- 5 ஆண்டு கால அடிமைச் சங்கிலியை உடைத்துள்ளனர் தமிழக மக்கள்-ஜெ
 
   அடிமை சங்கிலியை அறுத்ததை நினைத்து மனம் சந்தோசம் அடைவது என்னவோ உண்மை  தான் ஆனாலும் பாரம் சுமந்தே பழக்கப் பட்ட எங்களுக்கு புதிய பாரம் எதாவது  தலையில் ஏறி விடுமோ என்ற பயம் அடிக்கடி ஏற்படுகிறது உங்கள் பிடிவாதம்  வரட்டுக் கெளரவம் எதுவுமே மாற வில்லை போல் தெரிகிறது மேடம் அடிமையாக இருந்த  நாங்கள் கொத்தடிமைகளாக ஆகி விடுவோமோ என்ற பயம் வாட்டி வதைக்கிறது  எங்களுக்காக உங்களை மாற்ற முயற்சி செய்து பாருங்களேன் அதிக பட்சமாக எங்களது  பயமாவது தொலையும் 
- ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் தேவை-பிரதமர் பேச்சு!
 
  சோனியா காந்தி ஊரில் இல்லை என்ற தைரியத்தில் சத்தம் போட்டு நம்ம  அண்ணாச்சி பேசி விட்டார் போல் தெரிகிறது அம்மையார் ஊருக்கு வந்த உடன் இந்த  குமாஸ்தா தனக்கு தேவையில்லை என்று முடிவு செய்தாலும் செய்து விடுவார்  எதற்கும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது இந்த பிரதமர் வேலையை விட்டால் பாவம்  அண்ணாச்சிக்கு வேறு எந்த வேலையையும் தெரியாது மளிகை கடைகாரன் கூட பொட்டலம்  கட்ட வேறு நல்ல ஆளைத்தான் தேடுவான் லோக் பால் அது இது என்று பேசி இருக்கிற  வேலையை கோட்டை விடாமல் இருப்பது புத்திசாலிக்கு நல்லது ஊழலை ஒலிக்கலாம்  என்று பேசுவது உங்கள் எஜமானி அம்மாவிற்கு சுத்தமாக பிடிக்காது சும்மா  வறட்டு தைரியத்தில் பேசி விட்டு நாளைக்கி வருத்தப் படாதீர்கள் பிரதமர்  அண்ணாச்சி 
- சுதந்திர தினத்தன்று ப.சிதம்பரம் வீட்டில் துணிகர கொள்ளை
 
  இனி யாரும் நம்ம செட்டியாரை சுயநல காரர் என்றோ தன்னை காப்பாத்தி  கொள்வதில் வல்லவர் என்றோ சொல்ல முடியாது அப்படி யாராவது பேசினால் இந்த  சம்பவமே சூடானா ஆதாரமாக எடுத்து தரப்படும் அவர் எப்படி நாட்டு விசயத்தில்  அதை காப்பாற்ற வழியறியாமல் கண்கள் பிதுங்கி விடும் அளவிற்கு தத்தளிக்கிறாரோ  அதே போல தான் வீட்டையும் காப்பாற்ற வழியறியாமல் இருந்திருக்கிறார் இப்படி  பட்ட ஒரு அப்பாவியை குறை சொல்வதற்கு எப்படி தான் மனது வருகிறதோ தெரிய  வில்லை உள்துறை அமைச்சர் வீட்டிலேயே நடக்கும் கொள்ளையே தடுக்க முடியாத போது  உள் நாட்டு பாது காப்பிற்காக அவர் எதை செய்து விடப் போகிறார் என்று யாரும்  வாய் திறந்து விடாதிர்கள் உங்களை காவி தீவிரவாதி என்று முத்திரை  குத்திவிடுவார் அப்புறம் அவ்வளவு தான் 
- அறிவாலயத்தில் முதல் முறையாக சுதந்திர தின கொண்டாட்டம்
 
   என்ன கொடுமை இது முதல் சுதந்திர தின விழாவையே துக்க தினமாக  கொண்டாடியவர்கள் கட்சி அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி வணக்கம் வைக்கும்  அளவிற்கு நிலைமை போய் விட்டதே அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடு காடு  என்று பேசிய வீர நாவுகள் எங்கே போயின நாங்களும் தேசிய வாதிகள் எங்களுக்கும்  தேச பக்தி உண்டு என்று பகிரங்கமாக காட்டிக் கொண்டாலாவது சிறையில் வாடும்  கனிமொழியை விடுதலை செய்ய கங்கிரஸ் தெய்வங்கள் கண்ணசைக்காதா என்று கலைஞர்  புதுவித தவக்கோலம் ஏற்கிறார் என்று மக்கள் பேசாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 
  








