( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

இவர்களிடமிருந்து தப்ப முடியுமா?

  மது வாழ்க்கையில் எத்தனையோ அழையாத விருந்தாளிகளை கண்டிருக்கிறோம் நாம் யாருமே அத்தகைய விருந்தினரை விரும்புவது இல்லை

 வேளைகெட்ட வேளையில் வந்து வேலைகளை கெடுக்கிறார்களே என்று ரகசியமாக முனுமுனுப்போம் எரிச்சல் படுவோம்

 எப்படியாவது அவர்களை உடனடியாக மூட்டை முடிச்சுகளை கட்ட வைத்து வழியனுப்ப அவசரப் படுவோம்

  ஆனால் இரண்டு விருந்தாளிகள் இருக்கிறார்கள் இவர்களை நாம் விரும்புவது இல்லை ஆனாலும் இவர்கள் நம்மை விடுவது இல்லை 


  எப்படியாவது துரத்தி பிடித்து வந்து உட்கார்ந்து விடுவார்கள் அதன் பிறகு அவர்களோடு நாம் தான் போகவேண்டுமே தவிர அவர்கள் போக மாட்டார்கள்

 யாரந்த விருந்தாளிகள்? என்று நீங்கள் சிந்திக்கலாம் சற்று திரும்பி உங்கள் வாசலை பாருங்கள்

   அங்கே இரண்டு பேர் நிற்பார்கள் அதில் ஒருவன் பெயர் முதுமை இன்னொருவன் பெயர் மரணம்

   இவர்களை வெல்ல அல்லது இவர்களிடம் இருந்து தப்ப நம்மால் முடியுமா?

    நிச்சயம் முடியாது அதிலும் மரணம் என்ற விருந்தாளி இருக்கிறானே அவன் மிகவும் கொடியவன்

   தத்தி நடை பயிலும் சின்ன குழந்தையானாலும் வண்ண தொகை விரிக்கும் இளவயது மங்கையானாலும் அறிஞனோ அசடனோ யாரானாலும் ஈவு இறக்கம் இல்லாமல் கொத்தி தின்று விடுவான்


  கதற கதற இழுத்து போய் விடுவான்

  ஆனால் முதுமை அப்படி அல்ல காத்திருப்பான் நிதானமாக காத்திருப்பான்

  நாம் இயற்கையின் நெறிமுறையை தாண்டாத வரை நம்மை தொட தயங்குவான்

 சில நேரம் வயதுகள் பல கடந்தாலும் புத்தியை செப்பனிடுவானே தவிர உடம்பை தொடமாட்டான்

  நரம்பிலே முறுக்கிருந்து நாக்கிலே கட்டுப்பாடு இல்லாமல் துள்ளி குதித்தால் அள்ளி கூடையில் போட்டு கொள்வான்

  நேற்று வரை ஓடிய கால்கள் இன்று தள்ளாடும் கருக்கல்லையே பெயர்த்தெடுத்த கரங்கள் சோர்வாக தொங்கி விடும்

 இழுத்து விடும் மூச்சி கூட இரைப்பாய் மாறி விடும்

 அதானால் தான் முதுமையை விரும்பாத விருந்தாளி என வெறுத்து ஒதுக்குகிறோம்

 ஆனாலும் என்ன செய்வது! எப்படியும் ஒரு நாள் அவன் கையில் நாம் அகப்பட்டு தான் ஆக வேண்டும் 


  நான் கூப்பிடுகிறேன் என்னோடு சற்று நேரம் தெருவுக்கு வாருங்கள்...

 அதோ! அந்த வீட்டு திண்ணையில் கால்களை நீட்டிக் கொண்டு வெற்றிலை இடித்து கொண்டிருக்கிறாளே! காமாட்சி பாட்டி,

 இவள் ஐம்பது வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்திருப்பாள்?

 இளமையும் யவனமும் எப்படி எல்லாம் இவளை தாலாட்டி இருக்கும்?

 தனது வயது முதிர்ந்த மாமியாரை அல்லது தாயாரை அவர்களின் தள்ளாமையால் எப்படி எல்லாம் வார்த்தை கொண்டு காயப் படுத்தியிருப்பாள்!

  எனக்கு யாரும் வேண்டாம் உற்றார் உறவினர் எல்லோருமே கொத்துகின்ற கழுகு கூட்டம் தான்

  இவர்களின் அறுகமையே தேவையில்லை என்று சொந்த பந்தங்களை துரத்தி இருப்பாள்


  இன்று கண் மங்கி போய் விட்டது கழிவறைக்கு போக வேண்டும் என்றால் கூட யாரவது ஒருவர் கைபிடித்து போக வேண்டும்

  இப்படி தான் ஒரு நாள் ஆவோம் என்று அவள் கற்பணை செய்திருப்பாளா?

  கிழட்டு ஜென்மங்கள் செத்து தொலைந்தால் என்ன என்று எத்தனை பேரை பேசியும் ஏசியும் இருப்பாள்

 இன்று யாரவது ஒருவர் அவளை அப்படி சொன்னால் அவள் மனது என்ன பாடுப்படும்...?

  காமாட்சியை பார்த்தது போதும் இதோ இந்த விளக்கு கம்பத்தின் கீழ் கைத்தடியை ஊன்றியப் படி நிற்கிறாரே பெரியவர் ராமசுப்ரமணியம்...

 இவர் ஒரு காலத்தில் காதல் மன்னராம் தெருவுக்கு ஒரு சட்டை போட்டுக் கொண்டு வலம் வருவாராம்

  இவர் தெரு முனையில் வரும்போதே வாசனை திரவியத்தின் வாசம் வீட்டுக்குள் இருக்கும் இளம் பெண்களை சுண்டி இழுக்குமாம்


 தினசரி சவரம் செய்த கன்னத்தின் பளபளப்பு வகிடு மாறாத தலைகேசத்தின் அலங்காரம் எல்லாமே ஒரு முறை பார்த்தவரை மறுமுறையும் பார்க்க வைக்குமாம்

   ஆனால் இப்பொது பாருங்கள்! பளபளத்த கன்னம் குழிவிழுந்து ஏறு பூட்டிய நிலம் போல கோடு விழுந்து அலங்கோலமாக தெரிகிறது

 வாசனை திரவியத்தில் குளித்த உடல் அழுக்கு சட்டையால் மூடப்பட்டு இருக்கிறது

 காதல் மொழி பேசிய வாய் வெற்றிலை எச்சில் வழிய குளறி கிடக்கிறது

  இவர்களை விடுங்கள் அதோ கைற்று கட்டிலில் வாய்திறந்து பிணம் போல கிடக்கிறாரே மாடசாமி

  அவர் அருகில் சாதத்தை பிசைந்து ஊட்ட முயற்சித்து கண்தெரியாமலும் கை நடுக்கத்தாலும் தடுமாருகிறாளே வள்ளியம்மை  இவள் மாடசாமி என்ற மிருக கணவனிடம் வாங்கிய அடி உதை என்ன? குடித்து விட்டு மைதானத்தில் பந்தை உதைப்பதை போல் எத்தனை முறை இவளை புரட்டி எடுத்திருப்பான்?

  இவள் மட்டும் என்ன சாமான்யமானவளா குடிகார கணவன் மதி மயங்கி கிடக்கும் போது எதிர்த்த வீட்டு இளவரசனுக்கு ஓலை அனுப்பிய உத்தமி அல்லவா!

 குடிக்கும் போது அவனோ சோரம் போகும் போது அவளோ என்றாவது ஒரு நாள் இளமை நம்மை விட்டு போய் விடும் முதுமை என்ற இரும்பு சட்டை நம்மை இறுக்க பூட்டிக் கொள்ளும் என்று சிந்தனை செய்திருப்பார்களா?

 இவர்களை கடந்து நமது நாட்டு முன்னாள் அமைச்சர் ஒருவர் தள்ளாடும் வயதில் மரண படுக்கையில் கிடக்கிறாராம் அவரை பார்ப்போம் வாருங்கள்

 அந்தோ பரிதாபம்!

   வெள்ளை வேட்டி சட்டையுமாய் காரில் பவனி வந்தவர் இன்று எட்டுக்கால் வாகனத்தில் ஊர்வலம் போக தயாராக கிடக்கிறார்

 ஒலி பெருக்கியின் முன்னால் இவர் பேசிய பேச்சுக்கள் எத்தனை!


 கடவுள் என்று ஒருவன் இருந்தான் என்றால் அவனை கொண்டு வந்து என் முன்னாள் நிறுத்து

 ஏற்ற தாழ்வுடைய சமூகத்தை ஏனடா படைத்தாய் என சாட்டையால் அடித்து தள்ளுகிறேன்

கண்ணுக்கே தெரியாத கடவுளை வணங்கி காலத்தை வீணடிக்கும் மூட ஜனங்களே!

 அவன் இல்லை! அவன் இல்லை!! அவன் இல்லவே இல்லை!!!

 என்று நாத்திகம் பேசிய வாய் இன்று சாரமற்ற தத்துவத்தை காலமெல்லாம் பேசி பாவங்களே செய்து விட்டேனோ ஒரு வேளை கடவுள் என்றொருவன் இருந்து அவனை நான் அவசரப் பட்டு அவமரியாதை செய்ததனால் தான் மரணம் என்னை மிரட்டுகிறதோ!

 ஐயோ கடவுளே ஒரு வேளை நீ உண்டு என்றால் மன்னித்து என்னை மனிதனாக வாழ விடு! என்று சத்தம் இல்லாமல் முனு முனுக்கிறதே அது உங்கள் காதில் விழுகிறதா?


ரத்தத்தில் கொழுப்பும் நரம்பில் முறுக்கும் இருக்கும் வரை மனிதன் என்னமா ஆடுகிறான்!

 ஆட்டம் முடிந்து அடங்கி விட்டால் வராத ஞானம் எல்லாம் தானாக வருகிறது பார் என வீட்டுக்கு வெளியே யாரோ பேசுவதும் நமது காதுகளில் விழுகிறது

 வயது இருக்கும் போது நாத்திகம் பேசுவதும் வயதான பிறகு ஆத்திகம் தேடுவது உலகில் இப்போது மட்டுமா நடக்கிறது...கால காலமாக அல்லவா நடக்கிறது

 பனித்துளியில் ஆயிரம் பகுதியில் ஒரு சிறு பகுதி தகப்பன் வழியில் அன்னை கருவில் புகுந்து

 கால் கை முளைத்து உருவமாகி பத்து திங்களில் குழந்தையாய் பூமியில் விழுந்து

 வாழ்வதற்கோ பிறந்தேன் என வாய் விட்டு அழுது

 புரண்டு படுத்து தவழ்ந்து எழுந்து நடை வண்டி ஓட்டி

தெருவில் ஆடி பள்ளியில் அடைப்பட்டு அறிவை தேடி

 மீசை முளைத்து ஆசை அரும்ப மோக குளத்தில் நிச்சல் பழகி


 இல்லறம் புகுந்து சொத்து சுகமும் போதாது போதாது என நாளும் தேடி

 பதுக்கி காத்து கலங்கி மயங்கி வாழும் மனிதன்

 ஒரு நாள்...!

 உடல் வனப்பு மாறி கண்கள் இருண்டு பற்கள் விழுந்து நரை திரை கூடி நோய்கள் எல்லாம் சேர்ந்து வந்து மனதைரியத்தை தாக்கி அழித்து

 நடந்து ஓடிய கால்கள் தள்ளாடி கோல் ஊன்றி பார்க்கும் இளசுகள் பரிகாசம் செய்ய

 கடந்த காலத்து கதைகளையே சளைக்காமல் பேசி வாய் தடுமாறி படுக்கையில் விழுந்து

மலஜலம் கழிவது கூட அறியாது மயங்கி

கால தேவன் இழுத்து சென்ற பிறகு உழுத்த சடலத்தை பிணம் என்று ஒதுக்கி

மயானத்தில் சுட்டோ புதைத்தோ விடப்போகிறார்கள்!

இது தான் அரசனுக்கும் ஆண்டிக்கும் நடக்க போகும் ஒரே கதை!

பாலும் தயிரும் நெய்யும் கொடுத்து வளர்த்த உடல் அத்தரும் ஜவ்வாதும் அள்ளி பூசி அலங்கரித்த உடல் மண்ணுக்கோ நெருப்புக்கோ தான் சொந்த மாக போகிறது

ஆனால் இதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்து நடக்கிறோம்...


என் ஜாதி பெரியது என்கிறான் ஒருவன் என் மதம் உயர்ந்தது என்கிறான் மற்றவன் எல்லோரும் அடிமைகள் நான் மட்டுமே அரசன் ஆள பிறந்தவன் என ஆர்ப்பாட்டம் செய்கிறான் வேறொருவன்

 காலம் முழுவதும் கட்டழகு குறையாமல் பவனி வர போவதாக கர்வம் பேசுகிறாள் ஒருத்தி

 நிரந்தரமாக வாழ போவதாக தங்கமும் வைரமும் வாங்கி குவிக்கிறாள் மற்றொருத்தி

 யாருமே வாசலில் நிற்கும் வயோதிகத்தையும் மரணத்தையும் எண்ணி பார்க்கவே இல்லை

 அடுத்தவன் மனைவியை ஆசையாக பார்ப்பதற்கு முன்பு...

 கட்டுக் கட்டாக பணத்தை அடுக்குவதற்கு முன்பு ...

 கண்ணில் கண்ட நிலத்தை எல்லாம் தன் பெயரில் பட்டா போடுவதற்கு முன்பு...

 பதவிக்காக அதிகார போதைக்காக அடுத்தவனை கெடுப்பதற்கு முன்பு...

 இந்த உடலில் இருந்து உயிர் பிரிந்து விட்டால்

 மனிதன் என்ற நாம் பிணமாக மாறிவிட்டால்

 பிள்ளை வைக்கும் கொள்ளி நம்மை சுட்டு விட்ட பின்பு

 நம்மை அடையாளப் படுத்த நாம் இருந்ததை ஞாபகப் படுத்த எது இருக்க போகிறது?

 என்பதை எண்ணி பார்க்க வேண்டும்

 இதை ஒவ்வொரு மனிதனும் செய்ய துணிந்தால்...

நாட்டில் சண்டை ஏது? சச்சரவு ஏது? வம்பு வழக்குகள் தான் ஏது?

+ comments + 20 comments

08:09

அருமையான பதிவு குருஜி.

ஒவ்வொரு நாளும் நினைக்கவேண்டிய பதிவு எல்லோருக்கும் பொதுவான இந்த நிகழ்வுகள் நமக்கும் வரும் என்று தினம் ஒரு கணம் நினைத்தால் வாழ்வில் துன்பம் ஏது?

நெஞ்சை தொட்ட பதிவு .. உண்மையும் அதுதான்.

குருஜி அவர்கள் என்னை மன்னித்தருள வேண்டும்.

நான் தங்களைப்பற்றி தெரியாமல் ஏதேதோ சொல்லிவிட்டேன்.

ஐ யம் வெரி ஸாரி.

ப்ளீஸ் பார்கிவ் மீ.

சூப்பர் ,
இன்றைய பதிவு மிகவும் அருமை குருஜி,
படித்து விட்டு எப்படி பாராட்டுவது என்று யோசித்தால் வார்த்தையை வரவில்லை.
நன்றி,

Anonymous
12:33

எவன் ஒருவன் ஆஸ்பத்திரி பினவரயில்இருக்கும் பிணத்தை பார்த்து, எப்படி அராஜகம் செய்த உடம்பு இப்போது பிணம். இவள் அழகில் எத்தனை பேரை மயக்கி எத்தனை குடியை கெடுத்தவள் இப்போது இவள் பிணம்.என்பதை உண்மையான மனதுடன் நினைத்து பார்கின்றனோ அவன் உண்மையான மனிதனாக வாழ்வான் .அவனால் இந்த உலகுக்கு எந்த தீங்கும் வராது.

Anonymous
12:35

உண்மையில் அருமையான பதிவு ஒரு சின்ன விஷயம் விபத்தில் நூற்று கணக்கான பேர்கள் இறக்கும் பொது கடவுளுக்கு கண் இல்லையோ என்கிறோம் நாம் தினம் எத்தனை ஜீவன்களை கொள்க்ஹிறோம் ஒன்றும் இல்லை வீட்டில் எறும்பு கூட்டம் உடல் மீது ஏறி கடித்து விட்டதால் அந்த மொத்த எரும்பகலையும் நேசுக்கி விட்டேன் ஏன் எனக்கு கண் இல்லையா இறைவனை பொறுத்த வரையில் நாம் எல்லாம் அந்த எறும்புகள் போல் தான் பேரண்டத்தில் பூமி என்பது சின்ன பந்து கூட அன்று அதற்குள் நாம் இர்ருந்து ஆடும் ஆட்டம் இருக்கிறதே அந்த மலையின் முன் நாம் துகள் கூட அன்று
நல்ல பதிவு நன்றி

வீ.சண்முகம்

நல்ல பதிவு குருஜி..,
இந்த அருமையான பதிவை எங்களோடு
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி குருஜி..,

நெஞ்சை தொட்ட அருமையான பதிவு குருஜி.

Anonymous
15:04

மிக மிக மிக அருமையான பதிவு குருஜி...மனித வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை கதை வடிவில் விளக்கியதற்கு கோடானு கோடி நன்றிகள் குருஜி...இந்த கட்டுரை என் மனதை மிகவும் உருக்கி விட்டது..இந்த பதிவு மனித வாழ்க்கையை பற்றி என்னை மிகவும் யோசிக்க செய்து விட்டது குருஜி .

Anonymous
16:20

இன்றைய பதிப்பு வெளிவரும் வேளையில் ஸ்டாலின் அவர்கள் கைது என்றசேதி வெளிவந்துகொண்டிருக்கிறது . என்ன ஒற்றுமை பாருங்கள் .அதிக ஆசை ஆபத்து என்பது நிரூபணமாகிறது .

வணக்கம் குருஜி. இன்றையபதிவு மனதில் பசுமரத்து ஆணி போல மிகவும் ஆழமாக பதிந்து விட்டது. ரத்தம் சுண்டியபிறகு அடங்கிப்போகாமல், இளரத்தம் இருக்கும் போதே ஒவ்வொருவரும், உணர்த்து வாழ்ந்தால், எக்காலத்திலும், எதற்கும் பயப்படவேண்டாம். அருமையான பதிவு குருஜி. மிக்க நன்றி.

Anonymous
20:28

good post,

நல்ல பதிவு குருஜி நெஞ்சை உலுக்கி விட்டது

Anonymous
00:05

good one :)

sreenathan
16:44

மரணமும் முதுமையும் மறந்து விடுகிற விஷயங்கள்தான். நினைவு படுத்திய விதம் வெகு ஜோர்.

anbarivu
00:13

அருமையான உண்மை,நல்ல கருத்துக்கள்,ஆனால்...................
"கடவுள் என்று ஒருவன் இருந்தான் என்றால் அவனை கொண்டு வந்து என் முன்னாள் நிறுத்து

ஏற்ற தாழ்வுடைய சமூகத்தை ஏனடா படைத்தாய் என சாட்டையால் அடித்து தள்ளுகிறேன்

கண்ணுக்கே தெரியாத கடவுளை வணங்கி காலத்தை வீணடிக்கும் மூட ஜனங்களே!

அவன் இல்லை! அவன் இல்லை!! அவன் இல்லவே இல்லை!!!

என்று நாத்திகம் பேசிய வாய் இன்று சாரமற்ற தத்துவத்தை காலமெல்லாம் பேசி பாவங்களே செய்து விட்டேனோ ஒரு வேளை கடவுள் என்றொருவன் இருந்து அவனை நான் அவசரப் பட்டு அவமரியாதை செய்ததனால் தான் மரணம் என்னை மிரட்டுகிறதோ!

ஐயோ கடவுளே ஒரு வேளை நீ உண்டு என்றால் மன்னித்து என்னை மனிதனாக வாழ விடு! என்று சத்தம் இல்லாமல் முனு முனுக்கிறதே அது உங்கள் காதில் விழுகிறதா?".............இன்னொன்றும் என் காதில் விழுகிறது
"பாலும் தயிரும் நெய்யும் கொடுத்து வளர்த்த உடல் அத்தரும் ஜவ்வாதும் அள்ளி பூசி அலங்கரித்த உடல் மண்ணுக்கோ நெருப்புக்கோ தான் சொந்த மாக போகிறது"...........................கடவுளே!.கடவுளே!.கடவுளே!.கடவுளே!.கடவுளே!.கடவுளே! என்று சாமியாராய் இருந்தவன் அய்யோ! அவனை கவனிக்க மனவியாவது இருக்கிறாள்,நான் அனாதையாய் கிடக்கிறேனே! உன்னை காலம் எல்லாம் கும்பிட்டதற்க்கு இது தானா கதி என அலருவதும் கேட்கிறது.தோழரே!..............தவறு இருந்தால் மன்னிக்கவும்!

உன்மையில் நெஞ்சை தொட்ட பதிவு குருஜி. தங்களின் அனைத்து பதிவுகளிலும் மகுடம் வைத்தாற்போன்ற பதிவு...

Excellent! Scholarly! Great reinforcement on the purpose of life. Thanks.

Lot of feelings after reading.
The truthful fears locked me for hours.

it is 100 % true. very good post.


Next Post Next Post Home
 
Back to Top