( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

பிரதமர் மேல் விழுந்த ராஜ பார்வை

  துரை மேலமாசி வீதியில் கருப்பண்ண செட்டியார் பாத்திர கடை வைத்திருக்கிறார் அங்கு எடுபிடி வேலை செய்ய சேகர் இருக்கிறான்

 பாத்திர வியாபாரம் என்றாலே புதிய பாத்திரம் விற்பதோடு மட்டும் நிற்பது இல்லை

பழைய பாத்திரங்களை வாங்குதல் ஈயம்,பித்தளை வியாபாரம் என்று எல்லாமே இருக்கும்

 நம்ம சேகர் பலர் திருடி கொண்டுவரும் மின்சார இலாக்காவின் அலுமினிய ஒயர்களை சட்ட விரோதமாக வாங்கி விட்டான் என கைது செய்யப்படுகிறான்

 போலீஸ்காரர்கள் சேகர் தான் திருட்டு பொருளை வாங்கிய குற்றவாளி என்று வழக்கு பதிவு செய்யலாம் பத்திரிக்கைகளும் அதை செய்தியாக போடலாம் மக்களும் நம்பலாம்

ஆனால் உண்மை நிலையை ஆராய்பவர்களுக்கு தான் சேகர் மட்டும் தன்னைந்தனியாக இந்த வேலையை செய்திருக்க முடியாது

கருப்பண்ண செட்டியாரின் கண்ணசைவும் கையசைவும் இல்லாமல் ஒரு துரும்பு கூட நகர முடியாது என்பது தெரியும்

அலைக்கற்றை ஊழலிலும் நடந்திருப்பது இது தான்

தேசிய அரசியலில் திமுகவின் பலம் என்பது பாத்திர கடை பையனுக்கு சமமானது தான்

கங்கிரஸ் என்ற முதலாளியின் பலம் தன்னோடு இருக்கிறது என்ற இறுமாப்பில் திமுக பெரிய பேயாட்டம் போட்டதே தவிர தனது சொந்த பலத்தால் அல்ல

 இவ்வளவு பெரிய ஊழல் மேலிடத்து ஆசிர்வாதம் இல்லாமல் நடைபெற்றிருக்கவே முடியாது

திரு.ராசா ,சிதம்பரம் மற்றும் பிரதமரை மட்டும் தான் இப்போது சந்திக்கு இழுத்திருக்கிறார்

 ஆனால் இவர்களது கைகளுக்கு மேலே இன்னும் உயரத்தில் நிஜமான ஆசிர்வாதம் வழங்கிய கை இருக்கிறது

கால நேரம் கூடி வரும் போது எவ்வளவு உயரத்தில் தவறு செய்தவன் இருந்தாலும் அவன் தரைக்கு வந்து ஆக வேண்டும்

அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை

 அப்போது தீர்ப்பு எழுத போவது நீதிபதிகள் மட்டும் அல்ல மக்களும் கூட தான்


+ comments + 12 comments

GOBI
08:58

ஒவ்வொரு மனிதனுக்கும் தான் செய்வது சரிதான் என்ற எண்ணம் இருக்கும்.

பத்து கொலைகள் செய்தவனிடமும் தான் செய்தது சரிதான் என்ற எண்ணம் இருக்கும் அவன் தன்னை விட அதிகமாக பதினைந்து கொலைகள் செய்தவனை கை காட்டுவான் .

அதே போல் குண்டுசி திருடியவனும் தான் செய்தது சரி என்றும் தன்னை விட ஒருவன் ஆணியை திருடுகிறான் என அவனை கை காட்டுவான் .

ஆக மொத்தத்தில் தவறு செய்பவனுக்கு தான் செய்வது சரி என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும் .அப்படி இல்லை என்றால் அவன் மனசாட்சியே அவனை உறுத்தும்.

மக்கள் ஒழுக்கத்தை விட்டுவிட்டு போட்டி போடுவதிலேயே குறியாக இருகின்றனர் பரிணாம வளர்ச்சின் படி எந்த உயிரினம் போட்டி போட்டு வாழ்கிறதோ அது மட்டுமே வாழ முடியும் .


உதாரணமாக காட்டில் மான் வேகமாக ஓடுவதால் மட்டுமே அது இன்னமும் வாழ்கிறது .ஒருவேளை அது மெதுவாக ஓடுவதாக இருந்தால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதை சிங்கமும் புலியும் அழித்திருக்கும்

11:00

//இன்னும் உயரத்தில் நிஜமான ஆசிர்வாதம் வழங்கிய "கை" இருக்கிறது//

அந்த கை யாருடைய கை என்று எளிதாக புரிகிறது!!!

நண்பர் சவுக்கு, நம்ம மண்ணு மோகன் சிங்கத்தை இன்று துவைத்து காயப்போட்டு உள்ளாரே!

http://www.savukku.net/home1/1086-2011-07-25-17-10-25.html

சவுக்கு, மண்ணு மோகன் சிங்கத்தை விமர்சனம் செய்வதில் முழுக்க முழுக்க அரசியலே காரணமாக இருக்கிறது. (குறிப்பாக ஈழத் தமிழர்கள் விசயத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக துரோகம் பற்றி)

ஆனால், உஜிலாவின் "இந்தியாவை ஆள்வது பிணம்" எழுத்தில் அரசியலையும் தாண்டி வேறு ஒரு "நெடி" அடிக்கிறதே!!!

Anonymous
11:34

அருமையான பதிவு குருஜி..உண்மையை கதை வடிவில் அருமையாக விளக்கியுள்ளீர்கள்

இடத்கெல்லாம் காரணம் என்ன? இந்தியர்களின் குறிப்பாக ஹிந்துக்களின் அறியாமை!ஏமாளித்தனம் ஐயோ! பாவம், விதவை, கணவனை கொடூரமாக கொன்றுவிட்டார்கள்.எதோ ஒரு நாட்டில் பிறந்து, இங்கே திருமண செய்து, கணவனை பலி கொடுத்து , சொந்த நாடு திரும்பாமல், இங்கேயே வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்யும் தியாக திருச்சுடர்!

இப்படி உணர்ச்சிவசப்பட்டு சிந்தித்து , எப்போதும் ஏமாளியாக போகிறவர்கள் நம் ஹிந்துக்கள்.அன்றே பிஜேபி கேட்டார்கள். அதிகாரம் இல்லாத பொம்மை தலைவரா? அல்லது சிங்கமாக செயல்படும் இரும்பு தலைவரா என்று!

போலி மதசார்பின்மைக்கு மயங்கி, கட்சி ரீதியாக, சித்தாந்த ரீதியாக மதம் மொழி,இனம் ரீதியாக பிளவு பட்டு, கொள்ளையடிக்கும் கூட்டம் கையில் ஆட்சியை கொடுத்துவிட்டு ,இன்று லட்சம் கோடி மக்கள் பணம் கொல்லையடிக்கபட்டதே என்று ஒப்பாரி வைப்பதில் என்ன பயன்?

கட்டாய மதம் மாற்று தடை சட்டம், ஆர்பாட்டம் செய்யும் அரசாங்க வேலை செய்பவர்களை நீக்கியது, சில இலவச திட்டங்களை ரத்து , போன்ற மக்களுக்கு நீண்டகாலதிக்கு பயன் தரும் முடிவுகளை எடுத்தால் , அன்று 7 கட்சி கூட்டணியுடன் , திருக்குவளை தீயசக்தி, தலைமையில், 40 நாடாளுமன்றம் தொகுதிகளையும் அள்ளி கொடுத்து, ஜெயலலிதாவை கடும் தோல்வியடைய செய்தார்களே!

அந்த தேர்தல் முடிந்த பிறகு, தி மு க தயவில் நடந்த மத்திய ஆட்சியில்தான் , இந்த மாபெரும் ஊழல் நடந்தது, இந்த காலத்தில்தான் , இலங்கை தமிழின அழிப்பும் நடந்தது. மத்தியில் தமிழநாட்டின் கொள்ளைகாரர்களின் தயவு தேவை. மாநிலத்தில் மத்திய கொள்ளைகாரர்களின் தயவு தேவை. ஆக 2 கொள்ளைகாரர்களும் கூட்டணி அமைத்து செய்த அநியாயங்கள் இவைகள்.இடத்கெல்லாம் அவர்களை மட்டும் குறை சொல்ல கூடாது! நம் மக்கள்தான் மிக பெரிய காரணம், முக்கியமாக ஹிந்து மக்கள்.

நாட்டுக்கு உண்மையாக சேவை செய்யும், தேச பக்தர்களை, தீவிர வாதிகள், மத வாதிகள்,பாசிச்கள் என்று மூளை சலவை செய்யம் எம்மாற்றுகாரர்களை நம்பி , அவர்கள் பின் போய்விட்டார்கள். என்னை போல ,இந்திய நாட்டுக்கு உண்மை தலைவன் யாரென்று அறிந்து அவரை ஆதரிப்பவர்களை கூட, மண்டையில் சரக்கு இல்லாதவன் என்று கூறுகிறார்கள். சில மாற்று மத நண்பர்கள்.

இந்திய எவ்வளவு கொள்ளையடிக்கபட்டலும் இவர்களுக்கு கவலை இல்லை. ஒருவருக்கு, இத்தாலி அம்மையார் ஆட்சி இருந்தால்தான் மத மாற்றம் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுலபமாக நடைபெறும். இன்னொருவருக்கு,வருவது எவராக இருந்தாலும் பரவாயில்லை. அனால், வரக்கூடாத ஒரு கட்சி இருக்கிறது. அது வந்தால், நம் ஜிஹாதி நண்பர்களின் முதுகெலும்பு உடைந்துவிடும் என்ற பயம்.


ஆக, நாடு முன்னேற்றம் பற்றி மக்களின் வாழ்வாதாரம் ,அடிப்படை வசதிகள், எல்லாம் இவர்களுக்கு தேவையில்லை அக்கறையில்லை இவர்களின் நோக்கம், எல்லாம், பிஜேபி என்ற கட்சி ஒருகாலும் மத்தியில் ஆட்சிக்கு வரகூடாது.

அனால், எனகென்னவோ, அடுத்த தேர்தலில், திருடிய கை முழுதாக வெட்ட படும் என்று தோன்றுகிறது. இவர்கள் செய்த ஊழல்களுக்கு, போலி மதசார்பின்மை வேசதித்கு, கட்டாயம் மக்கள் தகுந்த தண்டனை தருவார்கள் என்று நினைக்கிறன்.தமிழ் நாட்டில் நடந்தது இந்திய முழுதும் நடக்கும்.நேரு குடும்பம் எப்போது அரசியலில் இருந்து அகற்றபடுகிறதோ, அப்போதே இந்திய ஒளிரும். இது நிச்சயம் நடக்கும். எல்லாம் வல்ல கிருஸன பரமாத்மா அருள் புரியட்டும்.

@kambathasanதிரு கம்பதாசன் அவர்களே, மிக மிகச் சரியாக சுருக்கமாக உண்மையை கூறிவிட்டீர்கள்.ஆனால் உங்களை அடுத்து ஒரு பேடி குரு ராமான‌ந்தரைப் பற்றி என்ன கூறியிருக்கிறான் என்று பாருங்கள்; அதை ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்கள்!

Anonymous
17:39

please delete these kind of commands..

Anonymous
17:42

இத்தகைய கருத்துகள் நமது தளத்தின் மதிப்பை குறைத்துவிடும். தயவு செய்து Administration ஒப்புதலுக்கு பிறகு கருத்துகள் தளத்தில் வருமாறு செய்யவும்.. நன்றி..

நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் உண்மையென்றாலும் முதலாளிக்கே தெரியாமல் அவரது கடையையே தனது பெயருக்கு மாற்றிக் கொள்ளக்கூடிய கருணாநிதி போன்ற வேலையாட்களும்இருக்கிறார்கள் சாமி......அண்ணாதுரை செத்தபிறகு தி.மு.க.வுக்கு தலைவராக யார் வந்திருக்கணும் ...?? இரண்டாவது வரிசையில் இருந்த நெடுஞ்செழியன்,ஏ.கே.மதியழகன்...ஆனா...மூனாவது,நாலாவது வரிசையில் இருந்த கருணாநிதி எப்படி சாமி முதல் இடத்துக்கு வந்தாரு..??? திராவிட முன்னேற்றக் கழகம்.. இப்போ திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி கழகம்-ன்னு ஆயிடுச்சு ..எல்லாம் கெரகச்சாரம்...

Anonymous
11:18

ஸ்ரீமான் குருஜி அவர்களுக்கு

நமஸ்காரம்.

தங்களது எண்ணங்கள் இந்தியாவின் அநேக மக்களின் பிறதிபலிப்பஹா உள்ளது.
அனால் தாங்கள் கூறியது போல் அந்த நல்ல நாள் எப்போது வருஉம். தங்களுடன் சேர்ந்து
நானும் அந்த கிருஷ்ணா பராமத்வவை வேண்டிகொள்கிறேன்

ராகவன்

Anonymous
07:14

தமிழை இப்படித்தான் எழுதவேண்டும் என்று நமக்கு ஆகிவிட்டதே என்று முதலில் நாம் நினைக்க வேண்டும். நினைத்து, இதற்க்கு மேலாவது நாம் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும். எனக்கு தமிழ் தட்டச்சு செய்யத தெரியும். அந்த அளவுக்காவது தமிழை நான் பழகி இருக்கிறேன். நேரடியாக தமிழ் தட்டச்சு செய்ய இதில் வழி செய்யவும்.


Next Post Next Post Home
 
Back to Top