( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )25 ஞாயிறு ஆகஸ்ட் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

காடு வரை கூட வருவது


   சை என்பது மனிதன் பிறக்கும் போதே தோன்றிவிட்ட ஒரு கலை தான்.

 ஆனாலும் அது தோன்றிய காலத்தில் நெறிப்படுத்தப்பட்ட ஓசையாக இருந்தது என்று சொல்ல முடியாது.

 இசையை எழுப்புபவனின் மனநிலைக்கும், கற்பனைக்கும், சூழுலுக்கும் ஏற்றவாறு பல்வேறுப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் தான் இருந்திருக்க வேண்டும்.

  இந்திய இசையின் முறைப்படுத்தப்பட்ட தன்மை என்பது சாமவேத காலத்திலிருந்து துவங்குகிறது எனலாம்.


   சங்கீதத்தின் கவர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க சாம வேத நெறிகளுக்கு உட்பட்டு நவீன இசையின் பிறப்பு இருந்தது எனலாம். 

 இசையை பற்றி சாம வேதத்திற்கு பிறகு நாரதரின் சங்கீத மகரந்தம் என்ற நூலும் சாரங்க தேவரின் சங்கீத ரத்தினாகரம் என்ற நூலும் மிக புகழ்பெற்றது என சொல்ல வேண்டும்.

  இசை என்பது இந்துக்களை பொறுத்த வரை பொழுது போக்குவதற்கு மட்டுமல்ல மனதை பழுது பார்ப்பதற்கும் தான். 

 இந்துக்கள் வழிபடும் கடவுள்களில் சிவன், உடுக்கை ஒலியில் ஆடுகிறார்.  வாணி வீணை மீட்டுகிறாள், மாய கண்ணனோ வேங்குழல் ஊதுகிறான்,


  தொட்டில் ஆடுகின்ற குழந்தை பருவம் முதல் மயானத்திற்கு செல்லும் மரண காலம் வரையில் இந்துக்களின் வாழ்வோடு இசை பிண்ணி கிடக்கிறது.

நீங்கள் சில இசை வல்லுநர்கள் பேசும் போது சுரம் என்ற வார்த்தையை அவர்கள் அடிக்கடி பயன்படுத்துவதை கேட்டு இருக்கலாம்.

  இந்த வார்த்தையின் நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?  இனிமையான ஒலி என்பதே ஆகும்.

 ஓசையானது தாறுமாறாக செல்லாமல் ஒரு உணர்ச்சியின் நேர்க்கோட்டில் செல்ல வைப்பதே சுரத்தின் முக்கிய பணியாகும்.  


 சுரத்தோடு இணைந்து வராத ஒலி அலையில் இனிமை இருக்காது என்பதை விட கேட்பவனின் மனதை ஒரு குண்டு மணி அளவு கூட ஈர்க்காது என்பது தான் உண்மையாகும்.

  இசையின் தன்மை இந்தியாவை பொறுத்தவரை அறிய கூடிய கருத்துக்களை முழுமையாக்கி காட்டுவதேயாகும்.

  ஒரு பொருள் வடிவத்தின் உள்பகுதியின் இயக்கத்தையும் நடுக்கத்தையும் இசை வெளி கொண்டு வருகிறது.

ராகங்கள், சுரத்தின் மூலம் ரசங்களை அதாவது உணர்வு  பாவங்களை குறிப்பால் உணர்த்துகின்றன.

 இசையிலும் கவிதையிலும் அதன் ஆன்மிக உட்பொருள் சத்தமேயாகும். 


  கவிதையை பொறுத்த வரை அதன் சத்தம் வெறும் கருத்து குறியீடேயாகும்.

  இசையிலோ சப்த இயக்கம் கருத்து உணர்ச்சி முதலியவற்றின் குறியீடாக மட்டுமல்லாமல் உணர்வுகளை திறந்து விடும் வாயிலாகவும் இருக்கிறது.

  இசையின் மெல்லிய அதிர்வுகளில் உணர்ச்சிகள் ஊடுருவி ஜீவாத்மாவை ஆக்கிரமிப்பதினால் பரமாத்மாவோடு ஐக்கியமாவதற்கு இந்துக்களின் இசை பாலமாக அமைகிறது.

  உலகில் உள்ள மதங்களில் இஸ்லாம் மட்டும் தான் இசையை சாத்தானின் ஒலி என்று ஒதுக்குகிறது.

 அதனால் தான் இஸ்லாம் சூபி என்று இரு பிரிவாக உடைந்து கிடக்கிறது.


  இந்து மதத்தை பொறுத்த வரை கடவுளை அடைவதற்கு தியானம், யோகம் எல்லாம் எவ்வளவு அத்தியாவசியமோ அதே அளவு அவசியமானது  இசை ஆகும்.

 மாணிக்கத்தின் ஒளியை காண்பது அதை அடைந்ததற்கு ஒப்பாகும்.

  இசை வழியில் மனதை லயப்படுத்துவது கடவுளை அடைந்ததற்கு ஒப்பாகும் என சங்கீத ரத்தினாகரத்தில் சாரங்க தேவர் சொல்கிறார்.

  மனித உடலில் தண்டுவடத்தின் அடியில் மன ஒரு நிலைப்பாடு ஏற்படும் போது ஒரு ஓசை உள்ளுக்குள் கிளம்பும்.

  அந்த ஓசைக்கு பெயர் அனாகத நாதமாகும்.

 இந்த நாதத்தை வெறும் செவியால் கேட்க இயலாது.  ஒரு முகப்பட்ட உணர்வுகளால் அறியலாம்.

 அந்த உணர்வுகளில் இருந்து பிறந்ததே பௌதிக சங்கீதமாகும்.

  இசை மனதையும் உடலையும் ஒரே நேரத்தில் ஆட்டுவிக்கிறது.

 அதனால் தான் இசையால் இரண்டையும் சுலபமாக கடந்து மனித ஆத்மாவால் கடவுளை உணர முடிகிறது 
 
+ comments + 2 comments

இசை என்பது இந்துக்களை பொறுத்த வரை
பொழுது போக்குவதற்கு மட்டுமல்ல மனதை
பழுது பார்ப்பதற்கும் தான்.
-

முதலிலே சப்தம் (ஒலி)உண்டானது .அனேகமாக எல்லா மதங்களுமே இதனை உறுதிபடுத்துகிறது .ஓலை ஒடிந்து விழும் போது ஒரு ஓசை ,மழை பெயும் போது,இடி இடிக்கும் போது ,கர்ற்றுவீசும் போது ,தீஎரியும் போது கூட, மனிதன் மூச்சு விடும் போதும் (ஓரூ மனநிலைக்கும் .உணர்சிகளுக்கும் கூட சின்ன சின்ன விதியசங்களுடனும் சுவாசத்தின் தாளம் ,ரிதம் வேறுபாடுகளுடன் ) கருத்துக்களை பருமாரிக்கொள்ளும் போதும் ஒலி ,ஓசை, நாதம் எப்படியாக வேண்டுமானாலும் வைத்துது கொள்ளலுங்கள் வேறுபட்ட நாதங்களின் வெளிப்பாடுகள் உணரமுடியும .....ஓசையை ...இசை யை நீக்கிவிட்டு ஒன்றையும் புரிந்துகொள்ளமுடியது .அப்படியானால் சவமாகமட்டுமே இருக்கவேண்டும் ......தமிழ்மன்னன் ..tht nature's voice.


Next Post Next Post Home
 
Back to Top