( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )30 ஞாயிறு ஜூன் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

பொய் பேசிய கடவுளும் உண்மை பேசிய சாத்தானும்!


தூத்துக்குடி கிறிஸ்டோபர் பெர்னாண்டோ என்ற அன்பர் மின்னஞ்சலில் குருஜிக்கு சில கேள்விகள் அனுப்பியிருந்தார் அவர்களது கேள்விகளும் அதற்க்கான குருஜியின் பதில்களும் கீழே தருகிறோம்

        யேசு கிறிஸ்துவை கிறிஸ்த்துவர் அல்ல என்று நீங்கள் சொல்லியிருப்பது எந்த வகையில் நியாயம்?

    இயேசு நாதர் இஸ்ரேல்  நாட்டில் பிறந்தவர் என்பது உலகமறிந்த செய்தி அவர் தந்தை ஜோசப்பும் தாய் மரியாளும் சுத்தமான யூதர்கள் என்று தனியாக சொல்ல தேவையில்லை இந்த உலகத்தில் சுன்னத் என்ற விருத்தசேதன சடங்கை முக்கியமானதாக கொண்டது யூதர்களும், இஸ்லாமியர்களுமே ஆவார்கள் இயேசு கிறிஸ்த்துவிற்கும்,விருத்தசேதன சடங்கு நடந்திருக்கிறது.


 இயேசுவின் பெற்றோர்கள் யூதமத சம்பிராதயங்களை பக்தி சிரத்தையுடன் பின்பற்றியதினால் தான் ஜெருசலம் நகரில் உள்ள ஆலயத்திற்கு பன்னிரெண்டு வயது நிரம்பிய தங்களது குமாரனை அழைத்து சென்றனர். ஆக வரலாற்றின் படி இயேசு யூத மதத்தில் தான் பிறந்து இருக்கிறார். அந்த மத மரபுபடி தான் வளர்க்கவும் பட்டிருக்கிறார்.

 யூத கடவுளையே தனது பிதாவாக கருதியதினால் தான் ஆலயத்திற்குள் வியாபாரம் செய்த வியாபாரிகளை தூரத்திவிட்டு என் தந்தையின் வீட்டை சந்தையாக்காதீர்கள் என எச்சரித்தார்.

 தான் வாழ்நத காலத்திலேயே தனது சிந்தனைகளை, கோட்பாடுகளை ஒரு மதம் அல்லது மார்க்கம் என்று பகீரங்கமாக அறிவித்தது முகமதிய நபி ஒருவர் மட்டுமே புத்தராகட்டும், வர்த்தமான மகாவீரர் ஆகட்டும் தங்களது உபதேசங்களை எப்போதுமே இது ஒரு தனி மதபிரிவு என்ற நோக்கில் செய்தது கிடையாது. அவர்கள் காலத்திற்கு பிறகு தான் அவர்களின் கொள்கைகள் மதங்களாக உருவெடுத்தன.


  இதே போலத்தான் இயேசு நாதரின் மரணத்திற்கு பிறகே அவருடைய உபதேசங்களை ஒரு மத கொள்கையாக உருவாக்கினார்கள். பௌத்த மதத்தை உருவாக்கிய கௌதமபுத்தர் எப்படி ஒரு பௌத்தர் இல்லையோ அப்படியே இயேசும் ஒரு கிறிஸ்த்துவர் அல்ல நான் இதை அவர் மீது களங்கப்படுத்த சொல்லவில்லை மாறாக கௌரவப்படுத்தவே சொல்கிறேன். கிறிஸ்த்துவ மதம் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தாருக்கு மட்டுமே  சொந்தமானது ஆனால் இயேசுநாதர் உலக முழுமைக்கும் சொந்தமானவர் அவரை தனிப்பட்ட மதமோ,நிறுவனமோ நாடோ சொந்தம் கொண்டாட முடியாது.

    மேலும் இயேசுநாதரின் கொள்ளை கிறிஸ்த்துவ மதத்தார் மட்டுமே முழுமையாக கடைப்பிடிக்கிறார்கள். எனவே அவர் அவர்களுடைய தனி சொத்து என்று யாரும் வாதாட முடியாது காரணம் இன்றைய கிறிஸ்த்துவர்களில் 98 சதவீதம் பேர் இயேசுவை அறியாதவர்கள், இயேசுவை புரியாதவர்கள் அவர் சொற்படி நடக்காதர்கள் இன்று தங்களை கிறிஸ்த்துவர்கள் என்று அழைத்து கொள்ளும் மனிதர்கள் அவர் கூறியப்படி மட்டுமே வாழ்க்கை முறையை நடத்தி கொண்டிருந்தால் இன்யை உலகில் எந்த சிக்கலுமே இல்லாமல் இருந்திருக்கும்

ஆனால் அப்படி யாருமே இல்லை அதனால் கிறிஸ்த்துவ மதத்திற்கும், இயேசுவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது எனது உறுதியான கருத்து அதனாலும் இன்றைய பாதிரியார்களில் பலர் மனிதர்கள் தங்கள் பாவத்திலிருந்து விடுபட வேண்டுமானால் கிறிஸ்த்தவ சமயத்தை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஞானஸ்தானம் செய்து கொண்டால் மட்டுமே முடியும் என்று பகிரங்கமாகவே சொல்லி வருகிறார்கள் அதனால்தான் ஏசு கூட பிறப்பால் கிறிஸ்த்தவர் அல்ல என்று சொன்னேன்


   சில கிறிஸ்த்துவ இணையதளங்கள் உங்கள் எழுத்துக்கள் குழந்தைதனமானது என விமர்சித்துள்ளதே அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

அவர்கள் எனது எழுத்துக்கள் அர்த்தமற்றவைகள் என்ற பொருளில் குழந்தைதனமானது என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தால் அதில் ஆழ்ந்த உண்மையிருப்பதாக நான் கருதவில்லை. ஒரு சொல்லானது ஒருவனை சுடுகிறது என்றால் கோபமடைய செய்கிறது என்றால் அதில் ஏதோ ஒரு உண்மை சிறிதளவாவது இருக்க வேண்டும்

அப்படி சொல்லாமல் பொதுவாக குழுந்தைனம் என்று சொன்னால் நிச்சயம் அது எனக்கு சந்தோஷம் தருகின்ற செய்திதான் மேதாவித்தனம் கர்வம் என்ற வார்த்தைகளை ஒரு வேளை அவர்கள் பயன்படுத்தினால் என்னை திருத்திக் கொள்ள நான் முயற்ச்சிக்க வேண்டும்.

 இயேசு கிறிஸ்த்து கூட ஒரு இடத்தில் குழந்தைகளைபோல இருப்பவர்கள் பாக்கியவான்கள் என்று சொல்கிறார் வேறொரு இடத்தில் குழந்தைகளை என்னிடம் வர தடை செய்யாதீர்கள் என்றும் சொல்கிறார் குழந்தைகள் கபடமற்றவர்கள், வஞ்சனை, சூது அறியாதவர்கள் அதனால் அவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்கள் எனவே எனது எழுத்துக்கள் குழநதைதனமாக இருப்பதையே நான் விரும்புகிறேன் அதற்காக மரணகாலம் வரையில் கூட பாடுபட தயாராக இருக்கிறேன்.
 ருள் தந்தை டேவிட் அடிகளார் என்பவர் உங்கள் கருத்துக்களை மறுத்து எழுதப்போவதாக சொல்கிறாரே...?

 அருள்தந்தை டேவிட் அடிகளாருடைய கண்ணியமான விமர்சனத்தை நானும் படித்தேன் அவர் என் கருத்துக்களை மறுதலித்து இருந்தாலும் கூட ஆக்க பூர்வமான பல விஷயங்களை தெளிவுப்பட சொல்லியிருந்தார். அவர் குறிப்பாக இயேசுநாதர் பாவம் செய்திருப்பதாக நான் சொல்லியதை வேதனையோடு மறுத்து இருக்கிறார்

ஆனால் உண்மையில் இயேசுவை ஒரு பாவி என்ற நோக்கில் நான் அப்படி எழுதவில்லை. அவரே பாவம் செய்திருந்தாலும் அதற்கு மன்னிப்பு மட்டுமே முடிவானதாக இருக்காது என்ற நோக்கில் தான் எழுதியிருந்தேன். இயேசு இறைமகன் அவரால் பாவம் செய்ய முடியாது என அருள்திரு அடிகளார் சொல்கிறார்

நான் இயேசுவை மட்டுமல்ல மனிதர்கள் அனைவரையும் இறைமக்களாக கருத வேண்டுமென நினைக்கிறேன் ஆனாலும் மனித சரீரம் என்று வரும் போது கர்மதளை கூடவே வரும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை கடவுளான கண்ண பெருமான் கூட தர்மத்தை நிலை நிறுத்த பாரதயுத்தத்தை நடத்தி ஆசை வயப்பட்ட கௌரவர்களை அழித்தத்தினால் காந்தாரியின் சாபம் பெற்றான்

அதனால் தான் கண்ணனின் இறுதிகாலம் யாரும் அறியாதவண்மை இறுதி மரியாதை செய்ய உடல் கூட கிடைக்காத வண்ணம் அமைந்தது இயேசு கிறிஸ்த்துவும் மனிதர்களின் பாவத்திற்காகத் தான் சிலுவையில் ரத்தம் சிந்துகிறார். ஆகவே யுக புருஷர்கள் தாங்கள் பாவம் செய்யவில்லை என்றாலும் உலகத்தவர் பாவத்தை தாங்க வேண்டிய நிலையில் ஒரு வினாடியேனும் பாவிகளாகத்தான் இருக்கிறார்கள். இது என் சொந்த கருத்து இதை மறுத்து சொல்ல அடிகளார் அவர்களுக்கு பூரண உரிமை உண்டு அவர் மறுப்பு எனக்கு நியாயமாகப்பட்டால் அதை பகீரங்கமாகவே ஏற்று கொள்வேன். அவரின் மறுப்புறைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.


     ன்னும் சில கிறிஸ்த்துவ தளங்கள் உங்களையும் உங்கள் உஜிலா தேவி தளத்தையும் சைத்தான் என்று வர்ணணை செய்கிறதே?

    பொதுவாக நிறைய கிறிஸ்த்துவ பிரச்சாரர்களும், பிரசங்கிகளும் மாற்று மதத்தவர்களை மாற்று கருத்து உடையவர்களை மாற்று மத தெய்வங்களை சைத்தான்கள் என்ற வார்த்தையிலேயே அழைக்கிறார்கள்

 அப்படி அழைக்கும் போது அதற்கு அவர்கள் என்ன பொருள் வைத்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே  சொல்லத் தெரியாது ஒரு மனிதன் தான்தான் நல்லவன் தான் நடக்கும் வழி தான் சரியானது மற்றவர்கள் அனைவருமே தவறானவர்கள் என்று சொல்ல துவங்குவானேயானால் அவனுக்கு தெளிவான மதி இருப்பதாக யாரும் சொல்ல மாட்டார்கள்.

 தன்னை மட்டுமே உயர்ந்தவனாக கருதுகின்றவன் தான் சிறந்த அழிவு சக்தியாக இருந்திருக்கிறான் என்று சரித்திரம் பல சான்றுகளை நமக்கு சுட்டி காட்டுகிறது.


  நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாக இருந்த காலத்தில் வேடிக்கையாக இந்து மத புராணங்களையும்  பைபிள்,குரான், தம்பதம், ஸ்ரீபுராணம் போன்ற புனித நூல்களையும் விமர்சிப்பது வழக்கம்

அப்படி பைபிளை விமர்சிக்கும் போது உலகத்தை படைத்த கர்த்தர் எல்லாவற்றையும் படைத்து விட்டு கடைசியில் ஆதாம் என்ற மனிதனையும் அவன் விலா எலும்பிலிருந்து ஏவாள் என்ற மனுஷியையும் படைத்து ஏதேன் என்ற தோட்டத்தில் விட்டாராம் நீங்கள் இங்குள்ள எல்லா கனி வர்க்கங்களையும் புசியுங்கள் அதோ அந்த பழத்தை மட்டும் புசிக்காதீர்கள் அதை மீறி அதை நீங்கள் உண்டால் மரித்தே போவீர்கள் என்று ஒரு மரத்தை காட்டி ஆதாம்,ஏவாளிடம் கர்த்தர் சொன்னாராம்.

    ஆதாமும் ஏவாளும் அந்த மரம் பக்கமே போவது கிடையாதாம் ஒரு நாள் ஏதேன் தோட்டத்திற்கு வந்த சைத்தான் இந்த மரத்துக் கனியை புசித்தால் நீங்கள் சாகமாட்டீர்கள் மாறாக கடவுளை போல ஆவீர்கள் என ஆசை மொழி சொன்னதாம் ஏவாளும் அந்த பழத்தைப் பறித்து தானும் உண்டு தனது புருஷனுக்கும் கொடுத்தாளாம்


  அதன் பின்னரே அவர்கள் இருவரும் தாங்கள் நிர்வாணமாக இருப்பதை அறிந்து கொண்டார்களாம் கடவுளாகிய கர்த்தர் சொல்லிய படி அவர்கள் சாகவில்லை சைத்தான் சொல்லியபடி மட்டும் அவர்கள் செய்யவில்லை என்றால் மனித குலம் ஆடு,மாடுகளாக இருந்து முன்னேற்றம் காணாமலேயே போயிருக்கும் இன்றைய வளர்ச்சியை கனவில் கூட கண்டிருக்க முடியாது இன்னும் ஒருபடி சொல்லப் போனால் கர்த்தரின் வார்த்தையை ஏற்று ஆதாமும்,ஏவாளும் நடந்திருந்தால் அற்புத சுகமளிக்கும் சுவிசேச கூட்டங்கள் போடுவதற்கும் அலேலுயா ஓசன்னா என கோஷம் போடுவதற்கும் ஒரு ஆள் கூட கிடைத்திருக்க மாட்டார்கள் என்று பேசுவேன்.

    அந்த நண்பர்கள் என்னைஅந்த வழியில் சைத்தான் என அழைத்திருந்தால் நிச்சயம் சந்தோஷமே பொய் பேசுகின்ற கடவுளைவிட உண்மை பேசுகின்ற சாத்தான் மிகச்சிறந்தது ஆகும். எனவே அந்த நண்பர்களைப் பொறுத்தவரை நான் சாத்தானாக இருப்பதில் பெறுமைபடுகிறேன்

இப்படி நான் பேசுவது நிச்சயம் கிறிஸ்த்த பிரசங்கிகளுக்கு கோபத்தைத்தான் தரும் ஏனென்றால் இதுவரை அவர்கள் மற்றவர்களின் நம்பிக்கையைத்தான் விமர்சித்து பழக்கப்பட்டிருக்கிறார்கள் மற்றவர்கள் விமர்சனத்தை தாங்கி அதிகம் பழகப்படவில்லை

 இதற்காக உண்மையான கிறிஸ்தவர்கள் என்னை மன்னிக்க வேண்டும் ஏன் என்றால் ஆதாம்,ஏவாள் கதையின் உண்மை தத்துவம் வேறு என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதை நானும் உணர்வேன்.

ஏசுநாதர் கூட கிறிஸ்துவர் அல்ல...! என்ற பதிவை படிக்க click here 
+ comments + 36 comments

01:27

கிறிஸ்தவ பாதிரிகள் சாவு வீட்டிலும் மதம் மாற்றும் வேலையை செய்பவர்கள் அப்படி பட்டவர்களிடம் விளக்கம் சொன்னால் செவிடன் காதில் சங்கு ஊதியது போல

வணக்கம் குருஜி. நல்ல அருமயான கருத்து மிக்க ஏசுநாதர் பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய பதிவு. ஈஸ்டர் திருநாளன்று பதிந்தமைக்கு நன்றி குருஜி. மேலும் ஏசுநாதர் பற்றி குறிப்பாக அவரின் காஷ்மீர் வருகை பற்றி விவரிக்கவும்.

//இதுவரை அவர்கள் மற்றவர்களின் நம்பிக்கையைத்தான் விமர்சித்து பழக்கப்பட்டிருக்கிறார்கள் மற்றவர்கள் விமர்சனத்தை தாங்கி அதிகம் பழகப்படவில்லை.//
நல்ல பதிவு.இயேசு என்பவர் வரலாற்றில் வாழ்ந்த மனிதர் என்று எடுத்துக் கொண்டால் அவ்ருடைய‌ கருத்துகள் ஒருவிதமாக கொள்கையாகக்ம் செய்து மதமாக ஆக்கப்பட்டு இருக்கிறது.
மதவாதிகளின் கொள்கையாக்கத்தையே அனைவரும் பாவிக்க வேண்டும் என்பது சரியல்ல.ஒரு மததிற்குள்ளேயே பல முரண்பாடான‌ கொள்கையாக்களும் உள்ளது.ஆக்கபூர்வமான விமர்சன‌த்தை வரவேற்று,மாற்று சிந்தனைகளை ஏற்றால் மட்டுமே மதம் பண்படும்,மனித்ம் வளரும்.

அனைவருமே அனைத்து மத புத்தகங்களையும் கொஞ்சமாவது படிக்க வேண்டும்,அதன் கொள்கையாக்கங்களை விவாதிக்க வேன்டும்.ஒரு புள்ளியில் அனைவரும் சந்திப்போம்,அபோதுதான் உண்மையான் மத சார்பின்மையை கொண்டுவர முடியும்.
இது போன்ற பல் பதிவுகள் இட வேண்டுகிறேன்.நன்றி

07:45

(((((("இப்படி நான் பேசுவது நிச்சயம் கிறிஸ்த்த பிரசங்கிகளுக்கு கோபத்தைத்தான் தரும் ஏனென்றால் இதுவரை அவர்கள் மற்றவர்களின் நம்பிக்கையைத்தான் விமர்சித்து பழக்கப்பட்டிருக்கிறார்கள் மற்றவர்கள் விமர்சனத்தை தாங்கி அதிகம் பழகப்படவில்லை

இதற்காக உண்மையான கிறிஸ்தவர்கள் என்னை மன்னிக்க வேண்டும் ஏன் என்றால் ஆதாம்,ஏவாள் கதையின் உண்மை தத்துவம் வேறு என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதை நானும் உணர்வேன்"))))))

அருமையான விளக்கம் குருஜி

ஆரோக்கியமான விவாதத்திற்கு அனைவரும் தயார் என்றால் நல்லதுதானே?

இயேசு உண்மையில் சிவனின் மகனே புத்தர் உட்பட எல்லா ஆன்மீக குருக்களும் சிவனின் பிள்ளைகளே அந்தந்த கல கட்டங்களில் தேவையான பிரப்புபிகளை சிவனின் கட்டளைபடி இவர்கள் அவதாரம் செய்தார்கள் இஸ்லாமிய மக்கள் இருக்கும் இடம்களில் சைவ அல்லது வைணவ முறையில் பிறக்க முடியாது அகவே நபிகள் மற்றும் இயேசு போன்று அவர்கலவே அவர்களுடைய மதத்தில் அவதாரம் செய்ய சிவன் பணித்தார்

Anonymous
08:46

மத்தேயு விருப்பப்படியான சுவிசேஷம் நிகழ்வுகள்
1. தாய் பெத்லஹேமில் வாழ்ந்த மேரி
2 தந்தை பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப்
3 தந்தை முன்னோர் ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா- தாவீதுபரம்பரை
4 தாவீது உறவு முறை தாவீது- மற்றும் படைவீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் உறவின் மகன் சாலமோன் வரிசையில் ஏசு
5 தலைமுறை ஆபிரஹாமிலிருந்து 41வது தலைமுறை
6 பிறந்தது பெத்லஹேமில் யாக்கோபு மகன் ஜோசப் வீட்டில்

லூக்கா விருப்பப்படியான சுவிசேஷம்
. 1 தாய் நாசரேத்தில் வாழ்ந்த மேரி
2 தந்தை நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்.3 தந்தை முன்னோர் ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா-தாவீதுபரம்பரை4 தாவீது உறவு முறை தாவீது வேறோரு வைப்பாட்டி மூலம் பெற்ற மகன் நாத்தன் வரிசையில் ஏசு5 தலைமுறை ஆபிரஹாமிலிருந்து 57வது தலைமுறை
6 பிறந்தது பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில்

இதில் எது உண்மை :)

Anonymous
09:26

" Kingdom of God is Within your" "
" Be Perfect as thy Father in Heaven is Perfect" என்பதே ஏசுபெருமானின் கொள்கை. இதுவே இந்து மதத்தின் ஆணிவேர். இதுதான் அவர் அன்றைய காலகட்டத்தில் அளித்த Good News.
அவருடைய மலை உபதேசங்கள் இத்தத்துவத்தை விளக்கும் பஹிரங்க உரையாகும். இதனால்தான் இந்துமதச் சான்றோர்கள்
" we accept Christianity not the Churgianity" என்று முழங்குகிறார்கள்.New Testament இல் மற்ற கட்டுரைகளைப் பார்த்தீர்களானால் அவைகளெல்லாம் ஏசுபிரானை அடிப்படையாக வைத்து இருக்கும் ஆனால் எல்லாம் BIASED. கட்டுரையாளர்களுக்கு
மேற்காட்டிய ஆணிவேர் அடிப்படை புரிய நியாயம் இல்லை, அவர்களின் சொந்த மதத்தைப் புகுத்தி ஏசுபிரான் பெயரில் Churgianityயைப் பரப்பிவிட்டார்கள்.இதனால் பாவமன்னிப்பு எனும் ஒரு பலவீனத்தைப் புகுத்தி பாவங்கள் பெருகக் காரணமாகிவிட்டார்கள்.மேற்குறித்தாங்கு ஏசுகிறித்துவின் உண்மைத் தத்துவம் Christianity ஆகிறது. இது உலகச்சொத்து.இப்போது வழக்கில் உள்ள ஏசுபிரான் பெயரில் நடக்கும் பாவமன்னிப்பு முதலிய மூடக்கொள்கைகள் Churgianity யின் சொந்தச் சொத்து.
As you think so you become' என்பது Universal Law. இதன்படி ஏசுபெருமானின் உண்மைக் கொள்கைகளுக்கு மாறாகத் தங்களைப்பாவிகள் என்று கருதியே பாவியாகிறார்கள் இந்த சர்ச்சியனிட்டிகள். இது ஏசுபெருமானுக்குச் செய்யும் துரோகமே அதனால் இவர்கள் இன்னும் பாவியாகிறார்கள்!

கிறிஸ்துவத்தையும் இயேசுவையும் மனதில் உயர்வாக வைத்திருக்கிறீர்கள் என்பது எழுத்தில் வெளிப்பட்டது மிக்க மகிழ்ச்சி..

@peramanayagamஏன் தான் இப்படியெல்லாம் பலவாறாக உளறிகொட்டுகிரிர்கள்.சிவனை வம்புக்கு இழுக்கவேணுமோ ? தமிழ் மன்னன் .

Anonymous
10:29

One Russian Scientist, after making a deep research in the Himalayan Regions Declared the Following Truth:
"Jesus has made Self-analysis cum synthesis under an Indian
Vedantic Guru and realised his Self in Nirvikalpa Samadhi and acquired many Yogic powers including travelling in air.When He was crucified, He went on Nirvikalpa Samadhi, not died and resurrected, but got awakened in that cave at kalvari. Then by His yogic power he appeared in air before his disciples and again travelling in the sky came to the Himalaya where he healed the wounds and Ultimately gone into Samaadhi which is still there."
All these news are available in Swami Ramatheertha's Complete Works; anybody can go through them.

Anonymous
10:38

நண்பர்களுக்கு,

கீழ்க்கண்ட வசனத்தை பாஸ்டரிடமும் மற்றவர்களிடமும் விவாதித்தேன்.

“சர்ப்பங்களை எடுப்பார்கள்; விஷத்தை குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.”

இயேசுவை சாத்தான் பரிட்ச்சித்து பார்க்கிறான்

Mat 4:6 நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
Mat 4:7 அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.

மேற்கண்ட வசனத்தை குறிப்பிட்டு தேவனாகிய கர்த்தரை பரிட்சை செய்து பார்க்கக்கூடாது என்று பாஸ்டர் மற்றும் நண்பர்கள் கூறினார்கள்.

ஆனால், மேற்கண்ட வசனத்திலேயே வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள் அவர்கள் சொஸ்தமாவார்கள் என்று இருப்பதையும் நாம் செய்யக்கூடாதே? ஏனெனில் அதுவும் கர்த்தரை பரிட்சை பார்க்கும் வண்ணமாகத்தானே ஆகும்? அப்படியாயின் கைவைப்பதால் சொஸ்தம் ஆகிறது என்று நாம் நம்புவதும் பிரச்சாரம் செய்வதும் தவறு தானே? என்று கேட்டேன்.

அது தவறில்லை. ஏனென்றால், சொஸ்தம் ஆகவில்லை என்றால் ஒரு பிரச்னையுமில்லை. ஆனால் விஷம் குடித்து இறந்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்டார்கள்.

பாஸ்டர் மற்றும் நண்பர்கள் அனைவருமே இந்த பதிலையே சொன்னார்கள். வெறுத்துப்போய்விட்டது.

ஆகையால் ஒரு கிறிஸ்துவருக்கும் இயேசு ஒரு உயிருள்ள தேவன் என்றோ அல்லது அவர் வாக்குறுதியை காப்பாற்றுவார் என்றோ நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை.

மற்றொரு பாஸ்டரிடம் கேட்டேன்.

“வியாதியஸ்தர்கள் மீது கையை வைத்தால் சொஸ்தம் ஆவார்கள்” என்று இயேசு சொல்கிறாரே? அது போல, இயேசு சொன்னதை வைத்து வியாதியஸ்தர்கள் மீது கை வைத்து சொஸ்தம் செய்வது கர்த்தரை பரிட்சித்து பார்ப்பதாக ஆகாதா? என்று கேட்டேன்.

அவர் சொன்னார்,

சாத்தான் தேவகுமாரனை பரிட்சை செய்தான். சாத்தானுக்கு பதில் கூறமாட்டேன் என்று தேவகுமாரன் மறுத்தார். ஏனெனில், சாத்தானுக்காக தேவகுமாரன் ஒரு செயல் செய்தால் அது சாத்தானுக்கு கீழ்ப்படிந்ததாக ஆகிவிடும்.

ஆனால், இந்த வசனங்கள் தேவகுமாரன், மக்களுக்கு உரைத்தது. தேவகுமாரனின் வாக்குறுதி இது. இதனை பரிட்சித்து பார்ப்பதையும் தேவகுமாரனை சாத்தான் பரிட்சித்து பார்த்ததையும் ஒப்பிட இயலாது. ஆகையால் இயேசுவின் வாக்குறுதியை நம்புவதும் அதன் படி நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதும், அதற்காக பெற்றோரையும் சகோதரர்களையும் பகைத்துக்கொள்வதும் கூட கர்த்தருக்கு உவப்பானதுதான். கர்த்தருடைய சொற்களை நம்பாமலிருப்பதும் அதன் படி நடக்காமலிருப்பதும்தான் பாவம் என்று சொன்னார்.

பிறகு கேட்டேன். இந்த வசனத்தின் முன்னால், விஷம் குடித்தாலும் அவர்களை ஒன்றும் செய்யாது என்று சொல்லியிருக்கிறதே அப்படியானால் விஷம் குடிக்கலாமா என்று கேட்டேன்.

பதில் சொல்லாமல் முறைத்துவிட்டு போய்விட்டார்.

ஆகவே கிறிஸ்துவம் என்பதே பெரிய பொய் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
இயேசு கிறிஸ்து உயிருள்ள தேவன் என்று நம்புபவர் யாருமில்லை. என்னதான் வெளியிலே வேஷம் போட்டாலும் நம்பினாலும், உள்ளூர கர்த்தர் மீது பாரத்தை போட்டு விஷம் குடிக்க ஒருவர் கூட தயாரில்லை.

அத்தோடு என்னுடைய கிறிஸ்துவத்துக்கும் முழுக்கு.

என் அம்மா அப்பா சகோதர சகோதரிகள் உறவினர் அனைவருமே கிறிஸ்துவர்கள்தான். அவர்கள் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும். ஆனால் நான் கிறிஸ்துவனில்லை.

தமிழ் இந்து தளத்தில் வந்து உங்களுடைய கட்டுரைகளை படித்து விமர்சிக்கவே வந்தேன். என் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய உங்களுக்கு நன்றி

"இதுவரை அவர்கள் மற்றவர்களின் நம்பிக்கையைத்தான் விமர்சித்து பழக்கப்பட்டிருக்கிறார்கள் மற்றவர்கள் விமர்சனத்தை தாங்கி அதிகம் பழகப்படவில்லை."

மிகவும் உண்மையான நல்ல கருத்து,

கிறிஸ்தவர்கள் மிகவும் சுலபமாக வாய்கூசாமல் நம் தெய்வங்களை சாத்தான் என்று கூறுகிறார்கள், ஆனால் நாம் மறந்தும் கூட கர்த்தர், ஏசு அவர்களை பற்றி பலித்து பேச நமக்கு மனம் வருவதில்லை, ஏனென்றால் நமக்கு தெரியும் கடவுள் ஒருவராக மட்டும் தான் இருக்க முடியும், இந்த மதம் அனைத்தும் அவருடைய திருவிளையாடலாக தான் இருக்க கூடும், எல்லாம் அவன் செயல், அனைவரும் அவனது பிள்ளைகள் தான் அதனால் யாரையும் சாத்தன் போன்ற வார்த்தைகளால் யாருடைய நம்பிக்கையும் நாம் பலித்து பேசுவதில்லை.

இது தான் அவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம்,

(இக்குணம் நமக்கு பலம் தான், ஆனால் இதே குணத்தை நமக்கு பலவீனம் ஆக்கி அவர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள்.)

அண்ணே வணக்கம்ணே!

வம்பு வழக்கு வேணாம்னு ஒதுங்கி ஒதுங்கி போனாலும் 6 மாசத்துக்கு ஒன்னு வந்து மாட்டிக்குதுங்கண்ணா.

என்னவோ பெரியமன்ச தராவா கீதேனு அப்பப்போ பார்த்துக்கிட்டிருந்த
உஜிலா தேவி யை உஜாலா சொட்டு நீலம் இல்லாமயே வெளுக்க முடிவு பண்ணிட்டன்.

மேற்படி வலைப்பூவில் பா.ஜ.க வாசம் வீசுவதை முன் கூட்டியே தெரிந்து கொண்டவன் நான். மேற்படி வலைப்பூ
//இன்றைய கிறிஸ்த்துவர்களில் 98 சதவீதம் பேர் இயேசுவை அறியாதவர்கள், இயேசுவை புரியாதவர்கள் அவர் சொற்படி நடக்காதர்கள் இன்று தங்களை கிறிஸ்த்துவர்கள் என்று அழைத்து கொள்ளும் மனிதர்கள் அவர் கூறியப்படி மட்டுமே வாழ்க்கை முறையை நடத்தி கொண்டிருந்தால் இன்யை உலகில் எந்த சிக்கலுமே இல்லாமல் இருந்திருக்கும்// என்கிறது .

இதே பத்தியில் ஏசு என்ற இடத்தில் இந்துக்டவுளருள் ஒருவர் பெயரையும் கிறிஸ்தவர்கள் என்ற இடத்தில் இந்துக்கள் என்ற வார்த்தையையும் போட்டு எழுத உஜிலா தேவிக்கு மனம் + தில் இருந்தால் பா.ஜ.க வாசம் என்ற குற்ற்ச்சாட்டை வாபஸ் வாங்கிக்கொள்ள நான் தயார்.

வார்த்தைகளை மாற்றிப்போட்டு எழுத அவர் தயாரில்லை என்றால் என் குற்றச்சாட்டு அக்மார்க் உண்மை என்று அர்த்தம்

Anonymous
13:05

குருஜி அவர்களே அனைத்து பதில்களும் தெளிவாகவும் சிறப்பாகவும் உள்ளது

Dr. Nadaraja Pillai
13:12

கண்டிப்பாக நீங்கள் சொல்வது உண்மை தான். இப்படி தைரியமாக உண்மையை சொல்வதே ஒரு தில் தான். சரியான மொழி பொறுமையான சிந்தனை.

murugesan avargale

guruji pala nalla visayangalai (vedam thavam, thatuvam, indumatha kotpaadugal)sonnalum sang parivaar vaasam iruppathu unmaithan

ithu ella manithargalidamum ulla iyalbaana ondruthan endru naan karuthugiren

eg:naan oru muslim enakku siru vayathilirundu bothikkappattathu than nandraaga mulumaiyaaga en manadai aakkiramikkum
piragu naan padikkum bibli, hindu vetham ANAITHUM athe alavu thaakkathai erpaduthaathu endru ennugiren

but ithu satharana manithargalukkuthan porundum

oruvar muttrum unarndu thelinthavar apdinna avarukku ella mathangalilim kurai kandu pidikkavo athayellam pathi vivaathikkavo neramum irukkathu(iraiyai unarndavargal mathathin peral sandai podavo, pira mathathavarai punpduthavo muyala maattargal enbathu en karuthu.

naan thiru raamananda guru vin eluthukkalukku rasigan endra muraiyil (avarudaiya indamaadiri sila pirachanaikkuriya pechukkalai) ignor pannittu nalla karuthukkalukku mathippu kudukkiren

Anonymous
17:47

சித்தூர் முருகேசா.. பாஜககாரங்க மட்டும்தான் இந்துக்களுக்கு ஆதரவா இருப்பது போலவும் மற்ற கட்சிகாரங்க எல்லாம் இந்துகளுக்கு விரோதிகள் மாதிரியும் பேசாதே..

வினோத் கன்னியாகுமரி
19:15

மதவெறி ஒரு புற்று நோய். அது எந்த வகையில் வருகிறது என்பதை நாமே அறிவதில்லை. வந்த பின்னும் புரிந்துகொள்வாரில்லை.
இதையெல்லாம் பார்க்கும் போது மதமே வேண்டாம் எனச்சொல்லத் தோன்றுகிறது. ஆனால் நாத்திகத்தின் மதத்தின் மேல் உள்ள வெறுப்பையும் அதன் அரசியலையும் பார்க்கும் போது மதங்கள் பரவாயில்லை.

கெட்ட எண்ணங்களை இந்து மதம் அரக்கர்கள் என்கிறது. கிருத்துவம் சைத்தான் என்கிறது. இஸ்லாம் கடவுளின் எதிரி என்கிறது.

ஆனால் நாம் வெளிப்படையாக ஒரு கெட்ட எண்ணத்தை உடையவரை பாவி என்றோ, அரக்கன் என்றோ திட்டுவதில்லை.

அன்பை கொடுக்க வேண்டிய இடத்தில் அடுத்தவரை இப்படித் திட்டுபவர்கள் மனதில் தான் கெட்ட எண்ணங்கள் (சைத்தான்) இருக்க வேண்டும்.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்...

Anonymous
23:02

murugesan ,
neengal muthalil unmnaiyai purinthukolla muyarchi seiyungal.athai vittu yentha kadavulai patriyum vimarsanam seiya vendam.

நீங்கள் எழுதியுருப்பது அனைத்தும் உண்மை. Christianity பற்றி தெரிந்துக்கொல்ல The Davinci Code மற்றும் Angeles & Demons படங்கள் பார்த்தல் புரியும்.
சுவாமிஜி உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது. நான் ஒரு OSHO follower. அவர் இழுக்காத மதங்களே கிடையாது. Christionity பற்றி அவரும் இப்படித்தான் பல உண்மைகளை போட்டு உடைத்தார். முடிந்தால் அவரை பற்றியும் எழுதுங்கள். நன்றி.

Billion dollar campaigns like Da vinci code have failed but Christianity stands at least they were genuine and put lots and lots of effort and done research in their work. so try to put lot of effort and sincerity to your criticism so it will be helpful for the growth Christianity further. Rather writing for publicity and cheap feeding for some people. Many of your questions were already raised by many people and there are lot of explanations available. But do not tie a knot between Thiruneelakandam and Adams Apple

அன்பர் சத்தியராஜ் கூறியது 100% உண்மை.

(இக்குணம் நமக்கு பலம் தான், ஆனால் இதே குணத்தை நமக்கு பலவீனம் ஆக்கி அவர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள்.)

நாம் ஒதுங்கி போக போகத்தான் அவர்களுக்கு ஏளனம் அதிகமாகிறது.இதை போன்று ஆரோகியமான விவாதத்திற்க்கு தயார் என்றால் கிறுத்துவர்களில் ஒருவரும் வெற்றிகொள்ள முடியாது.

காலையில் பாடுகிறேன் பேர்வழி என்று கர்ணகொடூரமாக கத்துகிறார்கள். கொடுமை தாங்களை குருஜி...

selvam
12:07

குருஜி அவர்களிக்கு வணக்கம், பைபெல கதையில் வரும் ஆதாம் ஏவாள் பற்றி ஒரு சந்தேகம். அவர்கள் கூற்றுப்படி இந்த இருவர் மட்டும்தான் உலகில் படைக்கப்பட்ட முதல் மனிதர்கள் என்றால், இவர்களுடைய பிள்ளைகள் யாரை திருமணம் செய்து மனித குலத்தை தோற்றுவித்திருப்பார்கள்? கூட்டி கழித்து பார்த்தால் அம்மா. அப்பா, அண்ணன், தங்கை, அக்காள், தம்பிகளுக்குள் இடையிலேதான் பாலுறவுகள் ஏற்பட்டிருக்க வேண்டும். அசிங்கமாக இருக்கிறது. இது ஆண்டவன் கட்டளைபடிதான் நடந்தாதா? அப்படியென்றால் இந்த மதம் தகாத உறவுகளை ஆதரிக்கிறதா?

பரிசுத்த ஆவியில இட்லி வேகுமா?

Anonymous
16:41

@அ.சந்தர் சிங்
வேகும் ஆனா வேகாது....

சித்தூர் முருகேசன் சொன்னதுல என்ன தப்பிருக்கு உஜிலாண்ணே. அவர் சொல்றதும் வாஸ்தவம்தானே.

DEVAN
09:16

DEVAN from New Jersey , U.S.A.

பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் விழுந்தான் ஒருவன் என்றும், மகாவிஷ்ணு என்னும் ஓர் இந்துக் கடவுள் பன்றி அவதாரம் எடுத்து கடலில் குதித்துப் பூமியை மீட்டான் என்றும், அந்தப் பூமிக்கும் பன்றிக்கும் ஒரு பிள்ளை பிறந்தது என்றும் கூறும் புராணக் கூற்றிலும் என்ன விஞ்ஞானம் இருக்கிறது என்பதை ஜெகத்குரு கூறினால் வரவேற்கலாம்.

READ THE FOLLOWING ARTICLE

இந்துக்களே! விழிமின்! எழுமின்! 5. ஆபாச‌ செயல்களில் கடவுள்களா ?

.

raj
23:53

@peramanayagam

can you show any historical evidence for Sivan were existed.

raj
23:54

@Anonymous


read Bible carefully. dont simply give any wrong information

Anonymous
23:28

Guruji avargaley.

"ஒரு மனிதன் தான்தான் நல்லவன் தான் நடக்கும் வழி தான் சரியானது மற்றவர்கள் அனைவருமே தவறானவர்கள் என்று சொல்ல துவங்குவானேயானால் அவனுக்கு தெளிவான மதி இருப்பதாக யாரும் சொல்ல மாட்டார்கள்.

தன்னை மட்டுமே உயர்ந்தவனாக கருதுகின்றவன் தான் சிறந்த அழிவு சக்தியாக இருந்திருக்கிறான் என்று சரித்திரம் பல சான்றுகளை நமக்கு சுட்டி காட்டுகிறது."
மேற்கூறியதை அது நீங்களாக இருந்தால்?
.குருஜி உங்களிடம் ஒரு கேள்வி இந்து மதப்படி முதல் மனிதன் எப்படி உண்டானான்.மனித இனப்பெருக்கம் எப்படி உண்டாயிற்று விளக்கவும். என் இனிய இந்து நண்பர்களிடம் கேட்டு பார்த்தேன் அவர்களிடம் பதில் இல்லை. எனவே அவர்களும் தெரிந்துகொள்வார்கள்.
kalai

@Anonymous said...

Mr.Anonymous
Are you ready to talk to me regarding Jesus and his divinity.
Dont talk out of your feeling . but out of fact
My email : sargunan.rmn@hotmail.com

கௌதமபுத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ கூறிக்கொண்டது கிடையாது. தான் புத்தநிலையை அடைந்த ஒரு மனிதன் மட்டும்தான் என்பதனையும் இந்தப் பூமியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்தநிலையை அடையமுடியும் என்பதையும் தெளிவாக கௌதமபுத்தர் வலியுறுத்தினார். ஆசைதான் துன்பங்களின் அடிப்படையாகும். சுயநலம்தான் அனைத்து துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது. ஆசையை விட்டால் மனநிம்மதியும் சந்தோஷமும் அடைய முடியும். தீயனவற்றை செய்யாது நல்ல விடயங்களை மட்டும் செய்து வந்தால் ஆசைதானாக அகன்றுவிடும். இவ்வுலக வாழ்க்கை வறுமை, பிணி, நோய் போன்றன நிறைந்த எளிதில் விலக்கிக் கொள்ளமுடியாத துயரம் நிறைந்தது. சிற்றின்பங்கள் மீதான அதீத நாட்டமும் சுயநலமும்தான் துயரங்களுக்கு வழிசமைக்கின்றன. ஆசையை ஒழித்தாலொழிய துயரத்தை ஒழிக்க இயலாது என கௌதமபுத்தர் கூறினார்.
பௌத்தம் மதத்தில் கூறப்படும் நல்லவனவற்றைச் செய்தல், தீயனவற்றை விலக்குதல், தியானம் என்பனவற்றின் மூலம் அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுபட்டு "ஞானம் பெறுதல்" என்ற நிர்வாண நிலையை அடையமுடியும்.
பெளத்தமதத்தை பொறுத்தவரையில் கடவுள் என்று ஒருவர் கிடையாது. கர்மவிதிகளுக்கு அமையவே இவ்வுலகம் இயங்குகின்றது என பௌத்தமதம் தெரிவிக்கின்றது. கௌதமபுத்தர் ஒரு கடவுள் இல்லை. கௌதமபுத்தர் ஒரு விடுதலைபெற்ற மனிதர். உண்மையான பெளத்தர்கள் கௌதமபுத்தரை வழிபடுவதில்லை, மரியாதை செலுத்துகின்றார்கள் அல்லது நினைவு கொள்கின்றார்கள்.
- நல்லையா தயாபரன்

Anonymous
22:58

nengal anaivarum easuvaiyum paipulaiyum thavaraga pesalam ungaluku ungal madham than periyathu entru nengal solum karuthilirunthu therikirathu athan unmai ungaluku oru naal puriyum easuvaiyum paipulaiyum pathi thayavu seithu aduthavarkalin mathangalai thavara pesavendam


Next Post Next Post Home
 
Back to Top