கடந்த இரண்டு அத்யாயங்களில் முற்றிலும் மாறுபட்ட காமராஜர், பாரதியார் ஆகியோரின் ஆவிகளிடம் பேசியபோது அடிப்படியான சந்தேகங்கள் பல எழுந்திருப்பது இயற்கைதான். பூமியில் வாழ்ந்த போது ஒரு மனிதன் பலதுறையின் சார்புடைய எண்ணப்பதிவுகளோடு அனுபவ அறிவோடும் வாழ்ந்திருந்தாலும் அந்த எண்ணங்களும் அனுபவங்களும் இறந்த பிறகும் ஆவியின் நினைவுப் பகுதிகளில் இருக்குமா? இறப்பு என்பது வாழ்வின் சகல விலங்குகளையும் உடைத்தெறிந்து விட்டு சர்வ சுதந்திரத்தோடு சராசரங்கள் முழுவதும் சஞ்சாரம் செய்வதுதான் என்று நம்பிக்கொண்டு இருக்கின்றபோழுது வைத்தியனின் ஆவி மருத்துவத்தைப் பற்றியும், வழக்கறிஞனின் ஆவி சட்ட நுணுக்கங்களைப் பற்றியும் பேசுவது இறந்தாலும் வாழ்ந்த வாழ்க்கையை ஆவிகள் மறந்து போகவில்லை என்பதை அல்லவா காட்டுகிறது என்றெல்லாம் நமக்கு உருவாகும் எண்ணங்களுக்கு விடை கிடைத்தால்தான் ஆவிகளைப் பற்றிய அறிவு முழுமை பெறும்.
ஸ்ரீமத் பகவத் கீதையில் பூர்வஜென்ம வாசனை என்ற ஒரு விஷயம் சொல்லப்பட்டு இருக்கிறது. அதாவது கடந்த பிறப்பின் எண்ணங்கள் என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். ஆவிகள் சரீரத்தை விட்டு சூட்சம தேகத்தைப் பெற்று விட்டாலும் பௌதீக தேகத்தில் தான் பெற்ற அனுபவங்களை மறப்பதில்லை என்று இந்த வார்தையின் வாயிலாக நாம் அறியலாம். இந்தப் பூர்வ ஜென்ம வாசனை எவ்வளவு காலம் ஆவிகளுக்கு இருக்கும் என்பதை ஆராய்ந்தோமானால் புண்ணிய உலக வாசத்தை ஆவிகள் முடித்துக் கொண்டு கரு வரை வாசத்தை மேற்கொள்ளும் காலம் வரை என்று பொதுவாகச் சொல்லலாம். ஆனால் சிலருக்கு கருவரை வாசம் முடிந்து சமூக வாழ்லை மேற்கொண்ட பிறகும் சென்ற பிறப்பின் எண்ணங்கள் மாறுவது இல்லை. இதில்தான் வேதங்கள் கூறும் மறுப்பிறப்பின் உண்மை நிலை தெரிய வருகிறது. விஞ்ஞானம் கூட மறுபிறப்பு என்பது உண்டு என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒத்துக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறது.
சரி, பிறப்பின் எண்ணங்கள் இறப்புக்குப் பின்னும் தொடர்கிறது என்றால் ஆவிகளின் மதச் சிந்கனைகளும் அவர்களோடே தொடர வேண்டும் தானே. அப்படித் தொடரும் பட்சத்தில் மதங்கள் இறைவனுக்குப் பல பெயரை சூட்டி அழைப்பதாகத் தான் ஆவிகளும் இறைவனை உணருகிறார்களா? அதாவது இந்து ஆவி சிவனையும் முஸ்லீம் ஆவி அல்லாவையும் தான் பார்க்கிறதா?

அப்படி அவர்கள் அல்லாவாகவும் சிவனாகவும் கடவுளைக் காண்கிறார்கள் என்றால் கடவுள் யார்? அவர் எந்த மதம்? என்றெல்லாம் கேள்விகள் எழுவது இயற்கையானதாக அமையும். கடவுள் மத்தைப் பற்றி பார்ப்பதற்கு முன்னால் செத்த பிறகும் சிந்தனையில் ஒட்டி உறவாடிக் கொண்டு இருக்கும் மதத்திற்கு மனித வாழ்க்கையில் அப்படி என்ன அத்தியாவசியத் தேவை இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
மனிதன் தான் மத்தை உண்டு பண்ணுகிறான். மதம் மனிதனை உண்டு பண்ணவில்லை. மதம் என்பது நசுக்கப்பட்ட பிராணியின் ஓலம். மனம் இல்லாத உலகத்தில் உணர்ச்சி உயில்லாத நிலைமைக்கு உயிர் அது. ஜனங்களுக்கு அபின் சந்தோசத்தை அளிப்பதாக போலி மயக்கத்தை ஏற்படுத்துவது மதம். இப்படி மதத்தை விமர்சிப்பவர் மனித வர்க்கத்தின் தலைசிறந்த சிந்தனையாளர் என்று கருதப்படும், கார்ல்மார்க்ஸ்.

மதம் இல்லாமல் மனிதன் உயிர்வாழ முடியாது என்கிறார் மகாத்மாகாந்தி. காந்தி சொல்வது சரியா, மார்க்ஸ் சொல்வது சரியா? இருவருமே மனித குலத்திற்குத் தீங்கானவற்றைச் சொல்ல மாட்டார்கள் என்று நாம் நம்புகிறோம். ஆனால் இரு கருத்துகளும் இரு துருவமாக இருக்கும் போது குழப்பம் வருவது இயற்கை.
கார்ல்மார்க்ஸ் சொல்வது காந்திக்குத் தெரியாதது அல்ல, அதேபோல் மகாத்மா சொல்வது மார்க்ஸ்க்குப் புரியாததும் அல்ல. அப்படியிருக்க மாறுபட்ட இக்கருத்துக்கள் வரக் காரணம் என்ன? மனித வாழ்வில் ஒரு நியதி, ஒழுங்கு வேண்டும்தான். எந்த ஒரு மாகசத்தியும் அற்பமான துளியோ அந்த மகாசத்தியை மனித மனம் நாடிச்செல்ல ஒரு வழிதான் தான் மதம். ஆனால் அந்த மதம் அத்தியவசியம் என்கிறார் மகாத்மா. மதத்தின் பெயரால் தனக்கோ பிறருக்கோ புரியாததைச் சொல்லி ஏதும் அறியாத மக்கள் அவற்றை நம்பும் படிச்செய்து மூடநம்பிக்கைகளையும், இறை அச்சத்தையும் சுரண்டலுக்கும் தனிமனித வளர்ச்சிக்கும் எத்தர்கள் ஏமாற்றும் பேர் வழிகள் கபட வேடதாரிகள் தங்களை வளத்துக்கொள்ள மதம் துணையாக இருக்கிறது. எனவே அது வேண்டாம் என்கிறார் கார்ல்மார்க்ஸ்.
மதத்தின் பெயரால் அநியாயங்கள் ஆயிரம் நடந்தாலும் அணு குண்டால் ஏற்பட்ட அழிவைவிட மதச்சண்டையால் ஏற்பட்ட அழிவு அதிகம் என்றாலும் தனிமனிதன் துன்பப்படும்போது துயரப்படும் போது ஏதும் அற்றவனாகி விட்டோம் என்று ஏங்கித் தவிக்கும்போது ஆதரவாக சாய்ந்து அழ ஒரு தோள் வேண்டும். அந்தத் தோள் நம்பிக்கையும் புது வேகத்தையும் தர வேண்டும். அதுதான் மதம் என்கிற தோள். சராசரி மனித வாழ்க்கையில் மதம் தத்துவ ஆராய்ச்சிக்குத் தேவைப்படுவது இல்லை. பசிக்கு விருந்தாகவும் நோய்க்கு மருந்தாகவும் இருட்டுக்கு வெளிச்சமாகவும் மதம் தேவைபடுகிறது.
இப்படி வாழ்வின் துயர நேரங்களைத் தோள் கொடுக்கும் மதம் மனிதனின் ஊனிலும் உணர்விலும் உதிரத்திலும் இரண்டறக் கலந்து வருகிறது. பிறந்தவுடன் அழும் குழந்தைக்கு அல்லாவைக் காட்டினால் அது சாகும்வரையில் அதன் மனதில் அல்லாதான் ஆண்டவன் என்று பதிந்து இருக்கும். அதே போன்றுதான் ஏசுவும், சிவனும், சாகும்வரை மத எண்ணங்களோடும் சடங்குகளின் தன்மையோடும் தன்னைப் பிணித்துக் கொள்ளும் மனித ஆத்மா இறப்பிற்கும் பின்னும் மத உணர்களோட இருக்கின்றது என்பது ஆவிகளிடத்தில் ஏற்படும் அனுபவ வாயிலாக அறிகிறோம். இதற்குச் சான்றாக பல சம்பவங்களைக் கூறலாம். அவற்றில் ஒன்றிரண்டை பார்போம்.
1995ம் வருடம் டிசம்பர் மாதக் குளிர் நேரத்தில் இஸ்லாம் அறிஞர் ஆவி ஒன்றுடன் பேசிக் கொண்டு இருந்தோம். அவரிடம் சல்மான் ருஷ்டியின் சாத்தானின் கவிதை நூலில் குறிப்பிட்டுள்ள படி முகமது நபியின் வாழ்க்கை இருந்ததா எனக் கேட்டோம். அதற்கு அவர் சல்மான் ருஷ்டி பண்பாடு இல்லாத சூழலில் பிறந்தவன். அவனால் பண்பாட்டுச் சிந்தனைகளைச் சிந்திக்க இயலாது. நபி இறைதூதர். அதில் எந்த மாற்றமும் இல்லை. அவரைப் பற்றி தாறுமாறாக எழுதுபவன் எவனாக இருந்தாலும் கொமெனி சொல்கிறபடி வாழத்தகுதி அற்றவன் என்று கூறியவர் திடீர் என்று தமது பேச்சை நிறுத்தி நமாஸ் வேளை வந்து விட்டது. நான் நமாஸ் செய்யப் போகிறேன் என்று கிளம்பி விட்டார்.
இதைப் போன்று எனது நண்பர் ஸ்ரீமத் ப்ரணவானந்த சரஸ்வதி பூர்வாசிரம சகோதரன் ஆவியிடம் நாங்கள் பேசிய பொழுது அந்த ஆவி அச்சரம் பிசகாமல் பிராமணப் பாஷையில் பேசியதோடு அல்லாமல் சந்தியா வந்தன வேளை நெருங்கிவிட்டது என்றும் தான் சந்தி பண்ணப் போவதாகவும் சொல்லி எங்களிடமிருந்து விடை பெற்றது. இதே போன்றே சில கிருஸ்துவ ஆவிகளிடம் பேசிய போது பைபிளின் வாசகங்களை அடிக்கொரு முறை குறிப்பிட்டதையும், ஜெயின் மத ஆவி ஸ்ரீபுராணத்தில் உள்ள கருத்துகளைப் பேசியதையும், சீக்கிய ஆவி குருக்கிரந்தத்திலிருந்து மேற்கோள் காட்டி பேசியதும எங்களுக்குப் பெரும வியப்பையும் அதிர்ச்சியையும் தந்தது.
இதனடிப்படையில் சீன ஆவி ஒன்றுடன் கன்பூஷியஸ் மதத்தைப் பற்றிய விவரங்கள் கேட்டோம். அந்த ஆவி தந்த விளக்கத்தை முழுமையாக இங்கே குறிப்பிடுவது சாலப்பொருந்தும் என்று கருதுகிறேன்.
வெடிமருந்து செய்யும் முறையையும் காகிதம் செய்யும் முறையையும் முதன் முதலில் உலகுக்கு அறிமுகப் படுத்திய சீனர்களாகிய நாங்கள் ஆன்மீகப் பரம்பரையிலும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. எங்களின் ஆன்மீகச் சிறப்பிற்கு கன்பூஷியஸ் மணி மகுடம் என்றால் அது மிகையில்லை. அவர் கி.மு. 1551ல் பிறந்தார். அவரின் தந்தை ஒரு ராணுவ வீரர் ஆவார். அவர் பத்துக் குழந்தைகளைப் பெற்ற பின் தமது 70வது வயதில் பதினெழு வயது இளம்பெண் ஒருத்தியை மணந்தார். அந்தப் பெண்ணிற்கு கன்பூஷியஸ் முதல் குழந்தையாகப் பிறந்து தமது 3வது வயதில் தந்தையை இழந்தார்.
இளம் வயதில் திறம்படக் கல்வி பயின்ற கன்பூஷியஸ் தம் 19வது வயதில் அரசு வேலையில் அமர்ந்தார். 22வது வயதில் அவர் ஆசிரியராக மாறினார். 51 வயது வரையில் ஆசிரியராக இருந்த அவர் லூ என்னும் அரசனால் மந்திரி ஆக்கப்பட்டார். அவர் மந்திரியாக இருந்த காலத்தில் திருட்டும் விபச்சாரமும் ஒழிந்து மக்கள் சந்தோஷத்தில் இருந்தார்கள் என்று எங்கள் நாட்டு சரித்திர ஏடுகள் பெருமையோடு குறிப்பிடுகின்றன.
20 ஆண்டுகள் மந்திரியாக இருந்த அவர் பின்னர் அந்தப் பதவியைத் துறந்து தனது தள்ளாத வயதில் தேசம் முழுவதும் சஞ்சாரம் செய்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை நேரடியாகக் கண்டறிந்தார். அந்த நேரத்தில் அவருக்கு ஞானோதயம் ஏற்பட்டது. அதன்பின் அவர் இரண்டு வருடங்கள் மட்டுமே வாழ்ந்தாலும் தனது ஞானஒளியால் பல ஆயிரம் சீடர்களைத் தம்பால் இழுத்தார்.
கன்பூஷியஸ் தமது உபதேசங்களில் கடவுள் பற்றியோ மறு ஜென்மம் பற்றியோ எதுவும் கூறவில்லை. மரணத்தைப் பற்றி அவர் கூறுகையில் நீ வாழ்கின்ற இந்த வாழ்க்கை பற்றியே முழுமையாகத் தெரிந்து கொள்ளாத போது மரணத்தைப் பற்றியும் மறு ஜென்மத்தைப் பற்றியும் எப்படி அறிந்து கொள்ள இயலும் என்றார். மனிதன் ஜன சமுதாயத்தில் ஒரு அங்கம் என்ற முறையிலேயே அவர் மக்களைப் பார்த்தார். தனது எதிர்காலத்தை ஒவ்வொரு மனிதனும் தானே நிர்ணயித்துக் கொள்ள முடியும் என்றார். அதறகு நற்கர்மங்கள் ஒன்றே சரியான வழி என்றார்.
நாட்டைப் பற்றி கன்பூஷியஸ் கூறுவதைக் கேளுங்கள் நேர்மையானவர்கள் உண்மை மிக்கவர்கள், அனுபவஸ்தர்கள் ஆகிய மூன்று தரப்பையும் நண்பர்களாகப் பெறுவதில் நன்மை உண்டு சக்ரவர்த்தியிலிருந்து சாதாரண மனிதர்கள் வரை எல்லோருக்கும் நண்பர்கள் வேண்டும். சமுதாய வாழ்வில் நட்பே முதலானதாகும். ஒரு நாளும் அதைக் கைவிடக் கூடாது. அப்படிக் கைவிட்டவன் மரத்தின் மீது ஏறி கைகளை விட்டவனுக்குச் சமமாவான்.
தனக்குச் சரிநிகர் இல்லாத ஒருவனை எப்போதும் நன்பனாக வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி வைத்திருப்பின் ஒருவனின் அந்தஸ்து மட்டுமல்ல பண்பாடும் கெட்டுவிடும். நட்பு என்பது ஏழைகளுக்குச் செல்வம். பலஹீனங்களுக்குப் பலம். மனவெறுப்புகளை மறைத்துக் கொண்டு உதட்டளவில் கொள்கின்ற நட்பு வலது புறத்தில் கணவனை வைத்துக் கொண்டு இடது புறத்தில் காதலனைக் கொஞ்சுவது போன்ற கேவலமான செயல் ஆகும்.
ராஜ்ய நிர்வாகத்தைப் பற்றியும் அதன் நிர்வாகிகளைப் பற்றியும் கன்புஷியஸ் தெளிவான விளக்கம் தருகிறார். நல்லாட்சி நடைபெற போதுமான பொருளாதாரமும் அதே அளவிற்கு ராணுவ பலமும் அரசர்களிடத்தில் மக்களுக்கு நம்பிக்கையும் வேண்டும் என்கிறார். மன்னன் எந்த நேரமும் மன்னனாகத்தான் இருக்கú வேண்டும் தவிர அவன் தகப்பனாகவோ மகனாகவோ கணவனாகவோ இருக்கக் கூடாது என்கிறார்.
உண்மையான அறிவுக்கு இலக்கணத்தைக் கூறும் கன்பூஷியஸ் அறிந்ததை அறிந்துள்ளோம் என்று அறிவதும் அறியாததை அறியவில்லை என்று அறிவதும்தான் அறிவாகும் என்று கூறுகிறார். பெற்றோர்களுக்கு உணவும் பாதுகாப்பும் கொடுப்பதே மக்கள் கடமை என்பதை கன்பூஷியஸ் மறுக்கிறார். ஆடு மாடுகள் கூட உணவு அருந்துகிறது. ஆனால் சிந்திப்பது இல்லை. பெற்றோர்களின் ஆத்மாவையும் அறிவையும் வளர்ப்பதே உண்மையான வாரிசுகளின் நேர்மையான கடமை என்கிறார்.
மனிதனைப் பற்றி கூறும்போது அவர் மனிதன் சிறிய கடவுள். அவனால் புது உயிர்களை உரவாக்க முடியாதே தவிர வேறு எல்லா சாதனைகளும் செய்ய முடியும் என்கிறார். மேன்மையான மனிதன் நான்கு குணங்களைக் கொண்டு இருக்க வேண்டும் என்கிறார். அவை சொந்த விஷயத்தில் விழிப்புடன் நடப்பது. அறிஞர்களிடத்தில் பணிவு காட்டுவது உலகத்தவர்க்குச் சேவை செய்வது எல்லா ஜீவன்களுக்கு சமமாக நீதிகாட்டுவது.
மேலும் அமைதி நிலவும் நாட்டில் அறிவுடைய ஆட்சி நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவாம். முட்டாள்கள் ஆளும் நாட்டில்தான் சண்டையும் சச்சரவும் மலிந்து கிடக்கும் என்கிறார். நேர்மை ஒழுக்கம் நிலவும் நாட்டில் சட்டதிட்டங்கள் மன்னரிடம் இருந்து வரும் என்றும் நேர்மை தவறும் நாட்டில் சட்டதிட்டங்கள் வியாபாரிகளிடம் இருந்து வரும் என்றும் அப்படி வியாபாரிகள் அரசாளும் நாடு விரைவில் சீரழிந்து விடும் என்றும் கூறுகிறார்.
பூமியில் வாழுகின்ற வாழ்க்கையை தெய்வீகமானதாக மாற்றிக் கொள்ள வழிவகை கூறிய கன்பூஷியஸ் மறுஉலக வாழ்க்கையைப் பற்றிக் கூறாததற்கு காரணம உண்டு. வாழும் போது நேர்மையாக வாழும் எவனும் செத்த பிறகும் சொர்க்கத்திலேயே வாழ்வான். எனவே சொர்க்கத்தை வேண்டி செயல்புரியாமல் நல்லதைச் செய்வது மட்டுமே நம் கடமை என்று உணர்ந்து மக்களைச் செயல்படச் சொல்கிறார்.
சீன ஆவி கூறிய கன்பூஷியன் அற்புதமான இந்தக் கருத்துக்கள் நமது வாழ்க்கைக்கத் தேவையானது என்பது ஒருபுறம் இருக்கட்டும். இறந்த பிறகும் தனது மதத்தின் கருத்துகளை எந்த அளவு ஆத்மார்த்தமாக ஆவிகள் நேசிக்கின்றன என்பதை உணரும்போது உண்மையில் நமக்கு சிலிர்ப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. மதவிஷயம் போன்றே ஜாதிகள் பற்றிய உணர்வுகள் ஆவிகளிடத்தில் நிறைந்து இருப்பதைக் காண முடிகிறது. அதைப் பற்றி சிறிது பார்போம்.
இந்தியாவில் மட்டும்தான் ஜாதி அமைப்புகள் உள்ளன. மற்ற நாடுகளில் ஜாதிப்பிரிவுகள் கிடையாது எனக் கூறுவது சர்வதேச அறியாமையாகும். அதே போன்று இந்து மதத்தில் மட்டும் தான் ஜாதிப்பிரிவுகள் உண்டு என்பதும் அறியாமை ஆகும். வேண்டுமானால் இந்தியாவில் ஜாதிப்பிரிவுகள் மேலோங்கித் தெரிகிறது என்று சொல்லலாம்.
ஐரிஷ் பூர்வகுடிமக்களை பிரிட்டீஸ்காரர்கள் தாழ்ந்த ஜாதியாகக் கருதுகிறார்கள். அதே நேரம் இங்கிலாந்து வெள்ளைக் காரர்களுக்குள்ளேயே குடும்ப பிறப்பின் அடிப்படையில் ஜாதிப்பிரிவுகள் உள்ளது. ஜெர்மானிய மக்கள் தங்களைத் தவிர உலகில் உள்ள அனைவருமே கீழ் ஜாதியினர் என்று கருதுவது தற்போது எழுந்துள்ள புதிய நாஜிக்களின் எழுச்சி வெளிப்படுத்துகிறது. அமெரிக்க நாட்டில் செவ்விந்தியர்களையும் கருப்பர்களையும் ஒதுக்கப்பட்ட ஜாதியினராகக் கருதுகிறார்கள். தென்னாப்பிரிக்காவில் கருப்பர்களுக்கு இடையே பல்வேறு ஜாதிப் பிரிவுகள் உண்டு. அரபு நாடுகளில் குர்து, ஷின்னி என்று பல ஜாதிப் பிரிவுகள் இருப்பதை அந்நாடுகளில் ஏற்படும் உள்நாட்டுக் கலவரங்களின் மூலம் அறிகிறோம். ஜாதிப் நெறிக்கு அப்பாற்பட்டவர்கள் என்று தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்திக் கொண்ட இந்திய இஸ்வாமியர்களிடத்திலும், நூற்றுக்கணக்கான ஜாதிப்பிரிவுகள் இருப்பதை நாம் எல்லோரும் அறிவோம். எனவே ஜாதி அமைப்புகள் என்பது ஒழிக்கப்பட்ட வேண்டியது என்றாலும் உலகம் முழுமைக்கும் பொதுவாகப் பரவி உள்ள வியாதி என்பதில் ஐயமில்லை.
இந்தியாவில் வர்ணம் என்ற சாதி அமைப்பு பழங்காலத்தில் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. சப்தரிஷிகளும் நான்கு மனுக்களும் ஸ்ரீகிருஷ்ணன் மனோ சக்தியால் உருவாக்கப்பட்டு உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் இவர்களால் பிறப்பிக்கப்பட்டார்கள் என்று பகவத்கீதை கூறுகிறது. மனதை அடக்குதல் புலன்களை வெல்லுதல் தவம் சுத்தம் பொறுமை நேர்மை ஞானம் அனுபவம் ஆஸ்திகத்தன்மை இவைகள் உடையவன் பிராம்மணன் என்றும் பராக்கிராமம் பிரதாபம் தைரியம் திறமை போரில் முன் நிற்றல் தானம் ஆளும் திறமை ஆகியவைகள் க்ஷத்ரியன் என்றும் வேளாண்மை பசுக்களைக் காத்தல் வாணிபம் பொருள் ஈட்டல் உற்பத்தியை அதிகரித்தல் ஆகியவைகளை கொண்டவன் வைசீகன் என்றும் உடல் உழைப்பு சேவை புரிதல் ஆதியவை கொண்டவன் சூத்திரன் என்றும் பகவத் கீதை பிரித்துக் கூறுகிறது.
முக்கியமாக ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பிறப்பால் ஒருவன் பிராமணன் ஆகவோ சூத்திரன் ஆகவோ பிறக்கிறான் என்று இந்து தர்ம சாஸ்திரங்கள் எதுவும் கூறவில்லை. அப்படிக் கூறி இருப்பதாகப் பேசும் சில நூல்கள் பிறகாலத்தில் ஏற்பட்ட இடைச் செருகல்களே ஆகும். வர்ணாசிரமம் மிகத் தெளிவாகவே கூறி இருக்கின்றன. வர்ணாசிரம் தர்மத்தின் செயல்பாட்டிற்கும் தற்போதைய ஜாதிகளின் கட்டமைப்பிற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. உதாரணமாக சாஸ்திரங்கள் குறிப்பிடும் பிராமணர் என்ற இனம் இன்றைய ஐயர், ஐயங்கார், போன்றோரைக் குறிப்பிடவில்லை. காரணம் அடிமை வேலை புரிபவன் சூத்திரன் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது மேற் குறிப்பிட்ட ஜாதியில் உள்ளவர்கள் எவ்வளவு பெரிய உத்யோகத்தில் இருந்தாலும் அவர்கள் குற்றேவல் புரிபவர்கள் ஆவார்கள். சாஸ்திரம் குறிப்பிடம் பிராமணியத்தின் இலக்கணம் அவர்களிடம் கிடையாது. எனவே வேதங்களும் பகவத்கீதையும் இன்னும் பிற சாஸ்திரங்களும் குறிப்பிடும் வர்ணாசிரம தர்மம் என்பது பிறப்பின் செயலுக்கும் சிந்கனைக்கும் ஏற்றார் போலவே அமைகிறது. எனவே இந்து மதத்தில் ஜாதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஆனால் இந்திய சமுதாயத்தில் பிறப்பின் அடிப்படையில்தான் ஜாதிப் பிரிவுகள் வகுக்கப்பட்டிருக்கிறது என்பதை யாராலும் எப்போது மறுக்க இயலாது ஆனால் ஜாதிகள் யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இருப்பினும் ஜாதிப்பிரிவுகள் பிறப்பில் தான் இருக்கிறது என்று ஒவ்வொரு இந்தியனும் உலக மக்களைப் போலவே நம்புகிறான். அந்த எண்ணமே அவன் ஆத்மாவில் பதிந்து இறப்புக்குப் பின்னும் அவனோடு தொடர்ச்சியாக வருகிறது. இந்த உண்மையைச் சில சம்பவங்களின் மூலம் நான் அறிந்து கொண்டேன்.
மண்டல் கமிஷன் அறிக்கையை அப்போதைய பிரதமர் வி.பி. சிங் நடை முறைக்குக் கொண்டு வந்த போது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டதை நம்மில் யாரும் மறந்து இருக்க முடியாது. அந்தக் கொந்தளிப்பில் பல இளம் உயிர்கள் தீப்பிடித்து கருகிப்போனதையும் நாம் மறக்க முடியாது. அப்படி உயிர் நீத்த ஒரு இளைஞனின் ஆவியை அழைத்து உனது இந்தத் தற்கொலைச் செயல் நியாயமானதானா எனக்கேட்ட போது அவன் பொரிந்து தள்ளினான்.
நமது நாட்டின் அரசியல் அமைப்பின் 16வது உறுப்பு இந்தியாவில் எல்லாக் குடிமக்களுக்கும் அரசாங்கப் பணிகளில் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. இவ்வுறுப்பின் 4வது தொகுதி அரசாங்கப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்குச் சரியான பிரதிநித்துவம் இல்லை எனில் அதற்காக சிறப்பு வழி வகை செய்வதற்கு அனுமதிக்காது. ஆனால் அரசியல் அமைப்பின் 15வது உறுப்பு இந்தியக் குடி மக்களின் எவரையிம் ஜாதி இனம் சமயம் பால் மற்றும் பிறப்பிடத்தின் பெயரால் பாகுபாடு செய்யக் கூடாது என்று கூறுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து வழக்கு ஒன்றில் இட ஒதுக்கீடு செல்லாது என்று இந்திய உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஆனால் இதை ஏற்காத மத்திய அரசு இட ஒதுக்கீடு ஏற்படும் விதத்தில் அரசியல் அமைப்பில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இதனால் அட்டவணைப் படுத்தப்பட்ட ஜாதியினர் மற்றும் மலை ஜாதியினர் சமுதாய ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியவர்கள் முன்னேற்றத்திற்காக வழிவகை செய்தது. இதனால் அரசின் கல்வி நிலையங்களிலும் அரசு மான்யம் பெறும் கல்வி நிலையங்களிலும் 22.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்து தரப்பட்டது. ஆனால் பி. மண்டல் தலைமையிலான 1978ல் நியமிக்கப்பட்ட கமிஷன் வேலை வாய்ப்பில் மட்டுமல்ல கல்வியிலும் மதிப்பெண்களிலும் இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் வழங்க பரிந்துரை செய்தது.
இதில் வேலை வாய்ப்பு கல்வி வாய்ப்பு பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் மதிப்பெண்களிலும் சலுகை எனும்போது அதை எப்படி நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியும். கஷ்டப்பட்டு படிக்கும் ஒரு மாணவனுக்கும் கஷ்டப்படாமல் படிக்கும் ஒரு மாணவனுக்கும் தாழ்ந்த ஜாதி என்பதனால் மட்டுமே சமமான தகுதி கொடுப்பதை நாகரீக சிந்தனை உடைய எவனாலும் ஜீரணிக்க இயலாது. அதுமட்டுமல்ல மண்டல் கமிஷனின் பரிந்துரைகளே அரைகுறையானது. மக்களின் தராதரத்தை அது முழுமையாகக் கணக்கிடவில்லை.
மண்டல் கமிஷன் தனது பணியைத் தொடங்கிய சில மாதங்களிலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கான பிரகடனம் வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் தேர்தல் பணிகளில் மாநில அரசுகள் முனைப்புடன் ஈடுபட்டு இருந்தன. வடகிழக்கு மாகாணங்களில் அமைதியின்மை நிலவியது. இந்த நிலையில் கமிஷனருக்கு மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பைத் தந்திருக்க இயலாது.
இக்கமிஷன் மிகுந்த சிரத்தையுடன் தயாரித்த விவர அட்டவணை கமிஷனின் இறுதி வடிவத்தில் சேர்க்கப்படவில்லை. தனது சமுதாய மற்றும் கல்வி தொடர்பான கணக்கெடுப்பு ஆய்விற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஊராட்சி ஒன்றியத்தை 2 கிராமங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டது. அது மட்டுமல்லாமல் மண்டல் கமிஷனின் உறுப்பினர்களாக இருந்த திரு. ஆர்.ஆர். போலே திரு. தேவன் மோகன்லால், திரு. எல்.ஆர். நாயர், திரு. கே. சுப்பிரமணியன், திரு. எஸ்.எஸ்.கில் ஆகியோர்கள் நாடு முழுவதிலும் உள்ள வெறும் 84 மாவட்டங்களுக்கு மட்டுமே சென்று ஆய்வு நடத்தினர்.
எனவே எனது இதய துடிப்பை மண்டல் கமிஷன் கவனத்தில் கொள்ளவில்லை. செவிடாகவும், குருடாகவும் ஆகிப்போன அரசாங்கத்தின் இரும்பு இதயத்தைத் தட்டிப் பார்க்கவே தற்கொலை செய்து கொண்டேன். இதில் பாவம் இல்லை. என் ஒருவனின் மரணம் பலரின் வாழ்க்கைக்கு விளக்கேற்ற உதவும் என்று நம்புகிறேன் என்று ஆக்ரோஷமாக தனது கருத்தை இளைஞனின் ஆவி கூறியது.
மண்டல் கமிஷனின் அறிக்கையை ஏற்றுக் கொள்வதாக அரசாங்கம் அறிவித்த 1990ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஏழாம் தேதிக்குப் பிறகு இம்மாதிரியான தற்கொலைச் சம்பவங்கள் நடந்து கொண்டு இருந்த கால கட்டத்தில் இறந்து போன வேறு ஒரு இளம் பெண்ணின் ஆவியை அழைத்து இதே விஷயத்தை கேட்டோம்.
அந்த ஆவியை அழைத்து பேசிய போது அதன் கருத்து இதற்கு நேர்மாறாக இருந்தது. ஆண்டாண்டு காலமாக மேல்ஜாதிக்காரர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை பிற்படுத்தப்பட்ட மக்களை அடிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். சூத்திரன் ஒருவன் வேதத்தை படித்தால் அவன் நாக்கை துண்டித்துவிடு. வேதம் ஓதுவதைக் கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றிவிடு என்றெல்லாம் மனுதர்மத்தில் எழுதி வைத்து இருக்கிறார்கள்.
பிராமணன் பிரம்மனின் நெற்றியிலிருந்து பிறந்தானாம். சூத்திரனோ பிரம்மனின் பாதத்திலிருந்து பிறந்தானாம். அதனால் மேல் குலத்தவருக்கு ஏவல் செய்வதே கீழ் குலத்தான் விதி ஆகும். நெற்றி என்றாலும் பாதம் என்றாலும் பிறந்தது எல்லாம் பிரம்மனின் சரீரம் என்பதை மறந்துவிட்டு அதனால் மக்கள் எல்லோரும் சமம் என்பதை மறைத்துவிட்டு அப்பாவி ஜனங்களை உடலை மட்டுமல்ல உயிரையும் சுரண்டி வாழ்வதே மேல்ஜாதியினரின் வேலை ஆகும்.
இதுவரை மத்திய அரசாங்கத்தின் உயர் பதவிகளை முன்னேறிய ஜாதியினரே அனுபவித்து வருகிறார்கள்.அதை மாற்றி பாவப்பட்ட ஜனங்களும் பதவியில் அமர வேண்டும் என அரசாங்கம் நினைத்தது எந்த ரீதியில் தவறாகும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மதிப்பெண்களில் சலுகை வழங்குவது எந்த வகையில் குற்றம். பிராமணர்களும் மற்ற உயர் ஜாதியினரும் ஆயிரக்கணக்கான வருடங்களாகப் படித்துக் கொண்டு இருக்கும் வர்க்கமாகும். அதனால் அவர்களின் குழந்தைகளின் ஜீன்களில் படிப்புத்திறமை இயற்கையாகவே இருக்கும். பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து தான் படிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். அவர்களின் ஜீன்களில் படிப்புத்திறமை இயற்கையாக உருவாக இன்னும் பல காலம் ஆகும். எனவே அதுவரை அவர்களை கைதூக்கி விடுவது அசாங்கத்தின் கடமை ஆகும் என்றது அந்தப் பெண்ணின் ஆவி.
மதப்பாகுப்பாடுகளும் ஜாதிப்பாகு பாடுகளும் மனிதர்கள் வாழும் காலத்திலும் கருத்து மோதல்களை ஏற்படுத்தி விடுகிறது. அவர்களின் சாவுக்குப் பின்னரும் எந்த ஆவியும் தனது சுயக்கருத்துகளை மறக்காமல் இருப்பது அதிசயமான விஷயம்தான். காலையில் உண்ட உணவை மாலையில் நாம் மறந்து விடுகிறோம். ஆனால் இறந்து பல காலம் ஆகியும் தாங்கள் சார்ந்து இருக்கும் கருத்துகளை தாங்கள் சந்தித்த அனுபவங்களையும் தங்களால் நேசிக்கப்பட்ட மனிதர்களையும் மறக்காத ஆவிகளை பார்க்கும்போது இறைவனின் சிரஷ்டி திறமையைப் பாராட்டக் கூட தகுதியற்றவர்களாகி விடுகின்றோம்.
வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ என்று தெய்வீகக் கவிஞன் கண்ணதாசன் பட்டினத்தாரின் பாடலை எளிமையாக்கிக் கூறினான். கடைசி வரை யாரோ என்ற கேள்விக்குறியில் தொக்கி நிற்பது வெறும் சூன்யம் அல்ல. ஒவ்வொரு மனித ஆத்மாவின் பாவ புண்ணியங்களும் சிந்தித்த சந்தித்த கருத்துக்களும் கடைசிக்குப் பின்னும் தொடர்கிறது என்பதில் ஐயமில்லை.