Store
  Store
  Store
  Store
  Store
  Store

ராசாவை தாலாட்டும் கலைஞர்

    ".ராசாவின் ராஜினாமா தலித்களுக்கு பின்னடைவா?" என்ற கேள்வி நமது உஜிலாதேவி தளத்தில் வைக்க பட்டது அதற்க்கு வாசகர்களின் சுவையான பதிலும் குருஜியின் விளக்கமும் இதோ

   ராசா தலித் மக்களின் பிரதிநிதி அல்ல என்று எல்லோருக்கும் தெரியும் அதனால் அவரால் தலித் மக்கள் எந்த வகையிலும் பின்னுக்கு போகவில்லை காரணம் அவர்கள் ஆண்டண்டு காலமாக பின்னுக்குத்தானே கிடக்கிறார்கள்!

   2ஜி அலைக்கற்றை ஊழலில் ராசா ஈடுபட்டதாகவே வைத்துக் கொள்வோம் ஒரு தனிப்பட்ட மந்திரி அதுவும் கட்சியில் தனிப்பட்ட செல்வாக்கு இல்லாதவர் எப்படி தன்னந்தனியாக இவ்வளவு பெரிய ஊழலை செய்ய முடியும்? அவர் இருக்கும் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் மத்திய நபர்கள் அதிகாரிகள் கைகோர்க்காமல் இது சாத்தியமில்லை

  உண்மை இப்படி இருக்க ராசா பெயரை மட்டும் தூக்கிப் பிடிப்பதேன்? ஆழமாக சிந்தித்தால் ஜாதிய துவேஷம் தான் தெரிகிறது 2 லட்சம் கோடியில் யார் யார் பங்கிட்டுக் கொண்டார்கள் யாருக்கு அதிகப்பங்கு என்பதெல்லாம் வெட்ட வெளிச்சமானால் நாட்டுமக்களுக்கு உண்மை தெரியும்!
                                                                                                                  செந்தில் சென்னை 
   ராசாவின் ராஜினாமா பின்னடைவு தான்.
தொலை பேசிக்கான 2 ஜியில் மட்டும் 1.76 லட்சம் கோடி என்றால், தொலைக்கட்சி,
செய்தி ஒளிபரப்பு, என பல விஷய்ஙகளில் தலித்துக்கள் எத்துனை லட்சம் கோடிகளை
இழந்துளளனர்? பார்பனிய சதிகளுக்கு தலித்துக்கள் இனனமும் பலியாவது தொடர்கிறது..

 குறைந்தது ஒரு தலைமுறை தலித்துகளின் வளர்ச்சி இதனால் முடக்கப்டட்டு உள்ளது..
எனவே இது ஒரு கடுமையான பின்னடைவு தான்.
                                                                                                     M .வினோத் குமார்  திருப்பூர்
    ஆ.ராசா ஊழலில் சிக்கிய பின்பே அவர் தலித் என்று இந்திய மக்களுக்கு தெரியும். பொதுவாக பலருக்கு ஆ.ராசா என்று ஒரு அமைச்சர் இருப்பதே தெரியாது. நிலைமை இப்படியிருக்க, ஊழலில் இருந்து தப்பிக்க, ஊழலை தேர்தல் நேரத்தில் திசை திருப்ப, சிலர் தலித் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்கள்.
இவர்களுக்கு ஏன் ஜார்ஜ் பெர்ணன்டஸ், நட்வர் சிங்க், சுரேஷ் கல்மாடி, அசோக் சாவன் ஆகியோர் பதவி விலகும்போது அவர்கள் ஜாதி பற்றி பேச முடியவில்லையா? அல்லது அவர்கள் இனம் பற்றி தெரியவில்லையா?

  சுதந்திர இந்தியாவில் ஊழல் என்பது யார் வேண்டுமானாலும் செய்யும் நிலையில் உள்ளது. அதில் ஜாதி எங்கு வந்தது? ஒரு வாதத்துக்கு ஜாதி தான் காரணம் என்று வைத்துகொண்டால், கருணாநிதி ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தாரே, அது பிராமண சாதிக்கு எதிரான ஏவுகனையா? உமா சங்கர் வழக்கின் போது எந்த சாதிக்கு எதிராக பழி வாங்கினார்?

 இந்த spectrum ஊழலில் சிக்கியுள்ள பெரும் புள்ளிகள் (tape உரையாடலில் இடம்பெற்றவர்கள் மற்றும் கூடிய விரைவில் வெளிவரக்கூடிய பெயர்கள்) எல்லாமே தலித்துகளா? மற்ற சாதியினர் ஒருவர்கூட இல்லையா? மனிதர்களை பாகுபடுத்தும் இத்தகைய தரம் கெட்ட அரசியல்வாதிகளை யாரும் நம்ப வேண்டாம்.
இந்த ஊழல் தலித்துகளின் பின்னடைவல்ல.. மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு!

 ஒற்றுமையாக வாழ்வோம்! வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்!
ஜெய் ஹிந்த்!
                                                                                                              ஜோயல் சென்னை


   உண்மையில் எந்த ஒரு அரசியல் கட்சியும் தலித்துகள்(இது என்ன பெயரோ?) பற்றி ஒன்றும் பெரிதாக அலட்டிகொள்வதில்லை.அவர்கள் ஒரு ஓட்டு வங்கி அவ்வளவுதான். அவர்களை தக்க வைத்துக்கொள்ள ஒவ்வொரு கட்சியும் முயல்கின்றன. மற்றபடி தலித்து சமூகத்திலிருந்து உயர்ந்த ஒருவர் எவருமே இன்றுவரை தன் கட்சி தலைமைக்கு அடிமையாகவே இருந்து சேவகம் செய்வதன்றி, தாங்கள் சார்ந்த சமூகத்திற்கு, அந்த மக்களுக்கு இவர்களால் ஒரு பயனும் இருக்க வாய்ப்பில்லை. அதே போல இவர்களது பதவி பரி போனாலும் அம்மக்கள் இழப்பதும் ஒன்றுமில்லை. " அவர்களுக்கு பள்ளிக்கூடம் கட்டினேன், ஆசுபத்திரி திறந்தேன், ரோடு போட்டேன் " என்று மட்டுமே சொல்லிக்கொள்ள வேண்டும் இவர்களால் எத்தனை தலித் பிள்ளைகள் மேலே வந்து இந்த சமூகத்தில் பிரகாசிக்கிறார்கள் என்று சொல்ல இயலுமா?

  இவர்கள் கதைதான் இப்படி என்றால், ஏதோ தாம் தான் இம்மக்களை ரட்சிக்க வந்த தேவ தூதன் என்ற மிடுக்கில் எத்தனை தலித் தலைவர்கள் இங்கே? வெறும் கோஷங்கள் போடவும், கொடிகள் கட்டவும், பிளக்ஸ் பேனர்கள் வைக்கவும், சுவற்றில் வித விதமாக படங்கள் வரைந்து பந்தா காட்டவும் ,பின்னால் வாழ்க கோஷம் போட்டு தனது காருக்கு ஓடிவரவும், தான் வரும் போது வெடி வெடித்து கொண்டாடவும், மட்டுமே இம்மக்கள் வேண்டும்.

  அந்த பிள்ளைகள் படிக்க தரமான பள்ளிகள்,கல்லூரிகள், சுகாதாரம் , நல்ல உணவு என்று செய்ய இந்த தலைவர்களுக்கு தெரியாது. அப்படி மாறிப்போனால் தனக்கு கூட்டம் போட்டு கொடி பிடிக்க ஆட்கள் இல்லாமல் போய்விடுவார்கள் அல்லவா?
உண்மையில் அந்த மக்கள் பாவப்பட்டவர்களே! தலித் தலைவர்களாலோ,தலித் இன அமைச்சர்களாலோ அம்மக்களுக்கு ஒரு பயனும் இல்லை.

                                                                                                      கக்கு-மாணிக்கம் துபாய்

  மைச்சர் ஆ. ராசாவின் ராஜினாமாவை ஜாதிக் கண்ணோட்டத்தில் கொண்டு வந்து யாரு என்றால் தி.மு.க. தலைவர்தான் அப்படி பேசி ராஜதந்திர அடிப்படையில் கட்சியில் நற்பெயரையும் தன்னுடைய பெயரை தர்க்காத்துக் கொள்ள முடியுமென்று அவர் நினைக்கிறார்

  கலைஞரின் சமார்த்தியம் ஊரறிந்ததுதான் ஆனால் அதைவிட சக்திவாய்ந்தது ஓட்டுச்சீட்டு ராசா தலித் என்பதினால் பழிவாங்கப்படுவதாக சொல்லும் கலைஞர் தலித் மக்களுக்காக மற்ற மந்திரிகள் அனைவரையும் ராஜினாமா செய்ய சொல்ல வேண்டியதுதானே! மாட்டவே மாட்டார் தேனில் கடேசிச் சொட்டுவரை சுவைத்து பழக்கப்பட்டவர் பாதியில் விட்டுவிடுவாரா என்ன?

  இந்த விஷயத்தில் அப்பட்டமான உண்மை என்னவென்றால் கருணாநிதி அவர்கள் தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டு மென்றால் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்துவார் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அவருக்கு கவலையில்லை ஜாதி நெருப்பை பற்றவைத்தாவது ஊழல் புகாரிலிருந்து தப்ப வேண்டும் பதவி நிலைக்க வேண்டும் தன் குடும்பம் வாழ வேண்டும் அவ்வளவுதான்! இவர்தான் உலகத் தமிழர்களின் ஒரே ஒப்பற்றத் தலைவர்!



Contact Form

Name

Email *

Message *