Store
  Store
  Store
  Store
  Store
  Store

கடவுளுக்கு பெண் கொடுத்த நரிக்குறவர்கள்

  ந்து மதம் புரட்சிகரமானது நியாய அநியாய உணர்வுடையது மாந்தர்களை சமமாக நோக்கும் தன்மை உடையது என்று புகழ்ந்து பேசுகிறிர்களே

உங்கள் இந்து மத கடவுளான  முருக கடவுளுக்கு பெண் கொடுத்தவரகள் குறவர்கள்.  அவர்களை கோவிலுக்குள் நுழைய கூடாது என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?

 இதற்க்கு உங்கள் விளக்கம் என்ன என்று தொலை பேசியில் ஒரு அன்பர் கேட்டார்

குறவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பதை பற்றி பிறகு பார்ப்போம்.  அதை விட முக்கியமானதொரு விஷயம் இருக்கிறது.  நமது புராணங்களும் இதிகாசங்களும் மனிதர்கள் நேர்மையானவர்களாகவும் ஒழுக்க சீலர்களாகவும் வாழ வேண்டும் என்று தான் வலியுறுத்துகின்றன.


  ஒரு பெண்ணுக்கு இரண்டு புருஷர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் அவளை ஒழுக்கம் உள்ள பெண்ணாக நம் நாட்டிலும் சரி வெளிநாட்டில் கூட சரி யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள்.

 கற்பு என்பதும், ஒழுக்கம் என்பதும் பெண்ணுக்கு மட்டும் சொந்தமானது அல்ல.  ஆணுக்கும் அதில் சமபங்கு இருக்கிறது.  ஒன்றுக்கு மேற்பட்ட துணையை பெற்ற ஒரு பெண் எப்படி ஒழுக்கம் கெட்டவளோ அதே போல தான் இரண்டு மனைவி கொண்ட ஆணும் ஒழுக்கம் கெட்டவன் ஆவான்.

  மனிதர்களின் கதையே இப்படி என்றால் தெய்வங்கள் ஒழுக்கத்தில் நமக்கு எடுத்து காட்டுகளாக இருக்க வேண்டும்.  ஆனால் நமது இந்து மத கடவுள்களான முருகனுக்கு வள்ளி தெய்வானை, அவன் அப்பனுக்கு பார்வதி, கங்கை, மாமனுக்கோ நிலமகள், பூமகள் என இரண்டு இரண்டான மனைவிகள்.

 எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய கடவுள்மார்களே இரண்டு பெண்டாட்டியை கட்டிக் கொள்வது எந்த வகையில் நியாயமாகும்?


  இந்து மதத்தை குறை கூறுபவர்கள் இத்தகைய சம்பவங்களை சுட்டிக்காட்டித்தான் பேசுகிறார்கள்.

  எல்லாவற்றிலுமே முன் உதாரணமாக திகழும் நமது முன்னோர்கள் இதைப் பற்றி சிந்திக்க வில்லையா?  என்று நமக்கு தோன்றும் ஆனால் புராணங்கள் வெறும் கதைகளை சொல்வதற்காக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் அல்ல.  அவைகளுக்குள் மிக ஆழமான தத்துவங்கள் மறைந்து கிடக்கிறது.  அதை தேடி கண்டுபிடித்தால் இத்தகைய கேள்விகளே தோன்றாது.

  நமது உடல் என்பது சக்தி சொரூபம் ஆகும்.  அதனுள் மறைந்து கிடக்கும் அறிவு சிவ சொரூபமாகும்.  உடல் என்ற சக்திக்கும் அறிவு என்ற சிவத்திற்க்கும் இணக்கம் உள்ளது என்பதை காட்டுவதே தெய்வீக திருமணங்களாகும்.

  முருகனின் இருதார மணத்தை தத்துவ நோக்கில் பார்க்கும் போது முருகனிடத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி ஆகிய இரண்டு வகை சக்திகள் இருக்கின்றன.


  கிரியா சக்தி என்பது தெய்வானை வடிவாகும்.  இச்சா சக்தி வள்ளியின் வடிவாகும்.  செயல் என்ற கிரியா சக்தியும்  இச்சா என்ற அன்பு மயமான பக்தியும் கடவுளிடம் நம்மை கொண்டு சேர்க்கும் என்பதை விளக்குவதே கடவுள் இரண்டு தேவிமார்களுடன் தோன்றுவதாகும்.

  இனி குறவர்கள் விஷயத்திற்கு வருவோம்.  நமது நாட்டில் வாழும் மிக தொன்மையினர் பழங்குடி இனங்களில் குறவர்கள் முக்கியமானவர்கள் ஆவார்கள்.

 இந்த இனத்தாரிடம் பல நல்ல பண்புகள் இருக்கிறது.  பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் குறவர்களுக்கு இணையாக வேறு எவரையும் சொல்ல முடியாது.

 நமது வீடுகளில் ஆண் குழந்தை பிறந்தால் தான் சிரிப்பு சத்தம் கேட்கும்.  பெண் குழந்தை பிறந்த வீடுகள் ஏதோ நடக்க கூடாதது நடந்து விட்டது போல அமைதியாக காட்சியளிக்கும்.


  ஆனால் குறவ குடிசைகளில் பெண் குழந்தை பிறந்து விட்டால் கூத்தும் கும்மாளமும் அதிரும் வகையில் இருக்கும்.  நாம் ஆண்களுக்கு வரதட்சனை கொடுக்கிறோம்.  குறவர் இனத்திலோ பெண்களுக்கு தான் தட்சனை கொடுக்க வேண்டும். 

வேட்டையாடுவதிலும் பணம் சம்பாதிப்பதிலும் ஏன் குடித்து விட்டு கும்மாளம் அடிப்பதிலும் குறவர் இன பெண்கள் ஆண்களுக்கு இணையானவர்களாக இருக்கிறார்கள்.

  குறவர்கள் சரியாக குளிப்பதில்லை.  சுத்தமான ஆடைகள் அணிவதில்லை என்பது நமக்கு தெரியும்.  அவர்கள் அப்படியிருப்பதற்கு காரணமிருக்கிறது.

 பொதுவாக அவர்களுக்கு நிலையான குடியிருப்புகள் கிடையாது.  தங்கள் தொழில் அடிப்படையில் பல இடங்களுக்கு சுற்றி திரிய வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள்.

 அப்படிப்பட்ட நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாகவோ காட்டு பகுதிகளிலோ வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது. 


  எல்லா ஊர்களிலும் போக்கிரிகள் உண்டு.  இவர்கள் தங்கள் பெண்களையும் குழந்தைகளையும் தொல்லை படுத்த கூடும். 

அவர்களுடன்  தினசரி சண்டை போட்டு வாழ்க்கையை போர்களமாக்கி கொள்வதை விட ஒதுங்கி வாழ்வதே மேலானது என குறவர்கள் அழுக்கையும் துர்நாற்றத்தையும் தங்களை பாதுகாக்கும் கவசங்களாக கொண்டிருக்கிறார்கள்,

  குளித்து சுத்தமாக இருக்கும் அயோக்கியனை விட குறவர்கள் எவ்வளவோ மேலானவர்கள்.

இவர்களை ஆலயத்திற்குள் அனுமதிப்பது இல்லை என்பது சுத்த அயோக்கியதனமாகும்.  குறவர்களை மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட மக்கள் எவரையுமே கிராம புறங்களில் கோவில்களுக்குள் அனுமதிப்பது இல்லை.

  தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் ஆலயங்களில் கூட கிறிஸ்தவர், இஸ்லாமியர் போன்ற மாற்று மதத்தினரையும் அனுமதிப்பது இல்லை. 


  ஒரு வேளை இவர்கள் அனைவருமே கடவுளுக்கு விரோதமானவர்கள் என சில மனநோயாளிகள் முடிவு செய்து இருப்பதை போல நமக்கு தோன்றுகிறது.

 சட்ட பூர்வமான ஆலய பிரவேச அனுமதி இருந்தும் கூட பல பகுதிகளில் இந்த முறை நடைமுறையில் இருப்பது வெட்க கேடானதாகும்.

  நமது இந்து மதம் கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் எல்லோருமே கடவுளுக்கு பொதுவானவர்கள் என்று தான் சொல்லுகிறது.

இதை கடைபிடிக்காதவர்கள் தங்களை இந்துக்கள் என அழைத்து கொள்ளும் தகுதி இல்லாதவர்களே ஆவார்கள்.
Contact Form

Name

Email *

Message *