Store
  Store
  Store
  Store
  Store
  Store

மந்திரங்களால் மனிதர்கள் அழிவார்களா...?

  சில நாட்களுக்கு முன்பு எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது இங்கிலாந்து நாட்டிலிருந்து ஒரு ஸ்ரீலங்கன் பேசினார் பல உபயோகமான விஷயங்களை பேசி விட்டு இன்டர்நெட் காலத்திலும் ஏவல் பில்லி சூன்யம் என்பதை நம்பலாமா? அப்படியென்றால் என்ன என்ற கேள்வியை முன்வைத்தார் அவர் மட்டுமல்ல அவரைப்போலவே பலரும் இதே கேள்வியை என்னிடம் கேட்டிருப்பதால் ஒரு சிறிய விளக்கத்தை உடனடியாகத் தருகிறேன் விரிவான பல திடுக்கிடும் உண்மைகள் உள்ளன அவற்றை மிக விரைவில் பதிவு செய்கிறேன்  

    விஞ்ஞானத்தில் ஆக்கும் சக்தியும் அழிக்கும் சக்தியும் உண்டல்லவா? அதைப்போன்று மெய்ஞானத்தில் உள்ள அழிவு சக்திதான் பில்லி. ஏவல். சூன்யம் என்பது, உண்மையிலேயே இதற்கான மந்திரங்கள் உயர்ந்த பண்பாடும். சமூக நோக்கமும் கொண்ட ரிஷிகளால் நாட்டையும. நாட்டு மக்களையும் காப்பாற்ற உருவாக்கப்பட்டன, அது இன்று பைத்தியக்காரன் கையில் கிடைத்த அணு ஆயுதம் போல் சுயநல நோக்கம் கொண்ட பலரின் கையில் கிடைத்து எத்தனையோ மக்களின் வாழ்க்கையைச் சீரழித்து அவர்களை வேதனைக்குள்ளாக்கி விடுகிறது,

    உதாரணமாக. ஒருவருக்குக் சூன்யம் வைத்திருக்கிறது என்றால் முதலில் அந்தச் சூன்யம் அவரது மனத்தை அலைக்கழித்துக் குலைக்கும், பின்பு அவர் செய்யும் செயல்கள் அனைத்தையும் நிலை தடுமாறவைக்கும். அவர்களது குடும்பத்தாரின் மனோநிலையைப் பாதிப்புக்குள்ளாக்கி குடும்பத்தையே குலைத்துவிடும், உயர்ந்த அந்தஸ்தில் உள்ள பலர் இந்த மந்திரச் சூறாவளியில் அகப்பட்டு நிலைதடுமாறி அவதிப்படுவதை நான் காண்கிறேன்


  ,இந்த இடத்தில் மந்திரங்கள் என்றால் என்னவென்று சிறிது விளக்கினால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன் மந்திரம் என்பது ஒழுங்குப்படுத்தப்பட்ட சப்தம் இந்துமத சாஸ்திரப்படி உலகம் உயிர்கள் ப்ரபஞ்சம் எல்லாமே சப்தத்தின் அதாவது ஒலியின் ஒளிவடிவம்தான் சப்தமாக இருப்பதுதான் உருவமாக மாறுகிறது உதாரணமாக வேற்றுக் கிரகங்களுக்கு அனுபப்படும் செயற்கைகோள்கள் அங்குள்ள கட்சிகளை ஒலியாகத்தான் பூமிக்கு அனுப்பும் இங்குள்ள சூப்பர் கம்யூட்டர்கள் அந்த ஒலியலைகளை ஒளியாக மாற்றி உருவப்படமாக நமக்குத் தருகின்றன

  அதேப் போலவே அயன வெளியிலுள்ள சில சப்த அலைகள் என்ற ஒலியலைகளை மந்திரமாக மனிதன் என்ற சூப்பர் கம்யூட்டர் உச்சரிக்கும் போது நல்ல அல்லது தீய விளவுகள் ஏற்படுகின்றது இப்படிப்பட்ட மந்திரத்தை சிலமனிதர்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு. குடும்பங்கள் பலவற்றைச் சீரழிக்கும் படி  துஷ்பிரயோகம் செய்கிறார்கள்  முதலில் இவர்கள் திருந்த வேண்டும்  ஆயினும் இந்த மந்திரங்களை பல நல்ல வேலைகளுக்கும் பயன் படுத்தலாம் குடும்ப பிரச்சனை தொழில் பிரச்சனை என்று பல சிக்கல்களை இதன் மூலம் நான் தீர்த்துள்ளேன் பரஸ்பரம் அன்பும். இறைபக்தியும். சமூகம் முழுவதும் என்றைக்குப் பரவுகிறதோ அன்றே இந்தச் சூறாவளி அடங்கும், அதற்கு நாம் இறைவனைப் பிரார்த்திப்போமாக
Contact Form

Name

Email *

Message *