Store
  Store
  Store
  Store
  Store
  Store

மயக்கமா? கலக்கமா?

புது கவிதை வடிவில் பகவத் கீதையை எழுத விரும்பிய ஆசையின் விளைவு இந்த தொடர்
  1

ங்கமும் அகமும்
குருடாகி போன
மன்னன் கேட்டான்
தர்மம் ஜெயிக்கும்
குருஷேத்திர மண்ணில்
என் உதிரம் சுமந்த புதல்வர்களும்
பாண்டுவின் புத்திரர்களும்
என்ன செய்கிறார்கள் என்று

இரும்பையும் பொன்ணையும்
ஒன்றுயென நோக்கும்
சாக்கடையும் பூக்கடையும்
சமமென கருதும்
சஞ்செயன் சொன்னான்
கண்களை கட்டிய காந்தாரியின் வயிற்றில்
கண்திறந்த உனது மகன்
பாண்டவர் சேனையை பார்த்து
மனமதில் பாறை விழ
மதியதில் அலையடிக்க
வித்தை தந்த துரோணடரிம்


 உங்கள் சீடனை பாரும்
அவனருகில்
தங்கையை கொடுத்த துருபதன் புதல்வனும்
மலையை புரட்டும் பீமனும்
மனிதரில் சிறந்த சத்திரியன்
காசிராஜன் குந்தி போஜன் திருஸ்டகேது
கேசிதானன் சாத்யகி விராடன் என
மல்லர்கள் கூட்டம் பார் என்றான்

என் அப்பன் கொடுத்த சோறும் பாலும்
உன் உடம்பை வளர்த்தது
உண் மனமோ
சோறிட்டவனின் புதல்வனை
நேசிக்காமல்
குறிட வந்தவனின் புதல்வனை நேசித்தது
காரணம்
வில் பிடிக்கும் வீர குலமல்ல
நீர் பிறந்தது
புல் பிடிக்கும் அந்தணன் அன்றோ நீ
அதனால்
உன் புத்தியும் உடலும் சக்தியில்லாதது


 நாளை நடப்பதை
இன்றே உணர்பவன் சத்ரியன்
மதிய சோற்றுக்கு காலையில் வழிதேடுபவன்
அந்தணன் அசடன்
அர்ஜீனன் இப்படி நிற்பான் என்று
நீர் அன்றே கணித்திருந்தால்
இன்று முரசொலி ஏது? சங்கநாதம் ஏது?
போர்க்களம் தான் எதற்காக?
என்று நினைத்து ஆசனை பார்த்தான்
கேட்கவில்லை

இதயம் துடிப்பதை நரம்பு நடுங்குவதை
குருதி கொப்பளிப்பதை மனம் பதபதைப்பதை
தெரியாமல் போர்த்தி
முகத்தில்
வீர அரிதாரம் பூசிக் கொண்டான் துரியோதனன்
நான் மறை ஒதுகின்ற
நல்லவரில் சிறந்தவரை
தள்ளாடும் வயதில்
வில்லை ஊன்றி பிடிக்காமல்
தூக்கி பிடிக்கும் வீரரே
அறவ கொடியின் கீழ்
அணிவகுத்து
என் பொருட்டு எதையும் செய்யவல்ல
வீர மறவர்களை காணீர்


 சிரசில் ஒளி பொருந்திய உமது மகன்
நட்பில் சூரியனான கர்ணன்
வெற்றியை மட்டுமே சுவைக்கும் கிருபர்
என அனைவரும் வீன் மீன்களாய் சூழ்ந்திருக்க
நடுவில்
அனுபவ தழும்பேறி அன்பாலே கனிந்து
தர்மத்தால் உயர்ந்து
இமயம் போல் நிற்கும்
எங்கள் குல முதல்வர் பீஷ்மர்

காலை உதயத்தில
ஒரேயொரு ஆதவனை தான் காண்பதுண்டு
இங்கே அணிவகுத்திருக்கும்
நீங்கள் அனைவருமே
ஒரே, திசையில் உதித்த
ஆதித்த கூட்டமாக பார்க்கிறேன்


நீங்கள் செய்யும் சின்ன கர்ஜனையே
பாண்டவர் கூட்டத்தை
பொடி பொடியாக்கும்
சாம்பலாக்கி பறக்கவிடும்
என் கண்ணில் துசி விழந்தாலே
உங்களின் மீசை துடிக்கும்
அர்ஜீனனின் அம்பு விழந்தால்
மாங்காய் பறிக்குமோ உங்கள் கரம்
ஆனாலும்
பாண்டவர்கள் பீமனால் காக்கபபடுகிறார்கள்
சிங்க கூட்டத்தை
யானை பாதுகாக்கிறது
நாம் புலிகள் தான் என்பதில்
சந்தேகமில்லை-ஆனால்
சிங்கமும் யானையும் கூட்டணி வைப்பது அபாயம்

யானைகள் அணி வகுத்தாலும்
சிங்கங்கள் கூட்டணி அமைத்தாலும்
வீரமல்லனின்
நெஞ்சுறுதிக்கு முன்னால்
யானையும் சிங்கமும்
வெறும் பஞ்சு பொதிகளே


யுத்த தழும்பேறிய தாத்தா
தாடியில் மட்டுமல்ல அறிவிலும் நரைத்தவர்
பேரன் எனக்காக
கொள்கையையும் கொடுப்பார் தன் உயிரையும் கொடுப்பார்
கடல் போல் விரிந்த நம் சேனைத் தலைவர்
வீர பீஷ்மர் எனும் போது
அந்தணரே நீர் அஞ்சியிட வேண்டாம்
வெற்றி நமதே

தலையாட்டும் கூட்டம் இருந்தால்
தகுதி தானே வந்துவிடும்
விலை கொடுத்து வாங்கி விடலாம் வீரத்தை
தங்ககாசை சுண்டி வீசினால்
அறிவையும் அன்பையும் வாங்கலாம் என்று
மண்ணாசை கொண்ட மன்னன் மகன் நினைத்தான்
அதனால் படை பிரிவை சுற்றி வந்த துரியோதனன்
எல்லோரும் பீஷ்மரை
காக்க என்று வேண்டி நின்றான்


தந்தையின் காதலுக்கு
தன் சுகத்தை கொடுத்த பீஷ்மனும்
சின்னவனின் சிறுபுத்தி அறிந்தும்
அன்னவனின்  ஆனந்தத்துக்காக
சங்கெடுத்து சிங்க நாதம் செய்தான்

பீஷ்மனின் சங்கொலியால்
பேரிகைகள் முழங்கின
தம்பட்டங்கள் தடதடத்தன
பறைகளும் கொம்புகளும்
நரம்புகளை முறுக்கேற்றி
பேரொலியாய் எங்கும் பரவியது

இருண்ட கானகத்து மத்தியில்
சுடர்விடும் திருவிளக்கு போல்
கருமேக வானத்தை கிழித்து
கம்பீரமாய் வெளிவரும் கதிரவனை போல்
தங்க தேரை
நான்கு வெண்புரவிகள் இழுத்து வர
நீலமேக மாதவனும்
காதல் தேவன் பாண்டவனும்
தேர் தகட்டில் இருந்தே
சங்கெடுத்து ஊதினர்


கற்பூரமும் கமல பூவும்
சேர்ந்து மணக்கும் திருவாயில்
பாஞ்ச சன்யம் சுமர்ந்து
வீர ஒசை செய்தது
தனஞ்செயன் தேவதத்தத்தையும்
பீமசேனன் பௌன்ரட்டத்தையும்
தர்மராஜன் அன்ந்த விஜயத்தையும்
சுகோஷத்தை நகுலனும்
மணிபுஷ்பகத்தை சகாதேவனும்
காசிராஜனும் சிகன்டியும்
விராடா மன்னனும் சாத்தியகியும்
சங்கநாதம் செய்தனர்
சமர்களத்தில் நின்றனர்

விர புருஷர்களின் விண்ணதிரும் சங்கநாதம்
மண்ணாசைகாரர்களின் மனதை பிளந்தது
கண்ணில்லாத அரசனே
களத்தில் நடத்ததை
இன்னும் சொல்கிறேன் கேள் என தொடர்ந்தான்
சஞ்சயன்.


வீரர்களின் கரங்கள்
ஆயுதங்களை தொட்டது
ஈட்டியும் ஈட்டியும் உராய்ந்த ஒசை
கேடய சத்தத்தோடு கலந்தது
புற்றுக்குள் இருந்து சீறிவரும் பாம்பு போல்
உயிர் குடிக்கும் வாட்கள் உறையிலிருந்து வந்தது
விற்கள் வளைந்தன
அம்புகள் இலக்கை வெறித்தன
மாருதி கொடி பறக்கும்
வீர தேரிலிருந்த விஜயன்
கருநீல கண்ணனை பார்த்து
இப்படி சொன்னான்

அச்சுதா அமரர் தலைவா
சீர போகும் என் கனைகளுக்கு
பலியாகும் போகும் ஆடுகளை
கடைசியாக பார்க்க வேண்டும்
படையை பிளந்து தேரை நிறுத்து
போரை விரும்பும் புல்லர்களை காண வேண்டும்
ஆசையில் விழுந்த அண்ணனுக்காக
உயிர் கொடுக்க துணிந்த
உத்தமரை காண வேண்டும்.



இந்திர குமாரன் இப்படி சொல்லவும்
மந்திரதேவன் மகிழ்ந்து தேரை
தந்திர பூமியின் நடுவில் நிறுத்தினான்
பார்த்தா பார், பார் உலகை ஆள
பரிதவிக்கும் பாவத்மாக்களை என்று
நில மகளின் தலைவன் சொன்னான்
நிமிர்ந்து பார்த்தான் அர்ஜுனன்

அங்கே-,
குத்தி கிழிக்கும் ஈட்டியும்
வாழ்வை பறிக்கும் வாட்களும்
சதையை பிளக்கும் கொடுவாளும்
எலும்பை ஒடிக்கும் கதைகளும்
கைகளில் ஏந்தி
கண்களில் ஆசை மின்ன
தந்தைமாரும் பாட்டன்மாரும்
அண்ணன் தம்பிகளும்
அருமை தோழர்களும்
மாமன் மைத்துணன்களும்
நிற்க கண்டான்
கண்ட உடன் நெஞ்சில் இடிதாக்க நின்றான்


தனது காலும் கையும்
தனது ரத்தமும் சதையும்
பகைவர்களா என பதைத்தான்
கருநீல வண்ணமுடையவனே
ஆனந்தமே உருவாக ஆனவனே
துயரங்களை துடைப்பவனே கிருஷ்ணா
பகையாளியாய் நிற்கும்
பங்காளிகளை பார்த்து
என் உறுப்புகள் சோருகின்றன
நாக்கு வரள்கிறது
உடல் நடுங்குவதால் மயிர் சிலிர்க்கிறது
என் உறுதியான கைகளில் இருந்து
வெற்றி கொள்ளும் காண்டிபம் நழுவுகிறது

சதையெல்லாம் எகிறது
கேசவா
என்னால் நிற்க முடியவில்லை
மனதும் தலையும் சுழல்கிறது
கெட்ட சகுணங்கள் கை கொட்டி சிரிக்கிறது
தலைகளை அறுத்து
உயிர்களை கொல்லும்
கொடிய போர்க்களத்தில்
சொந்தங்கள் சிதைக்கப்படுவதில்
நன்மையை நான் காணவில்லை


வெற்றியும் வேண்டாம் இன்பமும் வேண்டாம்
ஏன் நாடே வேண்டாம்
பாட்டியும் பாட்டனும்
தந்தையும் தாயும்
மாமனும் மைத்துணனும்
மகனும் பேரனும்
தலை முறை தோறும்
தலைநிமிர்ந்து வாழத்தானே
நாடும் வேண்டும் நல்லாட்சியும் வேண்டும்
இவர்களை கொன்றால் அது எப்படி சாத்தியம்
முவுலகம் எனக்கென்றாலும்
என் ஜீவனே போகும் என்றாலும்
மண்ணுக்காக இவர்களை கொல்வதா
கண்ணற்றவனின் புதல்வர்களை கொன்று
எண்ணற்ற புதல்வர்களை கொன்று
இன்பம் அடைய முடியுமா?

அறியாத பாவிகளான இவர்களை
கொல்வதனால் இன்னும் அன்றோ பாவம் வரும்
தகாது தாமோதரா
உற்றாரை கொன்று பெறுவதாய் இன்பம்?
ஆசை பாம்பு
இவர்கள் அறிவை குடித்துவிட்டது
குலம் கெடுவதனால் வரும் கேடும்
துரோகத்தால் வரும் பாதகமும்
குருடன் புதல்வர்களுக்கு தெரியாது


நீயும் நாணும்
குல நாசத்தை நன்கறிவோம்
பாவத்திலிருந்து பின் வாங்குவது
பயத்தால் அல்ல பண்பால்
குடும்பம் அழிந்தால் குலதர்மம் அழியும்
குலதர்மநாசம் அதர்மத்தை வரவேற்கும்
அதர்மம் மிகுந்தால்
கண்ணா
மாதர்கள் கற்பிழப்பார்கள்

குலம் அழிக்கும் கோடாலிகளுக்கு
சொர்க்கம் கிடைக்காது
அவர்களால்
தென்புலத்தார்கள் பிண்டத்தையும் நீரையும் இழப்பார்கள்
அய்யகோ என்ன பாவம் செய்ய துணிந்தோம்
அரச ஆசையினால்
சுற்றத்தாரை கொல்ல துணிந்தால்
எத்தனை பாவம்?


பாவம் மிகுந்த யுத்தத்தை
நான் புறக்கணித்ததனால்
நிராயுதபானியான என்னை
கொலை வெறி மிகுந்த கூட்டத்தார்
அங்கங்களை அறுத்து போட்டாலும்
என் ரத்தகுளத்தில் அவர்கள் நீச்சல் அடித்தாலும்
என் நரம்புகளில் அவர்கள் யாழ் வாசித்தாலும்
பெற்ற பிள்ளையை அணைப்பது போல
ஆசானின் பாதத்தில் வீழ்வது போல
எனக்கு அது சந்தோஷமே கொடுக்கும்

என்று நெகிழ்ந்து கூறி
உயிரெனும் நேசித்த காண்டிபத்தை
தரையில் போட்டு
தேர்த்தட்டில் உட்கார்ந்தான்
குந்தி மைந்தான்.

தொடரும் ...


Contact Form

Name

Email *

Message *