Store
  Store
  Store
  Store
  Store
  Store

நீங்களும் நானும் புலம்புவோம்


   னிதர்களின் துயரங்களுக்கு மூலகாரணம் ஆசை என்றார் புத்தர் இது அவரின் புதிய கண்டுபிடிப்பு அல்ல என்றாலும் உலக முழுவதும் அவர் சொன்னதாகத்தான் சொல்லப்படுகிறது அந்த வாதம் இப்போது நமக்கு தேவையில்லை என்றாலும் துயரங்களை விட்டுவிடும் மார்க்கத்தை பற்றி பேசும்போது நினைக்க வேண்டிய சூழல் வருகிறது

பொதுவாக நமது துக்கங்களை ஆழ்ந்து ஆய்வு செய்யும் போது அவற்றிற்கு காரணம் நமது விருப்பங்கள் அபிலாசைகள் ஆசைகள் என்பது தெளிவாக தெரிகிறது முதலில் மனிதன் ஏன் ஆசைப்படுகிறான் என்பதை சிந்திக்க வேண்டும் நன்றாக பழக்கப்பட்ட ஒரு இடத்தில் உறங்கவேண்டும் என்றால் சுகமாக தூக்கம் வரும் அறிமுகம் இல்லாத பழக்கம் இல்லாத இடத்தில் தூக்கம் வருவது சிரமம் தான் நாம் அடிக்கடி புழங்குகிற இடத்தில் ஒரு பாதுகாப்பு உணர்வு நமக்கு இருக்கும் அது புதிய இடத்தில் இருக்காது பாதுகாப்பு உணர்வு இல்ல என்றால் பயம் வரும் படபடப்பு வரும் கூடவே துக்கமும் வந்துவிடும் எனவே துயரங்களுக்கு மூலகாரணம் நான் பாதுகாப்பாக இல்லை என்ற எண்ணம்


எனக்கு பாதுகாப்பை மனைவி மக்கள் குழந்தை குட்டிகள் சொந்த பந்தங்கள் தருவதாக நினைக்கிறேன் இதனால் அவர்களோடு சேர்ந்து வாழ ஆசைபடுகிறேன் நீங்கள் உங்களுக்கு பாதுகாப்பு தருவது பணமும் சொத்து பத்துக்களும் என்று கருதுகிறிர்கள் அதனால் அவைகளை அதிகமாக பெற ஆசைப்படுகிறீர்கள் நமது நண்பரோ அதிகாரமிக்க பதவி கிடைத்தால் பாதுகாப்பாக வாழலாம் என நம்புகிறார் இதானால் அவர் பதவியை நோக்கி ஓடுகிறார் இப்படி ஒவ்வொருவரும் எதாவது ஒன்று பாதுகாப்பை சந்தோசத்தை தருமென்று எதிர்பார்த்து அவற்றை பெற அலைகிறார்கள் இதுதான் ஆசையின் மூலம்

நாம் விரும்பியது கிடைக்காத போது ஆசைப்பட்டது கை நழுவி போகும்போது துக்கப்படுகிறோம் அதனால் துக்கத்தை துயரத்தை நாம் சந்திக்க கூடாது என்றால் ஆசையை துறக்க வேண்டும் இது உபநிஷத ஞானிகள் கெளதம புத்தர் போன்ற பெரியோர்களின் அறிவுரையாகும் ஆசையை அடக்க துன்பம் இல்லாமல் வாழ எனக்கும் ஆசைதான் ஆனால் அதற்கு வழி தெரியவில்லயே என்று பலரும் புலம்புகிறார்கள்

நீங்களும் நானும் இப்படி புலம்புவோம் என்பதை நன்கு அறிந்துகொண்டதனால் பகவான் கிருஷ்ணன் ஆசையை துறக்க எளிமையான வழியை சொல்கிறான் நண்பா ஆசைபடாமல் பலனை எதிர்பார்க்காமல் காரியங்களை செய்வது மனிதர்களுக்கு சாத்தியம் இல்லை என்று தெரியும் இருந்தாலும் உன் துக்கத்தை நீக்க நீ ஆசைபட்டவைகளை நீ எதிர்பார்ப்பவைகளை அவைகள் நல்லதாக இருந்தாலும் தீயதாக இருந்தாலும் எனக்கு அர்பணித்து விடு என் காரியம் எதுவும் இல்லை எல்லாம் கண்ணன் காரியம் என்ற மனநிலையை வளர்த்துக்கொள் உன்னிடம் இருந்து ஆசை புயலானது விலகி போவதை காண்பாய் என்கிறான்


நாம் என்ன அதிமேதாவியா கடவுள் கண்ணன் சொன்னதை உடனடியாக புரிந்து கொள்ள அர்பணிப்பு என்றால் என்ன அதை எப்படி செய்வது என்பது நமக்கு புரியவும் இல்லை தெரியவும் இல்லை இதனால் தான் கண்ண பரமாத்தமா பல ஞானிகளை அனுப்பி வைத்து நமக்கு எளிய உபதேசங்களை செய்கிறான்

நாம் அறிந்த ஞானிகளில் தலைசிறந்தவர் பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர் அர்பணிப்பு என்றால் எப்படி இருக்கும் அதை எப்படி செய்வது என்று மிக எளிமையாக விளக்குகிறார் ஒரு வேலைக்காரி தான் வேலை செய்யும் வீட்டில் உள்ள எல்லா பொருட்களையும் தொட்டு பரிமாறுகிறாள் தனது சொந்த பொருளை போல எடுத்து அனுபவிக்கிறாள் அதே நேரம் அவளுக்கு மிக நன்றாக தெரியும் இவை யாவும் நமக்கு சொந்தமானது அல்ல அதில் எந்த உரிமையும் தான் கொண்டாட முடியாது என்று அதானால் அவள் நாளைக்கே அந்த பொருட்கள் அனைத்தையும் இழந்தாலும் இல்லை என்றாலும் துக்கப்படாமல் சந்தோசமாக வாழ முடியும்

நீயும் நானும் இந்த பூமியில் வாழ்வது என்பது ஒரு எஜமானன் வீட்டில் வேலைக்காரி இருப்பது போல் தான் இங்கு இருக்கும் எதுவும் நமக்கு சொந்தமானது அல்ல இன்று நாம் தொடுவதை நாம் பரிமாறுவதை நாம் அனுபவிப்பதை நாளை வேறுயாரோ அனுபவிக்க போகிறார்கள் இவைகளில் எஜமானன் சொந்தக்காரன் கடவுள் தான் என்ற எண்ணம் நமக்குள் வளருமேயானால் அதுதான் அர்பணிப்பின் முதல் படி ஆசையை துரப்பத்தின் முதல் அத்தியாயம்


கடவுள் தான் எல்லாவற்றிற்கு முழு அதிகாரி என்பதை நன்றாக உணர்ந்த நமது முன்னோர்கள் அவனை ஸ்வாமி என்ற வார்த்தையால் அழைத்தார்கள் ஸ்வாமி என்ற வடமொழி சொல்லுக்கு உடையவர் என்பது நேரான தமிழ் அர்த்தமாகும் திருவேங்கடமுடையார் திருசிற்றம்பலமுடையார் என இறைவனை அழைத்ததும் இதனால் தான் இந்த ஆகாயம் இந்த மண் இதில் ஓடும் நதி ஓங்கி நிற்கும் மரம் ஆர்பரிக்கும் கடல் வீசும் காற்று பற்றி எரியும் நெருப்பு மனிதன் மிருகம் பறவை எல்லாமே கடவுளின் உடமை கண்ணுக்கு தெரியும் கண்ணுக்கு தெரியாத பொருட்களெல்லாம் கூட அவனுக்கு சொந்தமானது அதனால் தான் அவன் பெருயுடையார் என்று அழைக்கப்படுகிறான்

நீர் குமிழி போன்ற மனித வாழ்க்கையில் பலநூறு வருசங்கள் நிரந்தரமாக வாழப்போவதாக நினைத்துக்கொண்டு எல்லாமே எனக்கு எதுவுமே நான் தான் என கொக்கரித்துக்கொண்டு துன்ப மூட்டையை கட்டுக்கட்டாக சுமந்து கொண்டு அலைகிறோமே உண்மையில் இந்த உலகமும் என் உடலும் கூட கடவுள் ஒருவனுக்கு தான் சொந்தம் என்று உணர்ந்து விட்டால் நமக்கு அலைச்சல் ஏது? ஓடி ஓடி களைப்பு ஏது? ஒரு ஆசையும் ஒரு துவசமும் நம்மை அண்டவே அண்டாது அதனால் துக்கமில்லாது வாழவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நானொரு தொழிலாளி என்ற சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள் அந்த சின்ன செடி வளர்ந்து பெரிய மரமாகி நிறைய பேருக்கு நிழல் தரும்.
Contact Form

Name

Email *

Message *