Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஐயர் தான் கடவுளை அடைவாரா ?

  பிராமணர்கள் மட்டும் தான் இறைவனை அடைய முடியும் என சில பிராமணர்கள் கூறுகிறார்களே அது உண்மையா?

வெகு நாளைக்கு முன்பு ஒரு வைதீகர் என்னை வந்து பார்த்தார்.

பல விஷயங்களை பேசிக்கொண்டிருந்த அவர் தனது பேச்சுக்கு இடையில் சில கருத்துக்களை சொன்னார்.

அதில் மிக முக்கியமானது பெண்கள் முக்தியடைய வேண்டுமென்றால் அவர்கள் எவ்வளவு ஒழுக்கமாகவும் பக்திசிரத்தையுடன் இருந்தாலும் ஆணாக பிறந்த பிறகு தான் கடவுளை அடைய முடியும் என்ற கருத்தாகும்.

இப்படி எந்த சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என அவரிடம் திருப்பி கேட்டேன்.

அதற்கு அவரால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. காரணம் அப்படி ஒரு சித்தாந்தமே உலகத்தில் இல்லை.

அதே போன்று ஒரு போலியான சித்தாந்தம் தான் பிராமணன் மட்டுமே கடவுளை அடைய முடியும் என்பது.

மகாபக்த விஜய கதைகளில் வரும் கோர கும்பர் ஒரு குயவர். ஸ்ரீ சேனா என்பவர் நாவிதர். நரகசேனர் என்பவர் ஒரு பொற்கொல்லர். ரவிதாசர் என்பவர் செருப்பு தைக்கும் தொழிலாளி. நல்கிரு சாகுகர் ஒரு மார்வாடி.

இவர்கள் எல்லாம் கடவுளை அடைந்ததாக கூறுவது வெறும் கற்பனையா?

பெரிய புராணத்தில் அரசனான சேரமான், பரதவரான அதிபக்தர், குயவரான திருநீலகண்டர், வணிகரான இயற்பகையார், வேளாளரான இளையான்குடிமார நாயணார், வேடனான கண்ணப்பர், குடுப்ப தலைவியான காரைக்கால் அம்மையார் போன்றோர்கள் சிவபெருமானை தரிசனம் செய்தது பொய்யா? புனைச் சுருட்டா?

கடவுளை அடைவதற்கு தொழிலோ, சாதியோ, பொருளாதார அந்தஸ்தோ எதுவும் தடையல்ல

இருபதாம் நூற்றாண்டு பிராமணர்களிடம் எந்த அளவு அறிவு தீட்சன்யம் பெருகிக் கிடந்ததோ அந்த அளவு ஜாதி வெரியும் பெருகிக்கிடந்தது

பல பிராமணர்களின் தியாகமும் பொதுச் சேவையும் இதனாலேயே களங்கப்பட்டு விட்டது

இன்றளவும் கூட சில பிராமணர்களிடம் ஜாதி துவேஷம் நிறைந்துள்ளது

இவர்களில் சிலர் தங்கள் சமூகத்துக்குள்ளேயேக் கூட தீண்டாமையை கடைபிடிக்கிறார்கள்

மாத்துவா பிராமணர்கள் ஐயங்கார்களையும் தமிழ் மற்றும் தெலுங்கு பிராமணர்களை தங்களுக்கு இணையாக கருதுவதில்லை

ஐங்கார் ஸ்மார்தா சண்டை ஊரறிந்த ரகசியம் குருக்களுக்கும் மற்ற பிராமணர்களுக்கும் கூட சுமூக உறவு கிடையாது

நான்தான் உயர்ந்தவன் என்ற குடுமிப்பிடி சண்டை நாள்தோரும் நடைபெருவதை நான் நன்கறிவேன்

பிராமணால்தான் கடவுளை அடையமுடியும் என்றால் எந்த பிராமணனால் .....?

ஐங்காரா? மாத்துவா ? ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது கடவுளை அடைய மனிதனாக பிறந்தால் போதும்Contact Form

Name

Email *

Message *