Store
  Store
  Store
  Store
  Store
  Store

இது விஞ்ஞானத்தின் சாபகேடு...!


ஞ்சாங்கத்தில் பல்லி கத்தினால் இன்ன பலன்கள் நடக்குமென்றும் சொல்லப்பட்டிருக்கிறது

 காக்கை கரைந்தால் விருந்தினர் வருவார்கள் என்றும் பெரியவர்கள் கூறுகிறார்கள்

 உண்மையில் பறவைகள் தங்கள் செயல்பாடுகளால் நமக்கு எதாவது செய்திகள் சொல்ல முயல்கின்றனவோ என பலர் எண்ணிக் குழம்புகிறார்கள்

தான் சந்தோஷமாகயிருக்கும் போதும் தனது சந்தோஷம் அதிகரிப்பதை தாங்கி கொள்ள முடியாத போதும் பறவைகள் பாடுவதாக நமது முன்னோர்கள் சொல்கிறார்கள்.

 ஆனால் அவைகளின் இயல்பை விஞ்ஞான ரீதியில் ஆராயும் போது அப்படி ஏதும் நடப்பதாக தெரியவில்லை என்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

  பறவைகளுக்கு காதல் உணர்வுகள் அதிகரித்து துனையை தேடும் போது மட்டுமே பாடுவது போன்ற ஒலி எழுப்ப முடிகிறது. 

பறவைகளின் தொண்டையில் உள்ள சைன்ஸ்கிஸ்க் என்ற சிறப்பு உறுப்பு மூச்சு காற்றால் அதிரும் போது இந்த ஒலி வருகிறது. 

தான் இருக்கும் இடத்தை மற்ற பறவைகளுக்கு அறிவிக்கவும் சில நேரங்களில் பாடுகின்றன

 பறவைகளின் காதல் உணர்வே பாடல் ஒலியாக வருவது போல் அவைகளுக்கு தோன்றும் பல்வேறு உணர்வுகளும் பல சத்தங்களாக வெளி வருகின்றன.

 மழை வர போவதையும் காற்று வீச போவதையும் சில பறவைகள் முன்கூட்டியே அறிந்து கொள்ளும். 


 அப்படிபட்ட பறவைகளின் இயக்கங்களை உன்னிப்பாக கவனிக்கும் சில விவசாயிகள் வானத்தில் மேக கூட்டம் இல்லையென்றால் கூட இத்தனை மணி நேரத்தில் மழை வரும் என்பார்கள்.  அப்படியே வரும்.

  நில அதிர்ச்சி, எரிமலையின் சீற்றம் ஆழிப் பேரலை போன்ற இயற்கை பேரிடர்களை பறவைகளும், விலங்குகளும் முன்கூட்டியே அறிந்து தப்பித்துக் கொள்கின்றன.

  அதே போல மனித வாழ்க்கையில் நடைபெற போகும் சில விஷயங்களை பறவைகள் அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. 

மகாபாரதத்தில் பாஞ்சாலியை  துயில் உரிவதற்க்கு முன் நீர் பறவைகள் விசித்திரமாக கத்தியது எனவும் துயில் உரியப்பட்ட பிறகு கிளி, மைனா போன்ற பேசும் பறவைகள் கட்டுப்பாடு அற்று கத்தியதாகவும் வியாசர் குறிப்பிடுகிறார். 

 
  மிக பழைய கால சகுன சாஸ்திர நூல்களும் பறவைகளின் விதவிதமான ஒலிகளுக்கு பல பலன்களை சொல்கின்றன.

  ஆந்தை கத்தும் விசயம் அதன் நம்பிக்கை அனைவரும் அறிந்தது தான்.

 இது தவிர இரவில் மட்டுமே நடமாடும் சாக்குருவி என்ற ஒரு மிகச்சிறிய வகை பறவை ஒன்று உள்ளது.

 ஏறக்குறைய அதன் அளவு தேன்சிட்டு போன்று இருக்கும்.

 மிகவும் பலவீனமாக மரண அவஸ்தையில் கடைசி குரல் எழுப்பும் மனித ஒலியை போல் அது கத்துவது இருக்கும். 

அது எந்த வீட்டிற்கு மேல் பறக்கும் போது கத்துகிறதோ அந்த வீட்டில் ஒரு சில மாதங்களில் அசுபம் நடக்குமாம்.


   இவையெல்லாம் நம்பிக்கைகள் தான்.  இது சம்பந்தமாக தீவிரமான ஆராய்ச்சி மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறேன்

  மனிதர்களுக்கு நடக்கும் நல்லது கெட்டது இருக்கட்டும்.  இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே அறிந்து கொண்டால் பல உயிர்களை பாதுகாக்கலாம் அல்லவா.

 ஆனால் விஞ்ஞானத்தின் சாபகேடு பழைய கால தகவல்கள் அனைத்தையுமே மூட நம்பிக்கைகள் என ஒதுக்குவது தான். 

சாட்சிகள் இல்லையென்பதினால் குற்றவாளி நிரபராதி என தப்பி விடுவது போல் ஆதாரங்கள் இல்லையென்பதினால் நல்ல விஷயங்கள் கூட மூட நம்பிக்கையென ஒதுக்கப்படுவது துரதிஷ்டமே ஆகும்.





 

Contact Form

Name

Email *

Message *