Store
  Store
  Store
  Store
  Store
  Store

பொதுவுடைமை என்பது அழகான கனவு

  ற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் உருவாகவே முடியாதா? அப்படி ஒரு சமூகம் உருவானால் நன்றாக இருக்குமே என்று பலர் விரும்புகிறார்கள் சிலர் அதற்காக முயற்சியும் செய்கிறார்கள்

சில விஷயங்களை சொல்வதினால் மன சங்கடம் ஏற்பட்டு விடும் என்பதற்காக சொல்லாமல் விடுவது பெரிய தவறுதல் ஆகும். 

அரிஸ்டாடிலின் நூலை படித்தவர்கள் ஒரு விஷயத்தை நன்றாக அறிவார்கள்.

 இந்த உலகில் ஆளும் வர்க்கம் ஆளப்படும் வர்க்கம் என்று இருவேறு சமூக கூறுகள் இருப்பதாகவும் அது உலகம் அழியும் வரை இருக்கும் என்றும் அவர் சொல்கிறார் 


  மனித சமுதாயம் தோன்றிய நாள் முதலாக வறுமையென்பதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியும். 

வலுவானவன், பலகீனர்களை சுரண்டுவதினாலேயே வறுமையிருக்கிறது என சொல்பவர்களும் உண்டு.

 இவையெல்லாம் உண்மை தான்.  ஆனால் வறுமையை விரட்ட எடுத்துக் கொண்ட ஆயுத போராட்டங்களும் அகிம்ஸா போராட்டங்களும் இதுவரை வெற்றி பெறவேயில்லை.

  அதற்கு காரணம் என்ன?  


ஆண்டவன் படைப்பில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதனால்தான் தான் உலக இயக்கம் என்பது நடந்து கொண்டே இருக்கிறது. 

பொதுவாக நாம் வறுமை, செல்வம் என்பதை பணத்தோடு மட்டும் தான் பொறுத்தி பார்க்கிறோம்.  இந்த அணுகுமுறை முற்றிலும் தவறானது.

  அறிவு, அறிவின்மை, திறமை, திறமையின்மை என்பவைகளும் ஏற்றத்தாழ்வுகள் தான்.

 பணம் இல்லாதவனுக்கு கூட பணத்தை கொடுத்து செல்வந்தன் ஆக்கிவிடலாம்.  அறிவு இல்லாதவனுக்கும், திறமை இல்லாதவனுக்கும் எதை கொடுத்து சமப்படுத்த முடியும்?


  எனவே ஏற்றத் தாழ்வுகள் என்பது இயற்கையின் சமுதாய விதி, இதை மாற்றவே முடியாது.

 உலகம் சமநிலை பெற வேண்டும் என்பதுயெல்லாம் நல்ல எண்ணம் தான்.  ஆனால் அது சாத்தியப்படாது.

 இந்த உலகம் எப்பொழுது சமமாகயிருக்கிறது தெரியுமா?  உறக்கத்தில் மட்டும் தான்.  உறக்கம் என்பது செயலற்ற நிலை,

 அதாவது அழிவு மட்டும் தான் சமமானதே தவிர செயல் என்பது சமமாகவே இருக்காது. 


 ரஷ்யாவில் எல்லாவற்றையும் பொதுவுடமை ஆக்கிவிட்டால் வறுமை ஒழிந்து விடும் என கனவு கண்டார்கள்.

 ஆனால் பொதுவுடமை ஆட்சியில் மக்கள் கண்டது என்ன.  ஒரே ஒரு கோழி முட்டை வாங்க ரேஷன் கடை வரிசையில் எட்டு மணி நேரம் காத்து இருக்க வேண்டும்.

 இந்த விதி பொதுமக்களுக்கு தானே தவிர அதிகாரிகளுக்கு அல்ல.

 ஜன நாயகத்தில் சுரண்டுபவன் பணக்காரன் ஆவான்.  சர்வதிகாரத்தில் சுரண்டுபவன் அதிகாரியாவான்.


இப்பொழுது சொல்லுங்கள் மாற்றவே முடியாத ஏற்றத் தாழ்வு விதியை உருவாக்கிய இறைவன் எப்படி கொடுமைகாரன் ஆவான். 

யாருக்குமே பசியில்லை என்றால், எல்லோருக்குமே அறிவு இருக்கிறது என்றால் உலகத்தின்  இயக்கம் எப்படி நடக்கும்.

 போட்டது போட்டபடி அப்படியே கிடக்கும்.

 பசிதான் முன்னேற்றத்தின் பாதை.  தாழ்வு தான் ஏற்றத்திற்கான படிக்கட்டு எனவே பொதுவுடைமை என்பது எப்போதுமே மனிதர்களை தொடரும் அழகான கனவு




Contact Form

Name

Email *

Message *