Store
  Store
  Store
  Store
  Store
  Store

இவர்களுக்கு எப்போது தீபாவளி


  தீபாவளி கொண்டாடுபவர்களுக்கும் கொண்டாட மனமிருந்தும் முடியாத மாற்று மத நண்பர்களுக்கும் இதயம் கனிந்த தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

  5 வருடத்திற்கு முன்பு ஒரு தீபாவளி நாள் மாலைப் பொழுது ஒருபட்டாசுக்கடை முன்னால் காரை நிறுத்தி பட்டாசு வாங்குபவர்களை வேடிக்க பார்த்துக் கொண்டிருந்தேன் குழந்தகள் பெரியவர்கள் என்ற வித்தியாசம் இல்லாது அனைவரின் முகத்திலும் சந்தோஷப் புன்னகை அணிவகுக்க விதவிதமான வெடிவகைகளை வாங்கிச் சென்றனர்  சில பெருசுக்கள் முகத்தில் பாடுபட்ட காசு இப்படி கரியாகப் போகப் போகிறதே என்ற ஏக்கம் இருந்தாலும் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்கும் நச்சரிப்புக்காகவும் செலவு செய்கிறோம் என்ற நிறைவு இருந்ததை காணமுடிந்தது

 பல குழந்தகள் ஒரு முயல்குட்டியை நெஞ்சோடு அணைப்பதைப் போல மத்தாப்பு பெட்டிகளை அரவணைத்துக் கொண்டு நடந்து சென்ற காட்சி நிஜமாகவே புதுவித பரவசத்தை தரும்

  இப்படிப்பட்ட ஒரு விழாவை உருவாக்கிய சமூகம் நிச்சயமாக பாரட்டப்பட வேண்டிய சமூகம்தான் அதில் சந்தகமே இல்லை ஏழை பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று அனைத்து தரப்பினரும் தங்களது தனிப்பட்ட பிரச்சனைகளை மறந்து அல்லது தள்ளிவைத்து செயற்கயாகவாவது குதுகலத்தை வரவழைத்துக் கொள்ள வருடத்தில் ஒரு நாளை தேர்ந்தெடுத்திருப்பதே பாரட்டப்பட்டாக வேண்டிய விஷயம் தான் என்ற எண்ணத்தில் என்னை மறந்து அந்தக்காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தேன் என்றே சொல்லலாம் 


  அந்த வேளையில் பட்டாசுக்கடைக்கு வெளியே இன்னொறு காட்சியும் என் கவனத்தைக் கவர்ந்தது ஒரு சின்னப் பையன் பத்து வயசு இருக்கலாம் இடுப்பில் ஒரு பழய துணியை சுற்றியிருந்தான் மேலே சட்டை இல்லாத உடம்பில் எலும்புகள் வரிசையாய் தெரிந்தது மூக்கில் இருந்து சளி வழிந்து அவன் உப்பிய வயிற்றில் காய்ந்துபோய் படமாக தெரிந்தது

 வைத்த விழிவாங்கமல் பட்டாசுக் கடையையே பார்ப்பதும் வாங்கிக் கொண்டு வெளியில் வருபவர்களின் கையில் உள்ள பட்டாசுக் கட்டுக்களை விரல் விட்டு எண்ணுவதும் அவனது வேலையாக இருந்தது ஒவ்வொறுவரும் அவனைத்தாண்டி நடக்கும் போது அவனிடத்திலிருந்து புறப்பட்ட ஏக்கப் பார்வை என் மனதைப் சம்மட்டியால் அடிப்பது போல் உணர்ந்தேன்

  இவனைப் போல எத்தனைப்பேர் இருப்பவன் வாங்குவதை இயலாமையுடன் மனதிற்குள் அழுதவண்ணம் பார்த்துக் கெண்டிருப்பார்கள் ஊரேக் கூடி தேர் இழுக்கும் போது பசியால் வயிறு இழுத்த இழுப்புக்கு வழி தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பார்கள் அழுகின்ற பிள்ளைக்கு ஒருவாய் பால்வாங்கி கொடுக்க கூட முடியாத நிலையில் இருப்பார்கள் 


   இப்படிச் சிந்தனை எனக்குள் ஒன்றன்பின் ஒன்றாக தோன்றி இதயத்தைக் கனத்துப்போக செய்தது ஆசையை நிறைவேற்ற வகையற்ற அந்தப் பச்சைப்பிள்ளைக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் எனக்குள் எழுந்தது என் வாகன ஓட்டுனரை அனுப்பி பையனைக்கூட்டிவர செய்தேன்

  மிரள மிரள விழித்த வண்ணமே அவன் என்னிடம் வந்தான் பொதுவாக குழந்தைகள் என் தாடி மீசையையும் கூன் விழுந்த முதுகையும் பார்த்துப் பயப்படுவார்கள் இவனும் அப்படித்தான் இருக்க வேண்டுமென நினத்துக் கொண்டேன் ஆனால் அவன் என் பக்கத்தில் வந்ததும் அறிமுகம் ஆனவன் போல் சிரித்தான்

 அத்தோடு மட்டுமல்ல உங்கள் போட்டோ எங்கள் வீட்டில் இருக்கிறது என் சொல்லவும் செய்தான்  எனக்கு ஆச்சர்யமாக இருந்தது என் போட்டோ உன் வீட்டில் எப்படித் தம்பி இருக்கும்? என்று கேட்கவும் செய்தேன்

 அதற்கு அவன் நீங்கள் போன வருஷம் என் அக்கா பேச்சிப் போட்டியில் ஜெயிச்சதுக்கு பரிசு கொடுத்தீங்க அல்லவா அப்போது பிடிச்ச படம் என்று தெளிவாகப் பதில் சொன்னான் அசந்துப் போய்விட்டேன் 

 
   தீபாவளிக்கு உனக்கு புது துணி வாங்கியாச்சா? என்று நான் கேட்ட மாத்திரத்திலே எந்தவித யோசனயும் இல்லாமல் சட்டென்று பேசினான் போன மாசம்தான் எங்கப்பாட்டி மஞ்சக்கமாலை வந்து செத்துப் போனங்க அவுங்க கருமாதிக்கு புதுத்துணி வந்தது அந்த சட்டையை நாளைக்கு போடுவேன்  என்றான்

 அவனது பேச்சில் ஒருவித கனவு இருந்தது ஒரு ஏழைக்கு புத்தாடை என்பது தான் செத்துப் போனாலோ அலது தன் செந்தம் செத்துப் போனாலோத்தான் கிடைக்கும் என்கிற எதார்த்தத்தை அவன் எனக்கு புரியவைத்தான்

  சட்டைப்பயிலிருந்து நூறு ரூபாயை எடுத்து அவனிடம் நீட்டி உனக்குப் பிடித்தமான பாட்டாசு வாங்கிக்கோ என் சொன்னேன் என் கையில் பணத்தைக் கண்டதும் பாம்பைக் கண்டவன் போல் பின்வாங்கினான் அவசர அவசரமாக வேண்டாம் என மறுதான்

 நான் வாங்கிக் கொள்ளும்படி வலியுருத்தினேன் என் ஓட்டுனர் கட்டாயப்படுத்தியும் பார்த்தார் எங்கள் அப்பா யாருக்கிட்டேயும் இலவசமா பணம் வாங்கக்கூடாது அப்படி வாங்கினால் சாமி சாகடிச்சிடும் என்று சொல்லியிருக்கார் அதனால் எனக்கு வேண்டவே வேண்டாம் என்று மறுத்தவன் என்னிடமிருந்து ஓடிப்போய் பழைய இடத்தில் நின்று கொண்டான்

  எனக்கு அவனையும் அவன் தகப்பனையும் நினைத்து பெருமையாக இருந்தது இப்படி எத்தனை லட்சியப் புருஷர்கள் இந்த நாட்டில் வறுமையிலும் செம்மயாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் ? அவர்கள்அனைவரும் என்று தீபாவளி கொண்டாடுகிறார்களோ அன்றுதான் இதன் பெயர் தீபங்களின் விழா அதுவரை இது வெறு பகட்டுப் பண்டிகையே ஆகும் என எனக்குத் தோன்றியதால் அன்று முதல் தீபாவளி கெண்டாடுவதை விட்டு விட்டேன் ஆனாலும் கொன்டாடுபவர்களுக்கு வாழ்த்துச் சொல்லலாம் அல்லவா? அதனால் மீண்டும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

Contact Form

Name

Email *

Message *