( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

   எந்தவொரு செயலுக்கும் பெண்களேயே குற்றம் சொல்லுவது ஆணாதிக்க உலகத்தின் வேலையாய் போச்சி ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்ற பழமொழியை எடுத்துக் கொள்ளுங்கள் பெண் நினைத்தால் எல்லாவற்றையும் அழித்து விடுவாளா? அல்லது அழிவுக்குத்தான் காரணமாகி விடுகிறாளா ஆண்களின் ஆதிக்க வெறியாலேயே சாம்ராஜ்யங்கள் சரிந்தன வீழ்ந்தன இதன் இடையில் பெண்கள் பகடைக் காய்களாகக்கப் பட்டார்கள் என ஒரு அம்மையார் கோபப்பட்டார்

 அதற்கு நான் எந்த அர்த்தத்தை புரிந்து கொண்டு நியாயமா? என்று கேட்கிறீர்கள் என்பது எனக்கு புரிகிறது, நீங்கள் எடுத்துக் கொண்ட அர்த்தம் சொல்லப்பட்ட பழமொழிக்கான விளக்கமல்ல, அதற்கான விளக்கம் ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்து. புகுந்த வீட்டிற்கு அனுப்பும் பொழுது மணமகன் வீட்டார்க்கு எச்சரிக்கையாக சொல்லப்பட்ட பழமொழி இது, அதாவது இரு வீட்டாருடைய அடுத்த தலைமுறையைக் கருவாக்கி உருகொடுப்பதும். கருவை சிதைத்து உருகலைப்பதும் இரண்டும் இந்த பெண்ணாலேயே நிகழ்கிறது, ஆகவே தங்கள் தலைமுறை தழைக்க வேண்டுமென்றால் மனநிறைவோடு வைத்துக் கொள்ள வேண்டும், அப்படி வைத்துக் கொண்டால் தான் சுகமான பிரசவத்தை அவள் அனுபவித்து அவர்களின் வாரிசை பெற்றெடுப்பாள்,


இதைதான் ஆவதும் “பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே” என்று குறிப்பிட்டார்கள், இந்த பழமொழி சொல்லப்பட்ட காலக்கட்டத்தில் பெண்கள் ஒரு சிறு துன்பத்தையும் தாங்கிக் கொள்ளாமல் வயிற்றில் கருவை சுமந்து கொண்டிருந்தாலும் ஆற்றிலோ. கிணற்றிலோ. ஒரு முழக்கயிற்றிலோ தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வார்கள், இதை தடுக்கவே இந்த பழமொழி சொல்லப்பட்டது,

இப்பொழுது சோதித்து பாருங்கள் இந்த பழமொழி தவறா? என்று இன்று முதல் நீங்களும் இந்த பழமொழியை தலைநிமிர்ந்து சொல்லிக் கொள்ளலாம் “ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று”என பழமொழிக்கு விளக்கம் சொன்னேன் இந்த விளக்கம் சரியானதுதான் என நான் நினைக்கிறேன் அல்லது வேறு யாதாகினும் விளக்கம் உண்டா?

+ comments + 12 comments

Lawrence
02:33

மிக சரியான விளக்கம், சார். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி

Anonymous
02:33

தவறாக புரிந்து கொண்ட ஆண்கள் , பெண்கள் திருந்துவார்கள் . மேலும் இது போல் எழுதுங்கள். நன்றி .sharmila

GOBI
09:21

SEE THE IMAGE
[b]https://mail.google.com/mail/h/zkq3p6gfeczr/?view=att&th=12ba9347c0756b41&attid=0.8&disp=emb&realattid=c1342325069e9008_0.1.1&zw [/b]

Anonymous
10:32

நண்பரே இந்த புகைப்படம் தங்களின் மின்னஞ்சலில் உள்ளவை அதானால் இந்த புகைப்படத்தை பயன்படுத்த முடியாது

இந்த புகைப்படம் மற்றொரு பதிவில் நீங்கள் வெளியிட்டது இதை பார்க்கவும்

[im]http://2.bp.blogspot.com/-9ZML547_U9Y/TizlfjY8JZI/AAAAAAAAADA/atbdp1OT1tk/s1600/mechala.jpg[/im]


[ im ] pic url [ /im ]

நண்பரே மேலே உள்ள கோடிங்கை இடைவெளி இல்லாமல் டைப் செய்யவும் pic url என்ற இடத்தில் உங்களுக்கு பிடித்த புகைப்படத்தின் pic url கொடுக்கவும்

13:50

ஓர் ஆண் சீரழிந்து போனால் அது அவனுக்கு மட்டுமே இழப்பு. ஆனால், ஒரு பெண் சீரழிந்து போனால் அது அந்த ஒட்டுமொத்த குடும்பதிற்குமே பேரிழப்பு.

குடும்பம், பண்பாடு, கலாசாரம் போன்றவற்றை கட்டிக் காப்பாற்றுவதில் பெண்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது.

எனவேதான், நல்ல ஒரு குடும்பம், பண்பாடு, கலாசாரம் அமைவதும் (ஆவதும்) பெண்ணாலே! அப்படியில்லை என்றால் அது அழிவதும் பெண்ணாலே என்று பொருள் படும்!!!

என்னுடைய கருத்தை ஏற்க்கனவே ஒரு பதிவில் சொல்லி இருக்கிறேன்..நீங்கள் அதை இங்கே படிக்கலாம்
http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2011/05/blog-post_07.html
நன்றி

@Abdul Rahman - Dubaiஅட என்னுடைய கருத்தையே நீங்களும் சொல்லி இருக்கிறீர்களே :)

Anonymous
14:25

R.Puratchimani said...

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்றால் என்ன?

காலம் காலமாக இந்த பழமொழி வழக்கத்தில் உள்ளது. இதன் பொருள் என்ன?
நல்லவை ஆவதும் பெண்ணாலே கேட்டது அழிவதும் பெண்ணாலே என்று சொல்கிறார்கள்...

எனக்கு தெரிந்த ஒரு ஜோதிடர் என்ன சொல்றார்...
மிருகமா இருக்கிற மனுஷன் மனுஷனா “ஆவதும் பெண்ணாலே”
மனுஷனுக்குள்ள இருக்கிற மிருகம் “அழிவதும் பெண்ணாலே”
அவர் ரொம்ப நல்ல விதமாக ஒரே பக்கமா சிந்தனை செய்திருக்கின்றார்.

நான் என்ன சொல்கிறேன்...
ஒருவன் உருவாவதும் பெண்ணாலே ....அழிவதும் பெண்ணாலே!
ஒரு குடும்பம் உருவாவதும் பெண்ணாலே.. ...அழிவதும் பெண்ணாலே!!
ஒரு சமுதாயம்,கலாச்சாரம், பண்பாடு உருவாவதும் பெண்ணாலே.. ..அழிவதும் பெண்ணாலே!!!

இது பெண்ணுக்கு மட்டுமே பொருந்துவது இல்லை. ஆணுக்கும் தான்.
ஆவதும் ஆணாலே...அழிவதும் ஆணாலே. என்றும் சொல்லலாம் .
இருந்த போதிலும் ஒரு சமுதாயம்,கலாச்சாரம், பண்பாடு உருவாக பெண்ணின் பங்களிப்பு ஆணை விட சற்று கூடதலாகவே உள்ளதாக நான் உணர்கிறேன.


எந்த ஒரு கலாசாரத்தையும் பண்பாட்டையும் கட்டிக் காக்க கூடிய சக்தி பெண்ணுக்கு சற்று அதிகமாகவே உள்ளது . (அவளுக்கு மட்டுமே உள்ளது என்று கூடசொல்லலாம்)

ஆங்கிலத்தில் பெண்களை "weaker" செக்ஸ் என்று சொல்வார்கள். அது உடல் ரீதியாக வேண்டும் என்றால் பொருந்தலாம். உள்ளத்து ரீதியாக பார்த்தல் ஆணே "weaker" செக்ஸ் . especially in sex.

ஒரு பெண் சற்று ஜாடை காட்டினால் போதும் ஒன்பது ஆண்கள் அவனது குடும்ப அழிவிற்கு காரணமாக ஆகிவிடுவார்.

இதுவே ஒரு ஆண் சற்று ஜாடை காட்டினால் ஒன்பது பெண்கள் அவர்களது குடும்ப அழிவிற்கு காரணமாக ஆகிவிடுவார் என்று சொல்ல முடியாது. (இன்று சில நகரங்களில் சில பெண்களும் அப்படி மாறிக்கொண்டு வருகிறார்கள் என்பது வருத்தமளிக்கும் செய்தி).

குடும்பம், கலாச்சாரம், பண்பாடு எல்லாமே பெண்ணை மையமாகவே வைத்து அமைந்துள்ளது.
அவளால் தான் மிருகம் மனிதனாவான்....மனிதன் மிருகமாவான்...(.சில நேரங்களில் தத்துவ ஞானியாக ஆவதும் உண்டு).
நல்லது ஆவதும் பெண்ணாலே
கெட்டது அழிவதும் பெண்ணாலே !
என்பதற்கு இலக்கணமாக எந்த பெண் இருக்கின்றாளோ அப்படிப்பட்ட பெண்களே தெய்வம்...(உங்கள் குல சாமி அவள் தான்)....அவள் இருக்கும் வரை தான் இந்த பூமியில் அனைவரும் அமைதியாக வாழ முடியும்.

MOHAN
18:47

பாற்கடலில் வாசுகி பாம்பை கயிறாகவும், மேரு மலையை மத்தாகவும் கொண்டு அமிர்தம் கடைந்த போது மோகினி அவதாரம் எடுத்து அமுதம் தேவர்களுக்கு கிடைக்கும்படி செய்தது, நல்லவை ஆவதும் பெண்ணாலே என்பதற்கு எடுத்துக்காட்டு. பராசக்தி மகிஷாஷுரமர்த்தனி அவதாரம் எடுத்து அசுரர்களை அழித்தது தீயவை அழிவதும் பெண்ணாலே என்பதற்கு எடுத்துகாட்டு. ஆவதும் அழிவதும் என்பதற்கு இப்படி தான் பொருள் இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.MOHAN now in USA

M.Natrayan
21:12

////ஓர் ஆண் சீரழிந்து போனால் அது அவனுக்கு மட்டுமே இழப்பு. ஆனால், ஒரு பெண் சீரழிந்து போனால் அது அந்த ஒட்டுமொத்த குடும்பதிற்குமே பேரிழப்பு/////
நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரிதான். இந்திய பண்பாடு இங்குதான் உள்ளது. வெளிநாட்டு பண்பாட்டால் நாம் சீரலிக்கப்ப்டுகிறோம். ஒருவனுக்கு பலமனைவிகள் இருந்தால் இன்னும் எப்படி இருக்கும் என்று அனைவரும் சிந்தித்துப்பார்க்கவேண்டும்.

14:32

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி..
இன்றிய கால கட்டத்தில்
சில திமிர் பிடித்த பெண்களை மணமுடித்தால்..அவர்களது கட்டளைக்கு கீழ் பதியாவிட்டால் IPC 498a , மற்றும் பெண் வன்கொடுமை போன்ற பொய் காஸ் கலை போட்டு மாப்பிள்ளை வீட்டாரையும் கணவரையும் சிறைக்கு தள்ளி புகுந்த வீட்டை பழி வாங்கும் இந்த பெண்களுக்காக நமது முன்னோர்கள் இந்த பசமொழி உருவாக்க பட்டு இருக்கவேண்டும்.

Anbu(nilai_malaysia)
11:38

oru sila pengal seiyum tavarai oddu mottamageh pen kulathai kuari solluvathil niyayam illai!!evonoh kavinchan pennal patikaa paddathall solli vecha varthai athu!! athu unmmai yendral yen innum kathal kalyanam kulanthai kutti yellam nadakirathu!!so avathum alivathum iru palarukkum undu!!!angalaal paleh pengal valkai ilanthirapathai naam maranthu vide koodathu!!!


Next Post Next Post Home
 
Back to Top