Store
  Store
  Store
  Store
  Store
  Store

யார் காதல் வெல்லும்? ஜோதிட விளக்கம்


      ன்பார்ந்த யோகி ஸ்ரீ ராமானந்த குரு அவர்களுக்கு பணிவான வணக்கம் நான் இலங்கை வல்வெட்டிதுறையில் இருந்து சிவத்தம்பி யோகராஜா எழுதிகிறேன் கடந்த ஆறுமாத காலமாக உங்களது பதிவுகளை ஒரு நாள் கூட விடாமல் படித்து வருகிறேன் நீங்கள் எழுதுகிற விடயங்கள் அனைத்தும் அற்புதம் மிகவும் அபூர்வமான ஆக்கபூர்வ தகவல்களை தந்து எங்களை பிரம்மிக்கும் படி செய்கிறீர்கள் இன்றைய காலகட்டத்தில் எமது தமிழ் மக்கள் பல்வேறு தேசங்களில் பரவிவாழ வேண்டிய சூழலில் உங்களை போன்ற ஆன்மிக பெரியவர்கள் நம் பண்பாட்டை அவர்களுக்கு தெளிவாக கற்பிக்க வேண்டிய நிலை உள்ளது அதை நீங்கள் சரியாகவே செய்கிறீர்கள் அதற்கு முதலில் எனது பணிவான நன்றிகள் 

ஐயா நான் ஓரளவு படித்தவன் என்றாலும் சராசரியான சிந்தனையோடு வாழுகின்ற மனிதன் எனக்கு அதிரவைக்கும் இன்றைய நாகரீக உலகத்தை பற்றி அவ்வளவாக தெரியாது அதை நான் தெரிந்து கொள்ள ஆசைபடவும் இல்லை ஐம்பது வயதிற்கு மேல் அதை தெரிந்து ஆகப்போவது ஒன்றும் இல்லை ஆனாலும் காற்று தெருவில் வீசினாலும் அது வாரிவரும் குப்பை வீட்டுக்குள் இருப்பவனையும் தாக்குமல்லவா ஆதே போலவே இன்றைய நாகரீக போக்கால் என் மனம் மிகவும் சங்கடத்தில் உள்ளது அதை நீங்கள் தான் நல்வழி காட்டி திருப்தி படுத்த வேண்டும் 

எங்கள் நாட்டு பிரச்சனை நீங்கள் அறியாதது அல்ல எங்கள் வாழும் சூழலில் ஆண் குழந்தைகளை உயிரோடு காப்பாற்றுவதே பெரும்பாடு அதனால் கடனுடன் பட்டாவது ஆண் மக்களை அயல்நாடுகளுக்கு அனுப்பிவிடவே நாங்கள் விரும்புவோம் அதே போல தான் எங்கள் ஒரே மகனை கனடா நாட்டிற்கு மிகவும் சிரமப்பட்டு அனுப்பி வைத்தோம் அவர் போனவுடன் நன்றாகத்தான் இருந்தார் அதன் பிறகு சிறிது காலத்தில் ஒரு கனேடிய பெண்ணை விரும்ப ஆரம்பித்து அவளை தான் கல்யாணம் முடிப்பேன் என்று அடம்பிடிக்கிறான் நாங்கள் எங்கள் மகன் காதல் திருமணம் செய்து கொள்வதை தடுக்கவில்லை ஆனால் அந்த பெண் ஈழ நாட்டு பெண்ணாக இருக்க வேண்டும் என்று விருபுகிறோம் அது எங்கள் மகனுக்கு விளங்கவில்லை 

அவர் காதலிக்கும் கனேடிய பெண் அவரை விட வயதில் மூத்தவர் இதற்கு முன்பு திருமணமாகி விவாகரத்தும் வாங்கியவள் இந்நிலையில் இவர்கள் திருமணம் நடந்தால் அதன் முடிவு நன்றாக இருக்காது என்று நாங்கள் பயப்படுகிறோம் எங்கள் மகன் அருகில் இருந்தால் புத்தி சொல்லி திருத்தலாம் வெகு தூரத்தில் இருக்கும் பிள்ளையை கடினமாக கதைத்து வழிக்கு கொண்டுவரவும் பயப்படுகிறோம் அவசரப்பட்டு விபரீத முடிவுகளை அவர் எடுத்து விடுவாரோ என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது ஆனாலும் ஈஸ்வரன் எழுதியப்படிதான் எல்லாம் நடக்கும் என்பது எங்களது அசைக்க முடியாத நம்பிக்கை அதனால் என் மகனின் ஜாதகத்தை உங்களுக்கு அனுப்பி உள்ளேன் 

அவர் அயல்நாட்டு பெண்ணை காதல் திருமணம் செய்வாரா? அப்படி செய்யாமல் தடுக்க முடியுமா? மீறி அந்த திருமணம் நடந்தால் அவர்கள் சந்தோசமாக வாழ்வார்களா? என்பது எங்களுக்கு தெரியவில்லை நீங்கள் தயவு செய்து ஜாதகத்தை கணித்து பார்த்து விளக்கம் தரும்படி வேண்டுகிறேன் அவர் வெளிநாட்டு பெண்ணைத்தான் மணமுடிப்பார் என்று நீங்கள் சொன்னால் அதன் படி எங்கள் மனதை தேற்றி கொள்கிறோம் எத்வாக இருந்தாலும் மறைக்காமல் சொல்லுங்கள் அது எங்கள் மனதிற்கு கட்டாயம் சாந்தியை தரும் 
சிவத்தம்பி யோகராஜா, இலங்கை 


   ன்புள்ள சகோதரருக்கு உங்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் உங்கள் கடிதம் முழுவதையும் படித்தேன் நீங்கள் சொல்லியிருக்கும் பிரச்சனை உங்களுக்கு மட்டும் நேர்வது அல்ல இன்றைய நிலையில் பல ஈழ பெற்றோர்களின் இளைஞர்களில் வாழ்விலும் நடந்து கொண்டிருக்கும் நிஜ பிரச்சனையாகும் ஒரு நாட்டில் ஏற்படும் அரசியல் யுத்தம் அந்நாட்டு மக்களை எந்த அளவு பாதிக்கும் என்பதை இதன் மூலம் தெளிவாக அறியலாம் சாதரணமாக ஒரு மனிதன் தான் பிறந்த மண்ணை விட்டு வேற்று பூமியில் வாழ்வது என்பதே வனவாசம் போன்றது அதுவும் அறியாத வயதில் நல்லது கெட்டதை தீர்மானிக்க முடியாத பருவத்தில் அயல்நாட்டில் வாழ்வது என்பது கொடுமையிலும் கொடுமை ஆனால் இத்தகைய துர்பாக்கிய நிலையை நம் தமிழ் மக்கள் பல காலமாக அனுபவித்து வருகிறார்கள் அந்த நிலை விரைவில் மாறும் நமது வாழ்விலும் வசந்த காற்று வீசும் என்று நம்புவோம் அதற்காக இறைவனை பிரத்தனை செய்வோம் 

திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் ஏற்படும் மிக முக்கிய நிகழ்வாகும் அந்த திருமணம் மட்டும் சரியான முறையில் அமைந்து விட்டால் மனித வாழ்க்கை என்பது தெய்வ நிலைக்கு உயர்ந்து விடும் ஆனால் பலரின் வாழ்வில் அப்படி எதுவம் நல்லதாக நடப்பது இல்லை பாடுபட்டு கட்டிய மண் வீட்டை கடல் அலை ஒரே வீச்சில் அழித்து போடுவது போல் திருமணம் என்பது நிறைய பேர் வாழ்வை திசை மாற்றி திருப்பி போட்டிருக்கிறது பெற்றோர்களால் பார்த்து நடத்தப்படும் திருமணங்களாக இருந்தாலும் காதலித்து தாங்களாக ஏற்படுத்தி கொள்ளும் திருமணமாக இருந்தாலும் அது செம்மையாக அமைவது அமையதாததும் கடவுள் கையிலேயே இருப்பதை அனுபவத்தில் உணர்கிறோம் 

ஒரு மனிதன் காதல் திருமணம் செய்வானா மாட்டானா என்பதை அவன் ஜாதகத்தில் புதன் கிரகம் எப்படி அமைந்துள்ளது என்பதை வைத்து முடிவு செய்து விடலாம் பொதுவாக சுக்கிரனை தான் காதல் கிரகம் என்று சொல்வார்கள் ஆனால் அது மனிதனின் ஒழுக்கத்தையும் அழகையும் பாலியல் பலத்தையும் காட்டுமே தவிர திருமணத்தை பற்றி எதுவும் உறுதியாக சொல்லாது அதனால் புதன் கிரகத்தின் தன்மையைத்தான் ஆராய வேண்டும் 

ஒருவனின் ஜாதகத்தில் புதனும் கேதுவும் சேர்க்கை பெற்றால் அவன் காதலில் வீழ்வதை தவிர்க்க முடியாது என்று அகத்தியர் சொல்கிறார் மேலும் அகத்தியர் புதன் இருக்கும் இடத்திலிருந்து கேது ஒன்று இரண்டு ஐந்து ஒன்பது ஆகிய இடங்களில் கேது அமைந்திருந்தால் நிச்சயம் காதல் திருமணம் தான் நடக்குமென்று அடித்து பேசுகிறார் மேலும் ஒருவன் காதலில் வெல்வான வீழ்வான என்பதை குரு சுக்கிரன் ஆகிய கிரகங்கள் புதனொடு சம்மந்தபடுவதை வைத்து சொல்லிவிடலாம் 

உங்கள் மகன் ஜாதகத்தில் புதன் செவ்வாயோடுதான் சம்பந்தபடுகிறார் எனவே அவர் காதல் வெற்றி அடைய முடியாது மேலும் சந்திரனும் புதனொடு சம்பந்தபடுவதால் காதலால் உங்கள் மகன் அவமானப்பட போகிறார் என்று சொல்லவேண்டும் எனவே நீங்கள் விரும்பியபடி அவர் காதல் நிறைவேறாது அதன் முடிவு சில பிரச்சனைகளை ஏற்படுத்துமே தவிர பெரிய பாதிப்பை தராது 

உங்கள் மகன் ஜாதகத்தில் ஏழாம் பாவம் வலுவாக இருப்பதால் நீங்கள் பார்க்கும் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வார் ஆனால் அந்த திருமணம் இப்போது நடக்காது 2013 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் நடக்கும் என்று உறுதியாக சொல்லலாம் காதலால் அவமானத்தை பெரிய அளவு அவர் சந்திக்காமல் இருக்க பிரதோஷ வேளைகளில் சிவ பெருமானை வழிபடவும் எல்லாம் நன்மையாக முடியும்.


Contact Form

Name

Email *

Message *