது போகலைன்னா ஒவ்வொறு பட்டாசா எடுத்து ஈரான் மேல போடலாம் ஆப்கானிஸ்தான் வாலிலும் பற்ற வைத்து வேடிக்கை காட்டலாம் ஆனா ஓபாமா அண்ணாச்சிக்கு பற்வைக்கும் பட்டாசு சிலநேரம் தன்மீதே விழுந்திடும் என்கிற ரகசியம் தெரிந்தா நல்லா இருக்கும் அவரு பெரிய இடத்து மனுஷன் யார் சொல்கிற புத்தியும் சூடுபடும் வரைக்கும் காதில் விழாது   முதலாளிகளை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பொருளாதார கொள்கைகளை பின்பற்றுவதால் தான், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளன,'' என, உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

 எல்லா முதலாளியும் காங்கிரஸ் பா.ஜ.க. என்று பெரிய கட்சிகளைப் பார்த்தே காசு கொடுத்தால் வராதா கோபம்! சின்னக்கட்சித் தலைவருங்க வயிறு காய்ந்து கிடப்பது இந்த முதலாளிங்க கண்ணில் படவே படாதா? இனியொறு சட்டம் கொண்டு வரலாம் தேர்தல்வரும் போதெல்லாம் நாட்டிலுள்ள அரசியல்வாதிகளுக்கு இத்தனை கோடி அன்பளிப்பு கொடுத்தாகனும் அப்படிக் கொடுக்காத முதலாளிகள் விலைவாசி ஏற்றத்திற்கு காரணமாய் இருக்கிறார்கள் என்று சொல்லி நாடு கடத்தப் படுவார்கள் என்று அப்பத்தான் சரிப்படும் 


   டந்த 5 ஆண்டு அரசியல் வாழ்வில், நான் மக்களின் பணியாளனாகவே உணர்வதாக, பீகார் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் உருக்கமாக பேசினார்.

 இது பேதுங்க நீங்கத்தான் அடுத்தப் பிரதமர் என்ன இந்தியா ஒரு பெரிய நாடு இங்க என்ன தலைபோற பிரச்சனைஇருக்கப் போகுது இப்படி நாலு ஸ்டேட்மண்ட் விட்டா ஜனங்க ஜோரா கைட்டி வாய்பிளந்து ஓட்டைப் போட்டு விடுவாங்க அப்புறமா பதவி வந்த உடனே இவுங்கப் பணத்திலேயே வெளிநாட்டு சுற்றுப்பயணமாய் போய்கிட்டே ஆப்ரிக்காவுக்கும் ஆஸ்ரேலியாவுக்கும் கண்டணம் வேண்டுகோள் அது இதுவென சொல்லி ஜாலியா பொழுதை ஓட்டலாம் அட! உங்க அப்பாக் கூட இபடித்தான் ஆட்சி நடத்தினாறு ஜனங்க அதையெல்லாம் பெரிசா எடுத்துக்க மாட்டாங்க  நீங்கப்பாட்டுக்கு உங்க பிலிம் வண்டிய ஓட்டுங்க இப்போதைக்கு நீங்கத்தான் எங்க மக்களோட அறிவிக்காத ராஜா 


    மிழகத்தில் காவல்துறை செயலிழந்துள்ளது. திமுக அரசு கடத்தல்காரர்களிடம், குற்றவாளிகளிடம் மிகவும் மென்மையாக நடந்து கொள்கிறது. இதனால் குழந்தைகள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

 இன்னா மேடம் யோசிக்காம பேசுறீங்க யாரு ஆட்சி வந்தாலும் எங்க தலை யெழுத்து அவ்வளவுதான் நீங்கள் ஆட்சியிலிருந்த போதும் இந்தக் கதை தான் நடந்து  இனிமேலும் இப்படித்தான் நடக்கும் விட்டுத்தள்ளுங்க  தமிழ்நாட்டு காவல்துறை மாதிரியே உங்க கட்சியும் செயலிழந்து உள்ளதாக பேசிக்கிறாங்க அதை முதலில் கவனிங்க அப்புறமா ஒருமுக்கியமான விஷயம் சீக்கிறமா விஜயகாந்த் சாரு கிட்டப் பேசி கூட்டணி பற்றி முடிவுக்கு வாங்க அ.இ.அ.தி.மு.க.வை காப்பாற்றும் ஓரே சக்தி இப்போதைக்கு அவருதான் காங்கிரஸ் வெறும் மண்குதிரை! 


   ங்களுக்கு பதவிகள் மீது விருப்பமில்லை. ஆனால் மாற்றுக் கட்சியினர் நமது சமுதாயத்துக்காக இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்தச் சலுகைகளுக்காகவும் போராடுவதில்லை. நமக்காக போராடவே நமக்கு பதவிகள் வேண்டும் அன்புமணி ராமதாஸ்

 உங்களுக்கும் உங்க அப்பாவுக்கும் பதவி ஆசையே இல்லைன்னு சின்னக்குழந்தைக்கு கூடத்தான் தெரியுமே இதை நீங்க வேறு சொல்ல வேண்டுமா என்ன? வன்னிய மக்களுக்காகத்தான் கஷ்டப்பட்டு தேர்தலில் நிற்காமல் வேறு யாருக்கும் வாய்ப்புக் கொடுக்காமல் அவசர அவசரமா மத்திய மந்திரி ஆனிங்க வன்னிய மக்களுக்காகத்தான் மெடிக்கல் காலேஜை உங்க அம்மா பெயரில் கெண்டு வர்ரீங்க வன்னிய மக்களுக்காகத்தான் தைலாபுரம் தோட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்து குவிச்சி வைத்திருக்கீங்க வன்னிய மக்களுக்காகத்தான் உங்க மாமா மற்றும் சொந்தக்காரங்க எல்லாம் ரியல் எஸ்ட்டேட் பிஸ்னஸ் பண்ணுராங்க உங்க தியாக வராலாறு ஊருக்கேத்தான் பட்டவர்த்தனமாய் தெரியுமே  இதைவேறு சொல்லி விளங்க வைக்கணுமா? போங்க! போயி யாராவது கூட்டணிக்கு ஆள் சேர்க்கிறார்களான்னு பாருங்க! 


 மிழகத்தில் காங்கிரஸ் அழிந்துவிட்டதாக ஏளனம் செய்தனர், ஆனால் அங்கு காங்கிரஸ் உயிர்ப்புடன்தான் உள்ளது என்பது இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார்.

 தமிழ் நாட்டு காங்கிரசுக்கு உயிர் இல்லைன்னு சொல்லும் தைரியம் யாருக்கு உள்ளது? அப்படி ஒரு பாதக வார்த்தையை சொன்ன மகாபாவி யார்? பிடித்து வாருங்கள் அந்தக் காதகனை நடுச் சந்தியில் தூக்கில் போட வேண்டும் முள்கிரீடம் வைத்து சம்மட்டியல் அடித்து சிலுவையில் அறைய வேண்டும் என்ன துணிச்சல் இல்லாத ஒரு பொருளுக்கு உயிரே இல்லை என்று சொல்வது எத்தனைப் பெரிய மோசடி! தமிழ் நாட்டில் காங்கிரசே  இல்லை பிறகு எப்படி அதற்கு உயிர் இல்லை யென்று அந்த வஞ்சகன் சொல்வான்?Contact Form

Name

Email *

Message *