Store
  Store
  Store
  Store
  Store
  Store

கை மேல் பலன் நிச்சயம்!

  • யாகங்கள்,ஹோமங்கள் செய்வதனால் என்ன பயன்?
மணிகண்டன் திருவாரூர்


   ன்றய தலைமுறைனர்கள் நெருப்பை வளர்த்து அதில் நெய்யை ஊற்றி புகையை வளர்ப்பதனால் என்ன பயன் என்று கேட்கிறார்கள்

சில பகுத்தறிவாதிகள் யாகங்கள் செய்வதனால் புரோகிதர்களும் புரோகித தொழிலும் தொப்பையும் வளர்கிறதே தவிர வேறு எதுவும் கிடையாது என்கிறார்கள்

ஆனால் உண்மை நிலை அது அல்ல யாகங்கள் என்பது அறிவு பூர்வமானது அதைபற்றிய விஞ்ஞான அறிவை மனிதர்கள் வளர்த்து கொள்ளாததே இத்தகைய விமர்சனங்கள் நட மாடுவதற்கு காரணமாக உள்ளது

முதலில் யாக குண்டம் அமைப்பதற்கே சில கணக்குகள் அளவுகள் உண்டு அதன் படி செய்தோம் என்றால் பிரபஞ்ச ஆற்றலை அந்த குண்டம் ஈர்க்கும் சக்தியை பெற்று விடுகிறது

எந்த நிலையிலும் கீழ் நோக்காத மேல் நோக்கும் நெருப்பை வளர்த்து அதில் மூலிகை பொருட்களை ஆகுதியாக மந்திர உச்சாடனத்தோடு கொடுக்கும் போது மனிதர்கள் விரும்புகின்ற பலனை பெற முடிகிறது

உதாரணமாக பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரம் வாழ்க்கையில் ஏற்ப்படும் பல தடை தாமத பிரச்சனைகள் ஆயுள் ஆரோக்கியம் ஆகியவைகள் சிறப்புடன் அமைய நவக்கிரக ஹோமம்  செய்ய சொல்கிறது

அதில் நவ புஷ்பம்,நவ தானியம் போன்றவைகளை ஆகுதியாக்க சொல்கிறது இந்த முறைப்படி செய்யப்படும் நவக்கிரக ஹோமம் சரியான பலனை இதுவரை கொடுத்து வருவதை அனுபவ ரீதியாக நான் அறிவேன்

ஆனாலும் விஞ்ஞான உலகம் கேட்கும் சான்றிதழ் ஆதாரங்கள் எதுவும் இதுவரை யாரிடமும் கிடையாது

கஷ்டப்பட்டு கொடுத்தாலும் கூட எல்லாவற்றையுமே இல்லை இல்லை என சொல்லிப் பழக்கப் பட்ட நாத்திகர்கள் இதையும் இல்லை என்று தான் சொல்வார்கள்

ஆனால் அதைப் பற்றி வருத்தப் பட நமக்கு ஒன்றும் இல்லை

நமது ஞானிகள் மனதிற்குள் மறைந்திருக்கும் ஆசைகளையும் உருப்படாத எண்ணங்களையும் ஆத்ம நெருப்பில் போட்டு பொசுக்குவதின் வெளி அடையாளமே யாகம் என்கிறார்கள்

இந்த யாகத்தை யார் வேண்டும் என்றாலும் எப்போது வேண்டும் என்றாலும் செய்யலாம் கை மேல் பலன் நிச்சயம் உண்டு.

  • மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்


Contact Form

Name

Email *

Message *