( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )18 ஞாயிறு ஆகஸ்ட் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மனிதர்களை விட நாங்கள் மட்டமா?


ந்து மதத்தில் பசு என்ற கோமாதாவை தெய்வமாக வழிப்படுகிறோம்

இது என்ன ஒரு மாட்டை பூ போட்டு பூஜை செய்யும் பைத்தியகாரத்தனம் என சிலர் கிண்டல் செய்கிறார்கள்

மாடு பால் தரும் சுவையான மாமிசம் தரும் அது அருள் தருமா? என்றும் நம் மனதை புண் படுத்துகிறார்கள்

 ஆனால் உண்மை நிலை என்ன ஒரு மனிதனால் கிடைக்கும் சுற்று புற சூழலுக்கான நன்மையை விட பசுவால் கிடைக்கும் நன்மை பல கோடி மடங்காகும்

நமது நாட்டில் பசுக்களுக்கு மரியாதை இருந்த வரையில் மக்கள் அனைவருமே வளமையோடு இருந்தார்கள்.
 
 
  ஒரு காலத்தில் அதாவது ஆயிரம் வருடத்திற்கு முன்னால் இந்தியாவில் யார் வீட்டிற்காவது சென்று குடிக்க தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டால் பால் தான் தருவார்களாம்.

  நமது இந்தியாவிற்கு வந்த சீன பயனி பாகியான் தனது நூலில் இதைப் பற்றி குறிப்பிடுகிறார்.

  தண்ணீராக பால் கொடுக்கப்பட்டது மட்டுமல்ல பணத்திற்காக பசும் பாலும் தானியங்களும் விற்க படவில்லையாம். 

  வணக்கத்திற்குய பசுவை உணவு ருசிக்காக என்று கொலை செய்ய ஆரம்பித்தார்களோ அன்றே நமது நாடு கெட துவங்கியது.

 பசுவை பற்றி ரிக் வேதம் செழுமை என்ற வார்த்தையால் போற்றுகிறது.
 
 
   யஜுர் வேதம் காமதேனு என்ற பட்டத்தை கொடுக்கிறது.

  அதர்வண வேதம் செல்வத்தின் விளை நிலம் என்கிறது.

  மகாபாரதமோ சொர்க்கத்திற்கு செல்லும் படிக்கட்டு பசு என்கிறது.

  கந்த புராணம் பிரம்ம புராணம் போன்றவைகள் பசுவின் சிறப்பை பலவாறு புகழ்கிறது.

  விஞ்ஞான ஆராய்ச்சிபடி இரண்டு பசு மாடுகளில் இருந்து நாப்பது ஏக்கர் விவசாய நிலத்திற்கு தேவையான இடும்பொருள்களையும், ஜீவாமிர்தம், கனஜீவமிர்தம், விஜாமிர்தம், அமிர்த கரைசல் மற்றும் பஞ்சகவ்யா போன்ற இயற்கை உரங்களையும் தருகிறது.

 பசுவினடத்திலிருந்து பெருகின்ற சாணம், மூத்திரம், பால் போன்ற பொருட்கள் மனிதனுக்கு தேவையான எத்தனையோ அருள் கொடைகளை வழங்குகின்றன.
 
 
   தினசரி நாம் வீணாக்கும் பசு மூத்திரத்தில் புற்று நோயை கட்டுப்படுத்தும் திறனும், ரத்த அழுத்ததை சீராக்கும் திறனும் இருப்பதோடு மட்டுமல்ல தசை இறுக்கும், சிவப்பணு உற்பத்தி, மாதவிடாய் பிரச்சனை, ஆறாத காயங்களை ஆற்றுதல் ஆகிய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன

  நம் நாட்டு பசு வகைகள், கீர், ரத்தி, சிந்தி, சாகிவால், கில்லார், தார்பார்கள், அமிர்தமால், பாச்சூர், பாங்கி, கேதிகர், கில்லா, காங்கேயம், தென்கதா, கில்லா, நகோ, பன்வார், துக்கனோர், உப்பரசே, வாசூர், தியோனி கோலா, ஹயனா, காங்கரேச், கிருஷ்ணவேணி, மால்வி என்று நூற்றுக்கு மேற்பட்ட இனங்கள் உள்ளன.

  இத்தகைய நாட்டு பசுக்கள் தான் மனிதனுக்கும் மண்ணுக்கும் நலத்தை தருமே தவிர நிறைய பால் தருகிறது என்பதற்காக வளர்க்கப்படும் சிமை பசுக்களால் எந்த வித பலனும் கிடையாது.

  மாறாக சீமை பசும் பாலால் ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற நோய்களே ஏற்படும்.

  நாட்டு பசு இறந்து விட்டால் அதை உணவிற்காக கிராம புறங்களில் கொடுத்து விடுவார்கள்.
 
   உண்மையில் அப்படி கொடுப்பது பெரிய பாவமாகும்.

   இறந்து போன பசு உடலை நமது கழனிகளில் புதைத்து விடுவது தான் நல்லதாகும்.

  காரணம் பசு புதைக்கப்பட்ட நிலத்தின் சுற்று புறங்கள் நுண்ணுயிர்களால் வளம் பெறுகிறது.

  யானையை தான் இருந்தாலும் ஆயிரம் பொன்.  இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள்.

  இந்த பழமொழி யானைக்கு பொருந்துகிறதோ இல்லையோ பசுவிற்கு நிச்சயம் பொருந்தும்.

  ஒரு பசுமாடு இருந்து விட்டால் ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பம் நன்றாக வாழ இயலும்.

  அதனால் தான் பசுவை கேட்டதெல்லாம் தரும் காமதேனு என்றார்கள்.

 அதன் உடம்பில் முப்பது கோடி தேவர்களும் வாசம் செய்வதாக சொன்னார்கள்.

 தேவர்கள் வாசம் செய்கிறார்களோ என்னவோ அதன் வயிற்றில் நூற்று பத்து கோடியே பத்து லட்சத்து பத்தாயிரத்து நூறு நுண்ணுயிர்கள் உள்ளன

  அந்த நுண்ணுயிர்கள் கலந்து வரும் பசுவின் கழிவு கூட அமிர்தத்திற்கு ஒப்பானது என்பதனால் தான் கோமாதா வழிபாட்டை இந்து மதம் வலியுறுத்துகிறது.
 
+ comments + 21 comments

உண்மை என்னவென்றால் ஆதித்தமிழர்கள் தான் பசுவை புனிதம் என வழி பட்டவர்கள்
அதாவது திராவிடர்கள், பின்னர் தான் ஆரியர்கள் திராவிடர்களை கண்டு பசுவிற்கு மரியாதை கொடுக்க கற்றுக்கொண்டனர், அதன் பின் தான் ரிக், யஜூர் வேதங்களில் எல்லாம் பசுவின் புனிதம் பற்றி பதிவேற்றம் செய்யப்பட்டது, ஆரியர்கள் பசுவை பலி கொடுத்து உண்டுவன்தனர் என்பது குறிப்பிட தக்கது .

ஒரு பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பது சாத்தியமற்றது.
மாட்டை இறந்தவுடன் புதைத்து விட்டால் அதன் தோலை உரிப்பது யார்? தோல் பொருட்கள் செய்வது யார்?
கைபர் போலன் வழியாக வந்த ஆரியர்கள் மாடு மேய்த்தவர்கள்தான் அவர்கள் தான் அதையும் சாப்பிட்டு அந்த நாகரீகத்தை உழைக்கும் பஞ்சம மக்களுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்

நல்ல செய்திகள் குருஜி...

Anonymous
13:19

பசுவே உணவிற்காக வெட்டாமல் விட்டு விட்டால் பிறகு வீதியில் மனிதர்கள் நடமாட முடியாது, மனிதர்களுக்கு பதில் பசுக்கள் தான் மனிதர்களை மேய்க்க ஆரம்பித்துவிடும். ஏற்கனவே பெங்களூர்லே அப்படிதான் நடக்காது இந்த ப்ளூ கிராஸ் ஆட்களினால். மேலும் பசுவே ஏமாத்தி பால மட்டும் திருடி குடிக்கிறீங்க அப்போ அது அந்த பசுவுக்கு செய்யிற துரோகம் இல்லையா? இத மட்டும் எப்பிடி நியயபடுதுவீங்க. அது அதோட குட்டிக்கு சுரக்கிற பாலை குட்டிய கொஞ்சூண்டு குடிக்க விட்டு ஏமாத்தி அதை தாயிகிட்டேயிருண்டு பிருச்சு கட்டிபோட்டு அப்புறம் பாலை திருடிரீங்கள்ளே இதை எந்த வேதத்திலே அல்லது புராணத்துலே சொல்லி இருக்காங்க??? குடிக்கிறதுக்கு ஒரு வேதம் திங்கிறதுக்கு ஒரு வேதம்??? என்னப்பா நியாயம்??? வாயில்லா பிராணியை எய்கிறீங்க வேதத்தின் பெயரால்???

மிகவும் நன்றாகச சொன்னீர்கள் சுவாமிஜி. மர மண்டைகளின் புத்தியில் இது வுரைக்கட்டும்

பசுவைத் தெய்வமாக வழிபடுவது புராதான வாழ்க்கை முறையின் ஒரு தொடர்ச்சியான நம்பிக்கை மட்டுமே தவிர வேறெதுவும் இல்லை. புராதன மனிதன் விவசாயம் செய்யக் கற்றுக் கொள்வதற்கு முன்னர் வெறும் கால்நடை வளர்ப்பு தான் முக்கியமானதாக இருந்தது. மேய்ச்சல் நில மக்களாக இருந்த ரிக் வேத ஆரியர்கள் பசுக்களுக்காகப் பல நாசகாரப் போர்களை நடத்தியதை ரிக் வேதம் எடுத்துரைக்கிறது. பண்டைய தமிழ் நாட்டிலும் மக்களின் செல்வம் என்பது கால்நடைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அளவிடப்பட்டதற்கு இது தான் காரணமாகும்.

பொருளாதார வளர்ச்சி நிலையில் அடுத்தபடியை எட்டிய பிறகும் மனிதனுக்கு பசுவின் பயன் தொடர்ந்தது மட்டுமின்றி அதன் மீதான மரியாதையும் தொடர்ந்தது. சடங்குகளை மிகைப் படுத்தி இந்திய மக்களின் நம்பிக்கையில் மூட நம்பிக்கைகளை விதைத்த போக்கே, பசுக்களின் உடலில் 33 கோடி தேவர்கள் வசிப்பது போன்ற முட்டாள்தனமான கூற்றுகளுக்குக் காரணம். தமிழ்நாட்டில் இருந்து கேரளத்திற்கு அடிமாடுகளாகக் கொண்டு செல்லப்படும் பசுக்களைப் பார்த்தவர்கள் யாரும் இதனை நம்ப முடியாது. அப்படி 33 கோடி தேவர்கள் பசுவின் உடலில் வசிப்பது உண்மையானால், பசுக்கள் நோய் வந்து செத்துப் போவதற்குக் காரணம் என்ன? இது போன்ற முட்டாள்தனமான கருத்துக்களைப் பரப்புவதை விட்டு விட்டு யோகி ஸ்ரீராமானந்த குரு என்பவர் வேறு உருப்படியான வேலையைக் கவனிக்கட்டும்.

Anonymous
00:15

@உஜிலா தேவி
யாராவது இந்துக்களையோ அல்லது இந்து மதத்தை பற்றியோ தவறாகவோ அல்லது நக்கலாகவோ கருத்துகள் எழுதினால் எத்தனை நாள் வேண்டும்னாலும் அதை delete பண்ணாம வச்சிருக்கீங்க ஆனா அந்த மாதிரியான கருத்துகளுக்கு இந்துகள் அதே மாதிரி பதிலடி தந்தா ரெண்டு பேரோட பின்னுட்டங்களையும் நீக்கி விடுகிறீர்களே எதற்காக?. இந்துக்கள் பதில் எழுதிய பிறகு ரெண்டு பேரோட பின்னுட்டங்களையும் நீக்குவதற்கு பதில் இந்து மதத்தை பற்றியோ அல்லது இந்துக்களை பற்றியோ தவறாக எழுதப்படும் கருத்துகளை முதலிலேயே நீக்கி விடலாமே

வணக்கம் நண்பரே சுவாமிஜியின் படைப்புகளை பற்றி விமர்சிக்க தங்களுக்கு உரிமைகள் உண்டு குருஜியை பற்றியோ அல்லது தனிமனிதர்களை பற்றியோ விமர்சிக்கு பின்னுட்டங்களை இந்த தளத்தில் வெளியிட மாட்டோம் மன்னிக்கவும்

இப்படிக்கு
சதிஷ்குமார்

Anonymous
14:46

@surendhar:
What you say is completely non-sense and u just want to blabber something here, and mark your presence. With referring to your statement, that cow worship was inherited by aryans from dravidian people, If u see the core language, there are references for tamil language in sanskrit and vice versa i.e for sanskrit in tamil language. SO both languages inherited the best from other languages, because language was a way of communication.
Both Aryans and Dravidian's worshiped cow, as it is the backbone for farming and as a mother for all lives in earth. Dravidian people did this without knowing the fact that aryans was worshiping cow and the same vice versa for aryans.
So its completely un-ethical to say that Aryans ate cow meat, because the cow meat culture came only after the British visit in India, you have to understand this, without knowing history don't blabber.

Check the below link to know about aryan communuty,
http://www.aanmigakkadal.com/2009/08/blog-post_95.html

Check the below link to know about cow slaughter by britsh people,
http://gausewamission.org/bhramastraofbritishers.htm

DOnt spread castism by your words, when my body burns , does the fire know my culture? Its duty is just to burn , similar to that our duty is just to spread love, so love all hate never
--balaji

Sorry if

Anonymous
17:33

உலகில் பெரும்பான்மை நாடுகளில் பெரும்பான்மை மக்களால் மாட்டிறைச்சி உண்ணப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் மாட்டிறைச்சியை குறிப்பிட்ட சதவிகிதத்தினர் நீங்கலாக, மற்றவர்களால் விரும்பி உண்ணப்படும் உணவாகவும், ஏழைகள் வாங்கும் விலையிலும் கிடைக்கிறது. மாட்டிறைச்சிக்காக வயதான மாடுகளும், பால் கறவை முடிவுற்ற மாடுகளும், உரிமையாளர்களால் பராமரிக்க முடியாத நிலையில் விற்கப்படும் மாடுகளும் பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு மாடுகளை விற்பதையும், மாட்டிறைச்சி உண்பதையும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் சர்ச்சையாக்குவது சங்பரிவார்களின் வேலையாகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் கூட, ''பசுக்கள்-கன்றுகள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.அவற்றை பாதுகாக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று பா.ஜ.க. கூறியிருந்தது.

இந்த அளவுக்கு பசுநேசனாக இவர்கள் தங்களை காட்டிக் கொள்வது பசுக்களின் மீதுள்ள கருணையால் அல்ல. இவ்வாறு சொல்வதின் நோக்கம், முஸ்லிம்கள் மற்றும் பிராமணரல்லாத சமூக மக்கள் பசுவை இறைச்சியாக பயன்படுத்துவதாலும், முஸ்லிம்கள் தியாகத்திருநாளின்போது குர்பானி கொடுப்பதாலும், இதை தடுக்கவேண்டும் என்பதுதான் இவர்களின் ஒரே நோக்கம். இது ஒருபுறமிருக்க பசுக்கள் மீது இவர்களுக்கு உண்மையில் பரிவு இருக்குமென்றால் யார் பசுக்களை விற்க எண்ணுகிறார்களோ அவர்களிடமிருந்து அதை விலைக்கு வாங்கி செலவு செய்து பாதுகாக்கட்டுமே! யார் தடுத்தார்கள்? அதுமட்டுமன்றி சென்னை போன்ற பெரு நகரங்களில் சாலையோரம் 'கவர்ச்சி படங்களை' தின்று உயிர் வாழும் பசுக்களை தேடி சென்று உணவளிக்கட்டுமே! மேலும், கோவில்களில் பக்தர்களால் காணிக்கையாக தரப்பட்டு சிலகோவில்களில் உரிய பராமரிப்பின்றி பசுக்கள் செத்து மடிவதாகவும், திருட்டுத்தானமாக 'கசாப்பு' கடைக்கு விற்பதாகவும் சிலமாதங்களுக்கு முன் ஒரு இதழ் செய்தி வெளியிட்டது. இந்த பசுநேசர்கள் முதலில் கோவில் பசுக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கட்டுமே! இதையெல்லாம் இவர்கள் செய்யமாட்டார்கள்.

மேலும், பசுக்களை பாதுகாப்பது என்பது சாத்தியமல்ல என்று உலகிலேயே பணக்கார கடவுளான[!]திருப்பதி வெங்கடேச பெருமாள் குடிகொண்டிருக்கும் திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து பசுதானத்திற்கு இடைக்கால 144 போட்ட செய்தி பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது.

''திருப்பதி கோவிலுக்கு, கோதானம் வழங்க பிரார்த்தித்துக் கொள்ளும் பக்தர்கள் வழங்கிய பசுக்கள், 900 வரை உள்ளன. இவற்றில் தற்போது, 140 பசுக்கள் மட்டுமே பால் கொடுக்கின்றன. பசுக்களை வளர்த்து பராமரிக்க திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஆண்டுக்கு மூன்றரை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து செலவழித்து வருகிறது. இந்த பசுக்களால், நாள் ஒன்றுக்கு 1,500 லிட்டர் பால் கிடைக்கிறது. திருமலை கோவில் உட்பட திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்த பல்வேறு கோவில்களின் பூஜைக்கு பால் பயன்படுத்தப்படுகிறது. கோசாலையில் பசுக்களை பராமரிக்க, 10 பேர் வரை கால்நடை மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். தற்போது இங்கு ஒருவர் மட்டுமே பணியாற்றி வருகிறார். நிலத்தடி நீர் பற்றாக்குறை உள்ளதால், வெளியிலிருந்து தினமும் 20 டேங்க் வரை பசுக்களின் தேவைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. தொலைதூரத்திலிருந்து கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் பசுக்களினால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. நோயால் பாதிக்கப்பட்டு நான்கு பசுக்கள் இறந்தன.எனவே, கோதானமாக அளிக்கும் பசுக்களை பெற்றுக்கொள்வதற்கு திருப்பதி தேவஸ்தானம் தற்காலிகமாக தடை விதிக்க முடிவு செய்துள்ளது என்கிறது அந்த செய்தி.

தங்கமாகவும், வெள்ளியாகவும், பணமாகவும் குவியும் திருப்பதி தேவஸ்தானத்தால் கூட பசுக்களை பராமரிக்க முடியவில்லை என்றால், அன்றாடங்காய்ச்சியான பாமரன் பால் வற்றிப்போன மாட்டை வைத்து கடடியழ வேண்டும் என சங்கபரிவார் சொல்வது தவறு என விளங்குகிறதல்லவா? எனவே இனியாகினும் பசுவை வைத்து அரசியல் செய்வதை சங்பரிவார கூட்டம் நிறுத்திக்கொள்ளுமா? செத்த பசுவின் தோலை உரித்த மனிதனை கொல்லும் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருமா? மனிதனுக்காக படைக்கப்பட்டவைகளை மனிதன் அனுபவிப்பதை தடுக்கும் மனித உரிமை மீறலை சங்பரிவார் கைவிடுமா? பொறுத்திருந்து பார்ப்போமே!

Thanks : http://www.intjonline.org/1829.do

Saravanan
19:21

@Anonymous

பல்வேறு வகையான பின்னூட்டங்கள் உள்ளன எது சரி, அது தவறு என்று புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இப்படி ஆரி(றி)ய, திராவிட பழங்கதைகள் பேசி நேரத்தை வீணடிப்பதை விட சமுதாய முன்நேற்றத்துக்கு ஏதாவது செய்தால் நல்லது. அப்படி செய்தால் என்னை போன்ற இளைய சமுதாயத்தினர் உங்களை பார்த்து கற்றுக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் உங்களை போல வீணாக வெட்டி பேச்சு தான் பேச முடியும்.

பதிவை விட பதிவிற்கு கிடைத்த கருத்துரைகள் காரசாரமாக இருக்கிறது..!!

திராவிடர் என்பவர் யார் என்று மனுஸ்ம்ருதியில் சொல்லப்பட்டிருந்தாலும்,
திராவிடர்கள் என்பவர்கள் மஹாபாரதப் போரில் இரண்டு பக்கமும் நின்று போரிட்டனர் என்று மஹாபாரதம் பல இடங்களிலும் சொல்லியிருந்தாலும்,
திராவிட நாடு என்ற ஒரு நாட்டை, சேர, சோழ, பாண்டியர்
அல்லாத ஒரு இடமாகப் பல இடங்களிலும் மஹாபாரதம் சொல்லியிருந்தாலும்,
இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல்,
இவற்றை எல்லாம் ஆராயாமல்,
ஒரு வேத தத்துவப் புத்தகத்தில் ஒரு விளக்கம் அளிப்பதற்காக,
ஒரு வேத வித்தகர் திராவிட பாஷையில் உள்ள சொற்கள்
என்று சொன்ன ஐந்து சொற்கள்,
தமிழில் வழங்கும் சொற்களாக இருக்கவே,
அதன் அடிப்படையில், தமிழ் மொழியும் திராவிட மொழியும் ஒன்று
என்ற கருத்தை, 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
ஆங்கிலேய மிஷனரியான ராபர்ட் கால்ட்வெல் விதைத்தார்.கால்டுவெல்


அதைத் தொடர்ந்து, சிந்து சமவெளிப் பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடக்கவே,
இவை இரண்டையும் ஆரியப் படையெடுப்புக் கொள்கைவாதிகள் முடிச்சு போட்டனர்.
சிந்து சமவெளியில் வாழ்ந்த திராவிடர்கள் தமிழர்கள் என்றும்,
அவர்களை ஆரியர்கள் விரட்டி விடவே தென்னிந்தியாவுக்கு வந்து குடியேறினர்
என்றும் புனைந்தனர்.
தமிழ் நூல்கள் காட்டும் எந்தக் கருத்தையும் அவர்கள் ஆராயவில்லை.
நம் தமிழ் மக்களோ, மிஷனரி வலையில் விழுந்து
திராவிடத்தைப் பிடித்துக் கொண்டு,
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் திராவிடம், திராவிடம் என்று பேசி
நாறடித்து விட்டனர்.
அகில உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவரான
நொபோரு கராஷிமா அவர்கள்,இந்தத் திராவிட இயக்கம் சமூக சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
ஆனால் இந்த இயக்கம் அறிவுக்குப் புறம்பானதாகவே இருக்கிறது
என்று சென்ற வருடம் சொல்லியுள்ளது குறிப்பிடத்தக்கது.வடமொழியையும், வேதத்தையும் தாக்கும் திராவிடவாதிகள்
இந்தக் கால்டுவெல் அவர்கள் ஆதாரமாக எடுத்துக் கொண்ட நூல்
”தந்திர வார்த்திகா” என்னும் மீமாம்சத் தத்துவ உரை நூல்
என்று அறிந்திருப்பார்களா என்பது சந்தேகமே.
இதை எழுதியவர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
குமாரில பட்டர் என்னும் வேதவித்வான்.
இவர் ஆதி சங்கரர் காலத்தில் வாழ்ந்தவர்.
வேத விவாதங்கள் அதிகம் நடந்த காலம் அது.
அதுவே பௌத்தத்தை வென்று,
வேதக் கருத்துக்களை ஸ்தாபிதம் செய்த காலமும் ஆகும்.


Next Post Next Post Home
 
Back to Top