( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )30 ஞாயிறு ஜூன் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கொள்ளை அடிச்சதை வாரி வீசினாங்க!

  தேர்தல் முடிந்து விட்டது இனி அடுத்ததாக தமிழகத்தை கொள்ளையடிக்கப் போவது மீண்டும் கலைஞரா? அல்லது ஜெயலலிதாவா என்ற கேள்விக்கு அடுத்த மாதம்தான் விடை கிடைக்கும்

அதுவரை காத்திருப்பதை தவிற வேறு வழியில்லை ஒரு நண்பர் சொன்னார் எதற்காக இத்தனைக்காலம் இழுவை இங்கத்தைய முடிவுகள் மற்ற மாநில மக்களின் மனநிலையை மாற்றும் என்பதற்கு இது மக்களவைத் தேர்தலா?  சட்டமன்ற தேர்தல்தானே என்று அவர் சொல்வது நியாயம்தான் ஆனால் இது யார்காதில் விழப்போகிறது?

இன்னொறு நண்பர் தேர்தல் ஆணையத்தை மிகவும் பாராட்டினார் பாராபச்சம் இல்லாமல் சட்டத்தை கடைபிடித்தனர் என்று எனக்கு சிரிப்புத்தான் வந்தது


 தேர்தல் கமிஷன் நடந்துக் கொண்ட விதத்தை நினைத்து நான் தினசரி காலை 11.45 மணிக்கு அரகண்டநல்லூலிருந்து காடகனூர் ஆசிரமம் செல்ல கிளம்புவேன்

வழியில் வடகரை தாழனூர் பக்கத்தில் உள்ள ஐயனார் கோயிலை நெருங்கும் போது போலிஸ்காரர்கள் காரை மறித்து நிறுத்துவார்கள் கட்சிப்பணம் எதாவது கொண்டு போகிறீர்களா? என கேட்பார்கள் இல்லையென்று தலையசைத்ததும் போகச் சொல்லிவிடுவார்கள்

ஆனால் அப்பாவி விபரம் தெரியாதவர்கள் யாராவது மாட்டிக்கொண்டால் 50;100 வாங்காமல் விட மாட்டார்கள்

கட்சிக் கொடி கட்டிய வண்டிகள் போனால் மரியாதையாக நடந்துக் கொண்டு வழிவிடுவார்கள் இது தினசிரி நான் பார்த்து அனுபவித்த சம்பவங்கள்

பணத்தை பறிமுதல் செய்த கதையெல்லாம் யாராவது மேலிடத்து ஆசாமிகள் செய்ய சொன்னதினால் நடந்ததே தவிற வேறு ஒன்றுமில்லை


 இதை கற்பனையாக சொல்வதாக யாறும் கருதவேண்டாம்

 தேர்தல் ஆணையம் கண்டிப்பாக நடந்திருந்தால் வாக்காளருக்கு பணப்பட்டுவாடா செய்திருக்கவே முடியாது

ஆனால் நடந்தது என்ன?

 திருவெண்ணை நல்லூருக்கு அறுகிலுள்ள எடையார் கிராமத்தில் ஒரு ஓட்டுக்கு 200 ரூபாய் கொடுக்கப்பட்டதாக சொன்னார்கள்

நானிருக்கும் அரகண்டநல்லூர் மற்றும் காடகனூரிலும் இதே அளவு பணம் கொடுக்கப் பட்டது

 பைப்படியில் தண்ணீர் பிடிக்கும் பெண்களுக்கே பகிரங்கமாக கொடுத்தார்கள்

தமிழ் நாடு முழுவதும் பரவலாக கொடுக்கப் பட்டதாக பல இடங்களிலிருந்து நண்பர்கள் தொலை பேசியில் சொன்னார்கள்

அதிகமாக பணம் கொடுத்தது திமுக தான் 

 விழுப்புரம் தொகுதியில் ஆளும்கட்சிக்கு இணையாக எதிர்கட்சியும் பணம் கொடுத்தது ஓட்டு ஒன்றுக்கு 1000 ருபாய் கொடுத்ததாக கேள்வி

ரிஷீவந்தியம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 500 ரூபாய் கொடுத்தார் விஜயகாந்த் 100 ரூபாய் கொடுத்தார்

இது ஒளிவுமறைவாய் எல்லம் நடக்கவில்லை இரவு பகல் என்னேரமும் நடந்தது

இன்னும் சொல்லப் போனால் நேற்று அதாவது 13 ஆம் தேதி மாலை 4 மணிவரையிலும் கனஜோரா திமுக பண வினியோகம் செய்தது

 எந்த தேர்தல் அலுவலரும் கண்டு கொள்ளவே இல்லை

 நம் ஆசிரமம் பக்கத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெரியவர் ஒருவர் சொன்னார்

பணமும் பாட்டிலும் பொட்டி பொட்டியாய் கொண்டு இறக்குறானுவ எங்கேயோ கொள்ளை அடிச்சதை தெருத்தெருவாய் வாரி வீசுறானுவ என்று

இந்த வார்த்தையைத்தான் தமிழ்நாடு முழுவதும் நிஜமாக காண முடிந்தது

அப்படி என்றால் வரக் கூடிய ஐந்து வருஷம் தமிழ்நாட்டுக்கு வனவாசம் தானா ?

மீண்டும் அஞ்சா நெஞ்சனின் ஆட்டோ கனஜோரா மதுரை வீதியில் ஓடுமா?

விவசாய நிலம் தொழில் வியாபாரம் எல்லாம் அதோகதியா? என்ற கவலை வயிற்றைப்பிசைகிறது

ஆனாலும் ஒரு ஆறுதல் அந்த ஆட்டுக்கார பெரியவரின் மனைவி

நீ கவலைப் படாத சாமி நம்ம ஜனங்க எமகாதர்ங்க இம்புட்டு பணம் எப்படி வந்துச்சின்னு எலாத்துக்கும் நல்லா தெரியும்

காசை வாங்கி கக்கத்துல சொறுகிகிட்டு மாத்தித்தான் குத்தும்

காசு வாங்கினா விசுவாசமா இருக்கணும் என்கிறது அந்தக்காலம்

நீ கம்முன்னு குந்திக்கினு வேடிக்க பாரு

அப்பால எல்லா டமால்னு பூடும் சந்தோஷமா கெட என்ற வார்த்தை இதமாகத்தான் இருந்தது

 ம்ம்ம்... பொருத்திருந்து பார்ப்போம்!


+ comments + 3 comments

08:29

"ஆனாலும் ஒரு ஆறுதல் அந்த ஆட்டுக்கார பெரியவரின் மனைவி

நீ கவலைப் படாத சாமி நம்ம ஜனங்க எமகாதர்ங்க இம்புட்டு பணம் எப்படி வந்துச்சின்னு எலாத்துக்கும் நல்லா தெரியும்

காசை வாங்கி கக்கத்துல சொறுகிகிட்டு மாத்தித்தான் குத்தும்

காசு வாங்கினா விசுவாசமா இருக்கணும் என்கிறது அந்தக்காலம்

நீ கம்முன்னு குந்திக்கினு வேடிக்க பாரு

அப்பால எல்லா டமால்னு பூடும் சந்தோஷமா கெட என்ற வார்த்தை இதமாகத்தான் இருந்தது"

அந்த பெண்மணி சொன்னது நிஜமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.ஆட்டுக்கார பெண்மணி சொன்னது அப்ப்டியே நடக்கனும்னு ஆண்டவனை வேன்டிக்கொல்வோம் குருஜி.

Vaari iraiththathu enakku onnum kidaikkala...


Next Post Next Post Home
 
Back to Top