Store
  Store
  Store
  Store
  Store
  Store

புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...?


  சென்ற வாரத்தில் வேலூரில் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டேன்

 ஊழலுக்கு எதிராக தற்போது நம் நாட்டில் நடை பெற்று கொண்டிருக்கும் சில உண்ணாவிரத அறப்போராட்டங்களை பற்றி அதில் காரசாரமாக விவாதிக்க பட்டது

 டெல்லியில் ராம்தேவ் அவர்களின் உண்ணாவிரதம் காவல் துறையினரால் தடை செய்யப் பட்டதை மட்டும் கண்டித்த நான் ராம்தேவ் சித்தாந்தங்களை பல வாறு குறை சொல்லி பேசினேன்

என் பேச்சை கேட்ட பலரும் நீங்கள் ஒரு துறவி ராம்தேவும் ஒரு சந்நியாசி நிலைமை அப்படி இருக்க சக சந்நியாசியின் செயலை வரவேற்காமல் எதிர்ப்பது ஏன் என கேட்டார்கள்


 அப்படி கேட்டவர்களை பரிதாபமாகத் தான் என்னால் நோக்க முடிந்தது காரணம் நான் சாமியார் என்பதற்காக எல்லா சுவாமிஜிகளின் கருத்துக்களையும் ஆராயாமல் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ன?

 நான் ராம்தேவிடம் இருந்து முரண்படும் விஷயங்களை பட்டியலிட்டேன்

 முதலில் ராம்தேவ் ஊழல் புரிந்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்கிறார்

 அடுத்ததாக அரசாங்க பொதுக்காரியங்களுக்காக நிலங்களை கையக படுத்துவதை நிறுத்த வேண்டும் என்கிறார்

 மூன்றாவதாக கருப்பு பணத்தை ஒழிக்க ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகளை தடை செய்ய வேண்டும் என்கிறார்

இவைகள் அனைத்துமே சாத்தியமில்லாதது மட்டும் அல்ல குழைந்தை தனமானதும் ஆகும்


  ஒரு உயிரை உருவாக்க நம்மால் முடியாத போது அதை அழிக்கும் அதிகாரம் நமக்கு கிடையாது

 மரண தண்டனை குற்றவாளிகளை திருத்தி விடும் குற்றம் புரிய நினைக்கிறவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் என்பது ஊளுத்துபோன வாதம்

 இது வரை அந்த தண்டனை இத்தகைய உணர்வுகளை மனிதர்களுக்கு ஏற்படுத்தி இருந்தால் ஒரு குற்றம் கூட இன்று நடக்காது

 ஆனால் உலகில் நாம் அப்படி எதையும் காண வில்லை

 மேலும் மரண தண்டனை என்பது நாகரிக சமுகத்திற்கு உகந்தது அல்ல

 பொதுக் காரியங்களுக்காக தனியார் நிலங்களை அரசாங்கம் எடுத்துக்கொள்ள கூடாது என்றால் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக சாலைகள்,மின்சார நிலையங்கள்,அணைக்கட்டுகள்,நீர் பாசன வாய்க்கால்கள் ஏன் செத்து போன மனிதனை எரிப்பதர்க்கோ புதைப்பதர்க்கோ புதிய மயானங்கள் போன்ற வற்றை எப்படி உருவாக்குவது?


 பலருக்கு பயன் படக் கூடிய செயலுக்காக சில சுயநல தேவைகளை இழக்கத்தான் வேண்டும் என்பது பொது விதி

 இது ஒரு யோகா குருவிற்க்கு தெரியாத சங்கதி என்பதை ஏற்று கொள்ள இயலாது

 ராம்தேவ் அவர்களை சூழ்ந்திருக்கும் பண்படாத கூட்டத்தார் எடுத்த கண்மூடித் தனமான கருத்தாக்கமாகவே எண்ண தோன்றுகிறது

 ஒரு நாட்டில் பொருளாதார வளர்ச்சி அதிகப்படும் போது பண புழக்கம் என்பது நிறைய இருக்கும்

 அந்த சூழலில் உயர் மதிப்பில் உள்ள கரன்சிகள் தவிர்க்க முடியாததாகும்

 இதை ராம்தேவ் புரிந்து கொள்ளாதது ஏன் என்று தெரிய வில்லை


   பலருக்கு வழிக் காட்டக் கூடிய பீடத்தில் இருப்பவர்கள் முதலில் அறிவு பூர்வமாகவும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் சிந்திக்க வேண்டும்

 உணர்ச்சி பூர்வமாக சிந்தித்தால் நிரந்தர தீர்வுகள் விபரீத பாதையிலே போகும் என்பது வரலாற்று உண்மை

 இதில் ராம்தேவ் தீவிர கவனம் செலுத்தி இருந்தால் கோடிக்கணக்கான மக்களின் எண்ணங்களை பிரதிப்பலிப்பவராக வரலாற்று ஏடுகளில் பதிவு செய்ய பட்டிருப்பார்

 ஆனால் அவரது உணமையான ஆர்வம் பக்குவமின்மையால் கோமாளித் தனமாக போய் விட்டது

 ஆரம்பத்தில் வீராவேசமாக பேசிய ராம்தேவ் பெட்டிப் பாம்பாக அடங்கி போனதற்கு அரசாங்கம் அவரது வருவாய் பிரிவில் கைவைத்தது தான் காரணம் என்று விபரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்


நான் ராம்தேவ் அவர்கள் பணம் வாங்கி யோகா கற்பிப்பதயோ ஆயுர்வேத சிகிச்சை செய்வதையோ குறை சொல்ல வில்லை

 பொது ஜனங்களை விட்டுவிட்டு காட்டுக்கு சென்று தவம் செய்யும் துறவிகளுக்கு தான் பணம் தேவை இல்லை

 மக்கள் பணியை செய்பவர்களுக்கு கண்டிப்பாக பொருள் அவசியம்

 அருள் பிரகாச வள்ளார் கூட இன்று இருந்திருந்தால் அன்ன தானம் செய்ய பண தேவைக்கு எதாவது ஒரு வழியை பின் பற்றி இருப்பார்

 அதில் தவறு சொல்ல யாருக்கும் ஊரிமை இல்லை

 ஆனால் ஒரு பொது காரியத்தை செய்ய துணியும் எவரும் அதனால் ஏற்படும் எந்த விளைவையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்


  முன் வைத்த காலை அச்சத்தோடு பின் வைப்பது லச்சியவாதிக்கு அழகல்ல

 எனவே ராம்தேவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் வரவேற்க்க தக்கதாக தெரிந்தாலும் அறிவு பூர்வமானதாக தெரிய வில்லை

 இந்த விஷயத்தில் ராம்தேவை விட அன்னா ஹசாரே ஒரு படி முன் நிற்கிறார்

 பொது நன்மைக்காக பல போராட்டங்களை நடத்தி அனுபவம் பெற்றவர் அவர்

 இந்திய இராணுவத்தில் பணி புரிந்து பெற்ற அனுபவம் அவர் இதயத்தை இன்று வரை வீரம் செறிந்ததாக வைத்திருக்கிறது

 ஒரு மிகச்சிறிய வீட்டில் வாழ்ந்து வரும் அவர் சரத்பவார்,பால் தாக்கரே போன்ற அரசியல் ஜாம்பவான்களுக்கு தனது நேர்மையால் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் 


 சுவாமி விவேகானந்தரின் கர்ம யோக பாடத்தை தனது வாழ்க்கை பாதையாக கொண்டவர்

  சிற் சில குறைப்பாடுகள் இருந்தாலும் கூட தனது ஊழலுக்கு எதிரான போராட்ட கருத்துக்களில் வீரியம் குறையாதவராக இன்று வரை காணப் படுகிறார்

   அன்னா ஹசாரேயின் செயலால் அவர் மட்டுமே புகழை சம்பாதித்து விடுவாரோ என்ற எண்ணத்தால் தான் ராம்தேவ் போராட்டத்தில் குதித்தார் என்று எண்ண தோன்றுகிறது

   ராம்தேவின் செயல் பாடுகளால் ஹசாரேயின் போராட்டத்தின் முனை மழுங்கி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்

   இது அரசியல் வாதிகளின் முறையற்ற செயல்களுக்கு உந்து சக்தியாக இருக்குமே தவிர மக்களுக்கு நன்மை செய்வதாக இருக்காது

 எனவே இனி வரும் காலங்களில் ராம்தேவ் அவர்கள் நாலு விஷயத்தையும் தீவிரமாக ஆராய்ந்து செய்ய வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு

 இந்த எதிர்பார்ப்பை ராம்தேவ் நிறைவேற்றினால் கோடிக்கணக்கான ஏழை இந்தியர்களின் வாழ்வில் ஒளி பிறக்கும் Contact Form

Name

Email *

Message *