Store
  Store
  Store
  Store
  Store
  Store

கால்களைத் தொடாத நகை மோகம் !


  கைகள் அணிவது இந்திய கலாச்சாரத்தின் மிக உயர்ந்த பண்பாகும்.  இந்தியனது கலைத் திறமைக்கு நகைகளின் நூண்ணிய வேலைப்பாடுகள் தக்க சான்றுகளாகும்.

பெண்கள் மட்டும் தான் நகைகளை விரும்புகிறார்கள் என்று சொல்லி விட முடியாது. 

பண்டைய காலம் தொட்டே ஆண்களும் நகைகள் மீது காதல் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். 

பழங்கால அரசர்களின் ஓவியங்களை பார்த்தால் அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை கண்டு நமக்கு மூச்சே நின்று விடும்.  


கோட்டு போட்டு உடலில் மேற்பகுதியை மறைப்பது போல பல வித ஆரங்களையும் அட்டியல்களையும் அவர்கள் அணிந்திருக்கிறார்கள். 

அந்த நகைகளின் மேல் பதித்திருக்கும் நவரத்தினங்களை எண்ண ஆரம்பித்தால் கண்கள் சுளுக்கிக் கொள்ளும். 

அக்கால ஆண்களே இப்படி என்றால் பெண்களின் நிலையை நினைத்து பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது. 

இடுப்புக்கு ஒட்டியாணம், கைகளுக்கு வங்கி, தோளுக்கு வளைவு, நெற்றிக்கு சுட்டி, தலைக்கு கிரீடம், கொண்டைக்கு தங்கப் பூ தவிர விதவிதமான மோதிரங்கள் வளையல்கள், காது தோடுகள், மூக்குத்திகள், புல்லாக்குகள், டோலாக்குகள், காலுக்கு தண்டை, கொலுசு, நாக்குக்கு மட்டும் தான் நகையில்லை.

இவ்வளவு நகைகளை அணிந்து கொண்டு குனிந்து, நிமிர்ந்து நடந்து எப்படித் தான் வேலைகளை கவனிப்பார்களோ, கவனித்தார்களோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.  



அந்த காலத்தில் அரசர்களின் செருப்புகளும் பட்டத்து யானையின் முகப்படாகமும் ஏன் இராஜா பவனி வரும் குதிரையின் லாடமும் கூட தங்கத்தால் செய்யப்பட்டது. 

ஆனால் எந்த சீமானும், சீமாட்டியும் கால் கொலுசுகளையும், தண்டைகளையும் தங்கத்தில் செய்யவில்லை. அதாவது கால்களில் தங்க நகைகளை அக்காலத்திலும் இக்காலத்திலும் யாரும் அணிய வில்லை 

அதற்கு காரணம் அவர்கள் பொன்னை சொர்ண லஷ்மியாக மதித்தார்கள்.  வழிபட்டார்கள். 

வழிபடக் கூடியதை காலில் அணிந்து அவமானப்படுத்தும் துணிச்சல் அவர்களுக்கு இல்லை. 

ஆனால் காலில் தங்கம் போடாததற்கு இது மட்டுமல்ல காரணம். 

தங்கத்தை நமது உடலில் ஒவ்வொரு பகுதியிலும் வைக்கும் போது உடல் சில தன்மைகளை பெறுகிறது. 

காதில் தங்கம் இருந்தால் பின் கழுத்து நரம்பு வலுவாகயிருக்கும்.  மூக்கில் தங்கமிருந்தால் கண்பார்வை வலுவடையும்.  


மோதிர விரலில் தங்கமிருந்தால் கருப்பையும், விந்துபையும் வலுவடையும். 

ஆனால் காலில் தங்கம் அணியும் போது வாத நரம்புகள் தூண்டி விடப்பட்டு உடலில் வீக்கமும் வலியும் ஏற்படும் என மருத்துவ சாஸ்திரம் சொல்லுகிறது. 

அதனால் தான் நம் முன்னோர்கள் வாதத்தை கட்டுப்படுத்தி சமமாக வைக்கும் வெள்ளியை காலில் அணிந்தார்கள் இது தான் நமது முன்னோர்கள் கால்களில் தங்கம் அணியாததின் ரகசியமாகும்


  • மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்


Contact Form

Name

Email *

Message *