Store
  Store
  Store
  Store
  Store
  Store

இந்த குழந்தையை முதலில் வாழ்த்துங்கள்!

    ரு மனிதனின் வாழ்க்கையில் ஒரு வயது என்பது ஒன்றும் இல்லை ஆனால் அவனை ஆசையோடு பெற்றவனுக்கு தன் குழந்தை ஒரு வயதை கடந்து விட்டது என்பது எவ்வளவு சந்தோசம் எத்தனை மன நிறைவு

 இதை நம் உஜிலாதேவி தளம் இன்று தனது ஒரு வயதை பூர்த்தி செய்யும் நாளில் நாம் அனைவரும் அனுபவிக்கிறோம்

  இந்த தளம் திட்டமிட்டு உருவானது அல்ல ஒரு நாள் குருஜியிடம் பேசிகொண்டியிருந்த போது உங்கள் எழுத்துக்களை புத்தகமாக வெளியிடுவதோடு மட்டும் இல்லாமல் உடனுக்குடன் இனைய தளத்திலும் வெளியிடலாமே அது பலரின் பார்வைக்கு படும் சிலருக்கு பயனும் படும் என்று சொன்னோம்


 அப்படியா தாரளாமாக செய்யுங்கள் என உடனே ஒப்புதல் தந்தார்

 இருந்தாலும் இது சரிப்பட்டு வருமா தொடர்ச்சியாக செய்ய முயுமா என்று நன்றாக யோசித்து அதன் பிறகே செயல் படுங்கள் என்றார்

  எண்ணித் துணிக கர்மம் துணிந்த பின் எண்ணுவது என்பது இழுக்கல்லவா?

 குருஜி அப்படி சொன்னதற்கு நிறைய காரணம் உண்டு முதலில் எங்களுக்கு அவர் தரும் அடுக்கடுக்கான வேலைகள் அதை முடிப்பதற்கு போதாத கால நேரம் ஓய்வே இல்லாத போது இன்னொரு புதிய வேலையை துவங்கினால் ஒன்று சோர்வு வரும் அல்லது ஒழுங்கற்ற முறையில் செய்ய வேண்டிய நிலை வரும்


 இறைவன் கிருபையில் இதுவரை அப்படி எதுவும் எங்களுக்கு ஏற்ப்பட வில்லை

 ஒரிறு நாளில் இணையதள தொடர்பு துண்டிப்பு ஏற்பட்டதாலும் மின்சார துண்டிப்பு நடந்ததாலும் பதிவுகளை செய்ய முடியாமல் போனதே தவிர மற்றப்படி ஒருநாள் கூட மனசோர்வினால் வேலை நிற்க வில்லை

  அடுத்ததாக குருஜியின் கருத்து சில நேரம் மந்த மாருதமாக வீசும் சில நேரம் சண்ட மாருதமாக தாக்கும்

  இதனால் படிக்கும் வாசகர்களில் சிலர் கோபப்படலாம் கொந்தளிக்கலாம்

  இதனால் தன் பணிக்கு எதாவது இடைஞ்சலும் ஏற்படலாம் என அவர் எண்ணினார் இந்த எண்ணம் நூற்றுக்கு நூறு நடந்தது

   குருஜியின் எழுத்துக்களை படித்து விட்டு பாராட்டியது பத்து பேர் என்றால் காட்டமாக விமர்சித்தது ஐந்து பேராகும்


  சிலர் பின்னூட்டங்களிலும் சிலர் தொலைபேசியிலும் வேறு சிலர் நேரிலும் கூட மிக கடினமான வார்த்தைகளை கொண்டு தாக்கினர்

  மற்றும் பல அன்பர்கள் எல்லாவற்றையும் மறைக்காமல் நறுக்கு தெரித்தார் போல் வெளிப்படையாக எழுதுகிறீர்கள் இதனால் உங்களுக்கு பாதுகாப்பு குந்தகம் ஏற்பட கூடும் என அன்புடன் எச்சரித்தார்கள்

 கடவுளின் சித்தம் அப்படி என்றால் அதை தடுக்க நாம் யார் என்று குருஜி சொன்னப்போது நிஜமாகவே நாங்கள் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பதைத்தோம்

 எழுதுவதில் அதிலும் குறிப்பாக வெகுஜன தொடர்பு சாதனங்களில் எழுதுவதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டோம்


 ஆனாலும் ஆயிர கணக்கான நல் உள்ளங்கள் எங்களிடம் தொடர்பு கொண்டு தங்களது கருத்துகளை நெஞ்சுறுக சொல்லும்போது அபாயத்திற்குள் மறைந்திருக்கும் ஆனந்தத்தை கண்ணார காணும் சுகத்தை என்னவென்பது

  பாராட்டுகள் ஒன்றா இரண்டா இப்படியும் கூட பாராட்ட முடியுமா என்று சொல்லும் அளவிற்கு ஆச்சரிய படும் அளவிற்கு பாராட்டியவர்களும் உண்டு

  இந்த எழுத்து பணியில் குருஜி கண்ட வெற்றி அவர் எழுதிய தன்னம்பிக்கை பதிவுகளை படித்து விட்டு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்த சில இளைஞர்கள் மனம் மாறி தங்களது வாழ்க்கையை புதுபித்து கொண்டதாக குருஜியிடமே சொன்னது ஆகும்

 ஒரு வார்த்தையால் மற்றவரின் வாழ்வை மாற்றுவது சாதாரண செயலா என்ன? அதற்காண வாய்ப்பை இறைவன் இந்த தளத்தின் வழியாக தான் கொடுத்திருக்கிறார்


 அதற்கு அவனின் திருவருள் பெருங்கருனைக்கு எத்தனை வந்தனம் சொன்னாலும் தகும்

 இன்னும் வரக்கூடிய காலங்களில் பல புதிய விஷயங்களை குருஜி நம்மோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறார்

 அவைகள் நிச்சயம் சமூகத்திற்கு வழிக்காட்டியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை

 இந்த வருடம் பல விதத்திலும் ஆதரவு தந்த வாசகர்களும் இன்று முதல் புதியதாக வர துவங்கி இருக்கும் வாசகர்களும் வருங்காலத்தில் தொடர்ந்து இதே போலவும் இதை விட சிறப்பாகவும் ஆதரவு தருவார்கள் என உறுதியாக நம்புகிறோம்

   பிறந்து ஒரு வயதுயாகி உள்ள உஜிலாதேவி இணையதள குழந்தையை வாசக பெற்றோர்கள் பாராட்டி சீராட்டி ஆசிர்வதிபார்கள் என நம்பிக்கை உடன் உங்களிடம் குழந்தையை விட்டு விட்டு எங்கள் பணியை தொடர ஆரம்பிக்கிறோம்

இப்படிக்கு என்றும் குருவின் பணியில்

V.V.சந்தானம்
R.Vவெங்கட்ரமணன் 
P.சதீஷ் குமார்

Contact Form

Name

Email *

Message *