( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...?

   டவுள் சிலைகளுக்கு நகைகள் போடுவதும், பட்டாடை அணிவிப்பதும் வீண் ஆடம்பரம் அல்லவா?

 அந்த செலவிற்கு பசியால் வருந்தும் ஏழைகளுக்கும் முதியோர்களுக்கும் உதவலாம் அல்லவா என்று தோன்றும்

 அது சரியான சிந்தனை தான் ஆனால் இறைவனுக்கு காணிக்கை செலுத்துவதில் வேறொரு காரணமும் உண்டு

தாய் தந்தையர் இடத்திலும் மனைவி மக்கள் இடத்திலும் நாம் அன்பு காட்டுவது எதற்காக?


  உண்மையில் ஆழமாக சிந்தித்தால் அந்த அன்பில் அவர்களின் நலம் இருப்பதை விட நமது சுயநலமே அதிகமாக இருப்பதை உணரலாம்.

   பெற்றவர்களுக்கு சோறு போடாதவன் இவன்

 பெண்டாட்டி பிள்ளைகளை பாதுகாக்காதவன் இவன்  என ஊரார் நம்மை பார்த்து ஏசாமல் இருப்பதற்கும்

 ஆயிரம் கஷ்டம் வந்தாலும் சொந்த பந்தங்களை கைவிடாமல் பாதுகாக்கிறான் பார் என மற்றவர்கள் புகழ்வதை ஏற்பதற்கும் தான் நாம் அன்பு செலுத்துகிறோம்.

 அல்லது எனது பாசத்திற்கு உரியவர்கள் கஷ்டப்பட்டால் என் மனம் தாங்க முடியாத வேதனையை தருகிறது


 அவர்களை விட்டு விட்டு நான் மட்டும் அனுபவிக்கும் சுகம் நிமிர்ந்து பார்க்க முடியாத குற்ற உணர்வை தருகிறது

 அல்லது அவர்கள் நம் மீது காட்டும் அன்போ நாம் அவர்கள் மீது காட்டும் அன்போ நமக்கு சந்தோசத்தை தருகிறது .

  மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும் இன்பமாக வாழ்வதற்கு என்ன வழி என தேடுவதிலேயே காலத்தை கழிக்கிறான். 

  தத்தி தத்தி நடந்து வரும் பச்சை குழந்தைக்கு பட்டாடை அணிவித்து பார்ப்பதில் எனக்கு சந்தோஷம்

  சந்திரன் போல் பிரகாசிக்கும் அழகான மனைவியின் முகம் இன்னும் மலர வேண்டும் என்பதில் எனக்கு சந்தோஷம்,

  தள்ளாடி நடக்கும் தகப்பனாரின் தோள்களை அரவனைத்து நடப்பதில் எனக்கு சந்தோஷம்.


   கடன் சுமையில் மூச்சு விட முடியாமல் தத்தளிக்கும் நண்பனின் துக்கத்தை போக்குவது எனக்கு சந்தோஷம். 

   இப்படியெல்லாமே என் சந்தோஷத்திற்காக தான் எனது செயல்பாடுகள் அமைகின்றன.

  மனித மனம் எல்லா நேரங்களிலும் தன்னை மட்டுமே பிரதானமாக கொண்டு சிந்தனை செய்கிறது.

  இறைவழிபாட்டிலும் கடவுளுக்கு நகை போடுவதிலும் ஆடை அணிவிப்பதிலும் நமது இன்பமே மேலோங்கி நிற்கிறது. 

  கண்ணாடியில் நமது முகத்தை பார்க்கிறோம்.  பொட்டு இல்லாத நெற்றி மொட்டையாக தெரிகிறது.

 அதனால் கண்ணாடிக்கு யாராவது பொட்டு வைப்பார்களா?

  பிம்பத்தின் அவலட்சணம் என்பதும் அழகு என்பதும் நம்மை சார்ந்ததாகவே இருக்கிறது.

 நான் முட்டாள்கள் இடத்திலும், வறியவர்கள் இடத்திலும், நோயாளிகள் இடத்திலும் வாழ விரும்பவில்லை.


 இதனால் அறியாமை விலக நோய் அகல வளமை வளர உழைக்க ஆரம்பிக்கிறேன்.

 இது தான் சமூக சேவையின் அடிப்படை மனோதத்துவம்

 வெங்கடாஜலபதிக்கு போட்ட வைர மாலையும், மீனாட்சி அம்மனுக்கு சாத்திய பட்டாடையும் பார்க்கும் எனக்கு மட்டும் இன்பம் தரவில்லை.  பார்ப்பவர் அனைவருக்குமே தருகிறது.

  மற்றவர்களுக்கு தொல்லை தராத சந்தோஷமே என் சந்தோஷம் என்பதினால் அபிஷேகம் செய்வதிலும் கோடி தீபாரதனை நடத்துவதிலும் என் மனதை மகிழ செய்கிறது என்பது மட்டுமல்ல கொடுக்கும் சுகத்தை இன்னதென எனக்கு காட்டி வளப்படுத்துகிறது.

  அதனால் தெய்வங்களுக்கு கொடுக்கப்படும் நகையும் பட்டும் பரோபகாரத்தின் அன்பின்  வெளிப்பாடேயாகும்.+ comments + 28 comments

உண்மையே.. ஆனாலும் நம் சித்தர்கள்
”படமாடக் கோவில் பரமர்க்கொன்றீயின்
நடமாடக் கோவில் நம்பர்க் கங்காகா..
நடமாடக் கோவில் நம்பர்க்கொன்றீயின்
படமாடக் கோவில் பரமர்க்கங்காமே...” சொல்லிவைத்திருக்கிறார்கள். இதுவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

Anonymous
09:14

நமக்கு அனுக்ரஹம் செய்வான் தெய்வங்களுக்கு கொடுக்கப்படும் நகையும் பட்டும் பரோபகாரத்தின் அன்பின் வெளிப்பாடேயாகும்.
பகவானுக்கும் பசிக்கும். குளிரும். திருஷ்டி படும். சளி பிடிக்கும்.
அதாவது... பகவானுக்கு பசிக்கும். அவன் சாப்பிட்டால்தானே நமக்கு அனுக்ரஹம் செய்வான்.

எனவே, அவனுக்கு, அவளுக்கு (தெய்வங்களுக்கு) தினமும் முறையாக நைவேத்யம் படைக்கவேண்டும் என்றார்கள்.
பிராமணர்கள். அதன் பிறகு சிலைக்கு நைவேத்யம் வழங்கும் வழக்கம் வருகிறது.

அதாவது ஆகமத்துக்கு அப்பாற்பட்ட தேவதைகளையும் பூஜிக்கத் தொடங்கிய பிராமணர்கள் நைவேத்யத்தை கட்டாயமாக்கினார்கள்.

இங்கே ஒரு முக்கியமான விஷயம்... தினமும் பகவானுக்கு வழக்கமாகப்படைக்கும் நிவேதனம் வேறு. விசேஷ காலங்களில் ஒவ்வொரு விசேஷத்துக்கும் ஒவ்வொரு வகை நைவேத்யம்.

பெருமாள் கோயில்களில் சொல்கிறேன் கேளுங்கள். காலையில் தினமும் நடக்கும் காலசந்தி என்ற பூஜைக்கு தயிர்ச்சாதம், மதியம் உச்சிகாலம் எனப்படும் பூஜைக்கு சாதம், குழம்பு, கூட்டு, பொரியல், இத்யாதிகள். இதற்குப் பெயர் அலங்காரத்தளிகை.

அதாவது நாம் சாப்பிடும் மதியச்சாப்பாட்டை பகவான் சாப்பிட்டால் அதற்குப் பெயர் அலங்கார தளிகை. பெருமாள் வெளியே வாகனங்களில் சுற்றி விட்டு கோயில் திரும்புவார் என்று சொன்னேன் இல்லையா?

அப்போது ஊரெல்லாம் திருஷ்டி போட்டிருக்கும் என கருதப்பட்டு... பெருமாளுக்கு திருஷ்டி கழிப்பதற்காக ‘திருவந்தி காப்பு’ என்றொரு விசேஷம்.

இதில் பால், பழம், பயத்தம்பருப்பை ஊற வைத்து செய்த வடைப் பருப்பு, தோசை எல்லாம் நைவேத்யம் செய்து திருஷ்டி கழிப்பார்கள்.

பகவானுக்கு குளிரும் அதனால் குளிர்காலத்தில் கம்பளி ஆடை. கடவுள் சிலைகளுக்கு கம்பளி ஆடை

பூரி, டிச.15- ஒரிசா மாநிலம் பூரி நகரில் தற்போது கடுமையான குளிர் வாட்டுகிறது. இதைத்தொடர்ந்து அங்குள்ள ஜெகநாதர் ஆலயத்தில் உள்ள ஜெகநாதர், பால பத்ரா, தேவி சுபத்ரா ஆகிய சாமி சிலைகளுக்கு மாலை நேரத்தில் கம்பளி ஆடைகளை கோவில் நிர்வாகத்தினர் அணிவிக்கிறார்கள்.

அதைத்தவிர, ஒவ்வொரு நாளும் சுவாமி சிலைகளுக்கு ஒவ்வொரு நிறத்தில் ஆடைகள் அணிவிக்கிறார்கள். அந்தந்த நாளுக்கு உரிய நட்சத்திர பலனுக்கு ஏற்ப இந்த வண்ண ஆடைகள் தேர்ந்து எடுக்கப்படுகின்றன.

உதாரணமாக புதன் கிழமை நீல நிறத்திலும், வியாழக்கிழமை மஞ்சள் நிறத்திலும், வெள்ளிக்கிழமை வெள்ளை நிறத்திலும், சனிக்கிழமை கறுப்பு நிறத்திலும் கம்பளி ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன.

கடவுள் சிலைகளுக்கு வண்ண கம்பளி ஆடைகளை அணிவிப்பதால், பக்தர்களும் அதே வண்ணத்தில் ஆடைகளை அணிந்து கோவிலுக்கு செல்ல தொடங்கி விட்டனர்.----
...........
கல் சிலைக்கும் சளி பிடிக்குமா?
குற்றால ``சீசன்’ என்பதால் குற்றால நாதனுக்கும் அதன் சகதர்மிணி செண்பகக் குழல்வாய் மொழி அம்மைக்கும் தினமும் சுக்குக்காப்பி நைவேத்யம் செய்கிறார்கள், ஏன் தெரியுமா?

இவர்கள் இருவரின் தலையிலும் எந்நேரமும் தண்ணீர் கொட்டிக் கொண்டேயிருப்பதால் சளி பிடித்துக் கொள்ளாமல் தடுக்கவே சுக்குக் காப்பியாம்!

கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு எப்படி உருவத்தை உண்டாக்கினான்?

கருணையே வடிவானவர் என்கிறான். அவன் கையில் ஏன் சூலாயுதம்? வேலாயுதம்? அரிவாள், மண்வெட்டி, கோடாரிகள் எல்லாம்?

இவை எல்லாம் கருணையின் சின்னங்களா?

கொலைகாரப் பசங்களுக்கு இருக்க வேண்டிய கருவிகள் எல்லாம் கடவுளுக்கு எதற்கு?

கடவுளுக்கு ஒழுக்கத்தையாவது நல்ல முறையில் கற்பித்து இருக்கிறானா?

எந்தக் கடவுள் இன்னொருத்தனுடைய மனைவியை கெடுக்காமல் இருந்திருக்கிறான்?

விபச்சாரம் செய்யாத கடவுள் ஒன்றாவது உண்டா?
இருந்தால் சொல்லட்டுமே, ஏற்றுக் கொள்கிறேன்.

கடவுள் பிறப்பைப் பற்றி தான் எழுதி வைத்து இருக்கிறானே கொஞ்சமாவது யோக்கியம் வேண்டாமா?

விநாயகன் பிறப்பு எவ்வளவு ஆபாசமானது!

சொந்தப்பெயரில் எழுத முடியாமல் ஒளித்து விளையாடும் கயவனே .உன் எழுத்தில்
உன் குடும்பத்தின் பிறப்பு வளர்ப்பை அறியமுடிகிறது .நீ உன் அம்மாவைப்பற்றி எழுது ,
உன் அக்கா ,தங்கையப்பற்றி எழுது, அல்லது உன் மனைவி மகளைப்பற்றி எழுது .
மகனே நீ மட்டும் கையிலே மாட்டினே ............எங்களின் மனதை நோகடித்து என்ன
பயனை உன்னால் அடைய முடியும் .நீ நிட்சயமாக ஒரு இந்துவாக இருக்கவே முடியாது
உன்னை மாதிரி என்னாலும் மற்றைய மதங்களை விமர்சிக்கமுடியும் என்பதை மறந்து
விடாதே .நீ உண்மை நேர்மை தைரியம் உள்ளவனாக இருந்தால் சொந்தப்பெயரில்
வா .பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு என்பதை மறந்துவிடாதே .
தயவு செய்து குருஜி ஐயா மன்னிக்கவும்

Anonymous
10:35

இந்து மதம் சுதந்திரமான மதம்.இது எந்த நூலையும், எந்தக் கடவுளையும் மக்களிடம் வழிய திணிக்கவில்லை..

எத்தனையோ மேலை நாட்டு அறிவியல் விஞ்ஞானிகளும், அறிஞர்களும் "இந்துமத மேன்மைகளை" க் கூறியதைப் படித்தும் ஏற்காத உங்கள் பகுத்தறிவு ,தன் பெயரைக் கூட சொல்ல முடியாத உங்கள் பகுத்தறிவு, நான் கூறியா ஏற்கப் போகிறது???

ஒரு கடவுள் பெயர் கூடத் தமிழ்ப் பெயரே கிடையாது. இங்கு இருக்கிற கடவுள்களின் பெயர்கள் எல்லாம் வடமொழிச் சொற்கள்தான்.

கடவுள் என்ற சொல்லே தமிழில் கிடையாது. தமிழனுக்குக் கடவுளே இல்லை. இன்றைக்கும் தமிழ்ச் சொல்லில் உள்ள ஒரு கடவுளும் கிடையாது.

கதைகள் எழுதி, புராணங்கள் எழுதி, பார்ப்பான் வயிறு வளர்க்க ஆரம்பித்து விட்டான்.

அதை அப்படியே தமிழன் நம்பி ஏற்றுக் கொண்டு விட்டான்.அப்படி ஏற்றுக் கொண்ட கடவுள்களில் ஒன்றுதான் இந்த விநாயகன். விநாயகன் என்ற சொல்லே தமிழ் கிடையாது.

கடவுளுக்கு நாட்டில் என்ன பொதுவாக இலக்கணம் சொல்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாது - கைக்குச் சிக்காது புத்திக்கும் எட்டாது என்கிறான். அப்படியானால் எப்படிக் கடவுளை நம்புவது என்று கேட்டால், நம்பு என்கிறான்

அதற்கு உடை என்னடா என்றால் புலித்தோல் என்றான். தலை எல்லாம் சடை. காது எல்லாம் பெரிய ஓட்டை. நகைகள் எல்லாம் பாம்புகள்.

குடி இருக்கிற இடமோ சுடுகாடு. கையில் இருக்கிற கருவிகளோ மண்டை ஓடுகள். இவை எல்லாம் மனிதனுக்கு இருக்கக் கூடிய யோக்கியதையா?

இவை எல்லாம் காட்டுமிராண்டித்தனமான சின்னங்கள் அல்லவா?

கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு எப்படி உருவத்தை உண்டாக்கினான்?

கொலைகாரனிடமிருக்க வேண்டிய ஆயுதங்கள் கடவுளுக்கு எதற்கு?
கருணையே வடிவானவர் என்கிறான். அவன் கையில் ஏன் சூலாயுதம்? வேலாயுதம்? அரிவாள், மண்வெட்டி, கோடாரிகள் எல்லாம்?

இவை எல்லாம் கருணையின் சின்னங்களா?

கொலைகாரப் பசங்களுக்கு இருக்க வேண்டிய கருவிகள் எல்லாம் கடவுளுக்கு எதற்கு?

கடவுளுக்கு ஒழுக்கத்தையாவது நல்ல முறையில் கற்பித்து இருக்கிறானா?

எந்தக் கடவுள் இன்னொருத்தனுடைய மனைவியை கெடுக்காமல் இருந்திருக்கிறான்?

விபச்சாரம் செய்யாத கடவுள் ஒன்றாவது உண்டா?
இருந்தால் சொல்லட்டுமே, ஏற்றுக் கொள்கிறேன்.

கடவுள் பிறப்பைப் பற்றி தான் எழுதி வைத்து இருக்கிறானே கொஞ்சமாவது யோக்கியம் வேண்டாமா?

விநாயகன் பிறப்பு எவ்வளவு ஆபாசமானது!

இன்றைக்கு நாம் சூத்திரர்களாக இருக்கிறோம் என்றால், அது பார்ப்பானால் மட்டுமல்ல - நாமே அதை ஒத்துக் கொண்டு இருக்கிறோம்.

பார்ப்பான் நம்மைச் சூத்திரன் என்று சொல்லப் பயந்து விட்டான். ஆனால், நாமே நாம் இந்து என்று ஒப்புக் கொண்டு, கோயில்களுக்குச் செல்வதன் மூலமாகவும், நெற்றியில் சாம்பலைப் பூசிக் கொள்வதன் மூலமாகவும் சூத்திரன் என்பதை ஏற்றுக் கொண்டு இருக்கிறோம்.

நம்மை இழி மகன் என்று முத்திரைக் குத்திக் கொள்ளவா?

தமிழ்செல்வன் (முந்தைய பெயர் தர்மலிங்கம்.)

Anonymous
11:21

@தமிழ்செல்வன் (முந்தைய பெயர் தர்மலிங்கம்.) இப்ப நீ எந்த மதத்துகாரன். கிறித்துவனா?

ஒருவனுக்கு ஒருத்தி என்று மூளைச்சலவை செய்கிறான்கள். ஆனால், பாப்பான்கள் மட்டும் நான்கு மனைவிகள் கட்டிக் கொள்ளலாம் என்று எழுதி வைத்து இருக்கிறான்களே! அவன் மட்டும் வயகரா பார்டியா?

தசரதனுக்கு 60,000 மனைவிகள். அடேங்கப்பா! இவன்தான் வயகரா பேக்டரி ஓனரா?? ஒரு நாளைக்கு ஒருத்தியோட படுத்தாலும், அடுத்த ரவுண்டுக்கு அவள் மீண்டும் வருவதற்கு 160 ஆண்டுகள் ஆகுமே!

சாமிக்கு பட்டு உடுத்தினாலும் பரவாயில்லை. சாராயமே அல்லவா ஊற்றுகிறான்கள். எப்போதும் மப்பில் இருக்கும் டாஸ்மாக் பார்ட்டி எல்லாம் எப்படி கடவுளாக இருக்க முடியும்? அவன் போதையை தெளிய வைப்பதற்கே நாலு நாள் எடுக்குமே?

Anonymous
19:01

உண்மையை யார் வேண்டுமானாலும், பெயர் கூறியோ அல்லது பெயர் கூறாமலோ சொல்லலாம். யாருக்காவது இந்த நம்பிக்கைகளில் அருவருப்போ ஆபாசமோ இருப்பதாக எண்ணினால், எப்படி நண்பர் தனது முந்தைய பெயர் தர்மலிங்கம்.என்கிற அசிங்கமான பெயரை தமிழ்செல்வன் என்று அழகாக மாற்றி அமைத்து கொண்டு இந்து பிராமண மதத்தை விட்டு வெளியேறி சுய மரியாதையுடன் வாழ்கிறாரோ அது போலவே செய்யலாமே.

கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் அம்மா,தங்கை என்று பேசுவதன் மூலமே இந்து மதம் எந்த அளவு மூடத்தனம், கயமை, நாகரீகமின்மை இவற்றை போதிக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

அன்புடன் தமிழ்நேசன்

Anonymous
19:11

இந்து மதம் என்பது பிராமண மதம். பிராமணர்கள் இந்தியர்கள் இல்லை.

இந்தியர்கள் இல்லாதவர்களின் மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை!

இந்துக்களின் நாடு, இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில் இருக்கின்றது? எந்த புராணத்தில் இருக்கின்றது? எந்த சட்டத்தில் இருக்கின்றது?

முதலில் இந்து என்ற மதம் உண்டா?

இந்தக் கேள்விக்கு காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேரேந்திர சரஸ்வதி அவர்கள் எழுதிய தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தில் 125,126 ஆகிய பக்கங்களில் என்ன கூறியிருக்கின்றார் என்றால்,

இந்து என்பது நமது பூர்வீகப் பெயரல்ல. வைதீக மதம், சனாதன மதம், என்றெல்லாம் சொல்கிறோமே அவைதான் பெயரா என்றால் அதுவுமில்லை.

நமது ஆதார நூல்களைப் பார்க்கும் போது இந்த மதத்திற்கு எந்தப் பெயருமே குறிப்பிடப்படவில்லை.

இந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று சங்கராச்சாரியே சொல்லிவிட்டார்.

சங்கராச்சாரியைப் போலவே இந்துமதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று உயர்நீதிமன்ற தீர்ப்பே இருக்கின்றது.

சென்னை உயர்நீதி மன்றத்தில் மைக்கேல் X எதிர் வெங்கடேஸ்வரன் (65 லிகீ 108) என்ற வழக்கில் நீதிபதி பி.வி. ராஜமன்னார் ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கின்றார்.

அந்தத் தீர்ப்பில், இந்து மதம் என்று (நான்) குறிப்பிடும்போது அச்சொல்லின் பொருள் தெளிவற்ற ஒன்றாக இருப்பதை உண்மையில் உணர்ந்தே இருக்கின்றேன்.

நாம் புரிந்துகொண்டுள்ள பொருளில் இந்து மதம் ஒரு மதமே அல்ல. அது (அச் சொல்) இந்தியாவில் தோன்றியதுமன்று.

இந்துக்கள் தங்கள் மதத்திற்கு அப்பெயரை எப்பொழுதும் பயன்படுத்தியதுமில்லை. ஆனால் அச்சொல் பயன்பாட்டில் நிலைத்துவிட்டது

19ஆம் நூற்றாண்டின் இந்துத் தலைவர்கள், குறிப்பாக ஆரிய சமாஜத்தினர் இச்சொல்லைப் பயன்படுத்தவில்லை.

இந்து என்ற வார்த்தை இந்திய வார்த்தை அல்ல, இந்து என்று ஒரு தனி மதம் இல்லவே இல்லை.

இந்து மதத்தின் முதன்மையாமான அம்சம் ஜாதி முறை. நான்கு வர்ணங்களை நான்தான் படைத்தேன் ஆனால் அவற்றை நான் நினைத்தால்கூட மாற்ற முடியாது என்று கீதையில் கண்ணன் சொல்கிறான.

இந்த நான்கு வருணங்களில் அதாவது பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர என்ற நான்கு வருணங்களில் உயர்வானவன் பிராமணன்.

மற்ற மூன்று வருணத்தாரும் அவனுக்குக் கீழானவர்கள். அவனுக்கு அடிமைத் தொழில் செய்பவர்கள் என்கிறது இந்து மதம், இதுதான் கீதை, இதுதான் மனுதர்ம சட்டம்.

இதுவரை இந்து மதத்தை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்களின் முடிவு கீதையும் மனுதர்ம சட்டமும் பிராமணர்களின் உயர்வுக்காகவே படைக்கப்பட்டவை; இந்து மதம் என்று சொல்லப்பட்டது கூட பிராமணர்களால் படைக்கப்பட்டது என்பதாகும்.

இந்திய வரலாற்றுப்படி இந்து மதத்தில் மிக உயர்வாகக் கருதப்படும் பிராமணர்கள் யார் என்றால், மத்திய ஆசியாவிலிருந்து கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். எல்லா வரலாற்று ஆசிரியர்களும் இக்கூற்றை ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

ஆக, நமக்கு அய்யம் வரக் காரணம் என்னவென்றால், இந்தியாவில் பிறக்காத, இந்திய நாடும் அல்லாத, நாடோடிகளாய் இந்தியாவிற்குப் பஞ்சம் பிழைக்க வந்த பிராமணர்கள், இந்தியாவில் உள்ள மதத்தில் எப்படி உயர்ந்தவர்களாக இருக்க முடியும்?

இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த மக்களை இழிவுபடுத்தி இந்தியர் அல்லாதவர்களை உயர்வு படுத்தும் ஒரு மதம் எப்படி இந்திய மதமாக இருக்க முடியும்?

அன்னியர்களுடைய மதம் இந்தியாவில் எப்படி பெரும்பான்மை மதமாக இருக்க முடியும்?

இந்து மதம் என்பது பிராமண மதம். பிராமணர்கள் இந்தியர்கள் இல்லை. இந்தியர்கள் இல்லாதவர்களின் மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை!

- TamilNesan

அன்பு உஜிலா!

இவ்வளவு மெத்தப்படித்த நீ, என்னென்னவோ பற்றி எழுதும் நீ, உண்மையிலேயே ஆண்மை உள்ள ஆண்பிள்ளையாக இருந்தால் ஹிந்துக்கள் திருமணம் செய்யும்போது சொல்லும் (உளரும்) அந்த சம்ஸ்கிருத அசிங்கத்தை இங்கே தமிழில் மொழி பெயர்த்து தர உன்னால் இயலுமா?

முடியாது... முடியவே முடியாது. மிஞ்சிப்போனால் இந்த எனது கருத்தை நீ நீக்குவாய். உனது அறிவும் அவ்வளவே, உனது ஆண்மையும் அவ்வளவே.

இனி நீ என் கண் முன் இருக்காதே! வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றினால், இந்த தளமே நாறி விடும்.

சொல்றதே சொல்லிட்டேன்... அதுக்கு மேல உன் விருப்பம்.

யார் அது புதிதாக தமிழ் நேசன் என்பவர்? அவருக்கு எமது வணக்கங்கள். கீழே இருக்கும் இந்த கட்டுரை மட்டும் படியுங்கள்.

ஒரே கட்டுரைதான். இன்னும் நெறைய உள்ளது என்னிடம். அதெல்லாம் பிறகு பார்க்கலாம.தமிழருக்கும் வேதங்களுக்கும் தொடர்பில்லை என்றும் தமிழர் வேதங்கள் வேறு என்றும் கூறப்படும் கோட்பாடுகளுக்கு எவ்வித அடிப்ப்டையும் இல்லை. இவை எல்லாம் ஆரிய படையெடுப்பு அல்லது ஆரிய திராவிட இனவாத அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆதாரமற்ற கட்டுமானங்கள் மட்டுமே. வேதங்களில் வரும் ஒரு பதமான ஆரிய என்பது எப்படி தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் நாம் காணலாம்.
திருமூலர் தமது திருமந்திரத்தில் ஆரிய எனும் பதத்தினை இறைவனையும் குருவையும் குறிக்க பல இடங்களில் பயன்படுத்துகிறார்: உதாரணமாக:
சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தஞ் சூழ்பஞ்சை சுட்டிடா
சூரிய சந்நிதி யிற்சுடு மாறுபோல்
ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே (திருமந்திரம் 1.118)
மாணிக்கவாசக சுவாமிகளின் திருவாசகம் சிவபுராணத்தில் சிவபெருமானை “பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே” என பாடுகிறார். திருப்பாண் ஆழ்வார் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர் ஆவார். ‘குலங்களாய ஈர் இரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்’ என அவர் தம்மையே தாழ்த்தி கூறுகிறார். ஆனால் அந்தணரான வேதாந்த தேசிகர், திருப்பாண் ஆழ்வாரை பின்வருமாறு வணங்கி துதிக்கிறார்:
“பாண்பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும்
பழமறையின் பொருள் என்று பரவுகின்றோம்
வேண் பெரிய விரிதிரைநீர் வையத்து உள்ளே
வேதாந்த ஆரியன் என்று இயம்ப நின்றோம்.”
ஆக, தாழ்த்தப்பட்ட குலத்தவரை வேதாந்த ஆரியன் என்றே அழைக்கிறார் வேதாந்த தேசிகர். அருட் பெருஞ் ஜோதி வடலூர் வள்ளலார் சுவாமிகளும் ஆரிய எனும் பதத்தினை தமது திருவருட்பா பாடலில் பயன்படுத்தியுள்ளார்.
ஆரிய லகம்புற மகப்புறம் புறம்புறம்
ஆரமு தெனக்கரு ளருட்பெருன் ஜோதி
சூரிய சந்திர ஜோதியுட் ஜோதியென்
றாரியர் புகழ்தரு அருட் பெருஞ் ஜோதி (திருவருட்பா 281-284)
இவ்வாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தமிழ்நாட்டின் ஆன்மிகப்பேராளர்களால் ஆரிய எனும் பதம் எவ்வித இனத்தொடர்பும் இல்லாமல் ஆன்மீக அருள் பெற்ற ஞானிகளையும் இறைவனையும் குறிக்கவே பயன்படுத்தப்பட்டதென காண்கிறோம். வேடுவர் குலத்துதித்த வான்மீகி மகரிஷி ‘அனைவரிடமும் அன்பு கொண்டு அனைவராலும் விரும்பப்படுபவனே ஆரியன்’ என கூறியுள்ளார் (பாலகாண்டம் 1/16). பகவான் புத்தர் தர்மபாதாவில் ‘உயிர்களுக்கு துன்பம் ஏற்படுத்தாதவனே ஆரியன் (தம்மபாதா 270) கூறியுள்ளார். இவை எல்லாம் 19 ஆம் நூற்றாண்டில் ஆரிய இனவாதம் புகுத்தப்படும் காலம் வரை ஆரிய எனும் பதம் பாரதம் முழுவதும் இனரீதியாக பயன்படுத்தப்படவில்லை என்பதற்கு சான்றாகும்.

ஆரிய படையெடுப்புக்கோட்பாட்டின் சின்ன சின்ன விஷயங்கள் கூட அகழ்வாராய்ச்சியில் அடிபட்டுப் போயிருக்கின்றன. உதாரணமாக, வேதங்களில் பார்லி குறித்து உள்ளது அரிசி குறித்து இல்லை. ஆனால் ஹரப்பா பண்பாட்டில் நெல் வயல்கள் உள்ளன. எனவே இரண்டும் வெவ்வேரு பண்பாடுகள் என கூறப்பட்டது. ஆனால் அண்மைக் காலத்தில் பலுசிஸ்தானின் மெஹர்கர்ஹ் (Mehrgarh) எனும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி பல குறிப்பிடத்தக்க பார்வை மாற்றங்களை அகழ்வாராய்ச்சியாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பண்பாட்டின் காலமானது கிமு 6500 என கணிக்கப்படுகிறது. பொதுவாக வரலாற்றாசிரியர்கள் புதிய கற்கால காலகட்டத்திற்கு பின்னரே பெரிய நகர நாகரிகங்கள் உருவானதாகக் கணிக்கின்றனர்.ஆனால் மெஹர்கர்ஹ் ஏறத்தாழ 500 ஏக்கர்கள் பரப்பளவில் மக்கள் வாழ்ந்ததைக் காட்டுகிறது. பண்டைய காலத்தில் மிகப்பெரிய மக்கள் கூட்டமாக பண்பாட்டுடன் வாழ்ந்த அரிதான இடங்களில் இதுவும் ஒன்று என இப்போது இவ்விடம் கணிக்கப்படுகிறது.
மேலும் இது சிறந்த கிராமப்புற நாகரிகமாக இருந்ததுடன் பிற்கால ஹரப்பா நகர நாகரிகத்துடன் தொடர்புடையதாக அமைகிறது. இவர்கள் அரிசியை அறிந்திருக்கவில்லை. இவர்கள் பார்லி பயிரிட்டனர். இந்த நாகரிகத்தின் பல அம்சங்கள் வேத இலக்கியத்துடன் ஒத்துப் போகின்றன. இந்நாகரிகத்தின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமே ஹரப்பா நாகரிகம் ஆகும். இந்நாகரிகத்தில் பிற்கால ஹரப்பா பண்பாட்டினையொத்த பெண் தெய்வ வழிபாடு இருந்ததுடன், பசுவும் புனிதமானதாகக் கருதப்பட்டதற்கான தடயங்களும் கிடைத்துள்ளன. ஆக, கிமு 6000 முதலே தொடர்ச்சியுடைய ஒரு பண்பாட்டின் சந்ததிகளாக நாம் இருந்து வருகிறோம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அகழ்வாராய்ச்சியாளர் பி.பி.லால் கூறுகிறார்:
“மெஹர்கர்ஹ் அகழ்வாராய்ச்சி எதைக் காட்டுகிறது என்றால் இந்தியப் பிரதேசத்தின் வட மேற்கு பகுதியில் விவசாய வாழ்க்கை கொண்ட புதிய கற்கால சமுதாயம் ஏறக்குறைய கிமு ஏழாயிரம் ஆண்டுகளிலேயே நிலையாக உருவாகிவிட்டது என்பதைத்தான். (பொதுவாக விவசாய குடியிருப்புக்கள் முதலில் உருவான பிரதேசமாகக் கருதப்படும்) மேற்காசியாவின் விவசாய குடியிருப்புகளிலிருந்து இவை பெருமளவு மாறுபடுகின்றன. ஆடுகளையும் கோதுமை பயிடுதலையும் முக்கியமாக கொண்ட குடியிருப்புக்கள் மேற்காசிய பிராந்தியத்தைச் சார்ந்தவை. மெஹர்கர்ஹ் பிரதேசத்திலோ பார்லியும் மாடுகளும் பிரதானமாக விளங்குகின்றன. ஆக, மேற்காசிய (விவசாயக் குடியிருப்புகளின்) உதயத்துடன் தொடர்பற்றது இந்த பண்பாடு. மட்டுமல்ல. இந்த மண்ணிற்கே உரிய மானுட பரிணாம உதயமாக மட்டுமே நாம் இதை காண முடியும். மேலும் இப்பண்பாட்டுக்கூறுகள் பின்னால் உருவான உலோகப்பயன்பாட்டு கலாச்சாரமாக வளருவதையும் – கிமு மூவாயிரம் ஆண்டுகளில் தெளிவாக ஹரப்பா நாகரிகமாக பரிணமிக்கும் சமுதாயத்தின் பல பரிணாம நிலைகளையும் இதனில் நாம் காண முடிகிறது. மேலும் இங்கு கண்டெடுக்கப்பட்ட எலும்புகளை விரிவாக ஆராய்ந்த ஹெம்பிஸ் மற்றும் அவரது துணை ஆய்வாளர்கள் கிமு 4500-கிமு 800 வரைக்குமான காலகட்டத்தில் உயிரியல் குழுமத்தொடர்ச்சியும் இதில் இருந்திருப்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.”
ஒரு வரியில் சொன்னால், ஆரிய இனவாதத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

சங்கத் தமிழரின் வேத பண்பாடு
இந்தத் தொடரின் தொடக்கத்தில் வேத வேள்விகள் குறித்து பரிபாடலிலும், புறநானூற்றிலும் சொல்லப்பட்டிருந்த இருபாடல்கள் சுட்டப்பட்டிருந்தன. பண்டைய தமிழகத்தின் வாழ்க்கையை நமக்கு காட்டும் சிறந்த கால இய்ந்திரமாகவே நாம் சங்க இலக்கியங்களைக் கொள்ளலாம். இவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும். இவற்றில் காட்டப்படும் சங்க தமிழரின் வாழ்க்கைச் சித்திரத்தில் வேதங்கள் எத்தகைய இடத்தைப் பெற்றிருந்தன என்பதை அறிவது நமக்கு தேவையாகும்.
வேதம் என்பதை ‘மறை’ ‘வேதம்’’வாய்மொழி’ ‘எழுதாக்கற்பு’ ‘கேள்வி’ என்றெல்லாம் பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. மண்டன மிஸ்ரர் எனும் மீமாம்ஸகரின் இல்லத்துக்கு வாதம் செய்ய செல்கிறார் ஆதி சங்கரர். காசி நகரில் அவர் வீட்டை கண்டுபிடிக்க விசாரிக்கிறார். அவர் வீட்டில் வேத கோஷம் செய்யும் கிளிகள் இருப்பதாக கேள்விப்பட்டு அதைக் கொண்டு அந்த வீட்டைக் கண்டுபிடிக்கிறார். இதே போன்ற சித்திரத்தை பண்டைத் தமிழகத்தில் பெரும்பாணாற்றுப் படை (300-301) தருகிறது:
‘வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும்
மறைகாப்பாளர் உறைபதி’
அந்தணர்கள் அவர்கள் வீடுகளில் ஓதும் மறையைக் கேட்டு கேட்டு அவர்கள் இல்லங்களில் வாழும் கிளிகளும் வேத ஒலிகளை எழுப்புகின்றனவாம்.
வேதங்களுக்கு ஆறு அங்கங்கள் உண்டு அவை: சிக்ஷை, வியாகரணம், சந்தம், நிருத்தம், ஜோதிடம், கற்பம் என்பவை. புறநானூறு நான்காக ஆறு அங்கங்களுடன் அமைந்த வேதமானது சிவபெருமான் வாயை விட்டு அகலாதது என கூறுகிறது:
நன்று ஆய்ந்த நீள்நிமிரிசடை
முதுமுதல்வன் வாய் போகாது
ஒன்று புரிந்த ஈர் இரண்டின்
ஆறு உணர்ந்த ஒரு முதுநூல் (புறநானூறு: 166:1-4)
இந்த அங்கங்கள் குறித்து பதிற்றுப்பத்து (21:1-3) இவ்விதம் கூறுகிறது:
சொல், பெயர், நாட்டம், கேள்வி, நெஞ்சம் என்று
ஐந்துடன் போற்றி அவை துணையாக
எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை.
வேத வேள்வி குண்டத்தின் வடிவம் பருந்து வடிவில் இருந்தமை குறித்து ஏற்கனவே நாம் பார்த்தோம். வேத வேள்வியில் ஊற்ற காட்டிலிருந்தும் நாட்டிலிருந்தும் பதினான்கு வகைப் பசுக்களிலிருந்து கிடைக்கும் நெய்யை நீர் நாணும்படியாக சொரிந்து தமிழ் மன்னர் வேள்விகள் செய்தனர் என புறநானூறு (384:15-18) தெரிவிக்கிறது:
காடு என்றா நாடு என்று ஆங்கு
நீர்-ஏழின இடம் முட்டாது
நீர் நாண நெய் வழங்கியும்
எண் நாணப் பலவேட்டும்
மண் நாணப் புகழ் பரப்பியும்…
சோழன் கிள்ளிவளவனின் நாட்டின் தனித்தன்மையே அங்கு வேத வேள்விகள் நடைபெறுவதுதான்.
அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த
தீயொடு விளங்கும் நாடன் (புறம் 397:20-21)

வேத முறைப்படி மூன்று அக்னிகள் வளர்க்கப்படுகின்றன. அவை ஆகவனீயம், காருகபத்தியம், தட்சினாக்கினி என்பவை. இவை ரிக் வேதத்திலேயே கூறப்பட்டுள்ளன. இவற்றுக்கான வேத மேடைகளின் வடிவங்கள் வெவ்வேறானவை. சிந்து சரஸ்வதி பண்பாட்டை சேர்ந்த கலிபங்கன் எனும் இடத்தில் மிகப்பழமையான அக்னி மேடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று நெருப்புகளில் ஆகவனீயம் சதுரமான வேள்வி மேடையில் வளர்க்கப்படுகிறது. காருகபத்தியம் வட்டவடிவ மேடையிலும். தட்சினாக்கினி அரை வட்ட வடிவ மேடையிலும் வளர்க்கப்படுகின்றன. கேரளாவின் மிகப் பழமையான கூடியாட்ட சடங்குகளில், இவ்வேள்வி மேடைகளின் பரிமாணங்கள், அப்பரிமாணங்களில் அடங்கியுள்ள கோட்பாடுகள், வெளிப்படுகின்றன என்கிறார் கலை ஆராய்ச்சியாளரான கபிலா வாஸ்த்யாயன். இந்த மேடைகளில் வளர்க்கப்படும் முத்தீ பண்டைத் தமிழர் வாழ்வில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. சேரமான் மாவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதியும் சோழன் பெருநற்கிள்ளியும் ஒற்றுமையாக இருப்பதை காண்கிறார் புறநானூற்று ஔவையார். பாடுகிறார்:
ஒன்றுபுரிந்தடங்கிய விருபிறப்பாளர்
முத்தீப்புரையக் காண்டக விருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர் (புறம்: 367: 12-14)
இந்த வேத வேள்விகள் இயற்கையை அழிப்பவை அல்ல. இயற்கையோடு இணைந்த தன்மை கொண்டவை. எனவே காடுகளில் வேள்விகள் நடத்தப்படும் போது காடுகளில் வாழும் விலங்குகள் அவ்வேள்விகளுக்கு உதவும் ஒரு அழகிய சித்திரத்தை பெரும்பாணாற்றுப்படை (494-500) முன்வைக்கிறது:
கின்னரல் முரலும் அணங்குடைச் சாரல்
மஞ்ஞை ஆலும் மரம்பயில் இறும்பின்
கலைபாய்ந்து உதிர்த்த மலர்வீழ் புறவின்
மந்தி சீக்கு மாதுஞ்சு முன்றிற்
செந்தீப்பேணிய முனிவர் வெண்கோட்டுக்
களிறுதரு விறகின் வேட்கும்
ஒளிறு இயங்கு அருவிய மலைகிழவோனே!
வேதங்கள் ஏதோ ஒரு பிராந்தியத்தின், ஒரு சாதியின் அல்லது ஒரு மொழியினரின் சொத்து அல்ல. அவை பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழ் மரபின் தமிழ் இரத்தத்தில் ஒன்றோடொன்றாக இருக்கும் ஒன்று. வேத விழுமியங்களை நீக்கிவிட்டால் தமிழ் பண்பாடே வேரற்றுப் போகும். அதே போல வேதங்களை இயற்றிய கவிகளிலும் தமிழ் சான்றோர்கள் இருந்திருக்கக் கூடும்.


நன்றி. திரு அரவிந்தன் நீலகண்டன்.

தம்பி ஜான் குமார். திருச்சியிலிருந்து ஒரு வைணவ பிராமண நண்பர் உங்களுக்கு எந்த விதமான பதிலும் கொடுக்க வேண்டாம் என்று கட்டளையிட்டுளார். ஆகவே, நீங்கள் இங்கு சுதந்திரமாக எழுதலாம்.

தமிழ் நேசன் அவர்களே... இதையும் படியுங்கள்.


இன்னும் நெறைய இருக்கிறது. அனால், அதெல்லாம் தந்தால், நீங்கள் குழம்பிவிடுவீர்கள்.. அது மட்டும் இல்லை. நீங்கள் இப்போதுதான் பாலர் பள்ளியில் இருகிறிர்கள்.

என்னிடம் உள்ள கட்டுரைகள், phd படித்தவனால் கூட புரிந்து கொள்ள முடியாதது.


abcd படிக்க ஆரம்பித்து உள்ள மாணவனை என்னால் கொடுமை படுத்ட முடியாது.

நன்றி.

The term Hindu is said to have referred to the culture of the people on the other side of the Sindhu River. Although the terms Hindu and Hinduism were created by foreign invaders, sometimes using them as derogatory terms, the indigenous people then co-opted these terms (mostly in the past 200 years) as collective or umbrella terms to describe themselves and their various ways of living, and many different religions and spiritual practices, a custom which continues today. The original term, predating these by thousands of years, was Sanatana Dharma, a profound term that is rich with beauty and inherent wisdom. Out of that Sanatana Dharma emerged modern Hinduism, Buddhism, Jainism and Sikhism, while significantly effecting many other religions or traditions, which also followed much later. The underlying reality referred to by the term Sanatana Dharma is actually eternal, and thus is beyond any reference to the first usage of the term, or to any religions or traditions stemming from it.

Sanatana denotes that which always is,
that which has neither beginning nor end,
that which is eternal in its very essence.

Dharma is designed to communicate the view that
there is an underlying structure of natural law
that is inherent in the very intrinsic constitution
of Being itself - an essential nature.

Thus, Sanatana Dharma refers to the eternal,
natural way, the never beginning and never
ending flow of the whole of being.

தனபால்
00:27

திரு தமிழ்செல்வன்என்ற தமிழ்நேசன் அவர்களே,

///இந்து மதம் என்பது பிராமண மதம். பிராமணர்கள் இந்தியர்கள் இல்லை.///

அய்யா உண்மையை ஏற்க முடியாமல் கையறு நிலையில் இருக்கும் போலி பகுத்தறிவு வாதிகளே, யார் கூறியது பிராமணர்கள் இந்தியர்கள் இல்லையென்று???


முதலில் திராவிடம்- ஆரியம் என்ற கருத்தும் , ஆரியப் படையெடுப்பு என்ற கருத்தும் கட்டுக்கதை என்று தற்போது நிறுபனமாகி நீண்ட நாட்களாகிவிட்டது.Please update your knowledge .

இந்த ஆரிய- திராவிட இனக் கோட்பாடு , மற்றும் ஆரியப்படையெடுப்பு பற்றி டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் கூறுவதைப் பாருங்கள்..நூலின் பெயர் "டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் -தொகுதி 13 "

"ஆரியர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தார்கள் என்பதற்கும், அதன் சுதேசி மக்களை வென்று அவர்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள் என்பதற்கும் என்ன சான்று இருக்கிறது?ரிக்வேதத்தைப் பொறுத்தவரையில் ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியில் இருந்து இந்தியாவின் மீது படையெடுத்து வந்தார்கள் என்பதற்கு அதில் அணுவளவு கூட ஆதாரம் இல்லை.-.மேற்படி நூல் ,பக்கம் 112 .

"வேத நூல்களின் சான்றைப் பொறுத்தவரையில், ஆரியர்களின் தாயகம் இந்தியாவிற்கு வெளியே இருந்தது என்பதை மெய்ப்பிப்பதாக இல்லை"..மேற்படி நூல் ,,பக்கம் 112 .


"இவ்வாறு ஆரிய இனம் குறித்த மேலைய எழுத்தாளர்களின் கோட்பாடு ஒவ்வொரு அம்சத்திலும் அடி சாய்ந்து விழுகிறது என்பது சொல்லாமலே விளங்கும்.....

இந்தக் கோட்பாட்டை நுணுகி ஆராயும் எவரும் அதனை இரண்டு தோற்று நோய்கள் பீடித்திருப்பதைக் காண்பர்.முதலாவதாக , இந்தக் கோட்பாடு சில அனுமானங்களையும்,,அந்த அனுமானாகலிம் அடிப்படையி௮ல் எழுந்த முடிவுகளையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.இரண்டாவதாக,இந்தக் கோட்பாடு விஞ்ஞான ஆய்வுக்கு முரண்பட்டதாக இருக்கிறது...."-.மேற்படி நூல் ,,பக்கம் 118

"மேலைய கோட்பாடு சில விசயங்களை போதிய அளவு ஆராயாமல், ஆழமாகப் பரிசீலிக்காமல் அவசர கோலமாக மேற்க்கொலப்பட்ட முடிவே என்பதில் ஐயமில்லை.....மேலைய அறிஞர்கள் ஆராய்ச்சி துறையில் நீண்ட நெடுங்காலமாக ஈடுபட்டு வருபவர்கள்.அப்படிப்பட்டவர்கள் இத்தகைய வலுவற்ற,பலவீனமான அஸ்திவாரத்தின் மீது ஒரு கோட்பாட்டை உருவாக்க முனைந்திருப்பது வியப்பிலும் வியப்பாக இருக்கிறது.இந்த அத்தியாயத்தில் ஏராளமான,அசைக்க முடியாத ,உறுதியான சான்றுகள் தரப்பட்டுள்ள நிலையில் இந்த மேலைய கோட்பாடு இனியும் செல்லுபடியாகாது.இதனைக் குப்பைக் கூடையில் தான் தூக்கி எரிய வேண்டும்." -- மேற்படி நூல் ,,பக்கம் 159 .

ஆரிய இனம் சம்பந்தப்பட்ட கோட்பாடு ஒரு வெறும் அனுமானமே அன்றி வேறல்ல......"-.மேற்படி நூல் ,,பக்கம் 118 .

"ஆரிய இனக்கோட்பாடு மிகவும் அபத்தமானது.அது நீண்ட காலத்துக்கு முன்பே சவக்குளிக்குப் போயிருக்க வேண்டும்."---.மேற்படி நூல், பக்கம் 121 .

"இதனைக் குப்பைக் கூடையில் தான் தூக்கி எரிய வேண்டும்." " நீண்ட காலத்துக்கு முன்பே சவக்குளிக்குப் போயிருக்க வேண்டும்." என்று டாக்டர் அம்பேத்கர் ஆராய்ந்து கூறிய ஆரியப் படையெடுப்புக்கோட்பாட்டைத் தான், பெரியார் எந்த வித ஆராய்ச்சிக்கும் உட்படுத்தாமல் பகுத்தறிவில்லாமல், கால்டுவெல் என்ற வெள்ளைக்காரன் சொன்னதெல்லாம் உண்மையென்ற மூடநம்பிக்கையில், " நீண்ட காலத்துக்கு முன்பே சவக்குளிக்குப் போயிருக்க வேண்டிய "இக்கோட்பாட்டை ஆதாரமாகக் கொண்டு திராவிடர் கலகத்தை உருவாக்கினார்.முதல் கோணல் முற்றிலும் கோணல்.மிகப்பெரிய மூடனம்பிக்கைவாதிக்குப் பெயர் பகுத்தறிவுத் தந்தையாம்?!!! விந்தையிலும் விந்தை.!!!

தனபால்
00:49

திரு கம்பதாசன், மற்றும் சதீஸ் அவர்களே,

இந்த Anonymous தமிழ்செல்வன் (முந்தைய பெயர் தர்மலிங்கம்.), தமிழ் நேசன் இவர்கள் ஒருவரே .இவர் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமியரோ,,கிறிஸ்தவரோ அல்ல.

@Anonymousdghfjkhl.uk.k,bbmfbn

@JOHN KUMARyou exceed maximum level.control your word...

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பின்னும்
மெய்ப்பொருள் காண்பதரிது . இது அய்யன் திருவள்ளுவர் வாக்கு
திராவிட இயக்கங்களின் ஆரம்ப காலத்தில் இந்து மதத்தை பிராமணனின்
மதம் போல் எண்ணி பல்வேறு குறைகளைக் கூறினார்கள் அதில் ஒரு குறை
திருக்கைலாயத்தில் நடைபெற்ற சிவபிரானின் திருமணத்தை அகத்திய மா
முனிவர் சதுரகிரியில் கண்டுகளித்தாராம் .திராவிட இயக்கம் வழமையான
நக்கல் நளினங்களைக்கலந்து மேடையில் பேசுவார்கள் . ஆனால் இப்போ
ஒருவரும் அதுபற்றி பேசுவதில்லை .காரணம் விஞ்ஞான வளர்ச்சியால்
செய்மதி உதவியுடன் உலகின் எந்தப்பகுதியில் நடக்கும் நிகழ்வுகளையும்
யார் வேண்டுமானாலும் நேரடியாக பார்க்கலாம் .அன்று மெய்ஞானம்
சொன்னதை மறுத்தவர் விஞ்ஞானம் மூலம் நிறைவேறியவுடன்
பேச மறுக்கிறார்கள் .
ராவணன் புஷ்பக விமானத்தில் வந்தானாம் சீதையை சிறைப்பிடித்தானாம்
யாருக்கு கதைவிடுகிறாய் என்றார்கள் .விமானம் இறங்கவும் ஏறவும்
ஓடு பாதையை அமைத்தது யார் என்றார்கள் ,ராவணன் வரும்போது
சீதை விமான நிலையத்திலா நின்றாள் இல்லையே கட்டுக்குள் எப்படி
விமானம் இறங்கி மீண்டும் பறக்கும் என்று நக்கலடித்தார்கள் ,ஆனால்
உலங்கு வானூர்தி எந்த இடத்திலும் இறக்கி மீண்டும் பறக்கமுடியும்
என்பதை இன்று விஞ்ஞானம் நிருபித்தபின் அதுபற்றி ஒருவரும்
வாய்திறப்பதில்லை .
யேர்மனியில் உள்ள ஒரு புகழ் பெற்ற மனோதத்துவர் தற்போது
இந்து மதத்துக்கு மாறியதுடன் முற்றாகவே அசைவ உணவுகளையும்
உண்பதை நிறுத்தியுள்ளார் .அவர் பல மனிதர்களை ஆழ்நிலை
உறக்கத்தில் ஆழ்த்தியபின் பல்வேறு கேள்விகளை கேட்பது
வழக்கம் .ஒருமுறை ஒரு மனிதரை ஆழ்நிலைத் தூக்கத்தில்
ஆழ்த்தியபின் அந்த மனிதனின் இளமைக்கால சம்பவங்கள்
பற்றி கேள்விகள் கேட்டுக்கொண்டு போனபோது அவருக்கு
பெரிய ஆச்சரியம் ஏற்ப்பட்டது .
அந்த மனிதர் அவரின் தாயின் வயிற்றில் இருந்ததையும்
ஆழ்நிலையில் உள்ளவர் தெளிவாகச் சொன்னார் ,அதற்கும்
பின் நோக்கி கேட்டபோது (அதாவது அவர் தாயின் வயிற்றில்
உருவாகமுன் ) அந்த மனிதரின் குரல் மாறியது ஒரு பெண்
குரலில் பிரெஞ்ச் மொழியில் பேசினார் . இந்து மதம்
சொல்லும் மறுபிறப்பு விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்
பட்டது . மிகவும் தீவிர கத்தோலிக்க மருத்துவர் உடனேயே
இந்து மதத்திற்க்கு மாறினார் .இது பற்றி மதிப்பிற்குரிய
குருஜி ஐயாவும் விபரமாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார் .
ஆகவே தயவுசெய்து எங்கள் இந்துமதத்தில் மிகமிகத்
தெளிவாக எல்லா விபரமும் உள்ளன .தயவு செய்து
அதை விமர்சிப்பது என்று எங்களை நோகடிக்காதீர்கள்
எனக்கு ஒருகாலத்தில் முக்கிய பொழுது போக்கு என்பதே
திராவிடர்கழக பேச்சைக்கேட்பதுதான் இப்போ கொஞ்சம்
கொஞ்சமாக உண்மைகள் தெரியவர நான் பிறந்த மதம்
எப்படிப்பட்ட உன்னதமானது என்பதை மிகவும்
தெளிவாக அறிந்துகொண்டேன் .எனக்கு தெளிவாக
திறமையாக கட்டுரை எல்லாம் எழுதவராது .வேறுவழியின்றி
கடும் முயற்ச்சியில் எழுதியுள்ளேன் .ஒவொருவருக்கும்
வெவ்வேறு திறமைகளை இறைவன் கொடுத்துள்ளார் .
வாதத்திறமை உள்ளவர்கள் வக்கீலாக மாறுங்கள் .சும்மா
மற்றவர்களை வேதனைப்படுத்தாதீர்கள் .கோபத்தில்
உங்கள் குடும்பத்தை இழுத்தது தவறு .தயவு செய்து
மன்னிக்கவும் .ஆனால் எந்தக்காலத்திலும் தயவு செய்து
நாங்கள் நேரில் சந்திக்காமல் இருப்பது நல்லது .பூக்கடையில்
பூ வாங்கலாம் .மீன் கடையில் பூவை எதிர்பார்த்தால் அது
எங்கள் தப்பு. நன்னீர் கிணறு உப்பு நீர் கிணறுபோல்
மனிதர்களிலும் பலவகையுண்டு என்பதை நன்றாக நான்
அறிவேன் ,ஆகவே உன் கேவல விமர்சனத்தை இத்துடன்
நிறுத்து .

ஸ்ரீராம், ஆஸ்திரேலியா
08:48

இந்தக் கட்டுரை ஒரு முக்கியமான கருத்தை முற்றிலும் விட்டுவிட்டு எழுதப்பட்டுள்ளது! வங்கி என்னும் இன்றைய பேங்க் முறை இந்தியாவில் கிடையாது. எனவே ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோவில்களே வங்கிகளாக செயல்பட்டன. "கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது இதனால்தான். கோவில்கள் வெள்ளத்தின் போது அடைக்கலம் புகலிடம் தருவனவாகும். கோவிலின் உள் மற்றும் வெளி பிரகாரத்தை சுற்றிலும் உயர்ந்த மேடைகள் இதனை உணர்த்தும். பஞ்சம் வரும் வேளைகளில் ஊர்ப்பொதுச் சொத்தான இறைவனின் நகைகள் விற்கப்பட்டு மக்களின் பசிநீக்கப்படும். பின்னர் அதிக விளைச்சல் காலங்களில் மீண்டும் இறைவனுக்கு நகைகள் காணிக்கை ஆக்கப்படும். எனவே இறைவனை அலங்கரிக்கத்தான் நகைகள் என்பது சரியான வாதம் அல்ல. சிலை வடிப்பவர் இறைவனின் சிலையை ஆடை மற்றும் ஆபரணங்கள் இன்றி வடிவமைப்பதில்லை என்பது இந்தக்கருத்திற்கு வலுசேர்க்கும். இன்றைய எகானிமிக்ஸ் என்பது அன்றைய அரசர்களால் கையாளப்பட்டதுதான் இந்த கோவில் கட்டுதல், குளம் வெட்டுதல் என்பதெல்லாம். வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே உழைத்து மீதி ஆறு மாதங்களை மகிழ்ச்சியாகக் கழித்த பழம் வாழ்க்கையை நினைத்துப்பாருங்கள் இந்த உண்மை புரியும். வெள்ளைக்காரனின் மாதச் சம்பளம் என்பது இல்லாத ஒரு பழைய சமுதாயத்தில் இதுவே முக்கியப்பின்னணி ஆகும்.

ஸ்ரீராம், ஆஸ்திரேலியா
09:01

அறிவியல் என்னும் உண்மையை உணராது அடுத்தவர் செய்வதைக் காப்பி அடிப்பவர்க்கு ஒருசெயலின் உண்மை அர்த்தம் புரியாது. இறைவனுக்கு உணவு படித்தபின் அது குப்பைத்தொட்டியில் அடுத்தநாள் கொட்டப்பட்டதேயில்லை மாறாக பகிர்ந்து அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இது கூடி வாழ்வதின் நோக்கம். என்னபெயரிட்டு எப்படி அழைத்தால் என்ன? படையல் என்னும் நைவேத்யம் பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறதல்லவா? இதுதான் இயேசுவின் அப்பம் பகிர்ந்தளித்தல், இஸ்லாத்தின் ஒன்றுகூடி உண்ணல். "அந்தணன் என்போன் அறவோன்" என்கிறான் வள்ளுவன். மற்ற உயிர்களுக்கு தீங்கு நினைக்காதவன் என்கிறார். இதில் உயர்வு தாழ்வு எங்கிருந்து வந்தது?

Anonymous
11:24

ஸ்ரீராம், ஆஸ்திரேலியா அவர்களே தங்களின் வருகை சில நாட்களாக இல்லை எப்போதாவது வந்தாலும் மனதில் தங்கும் அளவிற்கு தங்களின் கருத்துக்களை தெரிவித்து விடுகிரிர்கள் மிக்க நன்றி தொடர்ந்து தங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள் எங்களது பல சந்தேகங்க அப்பொழுது தான் தீரும்

மிக்க நன்றி


Next Post Next Post Home
 
Back to Top