( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )30 ஞாயிறு ஜூன் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

நேற்று இந்தியா! இன்று...?

  ந்த உலகத்திலேயே சிறந்த பண்பாடு இந்திய பண்பாடு தான் என்ற பெருமிதம் எனக்கு எப்போதுமே உண்டு

 இது நான் இந்தியனாக பிறந்ததனாலோ இந்து வாக வாழ்வதினாலோ உருவானது அல்ல

 என் பண்பாட்டை அறிவு பூர்வமாக வாழ்க்கையின் அனுபவபூர்வமாக அறிந்து ஆராய்ந்து தெளிந்த பிறகு ஏற்பட்ட ஞானமாகும்

 மனிதன் தன வாழ்க்கையில் தாங்க முடியாத துயரம் வரும் போது மட்டுமே அடக்க முடியாமல் அழுகிறான் 


   நெஞ்சிக்குள் அடைத்து கொண்டிருக்கும் துக்கம் பீரிட்டு கிளம்பும் போது பக்க சூழலை எண்ணி பார்க்காது நம்மை வீரனாக நினைத்த மகன் அருகில் இருக்கலாம் அறிஞனாக நினைத்த மாணவன் பக்கத்தில் இருக்கலாம் அவற்றை எதையுமே கவனிக்காமல் பொருட்படுத்தாமல் குதித்து வரும் துயரம் நம்மை குலுங்க குலுங்க அழ வைத்து விடும்

அப்படி அழுகின்ற போது கூட அதற்கென்று ஒரு நெறியை இலக்கணத்தை வகுத்து கொண்டவன் இந்து

 தலையில் அடித்து கொண்டு அழுகிறான் என்றால் தான் செய்த தவறால் ஏற்றப்பட்ட துயரத்துக்காக என்று அர்த்தம்

நெஞ்சில் அறைந்து கொண்டு கதறுகின்றான் என்றால் நெஞ்சோடு வளர்ந்த பாச உறவை பறிகொடுத்து விட்டான் என்று அர்த்தம்

 வயிற்றில் அடித்து கொண்டு அழுது புரளுகிறான் என்றால் வயிற்ருக்குள் இருந்து வெளிவந்த வாரிசுக்கு ஏற்றப்பட்ட துயரத்திற்கு என்று அர்த்தம்


 இப்படி அழுகைக்குள்ளேயே ஆயிரம் தத்துவங்களை புதைத்து வைத்த இந்தியன் தனது வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் அமைதியான மன நிலையை தக்க வைத்து கொள்ளவே சில சடங்குகளை உருவாக்கி இருக்கிறான் என்பதை அறியும் போது இவ்வளவு பெரிய மேதாவிகளின் வாரிசுகளா நாம் என்ற வியப்பு ஏற்படுகிறது

 சூரியன் மறைய துவங்கும் மாலை நேரம் வந்தவுடன் வாசலை பெருக்கு தண்ணீர் தெளி கோலம் போடு வீட்டு ஜன்னல் கதவுகளை வாசல்களை திறந்து வை என்றான்

அப்படி செய்தால் நிரந்தரமாக மகாலட்சுமி உனது வீட்டில் வாசம் செய்வாள் என்றான்

 இதற்கு என்ன அர்த்தம் மாலை நேரத்தில் வீசுகின்ற காற்று தேற்கு திசையில் இருந்து வரும்

 அதனால் தான் அதற்கு தென்றல் காற்று என்று பெயர் வடக்கே இருந்து வீசினால் அது வாடை காற்று


 வாடை காற்று உடம்புக்கு ஆகாது சீதளத்தை ஏற்படுத்தும்

தென்றல் காற்று அப்படி அல்ல உடலில் பட்டவுடன் சரிரத்தை சிலிர்ப்படைய செய்யும்

 கொந்தளிக்கும் மனதை நிதான படுத்தி சாந்தம் ஆக்கும்

 ரத்த கொதிப்பை பட படப்பை மயக்கத்தை தெளிவிக்கும் ஆரோக்கியம் தரும்

 அந்த தென்றல் காற்று மாலை நேரத்தில் வீடு முழுவதும் வீசினால் இரவு நேர உறக்கம் நிம்மதியாக இருக்கும்

 பல நோய்களுக்கு மருந்தே உறக்கம் அல்லவா?

 உடம்பு ஆரோக்கியமாக இருந்தால் உழைப்பதற்கு சலிப்பு ஏற்படாது சலிப்பில்லாத உழைப்பு வீட்டில் செல்வத்தை குவிக்காமல் வேறன்ன செய்யும்?


 வாசல் கதவை திறந்து வைப்பதற்கே இத்தனை அறிவியல் காரணங்கள் உண்டென கண்டறிந்த என் இந்திய முப்பாட்டன் ஆயிரம் நோபல் பரிசு வாங்க தகுதி வாய்ந்தவன்

காலையில் கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றால் கைகளை தட்டி சத்தம் செய்த பிறகு நீரெடு என என் பாட்டி சொல்வாள்

 காரணம் ஏன் என கேட்டால் வருண பகவான் உறங்கும் பொழுது நீர் இறைத்தால் அது திருட்டுக்கு சமம் என விளக்கம் சொல்வாள்

 அப்படி செய்வது திருடு மட்டும் அல்ல கொலையாகவும் முடியும் என்பது ஆராய்ந்தால் புரியும்

 இரவு நேரம் உலகம் மட்டும் அல்ல நீரும் அமைதியாக இருக்கும்


 தண்ணீர்ல் வாழும் தவளைகள் நீர் பாம்புகள் மீன்கள் இறைத்தேட நீருக்கு மேல் மேய்ந்து கொண்டு இருக்கலாம்

 அந்த நேரம் நீர் எடுக்க வாளியை கிணற்றுக்குள் போட்டால் அவைகளுக்கு இடைஞ்சல் ஏற்படும் சில நேரம் அவைகள் காயம் பட்டு இறக்கவும் செய்யலாம்

 அதை தவிர்க்கவே பாட்டி கைகளை தட்டி தண்ணீர் எடு என சொல்லியிருக்கிறாள்

 இப்படி எத்தனையோ விஷயங்களுக்குள் ஆழமான உண்மைகள் மறைந்து கிடக்கின்றன

 அவைகளை தெரிந்தோ தெரியாமலோ கடைப்பிடித்து நேற்றுவரை நன்றாக வாழ்ந்தோம்

 இன்றோ அவைகளை நாகரிகம் என்ற பெயரில் ஐரோப்பிய பண்பாட்டிற்கு பலி கொடுத்து விட்டு வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் தவிக்கிறோம்+ comments + 16 comments

08:44

"தலையில் அடித்து கொண்டு அழுகிறான் என்றால் தான் செய்த தவறால் ஏற்றப்பட்ட துயரத்துக்காக என்று அர்த்தம்

நெஞ்சில் அறைந்து கொண்டு கதறுகின்றான் என்றால் நெஞ்சோடு வளர்ந்த பாச உறவை பறிகொடுத்து விட்டான் என்று அர்த்தம்

வயிற்றில் அடித்து கொண்டு அழுது புரளுகிறான் என்றால் வயிற்ருக்குள் இருந்து வெளிவந்த வாரிசுக்கு ஏற்றப்பட்ட துயரத்திற்கு என்று அர்த்தம்
இப்படி அழுகைக்குள்ளேயே ஆயிரம் தத்துவங்களை புதைத்து வைத்த இந்தியன்"

அருமையான பதிவு குருஜி
அழுகையின் அழகியல் என்றுதான் கூறவேண்டும்
இது நமது கலாச்சாரத்தில் மட்டுமே உள்ள சிறப்பு அம்சம்
இதை நாம் சிறிது சிறிதாக தொலைத்துக் கொண்டிருக்கிறோம்

நமது பண்பாடு யாருக்கும் கிடைதிரா பொக்கிஷம்..

இதை அறியாமல் நாம் அயல் நாட்டரின் மோகத்தில் சிக்கி திகைக்கிறோம்..

Manik
11:15

முந்தைய காலத்தில் இருந்த பண்பாடு இப்பொழுது முற்றிலும் மாறுபட்டு அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது

கோவணம் கட்டித் திரிந்த நாம் இன்று கோட்டும் சூட்டும் போட்டு திரிகிறோம்!!

மாட்டு வண்டியில் பயணம் செய்த நாம் இன்று மாருதியில் போகிறோம்!!

ஆல மரத்து அடியில் பூசாரி வேப்பிலையால் அடித்து பார்த்த வைத்தியத்தை விட்டுவிட்டு இப்போது நாம் எக்ஸ்ரே - ஸ்கேன் - ஊசி என்று மாறி விட்டோம்!!

விடிய விடிய கை வலிக்காமல்(!!) விசிறிக் கொண்டு தூங்கிய நாம் இப்போது ஜில்லென்று ஏ.சி. அறையில் படுத்து தூங்குகிறோம்!!

ஈர விறகுக் கட்டையை புஷ்... புஷ்... என்று வாய் வலிக்காமல்(!!) ஊதி சமைத்த நாம், இப்போது "சடக்"கென்று கேஸ் அடுப்பை பற்ற வைத்து சமைக்கிறோம்!!

சரக்... சரக்...கென்று மணிக்கணக்காக அம்மியில் அரைத்த நாம், இப்பொது சில நொடிகளில் மிக்சியில் அரைத்து எடுக்கிறோம்!!

தோல் பட்டை வலிக்காமல்(!!) மாங்கு... மாங்கு என்று கிணற்றில் தண்ணி இரைத்த நாம் இப்போது பம்பு செட்டில் சட்டென்று ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணான லிட்டர் தண்ணி எடுத்து விடுகிறோம்!!

ஒரு காட்சியை மணிக்கணக்காக - நாள் முழுவதும் சித்திரம் வரைந்து வந்த நாம், இப்போது மொபைல் போனில் டிஜிடல் கேமராவில் நொடியில் படம் பிடித்து விடுகிறோம்!!

ச்சே... நாகரிகம் என்ற பெயரில் ஐரோப்பிய பண்பாட்டிற்கு பலி கொடுத்து விட்டு வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் தவிக்கிறோம்!!

Anonymous
13:49

JOHN KUMAR முட்டாளே, கோட்டும் சூட்டும்,மாருதி,மிக்சி,ஜில்லென்று ஏ.சி.,பம்பு செட். இவை எல்லாம் உடம்புக்கு நோய் தான் கொடுக்கிறது .கடைசியல் உடம்பு நோய்களின் கூடையாக மாறிவிடுகிறது

வணக்கம் குருஜி
~*~வாசல் கதவை திறந்து வைப்பதற்கே இத்தனை அறிவியல் காரணங்கள் உண்டென கண்டறிந்த என் இந்திய முப்பாட்டன் ஆயிரம் நோபல் பரிசு வாங்க தகுதி வாய்ந்தவன்.~*~

மிக அருமையான பதிவு, தெளிவான விளக்கம்
நன்றி குருஜி.

மிக அருமையான பதிவு.
நன்றி குருஜி.

Wonderful. Jai Hind.

Anonymous
22:40

http://crossmuslims.blogspot.com/p/table-of-contents_22.html

Anonymous
06:28

அருமை. தாங்கள் வெள்ளைக்காரன் கண்டுபிடித்த கண் கண்ணாடியை கழற்றி விட்டு, எல்லா இடத்துக்கும் மாட்டு வண்டியிலேயே செல்லவும். இனி வெள்ளைக்காரன் கண்டு பிடித்த மின்சாரத்தையும், கம்ப்யூட்டர், இன்டர்நெட் போன்றவற்றை பயன் படுத்தாதீர். ப்ளாக் எழுதுவதையும் நிறுத்தி கொண்டு தமிழர் பண்பாட்டை காப்பாற்றவும்.

Anonymous
12:00

U told everything y didnt tell the other part of INDiAN cuture

1. The caste system that spoils the country still now...

2. Gender Bias

Tell thse tooo. Can u eat ur culture.. more than 50% of INDIANS dont have food to.. Now u r praising ur CULTURE...

Your CULTURE shud be praised by others not by ur self..

ஒரு அறிவியல் கண்டுபிடிப்ப கிடையாது இவனுங்களுக்கு நோபெல் பரிசு சும்மா பெருமை பேசாம உக்காந்து யோசிங்கள இந்த குர்சி மாதிரி பிளைபுகஹா சிலர் எதாவது உளறின உடனே வந்துரனும இதெல்லாம் ஒருபோலப்பு உலஹதுல உள்ள எல்லா லூசுஹளும் இந்த போல்குல தன இர்ருகுங்க .....

Anonymous
21:02

what ever given speech, very good and i appreciate u, we are the inventor of zero '0' we teach the world , how to count. but one thing u must remember dear, all our super power people were hide there specialty to one minority coast "Brahman". you people hide every thing because of Buddhist people competition. they also really mankind people. due to this meaning less war between these two minority people all other Indian speciality vanished.

Do u aggree or not could u explain pls if u can,

thanks
present culture indian (we know as an Indian what is our power)

Anonymous
21:14

என் அம்மா நல்லவள் என்று சொல்வது வேறு; மற்ற அம்மாக்கள் மோசமானவர்கள் என்று சொல்வது வேறு. நீங்களும் உங்களை போன்ற மதம் தலைக்கு ஏறியவர்களும் இதைத்தான் செய்கிறீர்கள். மற்றவர்களின் பண்பாட்டை கேவலமாக பேசுவதுதான் இந்திய பண்பாடோ?

At times, I wonder if we are trying to give some plausible meanings to earlier sayings to reinforce our belief in the old systems. Like in the case of 'Pariseshanam' before eating food, some one said that the water is used to ensure no insects or ants come near the food that we eat. Sounds logical, though. Are these clever interpretations or our forefathers meant that way? I'm not sure.

oru ariciyal kandupidippu kedayatha? pls, don't talk sillyly...siddha medicine and ayurveda are muxh more better than alopathy..and, during the world wars, the formulas for war aircrafts were been taken from Vedas...and, without polluating nature and environment, our ancestors have travelled so far...u r just crazy about westernization, u will even say they r gods...
man, just think if u say ur grandpa is stupid, u too are stupid! so, pls think..


Next Post Next Post Home
 
Back to Top