Store
  Store
  Store
  Store
  Store
  Store

இது நாட்டுக்கு நல்லதல்ல!

    கிராமங்களில் முக்கிய பிரச்சனைகளை விவாதித்து முடிவெடுக்க பஞ்சாயத்து கூடுவார்கள்

 எல்லா விதமான கருத்துக்களும் காரசாரமாக விவாதிக்கப் படும் ஆனால் கூட்டத்தை சுமுகமாக நடத்த முடியாமல் யாரும் குந்தகம் செய்ய மாட்டார்கள் செய்யவும் முடியாது ஊர் கட்டுப்பாடு அப்படி இருக்கும்

ஆனால் நமது நாட்டின் தலை எழுத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் சரிவர நடத்த முடியாமல் மன்ற உறுப்பினர்களாலேயே இடைஞ்சல்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது

 முக்கிய கட்சிகள் தாங்கள் கொண்டு வரும் தேச நலம் சார்ந்த விஷயங்களை விவாதிக்க தடை ஏற்ப்படும் போது அதை எதிர்த்து போராடுவது ஜனநாயகத்தின் முக்கிய அம்சம் தான்


ஆனால் நின்றால் குற்றம் நிழல் பட்டால் தோஷம் என்பது போல் எல்லா விவகாரங்களுக்கும் சபையை நடத்த முடியாமல் முட்டுக் கட்டை போடுவது ஆரோக்கியமான அணுகுமுறை இல்லை

 இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சவால்களை விவாதித்து நல்ல முறையில் தீர்வு காணத்தான் உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டு டெல்லிக்கு அனுப்பப் படுகிறார்கள்

 ஆனால் அவர்கள் கட்சியின் தலைமைக்கு கட்டுப் பட்டோ அல்லது கட்சி நலத்திற்காகவோ செயல் படுபவர்களாக இருக்கிறார்களே தவிர மக்கள் நலனை பற்றி கிஞ்சித்தும் கவலை பட வில்லை

 கடந்த சில ஆண்டுகளாகவே நமது நாடாளுமன்றம் ஒத்திவைப்பு மன்றமாக தான் இருந்து வருகிறது 


பொறுப்பு மிக்க எதிர்கட்சியான பாஜக மக்கள் நலனுக்கு ஏற்படும் இடையூறுகளை நாடாளுமன்றத்தில் மட்டுமே பேசி சண்டை போட்டு விவகாரத்தை கிளப்புகிறதே தவிர மன்ற கூட்டம் நடைபெறாத நாளில் மக்களுக்கான அறப்போரட்டங்களை கண்டு கொள்ளாமல் கும்பகர்ண உறக்கத்தில் ஆழ்ந்து விடுகிறது

 இப்போது எல்லாம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது மட்டும் தான் பாஜக என்ற கட்சி இருப்பதே நாட்டு மக்களுக்கு நினைவுக்கு வருகிறது

 அதாவது இவர்கள் எதற்ககெடுத்தாலும் சபையை நடத்த முடியாமல் செய்வதனால் மக்கள் மிகவும் வெறுத்து போய் இருக்கிறார்கள்

இந்த கூட்டத் தொடரில் அலைக்கற்றை ஊழல் தொடர்பாக பிரதமரும் உள்துறை அமைச்சரும் சந்தேக நிழலுக்குள் அகப்பட்டு கொண்டதை விவாதிக்க வேண்டிய முக்கிய பணி உள்ளது


 மேலும் கருப்பு பண விவகாரம் விலைவாசி உயர்வு பெட்ரோலிய பொருட்களின் தாறுமாறான விலை ஏற்றம் போன்றவைகளும் விவாதிக்க வேண்டிய விஷயமாகும்

 இவைகளை பற்றிய மக்களின் கருத்தை அரசுக்கு சொல்ல வேண்டிய முக்கிய பொறுப்பு எதிர் கட்சிகளுக்கு உள்ளது

இதுவும் அல்லாமல் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் சர்வதேச விதிமுறைகளை மீறி தொழில் நடத்த விடாமல் பல இடைஞ்சல்களையும் இன்னல்களையும் கொடுத்து வருகிறார்கள்

 இதனால் இந்திய பொருளாதாரம் நஷ்டம் அடைவதோடு இல்லாமல் விலைமதிக்க முடியாத இந்திய மீனவர்களின் உயிர்களும் பறிபோகிறது

இதுவரை ஆட்சி பொறுப்பில் உள்ள எந்த அரசும் இந்திய மீனவர்களை கண்டு கொண்டதாக தெரிய வில்லை

அரசாங்கத்தின் அலட்சிய போக்கை மாற்றி அமைக்க வேண்டிய கடமையும் எதிர்கட்சிகளுக்கு உண்டு


 அடிக்கடி நாடாளுமன்ற விவகாரங்களை தடைசெய்வதினால் இந்த பிரச்சனைகளை மன்றத்தின் முன்னால் கொண்டுவர முடியாத பாதக நிலை ஏற்படுகிறது

அவை நடவடிக்கைகள் தடைப்படாமல் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்க ஜனநாயக மரபில் எத்தனையோ வழிகள் உண்டு வேறு வழியே இல்லாத போது தான் சபையை முடக்கும் காரியத்தை செய்ய வேண்டும் இது தான் ஜனநாயகத்தின் நாகரிக நெறியாகும்

 ஆளும் தரப்புக்கு எப்படி மக்கள் மீது அக்கறை இல்லையோ அதை போலவே தான் எதிர்தரப்பும் நடந்து கொள்கிறது என்று இந்த செயல்களை பார்த்தாலே தெரிந்து கொள்ள முடிகிறது

 மிக முக்கியமாக பாஜக வெளியில் அதாவது வீதியில் கட்சியை வளர்க்க எந்த வகையும் இல்லாமல் தனது இருப்பை காட்டிக் கொள்ள இப்படி நடந்து கொள்கிறதோ என்று தோன்றுகிறது

எல்.கே.அத்வானி,சுஷ்மா ஸ்வராஜ்,ஜோஷி போன்ற முக்கிய தலைவர்கள் இருக்கும் போது பாஜகவின் இத்தகைய செயல்பாடுகள் நடை பெறுகிறது என்றால் அந்த கட்சி இன்னும் தனது உள் வீட்டு சண்டையை முடிக்க வில்லை தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்பது தான் நிஜ பொருளாக இருக்கும்

 இன்று நம்மை ஆளுகின்ற கட்சி மக்கள் மீதோ தேசத்தின் மீதோ அக்கறை கொண்ட எந்த செயலையும் செய்ய வில்லை

பணக்காரர்களுக்கும் அதிகார வர்க்கத்தினர்களுக்கும் சாதகமான செயல்களை செய்து கொண்டு இருக்கிறது

தமிழகத்தில் நடைபெற்ற திமுக ஆட்சி எப்படி ஒவ்வொரு நலத்திட்டத்தின் உள்ளேயும் கொள்ளை அடிப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி செயல் பட்டதோ அதே போலவே தான் மத்திய அரசும் தனது ஆட்சி கலையை நடைமுறைப் படுத்தி வருகிறது

இதை தட்டி கேட்க வேண்டிய எதிர்கட்சிகள் அதாவது பாஜக,கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் சொந்த வலிகளை நீக்கி கொள்ள முடியாமல் தத்தளிக்கின்றன

நிச்சயம் இது நாட்டுக்கு நல்லதல்ல

எனவே இவர்கள் பாராளுமன்றத்தை சந்தைக்கடை ஆக்காமல் அரசாங்கத்தின் கொடூர முகத்தை தோலுரித்து காட்டும் பணியை சபையில் செய்ய வேண்டும்

இதற்கு மன்ற நடவடிக்கைகள் தடைபடாமலும் கவனிக்க வேண்டும் அதை விட்டு விட்டு வீணான முடக்குதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டால் தேசத்தின் குப்பை கூடை இவர்களை ஏற்க்க தயாராக இருக்கிறது.


Contact Form

Name

Email *

Message *