Store
  Store
  Store
  Store
  Store
  Store

நீ பாவம் செய்தால் எனக்கு தண்டனை!


பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் சேறும் என்கிறார்கள்

என் தகப்பனார் லக்ஷச ரூபாய் கடன் வைத்துவிட்டு செத்துப் போனால் அதை நானடைக்கலாம் தப்பில்ல

அதே வேளை பக்கத்து வீட்டுக்காரனை கல்லைப்போட்டுக் கொன்று விட்டாரென்றால் அதற்கான தண்டனையும் பாவத்தையும் நானும் அனுபவிக்கனும் என்றால் என்னால் ஆகுமா ? இந்த தர்மம் எப்படி சரியாகுமென பலர் கேட்கிறார்கள்

இன்று உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் சிவில் சட்டம் என்றும், கிரிமினல் சட்டம் என்றும் இரண்டு வகையான சட்டங்கள் உள்ளது.

இந்த சட்டங்களில் எதுவுமே அப்பன் செய்த தவறுக்கு மகனை பலியாக்குவது இல்லை.

நான் திருடன் என்றால் திருட்டு குற்றத்துக்காக சிறைக்கு நான் தான் செல்ல வேண்டுமே தவிர என் பிள்ளைகளை அனுப்புவது எந்த வகையிலும் நியாயமில்லை.

ஆனால் நமது இந்து மதம் இந்த நியாயத்தை ஒத்துக் கொள்வது கிடையாது.

சட்டம் என்பது மனிதர்களால் ஏற்படுத்திக் கொண்டது. தர்மம் என்பது இயற்கை நியதியாகும்.

மனிதனின் உற்பத்திகள் கண்டுபிடிப்புகள், எண்ணங்கள் காலம் தோறும் மாறக் கூடியது.

இயற்கை விதி அப்படி அல்ல.

பல ஆயிரம் வருஷங்களாக மார்கழி மாதத்தில் பனி பெய்கிறது. சித்திரை மாதத்தில் வெயில் அடிக்கிறது. ஆடிக்காற்றில் அம்மியே பறக்கிறது.

கணிப்பொறி வந்தாலும் விண்வெளி கப்பலில் ஏறி பிரபஞ்சத்தையே வலம் வந்தாலும் தர்மம் மாறுவது கிடையாது.

நான் ஒரு தந்தைக்கு முன்னால் அவன் மகனை கொடுமைப்படுத்தியிருந்தால் என் பிள்ளைக்கொரு கஷ்டம் வந்து புத்திர சோகத்தை அனுபவித்தே தீர வேண்டும்.

மாற்றான் மனைவியை மானங்கெடுக்க நான் நினைத்தால் என் மனைவி கெட்டு நிற்பதை பார்த்து நான் கூனி குறுகியே ஆக வேண்டும்.

இன்று நான் செய்த தவறிலிருந்து தப்பித்து கொள்ளலாம். தண்டனை பெறுவதற்கு கால தாமதமும் ஆகலாம்.

ஆனால் நாளையோ அல்லது மறுபிறப்பிலேயோ கூட நான் வீசிய ஈட்டி என் மார்பை பிளந்தே தீரும்.

பிள்ளைகளால் எனக்கு துன்பம் என்றால் எனது தவறுதலுக்கு அவைகள் ஏன் வீணாக சோதனைப்பட வேண்டும்?

அவர்களும் என்றோ செய்த தவறுக்கு என்னிடத்தில் பிறந்து தண்டனையை அனுபவிக்கிறார்கள்.

இது தான் இந்து மதம் காட்டும் தர்மத்தின் பாதை.

இதற்கு நடைமுறை வாழ்க்கையிலிருந்தும் சான்றுகளை தரலாம்.

எனக்கு சக்கரை நோய் இருக்கிறது என்றால் என் மகனுக்கும் அவன் வயிற்று பேரனுக்கும் கூட அது வரலாம்.

மரபு அணுக்களின் வேலை அது. மரபு அணு என்பது மனிதனின் கண்டுபிடிப்பு அல்ல. இயற்கை புத்தகம் அது.

நான் பாவம் செய்யும் போது அதன் பலன் பிள்ளைகளுக்கும் உண்டென்றால் எனக்கு தவறு செய்ய தயக்கம் வருமல்லவா?

எனவே பெற்றவர்கள் பாவத்தின் பங்கு குழந்தைகளுக்கும் உண்டு




 

Contact Form

Name

Email *

Message *