Store
  Store
  Store
  Store
  Store
  Store

இந்தியாவை தாக்கும் கொடூர நோய்!

    வெகு நாட்களாகவே இந்திய சமுகத்தை ஒரு கொடிய நோய் ஆட்டுவித்து வருகிறது அந்த வியாதியின் வீரியம் சமிபகாலமாக உச்ச நிலைக்கு சென்று நமது சமூகத்தை பெரிய ஆபத்தில் தள்ள தயாரக இருக்கிறது

 இந்தியாவை இந்திய பண்பாட்டை பிளக்க வேண்டும் என்றால் அழிக்க வேண்டும் என்றால் கூட்டு குடும்ப முறையை முற்றிலுமாக ஒழித்து கட்ட வேண்டும் என்று ஆங்கில அரசாங்கம் விரும்பியது

 அதற்க்காக கருத்து முறையிலான யுத்தத்தை மக்கள் மத்தியில் நேர் முகமாகவும் மறைமுகமாகவும் திட்டமிட்டு செய்தார்கள்

 அதன் விளைவாக வளர்ந்து வரும் சமூகம் சிறிய குடும்பங்களாக பிரிவது தவிர்க்க முடியாது என்ற மனோபாவம் மக்கள் மத்தியில் வேருன்ற ஆரம்பித்தது


தாத்தா பாட்டி சித்தப்பா பெரியப்பா என்றிருந்த குடும்ப அமைப்பு அழிந்து அம்மா அப்பா பிள்ளைகள் என்று சுருங்கி போய்விட்டது

 ஒரு பெரிய குடும்பம் என்றால் ஒருவர் சம்பாத்தியத்தில் பலர் உட்க்கார்ந்து சாப்பிடும் தொல்லையிருக்கிறது உழைக்க வேண்டும் என்ற ஆர்வம் பலரிடம் இல்லாமல் போய்விடுகிறது என்ற எண்ணம் மேலோங்கி நின்றதே தவிர

 கூட்டு குடும்பத்தில் உள்ள உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுதல் ஆளுக்கொரு வேலையை பிரித்து கொள்ளுதல் பொருளாதார சிக்கனம் குழந்தை வளர்ப்பு பரஸ்பரம் ஒத்தாசை செய்தல் போன்ற நல்ல தன்மைகள் சுலபமாக மறைக்கப் பட்டு விட்டது

 இதனாலேயே இந்திய கிராம பொருளாதரம் சீர் குலைந்து மக்கள் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு இடம் பெயர வேண்டிய சூழல் உருவானது 


நகரத்தின் இட நெருக்கடி சுகாதார மின்மை போன்ற வற்றால் சுற்று சூழல் பாதிப்பு வரை ஏற்பட்டு இந்தியாவின் முதுகெலும்பான வேளாண்மை கூட அந்திம காலத்தை நெருங்கி கொண்டிருக்கிறது

 குதிரை குப்புற தள்ளியாதும் அல்லாமல் குழியும் பறித்த கதையாக இன்றைய அவசர சமூகம் அம்மா அப்பா குழந்தைகள் என்ற கையளவு வடிவத்தை கூட குறைத்து கொள்ள துவங்கி விட்டது

ஒரு பையனுக்கு பெண் பார்க்க துவங்கி விட்டாலே பையன் நல்லவனா கெட்டப் பழக்கங்கள் இல்லாதவனா பெண்ணை வைத்து நல்ல முறையில் குடும்பம் நடத்துவானா அவனை சார்ந்த குடும்ப உறுபினர்கள் நம் பெண்ணை நல்ல முறையில் வைத்து கொள்வார்களா என்று விசாரிக்கும் காலம் போய்

 திருமணத்திற்கு பிறகும் மாப்பிளையின் தாய் தகப்பன் அவனோடு இருப்பார்களா அல்லது தனியாக போய்விடுவார்களா
 என்று தான் கேள்வி கேட்கிறார்கள்

 ஒரு குழந்தையை பெற்று ஈ எறும்பு அண்டாமல் பாதுகாத்து பசியும் நோயும் தாக்காமல் பராமரித்து படிக்க வைத்து வேலை வாங்கி கொடுத்து ஆறடி உயர மனிதனாக வளர்ந்த பின்பு தாலி கட்டி வந்த ஒரே ஒரு உறவுக்காக பெற்றவர்களை கைவிட்டு விட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது எந்த வகை மனிதாபிமானம்?


 பெண்ணை பெற்றவர்களுக்கு கஷ்டங்கள் இல்லை என்று நான் எப்போதும் சொல்வது கிடையாது

 ஆண்கள் அனைவருமே பெண்மையை பூஜை செய்யும் உத்தமர்கள் என்றும் கருதுவது இல்லை

 ஆனால் இன்றைய எதார்த்த நிலை பெருமளவு ஆண்களுக்கு சாதகமாக இருக்கிறது என்று சொல்லவும் இயலாது

 எனது நண்பர் ஒருவரின் மகன் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறான் அவனுக்கு பெற்றோர்களாக பார்த்து திருமணமும் செய்து வைத்தார்கள்

 திருமணம் ஆன மூன்றே மாதத்தில் தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று மனைவி சொல்லி இருக்கிறாள்

 பையன் ஒத்துக் கொள்ள வில்லை என் பெற்றோருக்கு நான் ஒரே மகன் அவர்களுக்கு என்னை விட்டால் யாரும் இல்லை அதனால் அவர்களோடு நாம் குடும்பம் நடத்தலாம் என்று சொல்லி இருக்கிறான்

அவள் ஒத்துக் கொள்ள வில்லை நீ உன் பெற்றோரை விட்டு பிரிய மறுத்தால் நான் ஏன் என் தாய் தகப்பனை பிரிய வேண்டும்


எனவே உன்னோடு வாழ முடியாது என்று பிறந்த வீடு சென்று விட்டாள்

 சென்றவள் சும்மா இருக்க வில்லை மாமனார் மாமியார் மற்றும் கணவன் எல்லோரும் சேர்ந்து என்னை கொடுமை படுத்துகிறார்கள் உன் தகப்பனிடம் இருந்து பணம் வாங்கி வா நகை வாங்கி வா என்று எப்போதும் தொல்லை செய்கிராகள் என காவல் நிலையத்தில் புகார் செய்து ஒரு பாவம் அறியாத அந்த குடும்பத்தாரை இரண்டு நாட்களுக்கு சிறையில் வைத்து விட்டாள்

இப்படி ஒரு சம்பவம் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் பல சம்பவங்கள் தினசரி நடந்து வருகிறது

 குடும்ப நீதி மன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் பல நிஜமாகவே இப்படி தான் இருக்கிறது

 இதற்கெல்லாம் முக்கிய காரணம் என்ன? தானும் வாழ்ந்து மற்றவரையும் வாழ விட்டு வாழுகின்ற எண்ணம் மனிதர்கள் மத்தியில் படிபடியாக குறைந்து போய் விட்டது


  யார் எப்படி போனால் நமக்கென்ன நாம் சந்தோசமாக இருக்கிறோமா அது மட்டும் போதும் என்ற மன நிலை அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது

 நாடு முழுவதும் உள்ள ஐரோப்பிய கல்வி முறை குழந்தைகள் மனதில் ஈரத்தை முற்றிலுமாக அளித்து விட்டு விஷ விதையை தண்ணீர் விட்டு வளர்த்து வருகிறது

 இப்படி நான் சொல்வதினால் சிலருக்கு குழப்பம் வரலாம்

இன்றைய உலகம் சுருங்கி வருகிறது இதில் எதிர் நீச்சல் போட்டு கரை சேர ஆங்கில அறிவும் படிப்பும் மிகவும் அவசியம் அதை குழந்தைகளுக்கு கொடுக்காமல் போனால் நமது குழந்தைகள் உலகத்தார் மத்தியில் முன்னேற முடியாமல் சிறகில்லாத பறைவைகள் போல சிக்கி தவிக்க வேண்டிய நிலை வரும் என்பார்கள்

நான் ஆங்கிலம் வேண்டாம் என்றோ அதானால் தான் கேடுகள் சூழ்ந்து விட்டது என்றோ சொல்ல வரவில்லை


ஆங்கிலம் குழந்தைக்கு தேவை தான் அனால் ஆங்கில தன்மை நமது குழைந்தைகளுக்கு தேவையே இல்லை

இந்திய சாயலில் இந்திய மரபு வழியில் ஆங்கிலம் கற்றால் எந்த கேடும் வராது

 இன்று அயல் நாடுகளில் வாழும் இந்திய பெற்றோர்கள் எத்தகைய கஷ்டங்களை அனுபவிக்கிறார்களோ அதே கஷ்டத்தை இந்தியாவில் கொல்கத்தா,பெங்களூர்,சென்னை,டெல்லி,மும்பை போன்ற பெரு நகர பெற்றோர்களும் அனுபவிக்கிறார்கள்

விடலை பருவத்தை தொடுவதற்கு முன்பே நகர குழந்தைகள் நூற்றுக்கு எண்பது பேர்கள் போதை மற்றும் தவறான பாலுறவு பழக்கத்திற்கு அடிமையாகி சுய முகத்தை இழந்து நிற்கிறார்கள்

 இப்படி பட்ட இளைய தலைமுறையினரால் பெற்றவர்களின் கஷ்டங்களை எப்படி புரிந்து கொள்ள இயலும்?

 அதனால் தான் கல்யாணம் கட்டியவுடன் அப்பன் ஆத்தாவை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளி விட்டு நாம் மட்டுமே இருப்போம் என்று பிடிவாதம் செய்கிறார்கள்


  தவறு செய்யும் போது பெரியவர்கள் தட்டி கேட்டால் மலையளவு குதித்து தங்களை தாங்களே குழி தோண்டி புதைத்து கொள்கிறார்கள்

 நாளை தங்கள் பிள்ளைகளும் தங்களிடம் இப்படி தான் நடக்கும் என்பதை நினைத்து கூட பார்ப்பது இல்லை

 சொந்த பெண் ஆண் நண்பர்களை வைத்து கொண்டாலும் மகன் பெண் பிள்ளைகளோடு ஊர் சுற்றினாலும் இதல்லாம் இந்த காலத்தில் சகஜம் என்ற மன நிலை தற்போதைய பெற்றோர்களிடம் அதிகரித்து இருப்பதற்கும்

 இவர்களை கைவிட்டால் தான் குடும்பம் நடத்த முடியும் என பிள்ளைகள் நினைப்பதற்கும் அடிப்படை காரணமே கல்வி முறை தான் உள்ளது

விளையாட்டானாலும் படிப்பானாலும் நீ மட்டுமே வெற்றி பெற வேண்டும் எதிலும் நீதான் முதலாளாய் வர வேண்டும் என்றும் பள்ளியிலேயே போதிக்க படுவதினால் தோல்விகளை எதிர்கொள்ள பிள்ளைகள் தயாராக இல்லை

எதிலும் எப்படியாவது எந்த வழியிலாவது இன்பத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற வெறியில் எதையும் அதாவது பெற்றவர்களையும் உற்றவர்களையும் ஒழித்துக்கட்ட இன்றைய தலைமுறையினர் தயாராகி விட்டனர்

 இப்படியே நிலைமை தொடர்ந்தால் காலகாலமாக பின்பற்ற பட்டுவரும் இதிய பண்பாடு என்பதை ஏட்டில் கூட காண முடியாமல் போய் விடும்

எனவே சமச்சீர் கல்வி முறையை சீர்படுத்த முனைந்திருக்கும் இக்கால கட்டத்தில் அறிஞர்கள் இதையும் சேர்த்து சிந்தித்தால் நன்றாக இருக்கும்




Contact Form

Name

Email *

Message *