Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஒரு மனிதனுக்கு இரண்டு பிறப்பு!



  ந்திரங்களின் இமயம் காயத்திரி என்று சொல்வார்கள்

அப்படிப்பட்ட காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் என அனைவரும் ஆசைப்படுவார்கள்

ஆனால் சிலர் இந்த மந்திரத்தை எல்லோரும் சொல்லக்கூடாது பிராமணர்கள் மட்டும்தான் சொல்லலாம் ஏனென்றால் சாஸ்திரங்கள் சொல்லுகின்றபடி அவர்கள்தான் துவிஞ்சன் என்கிறார்கள்

சாஸ்திரங்கள் துவிஞ்சன் என்று சிலரை குறிப்பிடுகிறது.  துவிஞ்சன் என்றால் இரண்டாவது முறை பிறந்தவன் என்பது பொருளாகும். 


  ஒரு மனிதன் வாழும் போதே இரண்டு முறை எப்படி பிறக்க முடியும்?

  இரண்டாவது பிறப்பு என்பது உடல் சார்ந்த பிறப்பை அல்ல.  மனம் சார்ந்த பிறப்பாகும்.

 நேற்று வரை கொடியவனாக குரூரம் மனம் படைத்தவனாக வாழ்ந்தவன்  இன்று திடீர் என வள்ளலார் போல மகாத்மா காந்தி போல மாறிவிட்டான் என்றால் என்ன அர்த்தம்?

  அவனுக்குள் இருந்த கொடுர மனப்பான்மை செத்துவிட்டதாக தானே அர்த்தம். 

இப்படி எண்ணங்களாலும் மனதாலும் புதிதாக பிறந்தவனே துவிஞ்சன் ஆவான்.

  இப்படிப்பட்ட துவிஞ்சன் யாரும் காயத்ரி மந்திரத்தை சொல்லலாம்.


   பிராமணர்கள் உபநயன சடங்கை இரண்டாவது பிறப்பு என நம்புகிறார்கள்.

 இதனால் தாங்கள் மட்டுமே துவிஞ்சர்கள் என்கிறார்கள்.

 உபநயன சடங்கு மட்டுமே ஒருவனை இரு பிறப்பாளனாக ஆக்க முடியும் என்றால் விஸ்வகர்மாக்களும் ஆரிய வைஸ்சிய செட்டிமார்களும் உபநயனம் செய்கிறார்கள்.

  அவர்களும் காயத்ரி மந்திரத்தை ஓத பிராமணர்கள் சம்மதிப்பார்களா?

 அப்படி அவர்கள் சம்மதித்தால் காயத்ரி மந்திரத்தை பூணூல் போட்டவர்கள் மட்டுமே ஓத வேண்டும் என்பவதை ஏற்றுக் கொள்ளலாம்.


 பூணூல் என்பது புறக்கருவியே தவிற அகக்கருவியல்ல மந்திரங்கள் எல்லாமே அகச் சம்மந்தப் பட்டதாகும்

எனவே அகமுகமான விஷயங்களுக்கு ஒரு புறக்கருவியை மட்டும் தகுதியாக்க மாட்டார்கள் நமது முன்னோர்கள்

 இன்னொரு முக்கியமான விஷயம் காயத்ரி மந்திரத்தை உருவாக்கிய விஸ்வமித்திரர் பிறப்பால் பிராமணர் அல்ல.

  சுத்தமான சத்திரியர் ஆவார்.  ஒரு சத்திரியர் உருவாக்கிய ஒரு மந்திரத்தை பிராமணர்கள் உரிமை கொண்டாடுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

  பிராமணத்தன்மை இருப்பவனாக மந்திரத்தை ஜெபிப்பவன் கட்டாயம் இருக்க வேண்டும்

பிராமணத்தன்மை என்பது பிறப்பால் வருவது அல்ல

வாழ்விலும் வாக்கிலும் உண்மை நேர்மை அன்பு கருணை போன்றவற்றை வழுவாது கொண்டவன் என்பதாகும்

விஸ்வாமித்திரரும் தன்னிடமுள்ள சத்திரியத் தன்மையான மறக்குணத்தை விட்டப் பின்னேதான் காயத்திரி மந்திரத்தைக் கண்டறிந்தார்

 எனவே பிறப்பால் பிராமணனாக உள்ளவன் மட்டும் தான் காயத்ரி ஜெபிக்க வேண்டும் என்பது முரணான கருத்தாகும்.

  மனம் திருந்திய எவனும் துவிஞ்சனாகவே கருதப்படுவார்கள்.

 துவிஞ்சன் தான் காயத்ரி ஜபிக்க வேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது.

  ஆகவே மனம் திருந்திய யாரும் காயத்ரி சொல்வது சாஸ்திர விரோதம் ஆகாது.

  இனி அடுத்த விஷயத்திற்கு வருவோம்.

  ஆண்கள் மட்டும் தான் கொடுமைகாரர்களாக இருந்து மனம் திருந்துவார்கள் என்பது கிடையாது.

  அடங்காபிடாரிகளான பெண்கள் பலாயிரம் பேர் இருக்கிறார்கள்.

 இவர்களில் ஒரு சிலரேனும் மனம் திருந்தும் போது துவிஞ்சனாக மாறிவிடுகிறார்கள்.

  எனவே பெண்களும் காயத்ரியை ஜெபிப்பதில் தடையிருக்கவே முடியாது.

  கல்வி எல்லோருக்கும் பொது என்பது போல மந்திரங்களும் எல்லா ஜாதியினருக்கும் பொதுவானது தான்.





Contact Form

Name

Email *

Message *