Store
  Store
  Store
  Store
  Store
  Store

சமாதி கட்டினால் சந்தோசம் போகுமா...?

வணக்கம் ஐயா...
  
   உங்களோட சில கட்டுரைகளை நான் படித்து இருக்கிறேன்...ஒரு சில முரண்கள்    இருந்தாலும் பிடித்து இருக்கிறது...
  
   எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது...இதற்க்கு உங்களால் விளக்கம் தர முடியும்
   என்று நினைக்கிறன்...
  
   நான் கேட்கும் கேள்வியின் மையம் சமாதி கட்டுவது...
  
   இந்து மதத்தில் சமாதி கட்டுவதற்கு எதாவது விதி முறை இருக்கிறதா...
  
   இதை ஏன் கேட்கிறேன் என்றால்...என் தந்தையார் அவர்கள் என் தாத்தாவிற்கு இறந்தபிறகு சமாதி கட்டி தினமும் வணங்கி வந்தார்....ஆனால் பாருங்க என் தாத்தா இறந்த பிறகு படி படியாக என் தந்தையின் தொழில் முடங்கியது....
 
   குடும்பம் பிரிந்தது...ஒன்றாக இருந்த தம்பி அண்ணன்மார்கள் பிரிந்தார்கள்....அதன் பிறகு

   எந்த ஒரு நல்ல காரியமும் எங்கள் வீட்டில் நடக்க வில்லை....என்னோட திருமணம் கூட   காதல் திருமணம் தான்...வீட்டில் பல பிரச்சனைக்கு மத்தியில் தான் நடந்தது...
  
   இப்படி பல சோகம் கடந்த பத்து வருடங்களாக நடந்து கொண்டு
   இருக்கிறது....இதற்க்கு பலர் சொல்லும் காரணம்
  
   என் தாத்தாவிற்கு சமாதி கட்டியது தான் என்று சொல்கிறார்கள்....
  
   எனக்கு ஒன்றும் புரியவில்லை....நீங்கள் தான் இதற்க்கு விளக்கம் தர
   வேண்டும்....நான் வேளை நிமித்தமாக இன்று பல ஊருக்கு சென்று விட்டேன் ....ஆனால்
   பாருங்க இன்றும் எங்கள் குடும்பம் ஒரு புயலின் மத்தியில் தான் உள்ளது....
  
   இதற்க்கு எல்லாரும் கூறுவது சமாதி கட்டியது...
  
   உங்கள் மேன்மையான விளக்கத்திற்க்காக காத்து இருக்கிறேன்...
  
   நன்றி    
 Narendran Rajan


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwmcR0Wf3DKp1OPFR7rGorYDzjJUBCP8pj1sUZ0xmupS3cZ8taTuXSuI44UEKy-GzNyqRo7Ez9WfEzoV15os5bE7cMvbiL6kNS8azWRVmV3qVBwaqLawPwi82HrDqOX2KmUrIp5H9gz5Ao/s1600-r/sriramanandaguruji_original.jpg
  • லகில் சடங்குகள் இல்லாத மதங்களே கிடையாது இந்து மதத்தை தவிர மற்ற மதங்களில் முக்கியமான சடங்குகள் பல உலக முழுவதும் ஒரே மாதிரியாக தான் கடைபிடிக்கப் படும் ஆனால் நமது இந்து மதத்தில் தான் இடத்துக்கு இடம் ஊருக்கு ஊர் ஏன் வீட்டுக்கு வீடு கூட சடங்குகள் வேறுப்பட்டும் முற்றிலுமாக மாறுப்பட்டும் இருக்கும் இதற்க்கான காரணம் இந்து மத பண்பாட்டின் தாக்கம் என்பது மண்ணோடும்  மனிதனின் மனதோடும் அவனின் அபிலாஷைகளோடும் பின்னி பிணைந்து இருப்பதே ஆகும் இறப்பிற்கு பிறகு இறுதி சடங்குகள் நடத்துவதில் கூட பல் வேறுப்பட்ட நடை முறைகள் பின்பற்ற படுகின்றன சிலர் சாவுக்கு மேளம் அடித்து நடனம் ஆடுகிறார்கள் சிலர் சங்கு மட்டும் ஊதுகிறார்கள் வேறு சிலர் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மெளனமாக மயானம் செல்கிறார்கள் இதில் எது தவறு எது சரி என்று சொல்லிவிட முடியாது கால காலமாக ஒவ்வொரு குடும்பமும் தனக்கென்று சில பாராம்பரியங்களை கடைப்பிடித்து வருகிறார்கள் அதில் ஒன்று தான் இறந்தவர்களுக்கு சமாதி கட்டுதல் ஆகும் உங்கள் குடும்ப வழக்கப்படி சமாதி கட்டும் பழக்கம் இல்லாது இருந்திருந்தால் அதை துவங்குமுன் பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும் இப்போது அது நடந்து முடிந்த கதை நம் முன்னால் நிற்கும் கேள்வி அப்படி கட்டினால் குடும்பம் பல சோதனைகளை சந்திக்குமா என்பது தான் இதுவரை இல்லாத ஒரு புது பழக்கத்தை உண்டாக்கும் போது இயற்கையாக சோதனை வந்தால் கூட இதனால் தான் ஏற்பட்டதோ என்று எண்ணுவது மனித இயல்பு ஆனால் முழுமையாக ஆராயும் போதும் சாஸ்திரங்க்களில் பதிலை தேடும் போதும் அதற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்றே பதில் கிடைக்கிறது அதாவது என்னை பொறுத்தவரை உங்கள் தாத்தாவு சமாதி கட்டியதனால் தான் துயரங்கள் தொடர்கின்றன என்று சொல்ல இயலாது அதற்கு பூர்வ ஜென்ம கர்மா பித்துருக்கள் மற்றும் குல தேவதை தோஷங்கள் என்றும் நீங்கள் குடியிருக்கும் பூர்விக வீட்டின் வாஸ்து குறைப்பாடுகள் என்று எத்தனையோ சொல்லலாம் அதில் எதுதான் காரணம் என நுணுக்கமாக ஆய்வு செய்தால் கண்டுபிடித்து விடலாம் ஆனால் நிச்சயமாக சமாதி கட்டியது தான் காரணம் என நீங்கள் தொடர்ந்து நம்பினால் அது தவறு எனவே தொடர் துயரங்களுக்கு உண்மையான காரணம் எது என தக்கவரை கலந்து ஆலோசனை செய்து தீர்வு காணுங்கள் எந்த வழியும் கிடைக்காத போது எத்தகைய தோஷங்களையும் உடனடியாக நிவர்த்தி செய்யும் திலக் ஹோமத்தை வாரனாசி அல்லது ராமேஷ்வரம் போன்ற புனித ஷேத்திரங்களிலோ செய்யுங்கள் முடியா விட்டால் பவானி கூடுதுறையிலாவது அம்மாவசை திதியில் செய்யுங்கள் நிச்சயம் உங்கள் கஷ்டத்திற்கு விடிவு கிடைக்கும் நாராயணன் துணை செய்வான்


http://www.touchstone-blog.com/wp-content/uploads/2010/07/Question.jpg     மேலும் கேள்வி பதில் படிக்க 

    Contact Form

    Name

    Email *

    Message *