( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

யானையின் மொழியை கற்றவன்!


  ணவு பொருட்களின் உற்பத்தி மருத்துவம் பலவிதமான கலைகள், கணக்கியல், பொறியியல் துறைகளில் நல்ல அனுபவமும் தேர்ச்சியும் பெற்றிருந்தது போலவே விலங்கியல் துறையிலும்  ஆதிகால இந்தியர்கள் பழுத்த அனுபவ அறிவு பெற்றிருந்ததை நினைக்கும் போது நமக்கு மலைப்பு ஏற்படுகிறது

அதே நேரம் இக்கால நமது செயல் பாடு நம்மை தலை குனியவும் வைக்கிறது

  நாளந்தா பல்கலை கழகத்தில் விலங்கியலுக்கு எனவும் தனிப்பாட பிரிவே இருந்திருக்கிறது.

  வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள் போன்றவற்றில் இயல்புகளும் பண்பு கூறுகளும் உடலமைப்பு முறைகளும் பகுதி பகுதியாக விவரிக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளன.


   விலங்கு குடும்பத்தை சரகர் நான்கு வகையாக பிரிக்கிறார்.

 கருப்பைகளிலிருந்து பிறக்கும் நான்கு கால் விலங்குகளை ஜராயுஜ என்றும்,

 முட்டையிலிருந்து பிறக்கும் பறவைகள், மீன்கள், நச்சு உயிர்கள் போன்றவற்றை அண்டஜ எனவும்,

  ஈரப்பசையுடைய பகுதிகளில் பிறப்பவைகளை இச்வேதஜ என்றும்

  தாவர மூலக் கூறிலிருந்து உருவாகுபவைகளை உத்பஜ என்றும் வகைப்படுத்துகிறார்.

  ஆண், பெண் சேர்க்கையில்லாமல் உருவாகும் நுண்ணுயிர்களை க்ஷத்ர ஜந்துக்கள் என்றும் பிரிக்கப்படுகிறது.


    இவ்வகையில் உள்ள உயினங்கள் ரத்தம் இல்லாதவை மிக அதிகம் இனப்பெருக்கம் செய்பவை நசுக்க இயலாதவை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

 விலங்குகலின் மாமிசமும் பித்த வகைகளையும் மருத்துவத்திற்கு கூட பயன்படுத்தப்பட்டுள்ளது.

  சுஸ்ருதம், நாகார்ஜுனரும் பாம்புகளின் விஷத்தை மருந்தாக்குவது பற்றி பல விளக்கங்கள் தருகிறார்கள். 

  இவர்கள் இருவரும் ஐந்து வகையான கொசுக்கள், ஆறு வகையான எறும்புகள், ஆறுவகை பூச்சிகள், பதினாறு வகை சிலந்திகள், முப்பது வகை தேள்கள் போன்றவற்றை மருந்து பொருட்களாக பயன்படுத்த ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தனர்.


   பழங்கால அறுவை சிகிச்சையில் அட்டைகள் கெட்ட ரத்தத்தை வெளியேற்றும் கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

 அட்டைகளின் வகைள் அவைகளின் பழக்கங்கள் பற்றிய விஞ்ஞான பூர்வமான விளக்கங்களை சுஸ்ருதர் பட்டியல் இடுகிறார்.

  குதிரை மற்றும் யானைகளின் உடற்கூறு அறிவியல் விலங்கியல் துறையில் தனிப்பிரிவாகவே விளங்கி வந்தது.

 ஒரு குதிரையின் தோற்றத்தை வைத்து அதன் திறமைகள் மரபு வழிகள் அனைத்துமே ஆராயப்பட்டன.  

வெள்ளாடுகள், ஆடுகள், பசுக்கள், கோழிகள், நாய்கள் ஆகியவற்றிற்கு ஏற்படும் தொற்று நோய்கள் எலும்பு முறிவுகள் போன்றவைகளுக்கு தனித்தனி மருத்துவ முறைகள் கையாளப்பட்டன.

 போர் விலங்குகளான யானைகள், குதிரைகள் மற்றும் நாய்கள் போன்றவற்றின் குண இயல்புகளை பிரித்தறிந்து பயிற்சி கொடுக்கும் வழக்கமும் இருந்தது.

  விலங்குகளை விட அறிவில் குறைந்த பறவைகள் கூட தங்களது தேவைகளுக்கு சேவையாற்ற பயிற்சி கொடுத்தனர்.

 தகவல் தொழிலுக்கு புறாக்களும், தண்டனைகள் நிறைவேற்ற கழுகுகளும் பயன்படுத்தப்பட்டன.


   மாடுகளின் உபயோகம் வண்டி இழுத்தல், ஏர் உழுதலுக்கு மட்டுமின்றி நீர் இறைக்கவும் பயன்படுத்தப்பட்டது. 

கலப்பின உயினங்களை உருவாக்கும் திறமை அக்கால மக்களுக்கு இருந்தது.

  ஆண்மை நீக்கப்பட்ட காளைகள், எருதுகள், குதிரைகள் போன்றவைகள் கரடுமுரடான வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டன.

  போர் யானைகளின் பயன்கள் அதிகமாக தேவைப்பட்டதாலும் அரசர்களின் கெளரவ சின்னங்களாக அவைகள் இருந்ததாலும் பண்டிகை காலங்களில் அவற்றின் பங்களிப்புகள் அதிகமாக இருந்ததாலும் யானைகள் பராமரிப்பில் தனிக்கவனம் செலுத்தப்பட்டது எனலாம். 

 யானை பாகன்களுக்கு யானைகளுடன் பேசும் தனி மொழிக்கான பயிற்சியும் அளிக்கபட்டது. 

பிரம்மாண்டமான ஆலயங்கள் மற்றும் அரண்மனைகள் கட்டப்படும் போது எல்லாம் மனித உழைப்பு எந்த அளவு தேவைப்பட்டதோ அதே அளவு யானையின் பங்களிப்பும் தேவைப்பட்டது.

வீடுகளிலும் அரண்மனைகளிலும் சமூதாய கூடங்களிலும் விலங்குகளை பராமரிக்க தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது

 மனித வைத்தியர்களுக்கு என்ன மரியாதை மக்களிடம் இருந்ததோ அதே மரியாதை மிருக வைத்தியருக்கும் இருந்தது

 அசோகர் காலத்திலேயே விலங்குகளுக்கு என்று தனி வைத்திய சாலைகள் நம் நாட்டில் துவங்கப்பட்டு விட்டது

 இதை அவரின் பல கல் வெட்டுகள் நமக்கு இன்றும் பறை சாற்றுகிறது

 ஆக ஆதிகால இந்தியர்கள் தங்களை மட்டுமே காப்பாற்றி கொள்ள சிந்திக்க வில்லை

 தங்களை அண்டி பிழைக்கும் விலங்குகளையும் பாதுகாக்க சிந்தித்து செயல் பட்டு இருக்கிறார்கள்

ஆனால் நவீன இந்தியன் விலங்குகளை பற்றி மட்டும் அல்ல தனது வருங்கால தலைமுறைகளை பற்றியும் கவலை படாமல் தன்னை பற்றி மட்டுமே கவலை பட்டு சுயநலமாக செயல் பட்டு தான் வாழும் நில பரப்பையே பொட்டல் ஆக்கி கொண்டு இருக்கிறான்

 
+ comments + 4 comments

எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறு ஒன்றும் அறியேன் பராபரமே !

இன்றைய உலகத்தார் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் தாம்.

நன்றி குருஜி...

அருமையான தகவல் .நன்றி குரு.

It is a known fact that the Late Sankaracharya of Kanchi,Sri.Chandrasekarendra sarasvathi could communicate with elephants,dogs and other creatures

17:03

சில குறிப்பிட்ட வகை உணவுகளை சாப்பிடவே கூடாது என்று இஸ்லாமிய சட்டதிட்டங்களில் தெளிவாக கூறப்பட்டு உள்ளது. உதாரணமாக பன்றியின் இறைச்சி முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் பன்றி இறைச்சி உண்ணாமல் இருப்பதைப் போலவே, ஹிந்துக்களும் பசுவின் இறைச்சியை உண்ணாமல் இருக்கிறார்கள்.

பசுவின் இறைச்சியை உண்ணக் கூடாதென்று எந்த ஹிந்து வேத புத்தகமும் கூறுகிறதா? அவ்வாறு எந்த வேத புத்தகத்திலும் கூறப்படவில்லை என்றும், அது இடையில் ஏற்பட்ட ஒரு பழக்கமே (நம்பிக்கையே) என்றும், சில காலகட்டங்களுக்கு முன்பு ஹிந்துக்களும் புலால் உணவு, குறிப்பாக பசு இறைச்சி உண்டார்கள் என்றும் சில ஹிந்து நண்பர்களே கூறுகிறார்களே!

இது பற்றி சற்று கூற முடியுமா?


Next Post Next Post Home
 
Back to Top