( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

அமாவாசை திதியில் பிறந்தவன் திருடனா ?


கேள்வி  அமாவாசை திதியில் பிறந்த குழந்தை திருடனாகும் என்பது உண்மையா?
                                                                                      மகாலட்சுமி   கும்பகோணம்
 ஜோதிடத் துறையில் அமாவாசை தினத்தைப்   பற்றி பல சர்ச்சைகள் இருந்து வருகிறது.  அமாவாசை நாளை சுபநாள் என்று ஒரு சாராரும் அசுப நாள் என்று மற்றொரு சாராரும் சொல்லி வருகிறார்கள்.  சுபநாள் என்று வாதிடுபவர்கள் அது வளர்ப்பிறையின் துவக்கம், அதனால் அன்று செய்யும் காரியங்கள் எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்கிறார்கள்.

 அசுப நாள் என்று சொல்பவர்கள் அன்றைய தினம் சந்திரன் முழுமையாக பூமியால் மறைக்கப்பட்டு விடுகிறது.  பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள ஆகர்ஷண தொடர்பு அமாவாசை நேரத்தில் இருப்பது இல்லை.  அதே நேரம் நேரத்தை தேய்பிறையின் முடிவு என்று சொல்லலாமே தவிர வளர்பிறையின் ஆரம்பம் என்று எந்த  நிலையிலும் கருத முடியாது.  அமாவாசைக்கு அடுத்த நாள் தான் வளர்பிறை துவங்குகிறது.  எனவே அமாவாசை அசுப தினமே என்று வாதிடுகிறார்கள்.

  இந்த விஷயத்தில் முக்கியமாகக் கவனத்தல் எடுத்தக் கொள்ளக் கூடிய ஒரு தகவல் இருக்கிறது.  அது அமாவாசை அன்று பூமி சந்திரனை முழுவதுமாக மறைத்து விடுகிறது.  சந்திர ஆகர்ஷணம் சரியான முறையில் பூமியில் கிடைப்பது இல்லை என்பது தான்.  சந்திரனுடைய சக்தி சரியாக இல்லாதபோது பிறக்கும் குழந்தைகள் தாயாரிடம் இருந்து போதிய அரவணைப்பைப் பெற முடியாது அல்லது குழந்தை தாயிடம் அவ்வளவாக ஒட்டாது என்பது சாஸ்திர விதி மட்டுமல்ல அனுபவ உண்மையுமாகும்.

  தாயின் அன்பைப் பெறாத அல்லது தாய் மீது அன்பு வைக்காத குழந்தைகளைச் சிறந்தவர்கள் என்று கூறுவது மிகவும் சிரமமாகும்.  இத்தகைய குழந்தைகளிடம் நல்லவை அல்லாத இயல்பு சற்று அதிகமாக இருக்கும்.

 பொருளைத் திருடி தண்டனை பெற்றவன் தான் திருடன் என்று கூறமுடியாது.  திருட நினைத்தாலே அது திருட்டுத் தனம் தான்.  அதனால் அமாவாசை அன்று பிறக்கும் குழந்தைகளிடம் பொருளைக் கவரும் இயல்பு சற்று அதிகமாக இருப்பது உண்மைதான்.

 

+ comments + 25 comments

மிகவும் பயன்னுள்ள தகவல்!. பகிர்ந்தமைக்கு நன்றி

நன்றி,
ஜோசப் (http://www.tamilcomedyworld.com)

13:13

கட்டுரையாளரின் அருமையான ஒரு கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்: "ஒரு பொருளை திருட நினைத்தாலே அது திருட்டுத் தனம்தான்".

மற்றபடி, அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளுக்கு திருட்டுத்தனம் இருக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அது அவரது மத நம்பிக்கையின் அடிப்படையிலான நம்பிக்கையாக / கருத்தாக இருக்கலாம். அவரது மத நம்பிக்கையை விமர்சனம் செய்ய நமக்கு அனுமதி கிடையாது.

எம்.ஜி.ஆர். நடித்த திரைப்பட பாடல்களில் எவ்வளவோ அருமையான பாடல்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று: "எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே... அது நல்லதாவதும் தீயதாவதும் அன்னை வளர்ப்பினிலே..."

முதல் வரியை முழுக்க முழுக்க ஏற்றுக் கொள்கிறேன். நூறு சதவீதம் சரியான வரி. ஆனால், இரண்டாம் வரி, தலை கீழானது. தாய்மைக்கு களங்கம் கற்பிக்கும் வரி. தாய்மையை கொச்சைப் படுத்தும் வரி.

உலகில் எந்த ஒரு தாய் - தந்தையும் தனது பிள்ளைகள் நாசமாகப் போகட்டும் - மோசமாகப் போகட்டும் என்று கனவிலும்கூட எண்ணுவது கிடையாது. எதோ அங்கொன்றும் இங்கொன்றும் ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். EXCEPTIONS ARE NOT AN EXAMPLES.

உதாரணமாக, ஒரு விலைமாதர்கூட "ஏதோ என் வாழ்கைதான் இப்படியாகி விட்டது. எனது பிள்ளையாவது நன்றாக இருக்க வேண்டும்" என்றே எண்ணுவாள். ஒரு செருப்பு தைக்கும் தொளிலாளிகூட "படிக்காததால் நான் இவ்வளவு சிரமமப் படுகிறேன். எனது பிள்ளையாவது படித்து, மகராசனாக வாழ வேண்டும்" என்றுதான் எண்ணுவார். இன்னும் எவ்வளவோ உதாரணங்கள் கூறலாம்.

ஒருவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அவனவனது நட்பு - பழகும் கூட்டத்தினர் மூலமே ஏற்படும்.

சமீபத்தில், நமது முன்னாள் முதல்வர் கருணாநிதி கூட சொன்னார்: "கூடாத நட்பு - கேடான முடிவு" என்று.

உலகில் இறைவன் நல்லதையும் படைத்து, தீயதையும் படைத்து, இரண்டையும் அலசி ஆராய்ந்து முடிவு எடுக்க, அதே இறைவன் நமக்கு பகுத்தறிவையும் தந்துள்ளான்.

இது தீய வழி என்று ஒருவன் நன்கு தெரிந்து இருந்தும் அந்த வழியை தேர்ந்து எடுக்கிறான் என்றால், அது முழுக்க முழுக்க அவனது தவறே - அவனது குற்றமே! அதற்கான தண்டனையை அவன் இவ்வுலகில் அனுபவிக்கா விட்டாலும், நிச்சயமாக மறு உலகில் (இறப்புக்கு பின்னர்) அவன் அனுபவித்தே தீருவான்.

இறைவன் எல்லாவற்றையும் நன்கு அறிபவனாக - அறிந்தவனாக இருக்கிறான்.

Anonymous
13:45

@உஜிலாதேவி
நண்பரே கட்டுரையில் எழுத்து பிழை இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்..சிறு எழுத்து பிழையும் ஒரு வார்த்தையின் பொருளையே மாற்றிவிடும்..இந்த கட்டுரையும் சில எழுத்து பிழைகள் உள்ளன அவைகளை மாற்றி விடுங்கள்..
//// அதனால் அன்று செய்யும் காயங்கள் எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்கிறார்கள்////

இதில் நீங்கள் 'காரியங்கள்' என்று எழுதுவதற்கு பதில் 'காயங்கள்' என்று எழுதிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

//////// அமாவாசை அன்று பூமி சந்திரனை முழுவதுமாக மறைத்து வடுகிறது/////

இதில் 'மறைத்து விடுகிறது' என்று எழுதுவதற்கு பதில் 'மறைத்து வடுகிறது' என்று எழுதி விட்டீர்கள்.எனவே இந்த பிழைகளை மாற்றி விடுங்கள்

vvijayarani
14:04

அமாவாசையன்று நிலவு தெரியாதே தவிர அது அங்கு இல்லை என சொல்ல முடியாது! தேய்பிறை வளர்பிறை என சொல்லுகிறோமே அப்படியெனில் நிலவு தேய்ந்து வளர்கிறதா? இது அனைத்தும் கற்பனையான மாயை...! நம் மீது வெளிச்சம் படும் போது நம் நிழல் தரையில் படும்! இருட்டில் நமது நிழல் தெரியாதே தவிர இல்லை என ஆகாது!!!...
கவனிக்க அமாவசையில் பிறந்தால் திருடும் குணம் வரும் எனில்! முழு பவுரணமியன்று பிறந்தவர்கள் அனைவரும் தயாள குணம் உடைய ஞானிகள் என சொல்லலாமா?...நிழவின் கதிர்களை விட சூரிய கதிர்களால் பலன் அதிகம் என நம் அறிவியலும் வானியல் சாத்திரமும் சொல்கிறது...அப்படியெனில் சூரிய கதிர் படாமல் இரவில் நாம் பிறந்திருந்தால் நாம் எந்த குணத்தில் இருக்கிறோம்!!!?

குறிப்பு: நாம் அனைவரும் சாதாரண காலத்தில் பிறந்தோம்..மாதம் ஒருமுறைதான் அமாவசையும், பவுர்ணமியும் வருகிறது எனவே அந்த நாளில் பிறக்கிற குழந்தை மீது நம் கவனம் பதிகிறது! எனவே அவர்கள் செய்யும் சிறு செயல்களும் நமக்கு மிகையாக தெரிகிறது...
எடுத்துகாட்டு( இப்போது நீங்கள் உங்கள் மூச்சுவிடுதலை நோக்கி கவனத்தை செலுத்துங்கள்...இதுவரை தன்னிச்சையாய் செயல்பட்ட ஒரு செயல் நம் கவனத்திற்குள் வரும் போது கடினமாய் தெரியும்)

17:03

@Anonymousசாதாரணமாக, எங்கும், எப்பொழுதும் ஏற்படக்கூடிய எழுத்துப் பிழைகளுக்காக, கடிந்து கொண்டு நீங்கள் எழுதும் தூய செந்தமிழ்தான் எத்தனை இனிமை??

இப்போ இன்னான்றே? எலுத்துலே தம்மாந்துண்டு மிஸ்டேக்கு கீது. நானுந்தான் ஆமான்றேன். இத்துக்குப் போயி ஏன்யா இவ்லோ சவுண்டு உட்டுகினு கீறே? அவரு சொல்ற மெஸ்சேஜூலே தப்பு கீதான்னு பாரு. எலுத்துலே தம்மாந்துண்டு மிஸ்டேக்கு இர்ந்தா வுட்ர்பா.

Anonymous
17:19

@உஜிலாதேவி

மொதல்ல உன்னோட கட்டுரைல தமிழ் மொழியை ஒழுங்கா எழுதுயா..ஊருக்கு மட்டும் உபதேசம் பண்ணா போதாது அந்த உபதேசத்தை நீயும் கடைபிடிக்கணும்..நீ தப்பு பண்ணதை ஒருத்தன் சொன்னால் சொல்லி காட்டினால் தப்பை திருத்திகோயா... அதுதான் ஒரு மனிதனுக்கும் அழகு நேர்மையான துறவிக்கும் அழகு

Anonymous
17:40

@abdhul rahman
//// சாதாரணமாக, எங்கும், எப்பொழுதும் ஏற்படக்கூடிய எழுத்துப் பிழைகளுக்காக, கடிந்து கொண்டு நீங்கள் எழுதும் தூய செந்தமிழ்தான் எத்தனை இனிமை??

இப்போ இன்னான்றே? எலுத்துலே தம்மாந்துண்டு மிஸ்டேக்கு கீது. நானுந்தான் ஆமான்றேன். இத்துக்குப் போயி ஏன்யா இவ்லோ சவுண்டு உட்டுகினு கீறே? அவரு சொல்ற மெஸ்சேஜூலே தப்பு கீதான்னு பாரு. எலுத்துலே தம்மாந்துண்டு மிஸ்டேக்கு இர்ந்தா வுட்ர்பா./////

நான் எழுதினது செந்தமிழ் இல்லைனா நீ எழுதினது செந்தமிழா?. தம்மாதுண்டு மிஸ்டேக்னா மாத்த கூடாதா என்ன..சவுண்டு யாரு உட்டா சவுண்டு உட்ரதுகு ஏன்னா கீது? நான் முன்னாடியே தெளிவா சொல்டேன் மாத்தல அதான் ரெண்டாவது தப சொன்னேன் அதுக்கு நீ இப்போ என்னங்குற?.ஒரு எழுத்து தப்பா இந்தாலும் அவரு சொல்ற மெஸ்சேஜூலே அர்த்தமே மாறிடும் அண்ணாத்த..அவரு சொன்ன மெஸ்சேஜூல

///// அது வளர்ப்பிறையின் துவக்கம், அதனால் அன்று செய்யும் காயங்கள் எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்கிறார்கள்////

அன்று செய்யும் காயங்கள்னா ஒருத்தருக்கு நாம ஏற்படுத்துகிற காயமா அதாவது ஒருத்தரை நாம கத்தியால் குத்துற காயமா என்ன? அன்னிக்கி நாம ஒருத்தனுக்கு காயம் ஏற்படுத்தினா எல்லாமே நல்ல நடக்குமா? ஒழுங்கா சொல்லுயா

18:42

ANONYMOUS 17:40

நண்பரே! உங்களுடன் வாக்குவாதம் செய்ய எனக்கு நேரமில்லை - மன்னிவும். உஜிலாதேவி எனக்கு சமீபத்தில்தான் அறிமுகம். அவரது கருத்துக்களில் எனக்கு உள்ள முரண்பாடுகளை எனது முந்தையை கருத்துகளில் நீங்கள் பார்க்கலாம்.

ஒருவருக்கும் நமக்கும் கருத்து முரண்பட்டு இருப்பினும், அதை சுட்டிக் காட்டுவதில் ஒரு நாகரீகம் - பண்பாடு இருக்க வேண்டியது அவசியம்.

நான் உஜிலாவின் கருத்தோடுதான் மோதுவேனே தவிர, ஒரு பாவமும் அறியாத, உஜிலாவோடு மோதுவது கிடையாது.

எடுத்த எடுப்பில், நீ - வா - போ என்று ஒற்றை வார்த்தையில் அழைப்பது நாகரீகமான மனிதர்களுக்கு அழகன்று.

நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவர் என்று எனக்கு தெரியவில்லை. எப்படியிருப்பினும், எந்த ஒரு மதமும் நமக்கு அநாகரீகத்தை கற்றுத் தரவில்லையே!!

ARUL MALAYSIA
22:32

good news guru ji something extra i learn today......


ARUL
MALAYSIA

@Anonymous

நண்பரே தாங்கள் குறிப்பிட்டுள்ள எழுத்து பிழைகளை திருத்திவுள்ளோம் சுவாமிஜி வெளியூர் பயணம் சென்றுள்ளார் அதனால் நாங்களே சுவாமிஜியின் இந்த படைப்புகளை திருத்தி வெளியிட்டோம் அதனால் இந்த தவறுகள் ஏற்பட்டுள்ளன மன்னிக்கவும்

இப்படிக்கு
சதீஷ் குமார்

நிஜமாவா பாவம் அமாவாசை அன்று பிறக்கும் குழந்தைகளை இதைச் சொல்லியே அவர்கள் செய்யும் தவறுக்கு இவர்களே காரணமாயிருவார்கள்

நீங்கள் கூறுவது உண்மைதான் போலிருக்கு எங்க ஊரில் ஒருவன் உண்டு கொஞ்சம் திருட்டு பழக்கம் உடையவன்!

தகவலுக்கு நன்றி!

Anonymous
23:44

Greeting from Dr.C.Mohanraj

Dear friends please note the following corrections:-

On 'ammavasai days' moon is not hidden by earth. The fact is we are seeing that part of moon which is not exposed to sun light on those days. So we are not able to appreciate the moon on those days.

One more important thing is that during those days, earth and moon are more or less on straight line. And their mutual attraction is not diminished; but equal to the force on 'full moon' days.

May GOD bless all of us
Please send your reply to

Anonymous
23:46

Greeting from Dr.C.Mohanraj

Dear friends please note the following corrections:-

On 'ammavasai days' moon is not hidden by earth. The fact is we are seeing that part of moon which is not exposed to sun light on those days. So we are not able to appreciate the moon on those days.

One more important thing is that during those days, earth and moon are more or less on straight line. And their mutual attraction is not diminished; but equal to the force on 'full moon' days.

May GOD bless all of us
Please send your reply to

Anonymous
23:52

@சதீஷ் குமார்

மிக்க நன்றி நண்பரே...அது சிறு பிழைதான் ஆனால் அந்த பிழை சொல்லின் பொருளையே மாற்றிவிட்டது..அதனால்தான் நான் உங்களுக்கு தெரிவித்தேன்..மேலும் நான் உபயோகபடுத்திய கடினமான வார்த்தைகளுக்காக உங்களிடமும் சுவாமிஜி இடமும் நான் மன்னிப்பு கேட்டுகிறேன்..மன்னிக்க வேண்டும் நண்பரே

Anonymous
23:58

@abdhul rahman
நண்பரே நான் உங்களை ஒருமையில் அழைத்ததற்கு மிகவும் வருந்துகிறேன்..மன்னிக்கவும் நண்பரே

Athithan
06:36

சரியான பதிலைக் கொடுத்துள்ளீர்கள் விஜயா.

bsathyabsc
06:36

எனக்கு தெரிந்து அமாவாசையில் பிறந்தவர்கள் யாரும் திருடியது இல்லை

Aruntha
06:37

இதை வைத்து ரஜனி நடித்த படம் கூட வந்திச்சு. பெயர் நினைவு இல்லை. இந்த கணிப்பு தப்பு.

Anonymous
15:18

@Arunthamovie name manithan

Anonymous
13:56

எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படதான் பாடலின் இரண்டாம் வரி எண்ண்ததைக் கூறவில்லை செயட்பாட்டைதான் கூறுகிறது. தாய்மைக்கு களங்கம் கற்பிக்கும் வரி அல்ல . தாய்மையை கொச்சைப் படுத்தும் வரியும் அல்ல.
உலகில் எந்த ஒரு தாய் - தந்தையும் தனது பிள்ளைகள் நாசமாகப் போகட்டும் - மோசமாகப் போகட்டும் என்று கனவிலும்கூட எண்ணுவது கிடையாது. உண்மை அனால் எண்ணுவது செய்கிறது.

இது தீய வழி என்று ஒருவன் நன்கு தெரிந்து இருந்தும் அந்த வழியை தேர்ந்து எடுக்கிறான் என்றால், அது அவன் விதி அதனக்தன் தை எண்ணி விட்டு சும்மா இருந்து விடுகிறாள்.

இறைவன் எல்லாவற்றையும் நன்கு அறிபவனாக - அறிந்தவனாக இருக்கிறான். இறைவன் எவருக்கும் தீமையும் செய்வதில்லை நமையும் செய்வதில்லை. நம் செயஹிற வினையைத்தான் அனுபவிக்கிறோம்.

Sriram
09:34

இது ஒரு விதமான உண்மைதான். எனக்குத்தெரிந்த அமாவாசையில் பிறந்தவர்களுக்கு "கிளப்டோமானியா" என்னும் ஒருவகை திருடும் ஆசை உள்ளது. உதாரணமாக அமாவாசையில் பிறந்த ஹனுமான் சூரியனைப் பழம் என்று எண்ணிக் கவரப்போனர். அமாவாசையில் பிறந்த சில பணக்கார வீட்டுப் பெண்களுக்கும் சின்னச் சின்னச் திருடும் வழக்கம் "கம்மல், வளை முதலிய சிறு பொருட்களைத் திருடும் வழக்கம் பலபேருக்குத் தெரிந்திருக்கலாம்.

aariaya vendiya visiyam

aariaya vendiya visiyam


Next Post Next Post Home
 
Back to Top