Store
  Store
  Store
  Store
  Store
  Store

தற்கொலை செய்யும் நேரம் எப்போது...?


  • ரு மனிதன் எப்போது தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறான்?
வெங்கட் திருச்சி


    ம்மாவின் இடுப்பில் உட்க்கார்ந்து கொண்டு சந்தை கடையை சுற்றி பார்க்கும் போது ஜவ்வு மிட்டாய் வேண்டும் என்று அடம்பிடிக்கிறோம்

அம்மா வாங்கி தர வில்லை என்றால் செத்து போகலாம் போல் தோன்றுகிறது ஆக அந்த வயதிலேயே தற்கொலை எண்ணம் உதயமாகி விடுகிறது

அதன் பிறகு ஓட்டை கால் சட்டையை கிண்டல் செய்யும் நண்பர்களிடம் இருந்தும் கணக்கு பாடம் மண்டையில் ஏறாத போது பிரம்பால் விளாசி தள்ளும் வாத்தியாரிடமிருந்தும் தப்பித்து கொள்ள தற்கொலை செய்யலாமா என தோன்றுகிறது

ஆசை பட்ட பெண் எதிர்பார்த்த வேலை கிடைக்காத போதும் அந்த எண்ணம் தோன்றுகிறது

இப்படி வயதுக்கு ஏற்ற சூழலுக்கு தகுந்த விதத்தில் எல்லா மனிதனுக்குமே எதோ ஒரு சூழலில் தற்கொலை செய்து கொள்ள விருப்பம் வருகிறது

இதில் தொண்ணுறு விழுக்காடு மனிதர்கள் எண்ணத்தோடு நிறுத்திக் கொள்கிறார்கள் மீதம் உள்ளவர்கள் தான் எண்ணத்தை செயலாக்கி தனக்கும் பிறருக்கும் துயரத்தை தருகிறார்கள்

தற்கொலை செய்து கொள்ள விரும்புவர்களை நான் கோழைகள் என்று சொல்ல மாட்டேன் காரணம் கோழைகள் கூட எதற்காகவாவது பயன் படுவார்கள் இவர்கள் ஒன்றுக்குமே லாயக்கில்லாத மடசாம்பிராணி.


  • பார்வை கோளாறு என்று சொன்னால் அது கண் பாதிப்பை மட்டும் தான் குறிக்குமா?
சாஜகான் ஏர்வாடி

   பார்வை என்ற தமிழ் வார்த்தைக்கு நிறைய பொருள் இருக்கிறது குறிப்பாக சொல்வது என்றால் நோக்கம் கருத்து என்பவைகளை கூட பார்வை என்ற வார்த்தைக்குள் கொண்டு வரலாம்

ஒவ்வொரு மனிதனும் வெற்றி பெற வேண்டும் என்று தான் நினைக்கிறான் அப்படி நினைப்பது நல்ல நோக்கம் தான் ஆனால் அந்த வெற்றியை எப்படி வேண்டும் என்றாலும் அடையலாம் எனும் போது நோக்கம் கோளாறாகிவிடுகிறது

உண்மையை பேச வேண்டும் என்பது நல்ல கருத்து நல்ல சித்தாந்தம் தான் ஆனால் அந்த உண்மை பேச கூடாத இடத்தில் தேவை இல்லாத பேசப்படும் என்றால் அது கருத்துக் கோளாறாகிவிடுகிறது

ஆக பார்வை கோளாறு என்பது இப்படியும் பொருள் படும்


  • மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்


Contact Form

Name

Email *

Message *