Store
  Store
  Store
  Store
  Store
  Store

இந்தியாவை வாங்க அமெரிக்காவின் பணம்!

   னது பூர்விக கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் வயதான முதாட்டி ஒருவர் வாழ்ந்து வந்தார்

 அவருக்கு மகள் வயிற்று பேரன் ஒருவனை தவிர உறவு என்று சொல்லி யாரும் இல்லை

 மகள் கூட மஞ்சள் காமாலை வந்து சரியான வைத்தியம் பார்க்காமல் செத்து போய்விட்டாள்

மருமகன் மனைவி இறந்த கல்லறை ஈரம் காய்வதற்குள் வேறொரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டதனால் ஆதரவற்று கிடந்த பேரனை தன்னோடு தூக்கி வந்து விட்டார்

 வயல் வேலைக்கு போவார் யார் வீட்டிலாவது சொல்லுகின்ற வேலையை தயங்காமல் செய்வார் கிராமத்தில் யார் வீட்டில் விஷேசம் என்றாலும் குடம் குடமாக தண்ணீர் எடுத்து ஊற்றுவார்


 எப்படியோ தன் வயிருக்காகவும் பேரன் வயிருக்காகவும் வயோதிகத்தையும் மறந்து பாடுப்பட்டு கொண்டே இருப்பார்

 பையன் படிக்கும் வயது வந்த உடன் அவனை பள்ளியிலும் சேர்த்து விட்டார்

அவனுக்கு வாத்தியாராக அமைந்தவர் ஒரு தீவிர கிறிஸ்தவர் பையனின் வறுமை நிலையை நன்றாக உணர்ந்து கொண்ட அவர் நோட்டு,பேனா,புது சட்டை என்று சிறிய பரிசுகள் வாங்கி கொடுத்து அவன் மனதில் இடமும் பிடித்து விட்டார்

அவனுக்கு உதவ சொல்லி கர்த்தர் தனக்கு கட்டளை இட்டிருப்பதாகவும் சொல்லி இருக்கிறார் இவனை போல ஏழைகளுக்கு உதவி ஒத்தாசை செய்வது தான் ஏசுவின இயல்பு என்றும் மூளை சலவை செய்திருக்கிறார்

நேற்று வரை வீட்டில் சாமி கும்பிட்டு விபூதி பூசியவன் தீடிர் என மண்டியிட்டு ஜபம் செய்ய ஆரம்பித்து விட்டான்


பேரனின் செயல் பாட்டியை திகில் அடைய வைத்து விட்டது அப்படி செய்யாதே நம் குடும்பத்திற்கு அது ஆகாது என தடுத்தும் பார்த்திருக்கிறார்

 பையன் கேட்பதாக இல்லை பாட்டியின் கண்டிப்பு அதிகரிக்க அதிகரிக்க அவனின் ஜப வெறியும் கூடி இருக்கிறதே தவிர குறைய வில்லை

ஒரு நாள் அந்த வாத்தியாரிடமே நேராக என் பேரனை மதம் மாற்ற முயற்சி செய்ய வேண்டாம் என்றும் சொல்லி இருக்கிறார்

அதற்கு அவர் பாட்டியிடம் அன்பாக பேசி அவர் மனதை கரைய வைத்து ஏசுவை ஏற்று கொண்டால் உங்கள் வறுமை முற்றிலுமாக ஒழிந்து விடும் என்று பதமாக சொல்லி தன் வேலையை ஆரம்பித்து இருக்கிறார் 

 எறும்பு ஊற கல்லே தேயும் போது பட்டியின் மனது என்ன கல்லை விட கடின மானதா?

நாளா வட்டத்தில் வயதான மனதும் பிடிவாதத்தை விட்டு விட்டு எதோ ஒரு வகையில் தனது பேரனுக்கு நல்ல காலம் பிறக்கட்டும் என்று தானும் மாற ஆரம்பித்து விட்டார்

ஒருவர் தான் ஆத்மார்த்தமாக தனது பிறந்த மதத்தை விட்டு விட்டு மாற்று மதத்திற்கு மாறினால் அதை குறை சொல்ல கண்டிக்க தடுக்க யாருக்கும் உரிமை இல்லை

 அதே நேரம் ஆசை வார்த்தைகளை சொல்லி ஒருவரை மதம் மாற்ற முயற்சிப்பது எந்த வகை நாகரிகமாகும்?

 கிறிஸ்தவ மத போதகர்கள் பல இடங்களில் மனிதர்களின் மனபலவீனத்தை பயன் படுத்தியே தங்களது காரியங்களை சாதித்து கொள்கிறார்கள்


 ஏசுவை ஏற்று கொள் உன் நோய் தீரும் கவலை ஒழியும் வறுமை விலகும் என்று பிரம்மாண்டமாக பிரச்சாரம் செய்கிறார்கள்

 தேர்வுகாலம் வந்து விட்டால் கூட பிள்ளைகள் படிப்பிற்காக ஜப கூட்டம் நடைபெறுகிறது

 பிராத்தனை செய்வதை தவறு என்று சொல்ல முடியாது ஆனால் அந்த பிராத்தனை நடை பெறுகின்ற விதம் முகம் சுளிக்கும் படியாக நடக்கிறது

 கர்த்தரை நம்பு இயேசுவை பற்றி கொள் உன்னை பரிட்ச்சையில் அவரால் மட்டுமே வெற்றி அடைய செய்விக்க முடியும் என்கிறார்கள்

 நன்றாக படி கடவுள் உனக்கு உறுதுணையாக இருப்பார் என்று சொன்னால் அது குழந்தைகளின் மனதை செம்மைப் படுத்தும் மாறாக ஜெபம் செய்தாலே போதும் பரிட்ச்சையில் தேறலாம் என்பது குழந்தைகளின் மனதை மழுங்கடிக்கும் செயலாகும்

 ஆனால் இதை கிறிஸ்தவ போதகர்கள் உணராமலே மனசாட்சியின் குரலை கேட்க்காமலை தொடர்ந்து செய்து வருகிறார்கள்

 கிறிஸ்தவ மதத்தை தழுவி விட்டால் ஏசுவை ரச்சகராக ஏற்று கொண்டால் மனக்கவலை வராது என்றும் சொல்கிறார்கள்

 இன்று உலக அளவில் தற்க்கொலை செய்துகொள்பவர்களில் ஐரோபிய மக்களே முன்னால் நிற்கிறார்கள்

 இவர்கள் கிறிஸ்துவை ஏற்று கொண்டவர்கள் அவர்கள் பிறந்ததே கிறிஸ்தவ மதத்தில் தான்

நமது போதகர்கள் சொல்வது உண்மை என்றால் ஐரோபிய மக்கள் எவரிடத்திலும் மன அழுத்தமோ மனகலக்கமோ ஏற்பட்டு இருக்கவே கூடாது

 ஆனால் உண்மை நிலை அப்படி இல்லை

 மேலும் ஏசுவை வணங்க துவங்கினால் வறுமை ஒழியும் என்கிறார்கள்


 இந்த வாதம் நிஜமானதா? உலக சரித்திரத்தை ஒருமுறை புரட்டி பார்த்தாலே இது நிஜம் அல்ல வடி கட்டிய அயோக்கியத் தனமான போய் என்று நமக்கு தெரியும்

 ஒரு காலத்தில் தென்னமெரிக்க கண்டத்தில் கிறிஸ்தவ மதமே இல்லை ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து சென்ற கிறிஸ்தவ பாதிரிகள் அங்கே வளமோடு இருந்த இன்கா பண்பாட்டை அடிச்சுவடு கூட இல்லாமல் அழித்துவிட்டு கிறிஸ்தவ மயமாக்கினார்கள்

கிறிஸ்தவத்தை தழுவினால் வறுமை ஒழியும் என்ற பிரச்சாரம் உண்மை என்றால் இன்று எல்சால்வடார் க்யூபா நிகராகுவா பெரூ பாரகுவே உருகுவே பொலிவியா போன்ற நாடுகள் செல்வ செழிப்பில் மிதக்க வேண்டும்

 ஆனால் அந்தோ பரிதாபம் அந்த நாட்டு மக்கள் இரண்டு வேளை உணவுக்கு கூட வழியில்லாமல் தவிக்கிறார்கள்

  கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் ஏழைகளுக்கு சேவை செய்ய உணமையாகவே விரும்பினால் அந்த நாடுகளுக்கு சென்று மருத்துவம் கல்வி தொழில் உதவி போன்ற அறப்பணிகளை செய்ய வேண்டும் 

 ஆனால் இவர்களில் ஒருவர் கூட அந்த நாடுகளின் பக்கம் தலை வைத்தது படுப்பது கிடையாது

 காரணம் அங்கே இனி யாரையும் கிறிஸ்தவர்களாக மத மாற்ற வேண்டிய அவசியம் இல்லை எல்லோருமே கிறிஸ்தவர்களாகி விட்டனர்

 அதே நேரம் இந்தியா போன்ற நாடுகளில் தான் மதம் மாற்ற அதிக வேலை  இருக்கிறது

 இந்த வேலைக்காகவே வருடம் தோறும் அமெரிக்காவில் இருந்து மட்டும் எழுபத்தி ஐயாயிரம் கோடி ரூபாய் இந்தியாவிற்கு வருவதாக சொல்லப்படுகிறது

 இந்த பணம் ஜெப கூட்டம் நடத்துதல் குழைந்தைகளுக்கு பேனா பென்சில் வாங்கி கொடுத்தல் மலை ஜாதினர்களுக்கு ஜீன்ஸ் பேன்ட் பரிசளித்தல் போன்ற செலவுகள் போக மீதம் எல்லாமே பிரசிங்கிகளின் தனி கணக்குகளில் பதுங்கி கொள்கிறது

 வெளிநாட்டில் இருந்து வருகின்ற பணம் எப்படி எல்லாம் சுயநலத்திற்கு பயன்படுகிறது என்பதை பல கிறிஸ்தவ போதகர்கள் வாய் சண்டை போடும்போதே தெரிந்து கொள்ளலாம் 


 சமீபத்தில் நான் ஏஞ்சல் தொலைக்காட்சியில் சாது செல்வராஜ் என்பவரின் சொற்பொழிவை கேட்டேன்

 அதில் அவர் ஒரு கிறிஸ்தவ போதகர் மாணவர் விடுதிக்காக வருகின்ற பணத்தை தனது சொந்த செலவிற்கு பயன் படுத்தி கொண்ட விதத்தை மிக அழகாக எடுத்து சொன்னார்

 அவர்கள் மூலமாகவே இப்படி சில விஷயங்கள் வெளி வரும்போது வராமல் மறைக்கப் பட்ட உண்மைகள் எத்தனையோ இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்

 எனவே ஏசுவை ஏற்றால் வறுமை ஒழியும் என்பது அப்பட்டமான பொய் மட்டும் அல்ல சரியான பித்தலாட்டமும் ஆகும்

  மதம் என்பது மனிதனின் மனதை செம்மைப் படுத்தும் உயர்ந்த கருவியாகும் இதை வியாபார பொருளாக்கும்  போது அந்த குறிப்பிட்ட மதத்தின் மீதும் அதன் வழிபடும் மூர்த்தியின் மீதும் மரியாதையை குறைந்து விடுகிறது

 ஏசுவின உபதேசங்கள் உன்னதமானவைகள் அவற்றை புரியாத போதகர்கள் சந்தைக்கடை ஆக்கி வியாபாரம் செய்கிறார்கள்

 ஊசியின் காதுகளுக்குள் ஒட்டகங்கள் போனாலும் பணக்காரர்கள் பரலோக ராஜ்யத்தின் வாசலுக்கு கூட வர மாட்டார்கள் என்பது தான் ஏசுவின போதனை

இதை அறியாத போதகர்கள் எங்கள் மதத்திற்கு வா பணக்காரர்கள் ஆகலாம் என்று புழுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார்கள்

தவறான நம்பிக்கைகளை தவறான வழிக்காட்டுதலை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது சட்டப் படி குற்றமாகும்

 இதை தடுக்க நமது அரசுக்கு துணிச்சல் இறந்தால் மத மாற்ற தடை சட்டத்தை மீண்டும் அமுலுக்கு கொண்டுவரலாம்

 அல்லது குறைந்த பட்சம் மத மாற்றத்தை நோக்கமாக கொண்ட மத பிரச்சாரங்களுக்கு தடையாவது விதிக்கலாம்

  விநாயகர் சதுர்த்திக்கு சுண்டல் வாங்க வர துணிச்சல் இல்லாத அரசியல் வாதிகள் கிறிஸ்துமஸ் அன்று கேக் வெட்ட மட்டும் கூச்சம் இன்றி வீதிக்கு வருவார்கள்

 அப்படிப் பட்டவர்கள் இப்படி செய்ய நிச்சயம் முன் வரமாட்டார்கள்

 இருந்தாலும் செவிடன் காது என்று தெரிந்தும் ஊதுகிற சங்கை ஊதி வைப்போம் என்பதற்காகவே இதை எழுதுறேன்

 யார் காதிலாவது விழுந்தால் நாட்டுக்கு நல்லது


Contact Form

Name

Email *

Message *