Store
  Store
  Store
  Store
  Store
  Store

அறிந்து கொள்ள கடவுள் என்ன கம்யூட்டரா!


 நில அதிர்வு எப்போது வரும்? எந்தப்பகுதியை தாக்கும்? என்பதை முன்கூட்டியே அறிந்துக் கொண்டால் பல்லாயிரக் கணக்கான உயிர்களை காப்பாற்றலாம்

 ஆனால் இவைகளை மட்டுமல இதேப்போன்ற வேறு எந்த இயற்கை நிகழ்வுகளையுமே முழுமையாக மனிதனால் அறிந்துக் கொள்ள முடிவதில்லை

 இப்படி கண் முன்னால் தெரிகின்ற பறந்துக் கிடக்கின்ற இயற்கையையே நம்மால் அறிந்துக் கொள்ள இயலாத போது

 கண்ணுக்குத் தென்படாத கடவுளை எப்படி தெரிந்து கொள்ள முடியும்? என்பது பலரின் சந்தேகம்
 
 இன்று உலகத்தில் பல சூப்பர் கம்யூட்டர்கள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன.

  ஒரு மனித மூளை ஒரு வினாடியில் கணிக்கும் கணிதங்களை சில மைக்ரோ வினாடியிலேயே அவைகள் கணித்து விடுகின்றன. 

ஆனாலும் கணிப்பொறி வல்லுநர்கள் அந்த இயந்திரங்கள் எதுவுமே மனித மூளைக்கு முன்னால் வெறும் துரும்பு என்கிறார்கள். 

அந்த மூளையை கொண்டு தான் நாம் உலகத்தை பார்க்கிறோம்.

  உலகத்தின் ரகசியம் வெறும் பத்து சதவீகிதம் மட்டுமே அந்த மூளைக்கு தெரிகிறது.  இது மூளையின் குறைபாடா அல்லது அதை பயன்படுத்தும் விதத்தில் குறைபாடா?  என்பதை சிந்திக்க வேண்டும்.
 
   சமீபத்தில் தொலைக் காட்சி ஒன்று ஏற்பாடு செய்த விவாத நிகழ்ச்சி ஒன்றில் தீர்ப்பு சொல்ல என்னை கூப்பிட்டார்கள்.

 குடும்ப வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவது கணவன் மனைவியா?  பெற்றோர்களா?  பிள்ளைகளா?  என்பது தான் அந்த விவாதத்தின் முக்கிய கருவாகும்.

 கணவன் மனைவிதான் வளர்ச்சியின் வித்துயென தீர்ப்பு சொன்னேன்.

  நிகழ்ச்சியின் தொகுப்பாளராகயிருந்த பேராசியர் சன்னியாசியாகிய நீங்கள் கணவன் மனைவிக்கு சாதகமாக தீர்ப்பு கூறியது ஏன் என கேட்டார்.

  ஒரு மனிதன் கணவன் மனைவி ஆன பிறகு தான் பெற்றோராக மாறுகிறான்.
 
 
   பெற்றோர்கள் தான் பிள்ளைகளுக்கு வழி காட்டுகிறார்கள்.

 ஆகவே குடும்பத்தின் மூல வித்து கணவன் மனைவி தான்.

  அந்த கணவன் மனைவி இல்லாவிட்டால் சன்னியாசியும் இல்லை.  கடவுளுக்கு வழிபாடும் இல்லை, என்றேன்.

  ஆகவே மூலத்தை அறிந்து கொண்டால் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளலாம்.

 அதனால் தான் இந்து மதம் எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியுமோ அதை அறிந்து கொள்ள முயற்சி செய் என்கிறது.

  கடவுள் இயற்கைக்கு அப்பாற்பட்டு இருந்தாலும் இயற்கைக்குள்ளும் இருக்கிறார்.

  அதனால் அவர் இயற்கையின் மூலமாகி விடுகிறார்.

 அந்த ஆதி மூலத்தை அறிந்து கொண்டால் இயற்கையின் அத்தனை ரகசியங்களும் தெரிந்து விடும்.

 எனவே இறைவனை அடைந்தால் இயற்கையின் ரகசியம் அவனுக்குள் சிறுத் துளியாக இருப்பதை நாம் அறியலாம். 

ஆண்டவனை அறிவது என்பது சாத்தியம் இல்லாத விஷயமே அல்ல.

  அவனை முழுமையாக அறிந்தவர்கள் இயற்கையையும் முழுமையாக அறிந்து இருக்கிறார்கள்.

  அதை கட்டுப்படுத்தியும் இருக்கிறார்கள்.
 

Contact Form

Name

Email *

Message *