Store
  Store
  Store
  Store
  Store
  Store

கடவுள் அரவாணியா...?

   லகில் உள்ள பெருவாரியான மதங்கள் கடவுளை ஆணாக மட்டும் தான் அடையாளம் காட்டுகிறது.

இஸ்லாமிய மதத்து புனித நூலான கூர்-ஆன் முழுமையும் ஆழ்ந்து படித்தோம் என்றால் கடவுளை அவர், இவர் என சொல்லிருப்பதை அறியலாம்.

  அவர், இவர் என்ற  பதங்கள் பெண்மையை குறிக்காது என்று நமக்கு தெரியும்.

   கடவுளுக்கு உருவமே இல்லை என்று கூறும் இஸ்லாம் அவரை ஆணாக பார்ப்பது விசித்திரமாக உள்ளது.

விவிலியம் என்ற கிறிஸ்துவ புனித நூலும் கடவுளை கர்த்தர் என்ற ஆண்பாலாலேயே அழைக்கிறது.

யுதர்களின் மதமான ஹீபுரு மதம் கூட கடவுளுக்கு ஜகோவா என்ற ஆண் பெயரையே சூட்டியிருக்கிறது.

இந்து மதத்தை போல மிக பழமையான ஐரோப்பிய மதமான சொராஸ்திரியம் கடவுளுக்கு அஸ்ரமஸ்ரா என்ற ஆண் பெயரையே கொடுத்திருக்கிறது.

  ஜப்பான், சீனா போன்ற நாடுகளிலும் கடவுள் ஆணாகவே கருதப்படுகிறார்.

  இந்து மதத்தில் கூட சிவன், விஷ்னு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் ஆணாகவே இருக்கிறார்கள்.

   பெரும்பாலான மதங்கள் கடவுளை ஆணாக கருதிய போதும் நமது பகவத் கீதை, உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம் போன்றவைகள் கடவுளை ஆணாக ஒத்து கொள்ளவில்லை.

  அதே வேளை துர்கை, லஷ்மி, சரஸ்வதி போன்ற பெண் தெய்வங்களாகவோ அல்லது பெண்ணாகவோ அல்லது ஆணும் அல்லாத, பெண்ணும் அல்லாத அரவாணியாகவோ நமது சாஸ்திரங்கள் கடவுளை ஏற்கவில்லை.

  மாறாக ஆண், பெண், அலி ஆகிய முப்பாலும் கடவுளுக்குள் அடக்கம். கடவுள் முப்பாலையும் தாண்டியது என்றும் சொல்கின்றன.

   கடவுளை உணர்ந்த ஞானிகளும் கடவுளை பேரொளியாக கருதுகிறார்களே தவிர ஆண், பெண், அலியாக கருதவில்லை.


Contact Form

Name

Email *

Message *