Store
  Store
  Store
  Store
  Store
  Store

கீழ் சாதிகாரன் வீட்டில் உணவு அருந்துவது கௌரவ குறைச்சலா...?

வைதீக பிராமணர்கள் அந்நிய வீட்டில் சாப்பிட மாட்டார்கள் அது ஏன்?

    ஒரே உணவு அதனுடைய தன்மை, அது வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை பொறுத்து மாறுபாடு அடைகிறது.

   செம்பு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து குடிப்பது மிகவும் நல்லது.  ஆனால் அதே  செம்பு பாத்திரத்தில் மோரை குடித்தால் அது விஷமாகி வயிற்றை கெடுத்துவிடும்

.  உப்பை எதில் போட வேண்டுமோ அதில் தான் போட வேண்டும்.

  உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பதற்காக பசும்பாலில் உப்பை போட்டு குடிக்க முடியுமா?  பால் திரிந்து போய் விடும். 

எனவே உணவு என்பது உடலுக்கு அமிர்தம் என்றாலும் அது இருக்கும் பாத்திரத்தை பொறுத்து விஷமாக கூட மாறிவிடும்.

  தெருவெல்லாம் சண்டை நடக்கிறது வெட்டு, குத்து, இரத்த வெள்ளம் ஊரே கலவரமாகயிருக்கிறது.  அந்த நேரத்தில் டீக்கடையில் நின்று அமைதியாக தேநீர் சாப்பிட முனைபவன் நிச்சயமாக முட்டாள் தான்.

 வீட்டில் எல்லோரும் சோகமகயிருக்கிறோம்.  ஏதோ ஒரு குழப்பம் குடும்பத்தில்.  அந்த நேரத்தில் விருந்தினர்களை உபசரிக்கிறோம்.  நம் பிரச்சனை அவர்களுக்கு தெரியாது என்றாலும் அவர்களால் நிம்மதியாக சாப்பிட முடியாது.

   அது ஏன்?  பலருக்கு இறப்பு ஏற்பட்ட வீட்டில் சாப்பிட பிடிக்காது.  மீறி சாப்பிட்டாலும் ஒத்துக் கொள்ளாது. 

  அது ஏன்?  எல்லாம் மன நிலை தான் காரணம் என்று சுலபமாக சொல்லி விடலாம்.

   ஆனால் அதில் ஓரளவு தான் உண்மையிருக்கிறது.  பெரியவர்கள் ஆசிர்வாதம் செய்யும் போது தலையில் கை வைத்து ஆசிர்வதிப்பார்கள். 

  அதற்கு காரணம் மனித எண்ணங்கள் கை விரல்கள் வழியாக அடுத்தவரையோ, அடுத்த பொருளையோ சென்றடைகிறது.

 சமைக்கும் போதும் சரி, பரிமாறும் போதும் சரி விரல்கள் உணவில் நிச்சயம் படும். 

  அப்போது அவர்களின் எண்ணங்கள் உணவு வழியாக நம்மை வந்தடைகிறது.

 அந்த எண்ணத்தின் பிரதிபலிப்பு உணவு சுவையாகவோ, சுவையற்றோ, சுவையாக இருந்தாலும் சாப்பிட பிடிக்காமலோ ஆகிவிடுகிறது. 

இதை தான் நமது பெரியவர்கள் கை பக்குவம் என்று சொன்னார்கள்.  அன்போடு சமைத்த அல்லது பறிமாறிய பழம் சாதம் கூட தேவாமிர்தம் ஆகிவிடும். 

    இதனால் தான் எல்லோர் வீட்டிலும் அநாவசியமாக சாப்பிடக் கூடாது என சொன்னார்கள்.  ஆனால் அந்த பழக்கம் இன்று சாதி முறையாகி விட்டது. 

   கீழ் சாதிகாரன் வீட்டில் உணவு அருந்துவது கௌரவ குறைச்சல் என போலியான வாழ்க்கை முறை வந்து விட்டது.

இந்த விஷயம் விபரம் அறிந்த பல வைதீகர்களுக்கே இப்போது தெரிவதில்லை

  அதனால் தான் காபி குடிப்பதற்கு கூட பிராமணாள் ஓட்டலைத் தேடி ஓடுகிறார்கள்

   பாதகம் நிறைந்த ஒரு பிராமணன் சமைத்த உணவு செறுப்புத் தைக்கும் தொழிலாளி சமைத்த உணவை விட மேலானது அல்ல!

  இது பலருக்குப் புரிவதில்லை

     மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும் 


 

Contact Form

Name

Email *

Message *