( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தபால் தீட்சை கொடுக்கபடுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

வந்தது கோழி, கிளரியது குப்பை!


  • கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? விதையில் இருந்து மரம் வந்ததா? மரத்தில் இருந்து விதை வந்ததா? சொல்லுங்கள் பார்ப்போம்
வரதராஜன் தாம்பரம்


   சார்லஸ் டார்வின் பரிணாம விஞ்ஞான தத்துவப் படி முதலில் வந்தது முட்டையும் விதையும் தான் அதன் பிறகு தான் மரமும் அதன் அடியில் கிண்டி புழுபொருக்கும் கோழியும் வந்தது

ஆனால் மதங்கள் அப்படி சொல்லவில்லை முதலில் மரமும் கோழியும் வந்ததாக தான் சொல்கிறது

இதில் எது சரி எது தவறு என்று ஆராய்ந்தால் நமக்கு தலை தன் சுற்றும் வேதியியலை நம்புவதா வேத இயலை நம்புவதா என்ற வாத பிரதிவாதம் தான் இன்று வரை தீராத சண்டையாக இருக்கிறது

உயிரை ரசாயனமாக பார்க்கும் போது விஞ்ஞானமும் ஆத்மாவாக பார்க்கும் போது மெய்ஞானமும் சரியாகவே படுகிறது

ஆனால் மெய்ஞானத்திற்கு இன்றைய காலம் வரை நம்பிக்கை மட்டுமே ஆதாரமாக இருக்கிறது

என் கருத்தை மறைக்காமல் ஒழிக்காமல் சொல்வது என்றால் கடவுள் முதலில் கோழியைத்தான் முதலில் படைத்தார் அந்த கோழி தான் குப்பையை கிண்டி கிளறி விஞ்ஞானத்தை படைத்து நம்மை குழப்புகிறது


  • ம்மா வேலைக்கு போ என்கிறார்கள் எனக்கோ படிக்க ஆசை தாய் சொல்லை தட்டவா? வேலைக்கு போவதா? உங்கள் முடிவு என்ன?
பெயர் சொல்ல விரும்பாத வாசகர்


    டிக்க வேண்டிய வயதில் படிக்க வேண்டும் அந்த காலத்தை தவற விட்டு விட்டு தள்ளாடும் வயதில் படித்திருக்கலாமே என்று புலம்புவது நன்றாக இருக்காது

வயது முதிர்ந்த பிறகு சுலபமாக பாடங்கள் மனதில் ஏறாது அதனால் தான் நமது பெரியவர்கள் இளமையில் கல் என்று சொன்னார்கள்

ஆனால் உங்கள் அம்மா வேலைக்கு போ என சொல்வதில் குடும்ப பொருளாதாரம் கஷ்டத்தில் இருக்கிறது என்ற பொருள் மறைந்து கிடக்கிறது

மற்றவர்களை கஷ்டப்படுத்தி பெறுகின்ற பொருள் மட்டும் அல்ல கல்வியும் பாவமானதே ஆகும்

எனவே தாயார் சொற்படிதான் நீங்கள் நடந்தாக வேண்டும் அனாலும் படிக்க விரும்புவது நல்ல எண்ணம் அல்லவா அதை குழிதோண்டி புதைக்கவும் கூடாது

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் படிப்பது என்பது வேலைக்கு போக வயிற்றை வளர்க்க மட்டும் அல்ல அறிவை வளர்ப்பது தான் படிப்பதன் குறிக்கோளாகும்

அந்த குறிக்கோளை வேலை செய்து கொண்டும் அடையலாம் அப்படி நிறைய பேர் அடைந்தும் இருக்கிறார்கள்.


  • மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்


+ comments + 4 comments

ஸ்ரீராம், ஆஸ்திரேலியா
08:35

ஆம் ஆம்! படிப்பு என்பது மனிதைச் செம்மைப்படுத்த வேண்டுமே அன்றி பாழாக்கக் கூடாது! கிராமங்களில் சொல்லுவார்கள் அவனைப் பார்த்தல் படித்தவன் மாதிரி இருக்கிறான் ஆனால் நடப்பு சரியில்லையே என்று! அதன் பொருள் படித்தவன் என்றால் "BA MA BE MMBS" அல்ல வாழ்கை முறை அல்லது எது நல்லது எது கேட்டது என்பதை அறிந்தவன் என்பதேயாகும். இன்றைக்கு இந்தியாவில் உள்ள அத்தனை படித்தவர்களும் படித்தவர்கள் மாதிரி நடந்து கொண்டால் லஞ்சம் ஊழல், கெட்ட எண்ணம், சுயநலம், பொறாமை என்னும் பேய்கள் எல்லாம் நடமாட முடியாது. ஸ்ரீ ஆதி சங்கரர் அந்தக்காலத்தில் "பஜ கோவிந்தம்" பாடலில் சொன்ன நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கும் போது மனித இனம் இன்றைய கல்வியினால் அடைந்த முன்னேற்றம் ஏதுமில்லை எனலாம்!

ஜான்
11:31

எனக்குப் பிடித்த ஒரு ஜென் விவாதம் ----உங்கள் பதிவையும் இதையும் பொருத்திப் பாருங்கள்
சீடன் கேட்டான் "இவை எல்லாம் ---இந்த மரங்கள் ,மலைகள்,ஆறுகள்,கடல்கள் --எல்லாம் எங்கிருந்து வருகின்றன?"
குரு கேட்டார் "உன் கேள்வி எங்கிருந்து வருகிறது ?"
ஆங்கிலத்தில் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும் ----
DISCIPLE: “All these திங்க்ஸ்--- trees, hills,
rivers and seas----where do they all come from?”

GURU: ‘Where does your question come from?”

sreenathan
07:26

டார்வினை ஒத்தவர்கள், மற்றவர்கள் என இரண்டாக பிரித்து கொள்வோம். உலகில் நாம் காண்பனவற்றை வைத்து விவாதம் செய்கிறோம். பெரும்பாலும் விவாதம் முடிவதில்லை.
உலக தோற்றம், அதன் வயது போன்ற வற்றை இரு சாரரும் கூறுகிறோம். படைப்பும் இயக்கமும் தற்செயல் என்றும் , திட்டமிட்டது என்றும் இரண்டு கருத்துகள். ஒரு சிறிய கணக்கு. விடையை என்னிடம், கேட்காதீர்கள். இந்த கணக்கினால் என்ன சொல்ல வருகிறாய் என்றும் கேட்காதீர்கள். ஒரு நண்பர் சொன்ன ஜென் கேள்வி பதில் முறை என நினைத்து கொள்ளுங்கள். ஒரு பையில் ஒன்று, முதல் பத்து லட்சம் வரை இலக்கமிட்ட நாணயங்களை குலுக்கி வைத்து கொள்ளவோம். இப்போது தேடாமல், நாணயங்களை வெளியில் எடுக்கும்போது ஒன்று முதல் பத்து லட்சம் வரை வரிசையாக வரும் எடுப்பதாக இருந்தால் எவ்வளவு காலம் பிடிக்கும். இப்போது சொல்லுங்கள் , படைப்பும் இயக்கமும் தற்செயலா, திட்டமிட்டதா என்று.
குருஜி நன்றிகள்.

ஸ்ரீராம் ஆஸ்திரேலியா
13:33

உயிர்களின் படைப்பு குறித்த நமது இந்து மதக் கருத்துக்கள் அறிவியல் பூர்வமானவை! இன்றைக்கு அறிவியல் சொல்வது என்ன? பலமுறை "ICE AGES " அதாவது உலகம் உறைவதும் மீண்டும் உயிர்கள் எழுவதும் நடைபெற்றுள்ளன என்பதுதானே? அதையேதான் ஹிந்து மதம் பிரம்மாவின் இரவுப்பொழுதில் ஒருசில கோள் கூட்டங்கள் தவிர எல்லா உலகங்களும் உறையும் என்கிறது. பிரம்மாவின் ஒரு நாள் எனபது பல நூறு ஆயிரம் ஆண்டுகள் என்றுதானே நமது மதக் கருத்துக்கள் தெரிவிக்கின்றன. அப்படி மீண்டும் மீண்டும் தோன்றும் போது டார்வினின் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்திருக்கலாம். ஏனெனில் சுபர் மஹ தப லோகங்களில் உள்ள ரிஷிகள் பிரம்மாவை மீண்டும் உயிர்களைப் படைக்கச் சொல்லி துதி பாடுவதாகத்தானே நமது புராணங்கள் சொல்கின்றன. ஆனால் முதன்முதலாக படைப்பு என்பதும் உடனே நிகழாமல் ஒவ்வொன்றாகத் தானே பிரம்மா படைத்ததாக அவை சொல்கின்றன. தசாவதாரம் என்று இன்றைக்கு உள்ளவை உண்மையில் இந்த வரிசைப்படி எடுக்கப்பட்டதல்லவே? ஆனாலும் மீன், ஆமை (நிலத்திற்கும் நீருக்கும் தொடர்புள்ள உயிரினம்), வராகம் (நிலத்து உயிரினம்), நரசிம்மம் (பாதி விலங்கு பாதி மனிதன்), வாமன (குறு மனிதன்), பரசுராம (கோபத்தில் கொந்தளிக்கும் மனிதன்), ராம (பொறுமையான மனிதன்), கிருஷ்ண (தந்திரம், புத்தி சாதூரியம் நிறைந்த மனிதன்), புத்த (அஹிம்சை உயிர்க் கொலை தவிர்த்தல், புலால் உண்ணாமை) , கல்கி (வெப்பம், தீ, ஊழிக் கடல், அழிவு) என்றுதானே இன்றைக்கு வகுத்திருக்கிறோம். விஷ்ணு புராணம் பல படைப்புச் செய்திகளைத் தெளிவாகத் தருகிறது!


Next Post Next Post Home
 
Back to Top