Store
  Store
  Store
  Store
  Store
  Store

படித்த பாவம் தீர்ப்பாய்...!

ன்ன சுவை என்ன சுவை
    ராமா உன் நாமம்
என்ன சுகம் என்ன சுகம்
   ராமா உன் பாதம்

வேதம் ஓதும் நாதன் பின்னே

   நடந்ததுன் பாதம்
வேத நாத கீதமாக
   விரிந்ததுன் நாமம்

கடல் கடக்க வாயு மைந்தன்

   சொன்னதுன் நாமம்
உடல் கடந்த ஞான தேவர்
   சேர்வதுன் பாதம்

கடித்த கனி சுவைத்திடவே

   காட்டினிடை நடந்தாய்
துடித்த மனம் குளிர்ந்திடவே
   சேது பந்தம் அமைத்தாய்
 
படித்த ஞான அகங்கார
   பாவ இருள் துடைத்தாய்
வடித்த கண்ணீர் காயும் முன்னே
   வாழ்வில் இதம் கொடுப்பாய்https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCAwzxeRuGcMhVu5ZS5871oEWWb56mzihiKmW0q9kzYye_GRgiKYx-KXOBIXGb2N1A3VSUnJ3-_LElDG1n_-sG8w3cCR4s_zT60ZuvEZSZ6aQZac-LgAT-lBuGTaD0dE-K1HjfeeKSBXQ/s1600/sri+ramananda+guruj+3.JPG

Contact Form

Name

Email *

Message *