Store
  Store
  Store
  Store
  Store
  Store

பிராமணர்கள் மட்டும் தான் பூணூல் அணிய வேண்டுமா?

    ல்லூரியில் படிக்கிறோம்.  படித்து முடித்தவுடன் ஒரு சான்றிதழ் தரப்படுகிறது. 

  காவலர் பயிற்சியை முடித்தவனுக்கு போலிஸ்காரனுக்குரிய அடையாள சின்னங்கள் தரப்படுகின்றன. 

   ஒரு சான்றிதழ் போல அடையாள சின்னம் போல காட்டப்படுவது தான் பூணூல் ஆகும். 

இந்த பூணூல் அடையாளம் எதற்கு தேவைப்படுகிறது.

 மந்திரங்களில் ராஜ மந்திரம் என்று கருதப்படுவது காயத்ரி மந்திரமாகும்.

 நியமனப்படி காயத்ரியை ஜபிக்கும் ஒருவன் ஞானத்திலும், தேஜஸ்திலும் சிறந்தவனாக இருக்கிறான்.

 ஒரு தாய் தனது குழந்தையை காப்பது போல காயத்ரி மந்திரம் மனித மனதை சிதற விடாமல் காக்கிறது. 

இந்த மந்திரத்தை சொல்லும் தகுதியை ஒருவன் அடைந்து விட்டான் என அடையாளப்படுத்துவதே பூணூலாகும்.

        பூணூல் மூன்று புரி நூல்கள் இருக்கும்.  இவை சிவன், விஷ்னு, பிரம்மாவையும், சக்தி, லஷ்மி, சரஸ்வதியையும் நினைவூட்டுவதாகும்.

        அது மட்டுமல்லாது வேதம் சொல்லுகின்ற மனித குணங்களான சத்வ, ராஜஷ, தாமஸ ஆகிய மூன்று மனித குணங்களையும் ஞாபகப்படுத்துகிறது. 


       முக்காலத்தையும் விழிப்பு, கனவு, அமைதி ஆகிய மூன்று அவஸ்தைகளையும் இது காட்டுகிறது எனலாம். 

       மேலும் மனிதன் அனுபவித்தே ஆக வேண்டிய இகலோக, பரலோக, அகலோக வாழ்க்கையையும் காட்டுகிறது.

        மூன்று நூல்களையும் இணைந்து முடிவில் போடுகின்ற முடிச்சிக்கு பிரம்ம முடிச்சி என்று பெயர். 

        மனித உடலில் ஓடும் இடகலை, பின்கலை, சூட்சம நாடிகள் குண்டலினி சக்தியின் இருந்து துவங்குவதையும் பிரம்ம முடிச்சி உருவகமாக காட்டுகிறது.

        வேதங்கள் பூணூலை பற்றி ஒன்றும் பேசவில்லை என்றாலும் சில வேத பிரம்மாணங்கள் பூணூலுக்கு ஏக்னோ பவித்ரம் என்று பெயர் கொடுத்து பேசுகின்றன.

       சூத்ர, வைசிக, சத்ரிய, பிராமண ஆகிய நான்கு வருணத்தாரும் பூணூல் அணிய வேண்டும் என இந்த பிரம்மானங்கள் வலியுறுத்துகின்றன. 

        தொழிலையும் சாதியையும் பிறப்பின் அடிப்படையில் கொண்டு வந்த பிறகே சகல சாதியினரும் பூணூல் அணியும் பழக்கம் நின்று போய் விட்டது.

       பழைய ஆரோக்கியமான சமூக நிலையை உருவாக்க விரும்பிய பாரதியார் தாழ்த்தப்பட்டோருக்கும் பூணூல் அணிவிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். 

      இன்றைய சமூக சீர்திருத்த காரர்கள் பூணூல் அறுப்பு போராட்டத்தை கைவிட்டு விட்டு எல்லோருக்கும் காயத்ரி மந்திரம் உபதேசம் செய்து பூணூல் அணிவிப்பது நல்ல விளைவை ஏற்படுத்தும்.

        பூணூலை பற்றி இன்னொரு முக்கியமான விஷயத்தை இங்கு சொல்ல வேண்டும்.

       இயற்கை உபாதைகள் சரிவராதவர்கள் காதுகளில் பூணூலை சற்று அழுத்தமாக சுற்றிக் கொண்டால் மிக சுலபமாக பிரச்சனை தீரும்.

       இது அனுபவ உண்மை மட்டுமல்ல.  மருத்துவ உண்மையாகும்.

     மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்


Contact Form

Name

Email *

Message *