( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர்


   தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவது கலைஞர் கருணாநிதி அவர்களின் தனிப்பட்ட சொத்தா என்ன?

 டாக்டர் ராமதாஸ் எழுதினால் தொண்டர்கள் குறைந்தா போய்விடுவார்கள்

 இதோ திண்டிவனம் தந்த திருவிளக்கு டாக்டர் ராமதாஸ் என்ற வன்னிய குலவிளக்கு எழுதும் கடிதத்தை சற்றேனும் படித்து பாருங்கள்

ஆனால் படிப்பதற்கு முன் ஒரு எச்சரிக்கை

 கடிதத்தில் உள்ள அவரின் ஆசையை ஆதங்கத்தை யாரவது குறை சொன்னால் நிச்சயம் அவர்கள் வீட்டுக்கு போகும் பாதையில் மரங்கள் வெட்டி போடப்படும் 
    ன்னையும் என் குடும்பத்தையும் வாழவைக்கும் வன்னிய சொந்தங்களே

 புதிய வாழ்வு கிடைக்கும் என நம்பி ஏமாந்து போன அணைந்த தீப்பந்தங்களே

நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தல் என்ற வெள்ளப்பெருக்கில் நாம் சவாரி செய்த திமுக என்ற ஓட்டை படகு தானும் கவிந்ததோடு அல்லாமல் நம்மையும் நட்டாற்றில் தள்ளி விட்டு விட்டது

 இனமான காவலனே தமிழ் குடி தாங்கியே நம்பாதே

 திமுக என்பது வஞ்சகர் கூட்டம் நெஞ்சில் இரக்கமே இல்லாத பொய்யர்களின் கூடாரம்

 அவர்களை நம்பி பாவம் என்பதை என்ன வென்று அறியாத பாமக வை பலிகொடுத்து விடாதே என்று  காடு வெட்டி குரு போன்ற ஆன்றோர்பெரு மக்கள் இடித்து சொன்னார்கள்

 அவர்களின் பேச்சி எனக்கு அப்போது வேம்பாக கசந்தது

 எத்தனை முறை கலைஞரோடு உறவு வைத்துள்ளோம் எத்தனை முறை அவரையே உதாசீன படுத்தி உள்ளோம் அப்போது எல்லாம் அவர் உதைத்த கைகளுக்கு கூட ஒத்தடம் கொடுத்தாரே இப்போதும் அப்படி தான் செய்வார் என்று நம்பி ஏமாந்து போனேன்

 முப்பத்து மூன்று இடத்தில் இருபது இடத்திலாவது வெற்றி பெற திருமங்கலத்தில் ஜனநாயக பணி செய்தது போல செய்து எப்படியும் நம் தலையை தப்ப வைப்பார்கள் என்று நினைத்தேன்

 வஞ்சிக்கப் படுவதற்காகவே வன்னியர்கள் உள்ளார்கள் என கலைஞர் மீண்டும் நிருபித்து விட்டார்

 சிலர் சொல்கிறார்கள் மத்திய சுகாதார துறையில் அன்பு மணி மகசூல் செய்த கோடிகளை கலைஞர் குடும்பம் சந்திக்கு இழுத்து விட்டு விட கூடாது என்பதற்காகவே அலைக்கற்றை ஊழலை பற்றி நான் வாய் திறக்க வில்லையாம்


 உண்மையில் அந்த ஊழல் நீதி மன்ற விசாரணையில் இருந்ததினால் வீணாக நாம் ஏன் பேச வேண்டும் அப்படி பேசினால் நீதி மன்றத்தை அவமதித்ததாகுமே என்பதனால் தான் வாய் மூடி இருந்தேன்

 தம்பி காடு வெட்டி குருவும்,வடிவேல் ராவணனும் சொன்ன பிறகு தான் அந்த ஊழலை பற்றி உலகமே பேசுகிறது என்பதை தெரிந்து கொண்டேன்

  சதா சர்வகாலமும் வன்னியர் நலத்தை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பதனால் செய்தி தாள்களோ மற்ற ஊடக செய்திகளோ என் காதுகளில் விழுவதே இல்லை

 பாழாய் போன தமிழ் மக்கள் பணத்திற்கு மதிப்பு கொடுக்காமல் இருப்பார்கள் என்று நான் கற்பணை கூட செய்ய வில்லை

 இது மட்டும் முன்பே தெரிந்திருந்தால் அதாவது இந்த ஊழல் விஷயத்தை மக்கள் பெரிதாக கருதுவது முன்பே தெரிந்திருந்தால் நமது கொள்கை வழி நின்று ஜெயலலிதா அம்மையாரின் கால்களில் விழுந்தாவது கூட்டணி சேர்ந்திருப்பேன் 


 ஆயிரம்தான் நான் திட்டி இருந்தாலும் கூட தாய் உள்ளத்தோடு அம்மையார் அரவணைத்து இருப்பார்

எல்லாம் கெட்டு போய் விட்டது இனி பேசி பயன் எதுவும் இல்லை

 உள்ளாட்சி தேர்தலிலாவது தனித்து போட்டி இடுவோம் என மிரட்டி பார்ப்போம்

 யாரவது பயந்து நம்மை கூட்டணிக்கு அழைத்தால் போய் சேர்வதற்கு புதிய காரணங்களை கண்டு பிடித்து மேடை தோறும் பேசலாம்

 யாரும் கூப்பிட வில்லை என்றால் தமிழகத்தில் லட்டர் பேடு கட்சிகளுக்கு குறைச்சலா என்ன

 அவர்களோடு கூட்டணி வைத்து கூப்பாடு போடுவோம்

பாஜக வோடு கூட்டணி சேர ஒரு ஜனதா கட்சி இருக்கும் போது நமக்கு ஆள் கிடைக்காதா

 எப்படியோ வன்னிய மக்கள் வாழ அன்புமணி ராமதாசை மத்திய மந்திரியாக்கி அழகு பார்க்க என்ன என்ன வழிகள் உண்டோ அத்தனையையும் செய்வோம்

அதற்கு என் சொந்தங்களான நீங்கள் கொடி பிடிக்க தயராக இருப்பிர்கள் என நம்புகிறேன்

தயவு செய்து யாரும் சிந்தனை செய்து புத்திசாலியாகி என் குடும்பத்தை நட்டாற்றில் விட்டு விடாதீர்கள்

அப்படி யாரவது செய்தால் அந்த பாவம் உங்களை சும்மா விடாது 

     இப்படிக்கு
டாக்டர்.ராமதாஸ்

    டாக்டர்.ராமதாஸ் அவர்களின் எழுத்து நடை எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாததால் எதோ தோராயமாக எழுதி விட்டோம்

 ஆனால் ஒன்று மட்டும் உண்மை அவர் இதே போலவே கடிதம் எழுதினாலும் கூட அதையும் ஏற்று கொள்ள தமிழகத்தில் சிலர் தயாராக இருக்கிறார்கள் அப்படி பட்டவார்கள் மாறும் போது தான் நாடும் மாறும்

+ comments + 27 comments

Anonymous
07:11

குருஜி நல்ல பதிவு.... இதை போலவே ஆன்மீகம் என்ற பெயரில் கேலி கூத்துக்களை நடத்தி இந்து மதத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி வரும் போலி சாமியாரும் இந்து விரோதியுமான நித்தியானந்த பற்றியும் ஒரு பதிவை போடுங்கள்.அவர் இந்துமதத்தின் பெயரில் குண்டலினி மூலம் யாரை வேண்டுமானாலும் பறக்க வைக்கிறேன் என்று கூறி அப்பாவி பக்தர்களை ஏமாற்றியும் இந்து மதத்திற்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகிறார் இதை பற்றியெல்லாம் ஒரு பதிவை போடுங்கள்..இது இந்துக்கள் விழிப்புணர்வு பெறவும்,சரியான ஆன்மிகத்தை தெரிந்துகொள்ளவும்,உண்மையான சன்னியாசிகளை அடையாளம் காணவும் உதவும்..

sri
08:56

தம்பி பெயர் இல்லாத பெருமாளு

இந்த லிங்க்கை படி அப்புறம் பதில் சொல்லு --

------------------------------------------------
காவி ஆடையில் பாவி மனங்கள்

http://ujiladevi.blogspot.com/2010/07/blog-post_26.html

------------------------------------------------
காவி கட்டினாலும் மூட்டை தூக்கி சாப்பிடு!

http://ujiladevi.blogspot.com/2011/04/blog-post_16.html

kummachi
10:30

நல்ல கற்பனை

kitcha
10:32

////முப்பத்து மூன்று இடத்தில் இருபது இடத்திலாவது வெற்றி பெற திருமங்கலத்தில்
ஜனநாயக பணி செய்தது போல செய்து எப்படியும் நம் தலையை தப்ப வைப்பார்கள்
என்று நினைத்தேன் ///

ஹ ஹ ஹ

Anonymous
10:33

குண்டலினி மூலம் யாரை வேண்டுமானாலும் பறக்க mudiyuma ?

சுரேஷ் மதுரை
10:37

@Anonymous

குண்டலினிக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்? பதிவுகளை படிக்காமல் கருத்துக்களை வெளியட வேண்டாம் நண்பரே

11:30

மருத்துவர் ராமதாசு அய்யா அவர்கள், திண்டிவனத்தில் ஒரு சாதாரண மருத்துவராக வாழ்வை துவக்கி, மிக எளிமையாக, மிகக் குறைந்த செலவில் வைத்தியம் பார்த்து, கணிசமான எண்ணிக்கையில் வன்னிய சமுதாய மக்கள் இருந்தாலும் அவர்களுக்கு அங்கீகாரம் மற்றும் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், வன்னியர் சங்கத்தின் முக்கியப் பொறுப்புக்கு வந்தார்.

1980களில் இவர்களின் போராட்டம் மிகப் பெரியதாக வெடித்து, தமிழகமே ஸ்தம்பித்து. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏராளமான வன்னியர்கள் இறந்தனர்!! இந்த சம்பவமே மருத்துவர் ராமதாசை வன்னிய மக்கள் மத்தியில் பெரிய சக்தியாக அடையாளம் காட்டியது.

பாட்டாளி மக்கள் கட்சி என்பது முக்கியமாக வன்னிய சமுதாய மக்களுக்காக ஆரம்பிக்கப் பட்டாலும், கட்சியில் அனைத்து சாதியினருக்கும் உரிய / உயரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில், வள்ளிநாயகம் என்ற தலித் இனத்தவரை முதல் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது, குணங்குடி ஹனீபா என்ற முஸ்லிம் இனத்தவரை முதல் பொருளாளராக நியமிக்கப்பட்டது போன்றவை.

1992-ல் விடுதலைப் புலிகள் பற்றி "தடா" சட்டம் மிகக் கடுமையாக இருந்த சூழ்நிலையிலும், பிரபாகரன் படங்களையும், விடுதலைப் புலிக் கொடிகளையும் ஏந்தி, "தமிழர் வாழ்வுரிமை மாநாடு" என்ற பெயரில் நடத்திய போராட்டத்தில், கட்சியின் மிகப் பெரிய பலத்தை வெளி உலகுக்கு காட்டி, அப்போது "பேய்" மாதிரி ஆட்சி செய்து கொண்டிருந்த ஜெயலலிதாவையே திகைக்க வைத்தார்!!!

தமிழகத்தின் மிக முக்கியமான தலைவராக உருவாகியிருக்க வேண்டியவர்..... அரசியல்வாதிகளுக்கே உரித்தான சுய நலத்தாலும், பணம் மற்றும் பதவி ஆசையாலும், இன்று, வன்னிய சகோதரர்களே மதிக்காமல், பலரும் அவரை கிண்டலடிக்கும் நிலையில், அவர் ஒரு அரசியல் கோமாளியாக போனது என்னவோ நிச்சயமாக சோகக் கதைதான்!!

மணிவண்ணன்
11:34

@Abdul Rahman - Dubai

என்ன பாஸ் தினமும் இந்து மதத்தை வம்புக்கு இழுப்பிங்க இன்று அதை காணோம் ஹ ஹ ஹ

சாரி மன்னிச்சிடுங்க கம்பதாசன்,நீங்கள் உஜிலாதேவி தளத்தில் சில வாசகர்களின் கருத்துக்கள் பிடிக்கும் அதனால் கெட்டு விட்டேன் மன்னிக்கவும்

Anonymous
12:11

@sri
அண்ணே சொறி ச்சீ sri அவனா நீ..போலி சாமியார் நித்தியானந்த சமிபத்தில் நடத்தி கொண்டிருக்கிற கேலி கூத்த்துகளை பற்றி குருஜியை எழுத சொன்னா உடனே நீ பழைய லிங்கை கொடுக்கிற அதை ஏற்கனவே படிச்சிட்டேன்

12:21

@மணிவண்ணன்


நண்பர் மணிவண்ணன் அவர்களே!

என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்?? கொஞ்சம் விட்டால், என்னை ஒரு மத வெறி பிடித்தவன் போல சித்தரித்து விடுவீர்கள் போல தெரிகிறதே!!

இது ஓர் அரசியல் பதிவு. எனவே, அரசியல் ரீதியாகத்தானே கருத்தும் தெரிவிக்க வேண்டும்??

உஜிலா மதம் சம்பந்தமாக பதிவு எழுதினால், மத ரீதியாக கருத்து தெரிவிக்க வேண்டும்.

இப்போதும்கூட பாருங்கள், பெயரில்லாத ஒருவர் "நாத்திக செருப்புகளை கழற்றி விடு!" என்ற தலைப்பில் ( http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_21.html ) என்னோடு மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறார். நான் என்னதான் செய்ய?? யாருக்கு எது? எப்படி? புரியுமோ... யாருக்கு எது தேவையோ? அதை அப்படித்தானே சொல்லி புரிய வைக்க வேண்டும்??

12:28

அதேசமயம், இதே உஜிலா, அரசியல் கருத்து என்கிற பெயரில், வாழைப் பழத்தில் ஊசி ஏற்றினால், நாம், சைக்கிள் கேப்புலே ஆட்டோ ஓட்டாமல், லாரியே ஓட்ட வேண்டியதுதானே நண்பரே!!

"ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு" என்ற எங்கள் ஈசா நபி (ஏசு நாதர்) கொள்கையை நாம் கடைப் பிடிக்கவில்லையே!!

அன்புக்கு அன்பு - அம்புக்கு அம்பு... அவ்வளவுதான் நண்பரே!!!

அதிகம் கருத்து சொல்ல விரும்பவில்லை. தமிழ் நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் எல்லாம் அடியோடு ஒழிக்கப்படவேண்டும்.இனி எந்த கட்சியும் இவரோடு கூட்டணி வைக்க கூடாது.விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இவர்களும் ஒன்றுதான். தமிழ்மொழி ,தமிழ் இனம் தலித் ,திராவிடம், சுயமரியாதை என்றெல்லாம் கூறிக்கொண்டு ஒரு சமூகத்தை அடிமையாக்கி அதன் மூலம், பல தலைமுறைக்கு சொத்து சேர்ப்பவர்கள் இவர்கள்.பிராமணன் முன்பு என்னவெல்லாம் செய்தான் என்று சொல்பவர்கள், இன்று அதைத்தான் செய்கிறார்கள்.அனால், பிராமணன் பல தலைமுறைக்கு கோடி கோடியாக கொள்ளையடித்து சொத்து சேர்க்கவில்லை. இவர்கள் அதை செய்துவிட்டார்கள்.

மணிவண்ணன் said...


சாரி மன்னிச்சிடுங்க கம்பதாசன்,நீங்கள் உஜிலாதேவி தளத்தில் சில வாசகர்களின் கருத்துக்கள் பிடிக்கும் அதனால் கெட்டு விட்டேன் மன்னிக்கவும்


மணிவண்ணன் அவர்களே,என்ன இது? நண்பர் அப்துல் ரஹ்மானும் நீங்களும் பேசுகிறிர்கள், இங்கு என் பெயர் ஏன் வந்தது? என்னிடம் ஏன் மன்னிப்பு? எனக்கு புரியவில்லை.!

14:32

தேசபக்தி’யை கற்பழித்த ஜொள்ளு!!

வரலாற்றுச் சிறப்புமிக்க பாரதமாதாவை, ஒரு பாகிஸ்தான் தேவதை வென்றுவிட்டாள்! பாரத் மாதா கி நஹி! பாக் ஹீனா கி ஜெய்!

ரவிவர்மாவின் அந்தக்கால அல்ட்ரா மாடர்ன் பட்டுடை உடுத்திய காளிதேவி போன்ற ஷேப்பில் இருக்கும் பாரதமாதாவை பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் வீடுகளுக்குச் சென்றால் தவறாமல் தரிசிக்கலாம். கோவில் சிலைகளில் அம்மணத்தை ஆடையாகக் கொண்டு ஆடிய பழங்குடியான காளி, பாரதமாதாவான கதை தனிக்கதை! ஆனால் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாரதமாதாவை, பர்தா போட்டு வந்த ஒரு பாகிஸ்தான் தேவதை வென்றுவிட்டாள்! பாரத் மாதா கி நகி! பாக் அழகி கி ஜெய்!

34 வயதானா ஹீனா ரப்பானி கார் எனும் பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவு அமைச்சர், டெல்லி விமானப்படை தளத்தில் (சரி, இந்திய விமானப்படைத் தளத்தில் பாக் விமானம் இறங்கினால் எல்லா இரகசியங்களையும் செல்போனில் சுட்டுவிடுவார்களே என்று யாரும் ஏன் கேட்கவில்லை) இறங்கி வந்து ஒரு பேஷன் ஷோ மங்கை போல கைப்பையை தூக்கிக் கொண்டு நடந்து வந்தாரா…… அவ்வளவுதான் முழு இந்தியாவும் அதன் மனசாட்சியுமான இந்திய ஊடகங்களும் அவுட்! மூன்றாவது அம்பையர், டி.ஆர்.எஸ் இதிலெல்லாம் சோசோதித்தறிய தேவையில்லாத கிளீன் போல்டு! தேசபக்தியை வீழ்த்திக் காட்டிய அழகு!

தமிழ்ப் பதிவுலகம் நன்கறிந்த ஜொள்ளர்களெல்லாம் சினிமா நடிகைகளை ஜொள்ளுவதையெல்லாம் கிண்டலடித்து வந்த ”ஹை கிளாஸ்” அம்பிகளெல்லாம் ஹீனா ஜன்னி பிடித்து சமூக வலைத்தளங்களை பிராண்டுகிறார்கள். டிவிட்டரில் இரண்டு நாட்களாக ஹீனாதான் பேரரசியாக கோலேச்சுகிறார். கசாப்பை தூக்கில் போடு, அப்சல் குருவை சுட்டுப்போடு என்று டெம்பிளேட் தேசபக்தி முழக்கங்களை காப்பி அடித்துப் போடும் இந்திய டவிட்டர்கள் இன்று ஹீனாவை மாய்ந்து மாய்ந்து உருகுகிறார்கள். “இந்தியா – பாக் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தையில் எந்தப் பிரச்சினையையும் பேசித் தீர்க்க முடியாது, ஏனெனில் ஹீனா என்றொரு அழகான பிரச்சினை இருக்கும் போது வேறு எதைப்பற்றி பேசுவது?” இது ஒரு டிவிட். எனில் மற்ற ஜொள் (டிவிட்டு) களைப் பற்றி விளக்கத் தேவையில்லை.

“பாகிஸ்தான் தனது அழகான முகத்தை இறக்கியிருக்கிறது” – இது டைம்ஸ் ஆப் இந்தியா.

“மாடல் நடிகையைப் போன்ற அமைச்சரால் இந்தியாவே வேர்த்துக் கிடக்கிறது” – இது இந்தி நாளிதழான நவபாரத் டைம்ஸ்.

“அனைவரது விழிகளும் அந்த கவர்ச்சியான பாக் அமைச்சர் மேல், அழகும்-சிந்தனையும் கச்சிதமாக கலந்தவள்தான் அந்தப் பெண் என்பது மட்டும் நிச்சயம்” இது ரீடிப் இணையத்தளம்.

“காலநிலைக்கு பொருத்தமான நீலநிற உடையில் அந்த 34 வயது அமைச்சர் டெல்லி விமான நிலையத்தை அடைந்தபோதே, ஆடை அலங்காரப் பிரிவில் முழு மதிப்பெண்களையும் பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்” – இது மெயில் டுடே.

புதன்கிழமை காலையில் டெல்லியில் பெய்த மழையைப் போன்று ஹீனாவுக்கான கவரேஜூம் இருந்தது என்று கூறுகிறார், பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சீமா கோஸ்வாமி.

“ரசிக்கத்தக்க உபகரணங்கள், ரோபெர்ட்டோ கவாலி சன்கிளாஸ், பெரிய எர்மெஸ் பிர்கின் பை, பாரம்பரிய முத்து மாலை – எல்லாம் சேர்ந்து அவளது கவர்ச்சிக்கு மெருகூட்டுகிறது” – இது ஒரு பத்திரிகை செய்தி.

www.vinavu.com/2011/07/28/hina-rabbani-khar/

14:34

Contd...2

தேசபக்தி’யை கற்பழித்த ஜொள்ளு!!

என்னதான் கசாபின் மண்ணிலிருந்து வந்தவரென்றாலும் இந்த அழகு தேவதையை ஆராதிக்கவில்லை என்றால் யூத் உலகோடு இடைவெளி வந்துவிடும் என்பதாலோ என்னமோ பா.ஜ.க தலைவர் அத்வானியும் அழகான ஒரு பொக்கேயை கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டார். இந்தியா – பாக் நாடுகளின் சண்டை வரலாற்றை கிண்டல் செய்யும் வண்ணம், ” இந்தியாவில் இறங்கிய பாக் குண்டு” என்று குறிப்பிட்டது, மும்பையின் மிரர் பத்திரிகை.

79 வயது வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தனது விலையுயர்ந்த டிசைனர் கோட்டு சூட்டுடன் பெருமையாக உலா வந்தாலும், ஹீனாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கப்பட்ட போதெல்லாம் அவரால் மற்றவர் கவனத்தை கவர்ந்திழுக்க முடியவில்லையாம்.

இப்படியாக ஹீனா ரப்பானி காரின் சௌந்தரிய புராண விளக்கத்தை இந்திய ஊடகங்கள் விதவிதமாக வருணித்து அதையும் தலைப்பு செய்தியாக வெளியிட்டிருக்கின்றன. பாக்கிற்கு எதிரான இந்திய வெத்துவேட்டு தேசபக்திக் கூச்சலை ஒரு இயக்கமாக பரப்புகின்ற டைம்ஸ் ஆப் இந்தியாதான் இந்த அலங்கார வருணணைகளை தொகுத்து அளித்திருக்கிறது! தேசபக்தி நாணயத்தின் மறுபக்கம் அள்ள அள்ளக் குறையாத ஜொள்ளு! இது நகை முரணல்ல, இயல்பான உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி!

இரு குழந்தைகளுக்குத் தாயான ஹீனா ஒரு உலக அழகி போல ரசிக்கப்படுவார் என்று தெரிந்துதான் பாக் அரசு அனுப்பியிருக்கிறதோ என்னமோ! பெனாசீர் பூட்டோ போல பாக்கின் பஞ்சாப் மாநிலத்தின் செல்வாக்கு மிக்க நிலவுடமை குடும்பத்தைச் சேர்ந்தவர் ஹீனா. இந்தியாவைப் போல பாக்கிலும் இத்தகைய பாரம்பரிய பணக்காரக் குடும்பங்களே அரசியலிலும், தொழிற்துறையிலும் கோலேச்சுகின்றன.

அந்த வகையில் ஹீனாவின் வருகை ஒன்றும் அதிசயமல்ல. ஆனால் அவர் அமைச்சராக்கப்பட்ட நேரம்தான் முக்கியமானது. பின்லேடன் மரண நாடகத்திற்குப் பிறகு பொதுவெளியில் அமெரிக்க – பாக் உறவு எள்ளும் கொள்ளும் வெடிப்பதான பாவனையில் இருக்கும்போது உலக மகா ஜொள்ளர்களான அமெரிக்கர்களை குஷப்படுத்துவதற்கும், அப்படியே உள்ளூர் ஜொள்ளர்களான இந்தியர்களின் பேச்சை மாற்றுவதற்கும் கூட ஹீனா பயன்படவேண்டுமென்று பாக் ஆளும் வர்க்கம் நினைத்திருக்கலாம்.

இருந்தாலும் ஒரு உண்மையை ஒத்துக் கொள்ளவேண்டும். பாக்கிலிருந்து யார் வந்தாலும் அது முஷராப்போ, ஜர்தாரியோ, நவாஸ் ஷெரிப் என்று யாராக இருந்தாலும் அவர்களது ஆளுமை, பேச்சு, வாதம் எல்லாம் இந்திய அம்பிகளை விட மேம்பட்டே இருக்கிறது. டைம்ஸ் நௌவின் அம்பி ஆர்னாப் கோஸ்வாமி உள்ளூர் அரசியல்வாதிகளையெல்லாம் டி.டி.எஸ் அலறில் கடித்துக் குதறுவார். அப்படிப்பட்ட அம்பியே பின்லேடன் மரணம் தொடர்பாக முஷராப்புடன் பேசும் போது அடிபட்ட பாம்பு போல அடங்கிக் கிடந்தார். எதிர்த்துக் கேட்க ஆளில்லாத மேடையில் மட்டும்தான் இந்திய திறமை பளிச்சிடும் என்பதை ஜனநாயகம் வளராத பாக்கின் தலைவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

சரி பாக், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அப்படி என்ன பேசி சாதிக்கப் போகிறார்கள்? வந்த செய்திகளைப் பார்க்கும் போது “இதுவரை பேச்சு வார்த்தை திருப்தி அளிக்கிறது, இனி தொடர்ந்து பேசுவதற்கு ஊக்கமூட்டுகிறது” இதுதான் அந்த சாதனையின் சிகரம். பேசுனோம், பேசிகிட்டு இருக்கோம், பேசுவோம் என்பதுதான் சாதனை என்றால் அர்த்தமில்லாமல் வளவளவென்று பேசும் எப்.எம் ரேடியோ ஜாக்கிகளையே அமைச்சராக்கலாமே?

http://www.vinavu.com/2011/07/28/hina-rabbani-khar/

14:35

contd....3

தேசபக்தி’யை கற்பழித்த ஜொள்ளு!!

தீவிரவாதத்தை எதிர்க்க இருநாடுகளும் இணைந்து பணிபுரிய பேசுவார்களாம். பணிபுரிவது இருக்கட்டும், மும்பை 26/11 தாக்குதலுக்காக பாக்கில் உள்ள குற்றவாளிகளை ஒப்படைக்க வேண்டுமென்று இந்தியா கேட்டால், சம்ஜூத்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பிற்கான இந்திய குற்றவாளிகளை பாக் கேட்கிறது. மும்பையில் கொல்லப்ப்பட்டது இந்தியக் குடிமகன்களென்றால், சம்ஜூத்தாவில் கொல்லப்பட்டது பாக் குடிமகன்கள். அடுத்து காஷமீர் பிரச்சினை குறித்து இந்தியா ஏதாவது வாயைத் திறந்தால் மாட்டிக் கொள்ளும். முழு காஷ்மீரத்து மக்களும் ஏகோபித்த நிலையில் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் போது அங்கும் பாக்கின் கையே ஓங்கி நிற்கிறது. தற்போது காஷ்மீர் மக்கள் இயக்க பிரதிநிதிகளை ஹீனா சந்தித்ததை இந்திய அரசு கண்டித்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. காஷ்மீர் மக்கள் பிரதிநிதிகளை பிரிவினைவாதிகள் என்று சொல்லும் இந்திய ஊடகங்கள் இதனாலொன்றும் ஹீனாவை அவ்வளவாக கண்டித்து விடவில்லை. மேலும் இந்தியா வந்து காஷ்மீர் போராட்டக்காரர்களை சந்திப்பதற்கு ஒரு தில் வேண்டுமே?

ஆக இறுதியில் என்னதான் பேசினார்கள்? இரண்டு காஷ்மீர்களிலிருந்தும் மக்கள் வணிக, பக்தி சுற்றுலாவிற்கு வந்து போகலாம், பஸ் விடலாம், வர்த்தகத்தை அதிகப்படுத்தலாம் என்பதைத்தான் பேசியிருக்கிறார்கள். இவையெல்லாம் நல்ல விடயங்கள்தான். ஆனால் மக்கள் வந்து போகும் இந்த விசயத்தைக் கூட செய்ய முடியாதபடி இந்திய தேசபக்தி வெறி அவ்வப்போது சாமியாடுகிறதே? அதைத் தீர்ப்பது எப்படி? பாக்கும் கூட காஷ்மீரின் தோழன் என்று தனது உள்நாட்டு பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு பயன்படுத்துகிறது, அதை யார் கேட்பது? மதச்சார்பற்ற முறையில் போராடிய காஷ்மீர் மக்களை மதம் சார்ந்து திணித்த பாவத்தை இருநாடுகளும் குறைவில்லாமல் செய்திருக்கின்றன.

ஒன்று மட்டும் உண்மை. இந்திய பாக் கவுரவப் பிரச்சினைகள் இருநாட்டு ஆளும் வர்க்கங்களுக்கும் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். அதை வைத்து மக்களை திசைதிருப்புவதற்கு அவர்களுக்கு கிடைத்திருக்கும் அழியாத சாக்கு. அதனால்தான் நேற்று வரை பாக் காஷ்மீரில் குண்டு போட்டு அழிக்க வேண்டும் என்று சாமியாடிய இந்திய ஊடகங்கள் இன்று பாக்கிலிருந்து வந்திருக்கும் தேவதையை ஆராதிக்கின்றன. அந்த வகையில் இந்த பேச்சு வார்த்தையில் முழு வெற்றி அடைந்திருப்பது பாகிஸ்தான்தான்.

இந்திர பதவிக்கு ஆப்பு வைத்த மாமுனிவர்களின் தவத்தை கலைத்த ரம்பா, ஊர்வசி, மேனகை என உலகின் முதல் ஜெள்ளாயுத்தை தயாரித்த இந்த புண்ணிய பூமிக்கு இது வெட்கக்கேடல்லவா? அவர்களில் ஒருவர் யாராவது வெளியுறவு அமைச்சராக இருந்தால் இந்தியாவும் பேச்சு வார்த்தையில் வெற்றி வாகை சூடலாமே? அப்படி ஒன்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பணி என்பது கஷ்டமானதில்லையே? ஐ.நா சபையில் பக்கத்து சீட்டில் இருந்து வேறு ஒரு நாட்டு பிரதிநிதியின் உரையை எடுத்து படித்தவர்தானே நம்ம எஸ்.எம். கிருஷ்ணா? இந்த ஈயடிச்சான் காப்பி வேலையை பாலிவுட், கோலிவுட், டோலிவுட் முதலிய இந்திய வுட்களின் நடிகைகள் யாராவது செய்ய முடியாதா என்ன?

கமான் இந்தியா, கமான்… ஒரு அழகு தேவதையை தேர்ந்தெடு, உலக அழகி போட்டிகளிலெல்லாம் வென்று காட்டிய உன் நாட்டில் அழகிகளுக்கா பஞ்சம்? அழகியை அமைச்சராக்கு, பாக்கை வென்று காட்டு! ஜொள் ஹிந்த்!

www.vinavu.com/2011/07/28/hina-rabbani-khar/

ஸ்ரீ
15:40

@Anonymous

///அண்ணே சொறி ச்சீ sri அவனா நீ..போலி சாமியார் நித்தியானந்த சமிபத்தில் நடத்தி கொண்டிருக்கிற கேலி கூத்த்துகளை பற்றி குருஜியை எழுத சொன்னா உடனே நீ பழைய லிங்கை கொடுக்கிற அதை ஏற்கனவே படிச்சிட்டேன்///


நண்பரே பதிவை படிக்காமல் இங்கு கக்க வேண்டாம் மீண்டும் ஒருமுறை அந்த லிங்கை படியுங்கள் எதற்க்காக எழுதப்பட்டது என்று தங்களுக்கு நன்றாக புரியும்

ஸ்ரீ
15:45

@Abdul Rahman - Dubai

நண்பரே இன்றைய குருஜியின் பதவிக்கும் நீங்கள் கொடுத்துள்ள வினவு பதிவிற்கும் என்ன சம்பந்தம் என்று விளக்கினால் மிகவும் நன்றாக இருக்கும்

18:19

திரு. ஸ்ரீ அவர்களே!

உஜிலாவின் இன்றைய பதிவு தமிழக அரசியல் பற்றியது. வினவு நண்பர்கள் இன்று விளாசித் தள்ளியிருப்பது இந்திய அரசியல் பற்றியது. ஆகையால், இதையும் ஒரு அரசியல் கருத்தாகவே எடுத்துக் கொள்ளவும்.

நண்பரே! ஒரு யதார்த்தமான உண்மை உங்களுக்கு தெரியுமா?? இந்தியா - பாகிஸ்தான் பற்றி சில சில்லறை அரசியல்வாதிகளும், சில மத வெறி பிடித்த கூட்டமும் (அவர்களின் அல்லக்கை ஊடகங்களும்தான்) ஓலமிடுகிறதே தவிர, மற்றபடி வேறு எந்த முக்கிய பிரச்னைகளும் கிடையாது (காஷ்மீர் விவகாரம் தவிர!!)

உதாரணமாக, நமது இந்தியப் பிரதமர் பாகிஸ்தான் பிரதமருக்கு மாம்பழம் அனுப்பி வைப்பதும், அதை அவர் சாப்பிட்டு விட்டு "பேஷ்... பேஷ்... ரொம்ப நன்னா இருக்கு... ஒன்ஸ் மோர் ப்ளீஸ்..." என்பதும், பதிலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இந்திய பிரதமருக்கு பெஷாவர் ஸ்வீட் அனுப்பி வைப்பதும், நம்மவரும் அதை சாப்பிட்டு விட்டு... "கண்ணா... ரெண்டாவது லட்டு தின்ன ஆசையா இருக்கு..." என்பதும் இன்றுவரை நடந்து வருவதே!!!

மற்ற நாடுகளில் எப்படியோ தெரியாது. நான் நீண்ட காலமாக வசித்து வரும் இதே துபாயில் இந்தியர்களுக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் எந்த வித பேதமோ குரோதமோ இல்லாமல் ஒன்றாகத்தான் / நன்றாகத்தான் பழகி வருகிறார்கள். (அங்கொன்றும் இங்கொன்றும் ஒரு சில விதி விலக்குகள் இருக்கலாம் - அதை விட்டு விடுங்கள்)

சரி... அரசியலை விடுங்கள்... வியாபார ரீதியாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எத்தனை ஆயிரம் கோடிக்கு வியாபாரங்கள் நடந்து கொண்டு இருக்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும்???

ஒரு சில அரிப்பெடுத்த மூதேவிகள்தான் விஷ விதையை தூவி வருகின்றனர் (இரு தரப்பிலுமே!!). மற்றபடி, எல்லாமே நன்றாகத்தான் நடந்து கொண்டு இருக்கிறது.

ஸ்ரீ
18:24

நண்பரே மன்னிக்க வேண்டும் உஜிலாதேவி தளத்தில் வரும் கருத்துக்களை நான் மதிக்க கூடியவன் அதனால் இந்த கேள்வியை கேட்டு விட்டேன் மன்னிக்கவ்ம்

மணிவண்ணன்
18:34

@Abdul Rahman - Dubai


///என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்?? கொஞ்சம் விட்டால், என்னை ஒரு மத வெறி பிடித்தவன் போல சித்தரித்து விடுவீர்கள் போல தெரிகிறதே!///

சாரி சாரி பாஸ் சும்மாதான் கேட்டேன்

18:38

@ஸ்ரீ


என்ன நண்பரே? "மன்னிப்பு" என்று பெரிய வார்த்தைகளெல்லாம் சொல்கிறீர்கள். நீங்கள் கேட்டீர்கள் - நான் விளக்கினேன். அவ்வளவுதான். இதில் யார் மனதும் புண்படுவதற்கு ஒன்றும் இல்லையே??!!

அருமையான பதிவு...
இதையும் படிக்கவும்
http://tamilpadaipugal.blogspot.com/2011/07/blog-post_7108.html

Anonymous
13:46

நாடு மாறுவதை பற்றி எல்லாம் நீ பேசக்கூடாதுடா....
உன்ன மாதிரி ஆளுங்கள நம்பினாத்தான் நாடு அழியும்.
நீ எல்லாம் என்னாத்துக்கு போஸ்ட் போடுற ..
உனக்கு போஸ்ட் போடனும்னா..தினமலர் வாயிலேயே வட சுடுவான்ல அதப்பத்தி போடு...

Anonymous
17:05

But Mr. Ramadoss is far better than half baked Vijaykanth.
Am I right?

Anonymous
15:18

****#####முக்கியமான ஒரு தகவல்###########*****

பலராலும் இதுவரை தவறாகவே புரிந்து கொள்ளப்பட்ட செய்தி, வட மாவட்டங்களிலே வன்னியர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்களாகவோ நிலக்கிழார்களாகவோ இல்லை, பெரும்பாலானோர் ரெட்டியார்,முதலியார் (அ) உடையார், நாயுடு சமுதாயத்தினரின் நிலங்களில் கூலி வேலை செய்தவர்களே. எனவே பெரும்பாலான வன்னிய சமுதாயத்தினர் பண வசதிபடைத்தவர்கள் அல்லர், ஆதிக்க சாதியாகவும் இல்லை, சமுதாயம் நலிவடைந்த நிலையிலேதான் இருந்தது.

பத்து ஆண்டுகளுக்கு முன் வரை எவ்வகை விழிப்புமின்றிப் பொருளாதாரம், அரசியல், கல்வி என அனைத்திலும் நலிவடைந்தே இருந்தது இச்சமூகம். இந்தச் சமயங்களிலே தென்தமிழகத்திலே பெரும் எண்ணிக்கையிலிருந்த முக்குலத்தோர் சமூகத்தினர் காங்கிரசிலும் பின் திராவிடக் கட்சிகளிலும் கோலோச்சினர், ஆனால் வட தமிழகத்தில் வன்னியர்கள் பெரும் எண்ணிக்கையிலிருந்தாலும் ரெட்டியார்,உடையார் (முதலியார்) சமுதாயத்தினர் கையில் தான் அரசியல் இருந்தது.

பெரும் எண்ணிக்கையிலிருந்தும் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றமின்றி இருந்த சமூகத்தை உயர்த்தும் நோக்கத்தில் திரு.இராமசாமி படையாட்சி அவர்கள் உழவர் உழைப்பாளர் கட்சி என ஆரம்பித்து யாருடைய கூட்டணியுமில்லாமல் தேர்தலிலே போட்டியிட்டு, தென்னாற்காடு மாவட்டத்திலே 18 ல் 17 தொகுதிகளில் வென்றார்.

அப்போது முதுபெரும் தலைவர் காமராசர் அவர்கள் காங்கிரஸ் தலைவர். அப்போதே வன்னிய சமூகம் மாற்றத்துக்குத் தயாராக இருந்தது, சரியான வழிகாட்டுதலுக்காகவும், தலைவனுக்காகவும் ஏங்குவது புரிந்தது. அதன் பின் காமராசர் அவர்கள் இராமசாமிப் படையாட்சி அவர்களிடம் பேசிக் காங்கிரசில் சேரச்செய்தார், இராமசாமி அவர்களுக்கு மந்திரி பதவியும் அளித்தார், ஆனால் காங்கிரஸ் என்ற சமுத்திரத்திலே கலந்த சிறுஓடையாகிவிட்டது உழவர் உழைப்பாளர் கட்சி.

அதன் பின் திரு இராமசாமி படையாட்சியார் மீதிருந்த பேரன்பினாலும் பெரு மதிப்பினாலும் காங்கிரசை எதிர்த்து சமுதாய முன்னேற்றம் என யாரும் பேசவில்லை.

அவரது கால கட்டத்துக்குப் பிறகு மீண்டும் அதே இழிநிலை. இந்த நிலையில் தான் 80 களின் தொடக்கத்திலே திரு ஏ.கே.நடராசன் என்பவரால் வன்னியர் சங்கம் மீண்டும் உத்வேகம் பிடித்தது. அப்போது திண்டிவனம் பொறுப்பாளராக இருந்தவர்தான் மருத்துவர் இராமதாசு, திரு ஏ.கே.நடராசன் அவர்கள் அரசு பணியிலிருந்ததால் அவரால் முழுமூச்சாகச் சமுதாயப்பணியிலே ஈடுபடமுடியவில்லை.
அப்போது சமுதாயப் பணியாற்றிய போராளிதான் மருத்துவர் இராமதாசு, ஏதோ திடீரென ஒரு நாள் வன்னிய சமூகம் மந்தையாடு மாதிரி அவர் பின்னால் போகவில்லை. ஒரு நல்ல அர்ப்பணிப்புள்ள தலைவனுக்காக ஏங்கிக் கொண்டிருந்தபோது மருத்துவரின் போராட்டகுணம், அர்ப் பணிப்பைக் கண்டு மனமுவந்து ஏற்றுக்கொண்டது வன்னிய சமூகம்.

மருத்துவர் இராமதாசு அவர்கள் அரசியல் சமூக வாழ்வில் எத்தனை கூட்டங்கள், எத்தனை கிராமங்களிலே சுற்றுப்பயனம் செய்தார், எத்தனை கல்லடிகள், எத்தனை தலைமறைவு இரவுகள் என்பது வெளி உலகுக்குத் தெரியாது, வன்னிய சமுதாய மக்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை, இதுவெல்லாம் தெரியாமல் ஏதோ அவர் திடீரென ஆகூழால் தலைவரானது போல் எண்ணிக்கொண்டு பொறாமையால் அவரைத் தாக்குகின்றனர்.

Please Guruji Please refrain from such articles. No profit.But do not invite hatred. You can devote the pages of your Web to more important topics of our life and society. I request you to delete the letter of Abdul Rahman.


Next Post Next Post Home
 
Back to Top