Store
  Store
  Store
  Store
  Store
  Store

பெண்ணை தொட்டவன் மந்திரத்தை கெடுப்பான்


   கோவிலுக்குப் போனால் குருக்கள் மந்திரம் சொல்கிறார் ஆற்றங்கரைக்கு பிதுர்கடன் செய்யப்போனால் சாஸ்திரி மந்திரம் ஜெபிக்கிறார் பேய்விரட்ட மாந்திரீகனிடம் போனால் அவன் கூட மந்திரம்தான் போடுகிறான் நாமும் கூட தினசரி மந்திரம் என்ற வார்த்தையை பல முறை பயன் படுத்துகிறோம் ஒருவார்த்தையை யாராவது திரும்ப திரும்ப சொல்லும்போது மந்திரம் மாதிரி சொன்னதையே சொல்கிறான் என்றும் கூறுகிறோம் அப்படியென்றால் மந்திரம் என்றால் என்ன? அதன் தத்துவம்தான் என்ன என்ற கேள்வி நம்மில் பலருக்கு வருவதுண்டு அதற்கான விளக்கத்தைப்பற்றி பெரியவர்கள் சொன்னதை சற்று ஆராய்வோம்

   மந்திரங்கள் என்பதும், எழுத்துக்களாலான ஒலி அதிர்வுகள் தான் சாதாரண வாரத்தைகளுக்கும், மந்திர வார்த்தைகளுக்கும் பெரிய வித்தியாசங்கள் உண்டு.  புராணங்களை படித்தவர்களும், கேள்வி பட்டவர்களும் சாபம் கொடுத்தல் என்பதை கேள்விபட்டிக்கலாம்.  துர்வாசகன் சாபமும், கோபமும் மிகவும் புகழ்பெற்றது.  சாபமென்றால் என்னவென்று எப்போதாவது யோசித்து பார்த்தது உண்டா? ஒருவனை ஒழிந்து போ, நாசமா போ என திட்டுவது சாபமாகாது.  நம்மால் ஒருவன் நிஜமாக பாதிப்படையும் போது அந்த பாதிப்பால் அவன் வாழ்வில் நிரந்தரமான ஒரு இழப்பு ஏற்படும் போது அவன் உணர்ச்சிகள் எல்லாம் கூர்மைபட்டு நன்றாக வாழ் என்று சொன்னால் கூட அது சாபம் தான்.


    ஆகவே சாபம் என்பது வார்த்தைகளால் வந்தால் கூட அதன் பின்புலமாக உணர்வுகளே இருக்கிறது.  இதே போன்று மந்திரங்கள் வார்த்தைகள் தான் என்றாலும் உச்சரிக்கின்றவனின் உணர்வுகளை பொறுத்து அதன் ஒலி அதிர்வில் சரியான அழுத்தம் ஏற்படுகிறது.  அந்த அழுத்தம் அண்ட வெளியிலுள்ள இதே போன்ற அழுத்தத்தோடு இணையும் போது மந்திரத்திற்கான சக்தி தானாக வந்தமைகிறது.

  இதனால் தான் ஒரே மந்திரம் ஒருவன் சொல்லும் போது பலனையும், இன்னொருவன் சொல்லும் போது பலன் இல்லாமையும் தருகிறது.  சரி இதற்கெல்லாம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று சிலர் கேட்கலாம்.  விஞ்ஞானம் இவைகளை மூட நம்பிக்கைகள் என்று ஒதுக்கி விடுகிறது.  அதனால் இதை நம்ப இயலாது.  அப்படியே மந்திரத்தால் யாருக்காவது பலன் கிடைத்தது என்றால் கூட அது காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதையாகத் தான் இருக்குமென்று சிலர் கேலி செய்கிறார்கள்.  இவர்கள் நிதானமாக சில விஷயங்களை சிந்திக்க வேண்டும்.


  சந்திரன், செவ்வாய் உட்பட பல அயல் கிரகங்களை ஆய்வு செய்வதற்கு ராகெட்டுகளை அனுப்புகின்றோம்.  அந்த ராகெட்டுகளும் சில புகைப்படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்புகின்றன.  தினசரி பத்திக்கைகளிலும், தொலைகாட்சிகளிலும் அந்த படங்கள் காண்பிக்கப்படும் போது நாமும் பார்த்து சந்தோஷப்படுகிறோம்.

   எங்கோ வெகு தொலைவிலிருந்து இந்த புகைப்படங்கள் பூமிக்கு வருகின்றன. அது எந்த வடிவத்தில் வருகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. உண்மையில் அந்த படங்கள் உருவங்களாக பூமிக்கு வருவதில்லை.  சத்தமாகத் தான் வருகிறது.  சில கம்யூட்டர்கள் அந்த சத்தத்தை படங்களாக மாற்றி தருகின்றன.  ஏறக்குறைய அயன வெளியில் இருக்கின்ற சில சத்தங்கள் மந்திர ஒலிகளாக ரிஷிகளால் மாற்றி தரப்பட்டாலும் கூட அவைகளுக்குள் உருவங்களே மறைந்திருக்கின்றன.


  உதாரணமாக ஸ்ரீ ருத்ரம் என்ற மந்திர ஒலியை மேற்குறிப்பிட்ட கம்யூட்டர்களில் கொடுக்கும் போது அவைகள் நடனமாகும் நடராஜாவின் திருவுருவத்தை வரைந்து தருகிறது.  அதே போன்று விஷ்ணு சகஸ்ர நாமத்தை கொடுத்தால் சங்கு சக்கரத்தோடு கூடிய திருமாலின் திருவுருவை வரைந்து தருகிறது. 

  ஆக ஒவ்வொரு மந்திர சத்தமும் இறை சக்தியின் மாறுபட்ட தோற்றங்களே என்பதை உணர வேண்டும்.  மந்திரங்களோடு கூடிய பிராத்தனையை வைக்கும் போது வேண்டுதல் நிறைவேற வழி ஏற்படுகிறது.  நமது எண்ணங்களும் ரௌத்தரமாக இருந்து உச்சரிக்கும் மந்திர ஒலியிலும் ரௌத்தர தொனி இருந்துவிட்டால் பலனும் கெடுதியாக வந்தமைகிறது.  ஆக மந்திரம் என்பது முறைப்படுத்தப்பட்ட ஒலியலை தான்.


   இந்த ஒலி அலையை சாதாரணமாக எல்லா மனிதர்களும் பயன்படுத்த முடியாமல் இருப்பதற்கு முக்கியமாக ஒரு காரணம் உண்டு.  ரேடியோ அலையானது எல்லா இடத்திலும் பரவியிருந்தாலும் அதை உள்வாங்கி வெளிபடுத்த ரேடியோ என்பது மிக அவசியம்.  அதாவது அந்த குறிப்பிட்ட அலைவரிசையை கிரகித்து கொள்வதற்கான சக்தி ஒரு ரேடியோ பெட்டிக்கு தான் இருக்கிறதே தவிர எத்தனை விலை மதிப்பானதாக இருந்தாலும் தங்கப்பெட்டிக்கு இருப்பதில்லை.

  அதே போன்று தான் மந்திர சக்தியானது உலகம் முழுவதும் பரவி கிடந்தாலும் அதை வாங்கி வெளிபடுத்த பிரம்மசரிய விரதமிக்க அதாவது வலுவான இந்திரிய சக்தியுடைய மனித உடம்பானது தேவை.  பிரம்ம சரியத்தை முறைபடி கடைபிடிக்காத எந்த மனிதனும் மந்திர பிரயோகத்திற்கு உதவமாட்டான். 


   இந்த விஷயத்தில் தான் பல போலி மந்திரவாதிகள் தோன்றி மந்திர சாஸ்திரத்தையே அவமானப்படுத்தி மக்களை திசைதிருப்பி விட்டுவிடுகிறார்கள்.  கடைசியில் தான் எடுத்த கத்தியில் தானே குத்துபட்டும் விடுகிறார்கள்.  எனவே மந்திரம் என்பது சத்தம் அதை பிரயோகம் செய்ய நைஸ்டிக பிரம்மசாரிகளால் மட்டும் தான் அதாவது உடல் உறவிலேயே ஈடுபடாத மனிதர்களால் மட்டும் தான் முடியும் என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.


     மேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்




Contact Form

Name

Email *

Message *