Store
  Store
  Store
  Store
  Store
  Store

நானே அடுத்த பிரதமர்...!


     ங்கே சொல்லப்படுகிற தகவல்கள் அனைத்தும் நயமான நகைச்சுவைக்கு ஏற்ற கற்பனையே ஆகும் ஒரு வேளை இவர்களின் மனம் இப்படி உணமையாக சிந்தித்தால்... என்று எண்ணிப்பார்த்தேன் அதன் விளைவே இன்றைய பதிவு 

மன்மோகன் சிங் 

    காலையில் கண்விழித்ததும் இன்றைய நாளிலாவது நாட்டுக்கு எதாவது நல்லது செய்ய வேண்டும் ஏறுக்கு மாறாக நடக்கின்ற அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சாட்டையில் சொடுக்கி வேலைவாங்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும் குளித்து முடித்து ஆடையை மாற்றுகிறேனோ இல்லையோ அம்மையாரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும் காலையில் தோன்றிய எண்ணங்கள் எல்லாம் நீர் குமிழி போல மறைந்து போய்விடும் அதை செய் இதை செய் அப்படி நடக்காதே இப்படி பேசு என்று அவர்கள் போடும் கட்டளை ஒவ்வொன்றுக்கும் தலையாட்டியே கழுத்து வலிக்கும் சரிதான் நீயுமாச்சி உன் அதிகாரமும் ஆச்சி என்று பதவியை தூக்கிபோட்டு விட்டு நடையை கட்டலாம் என்று தோன்றும் அப்படி தோன்றிய மறு வினாடியே பதவி இல்லை என்றால் அதிகாரிகள் அடிக்கும் சல்யூட்டும் உயர்ரக பாதுகாப்பும் மாலை மரியாதைகளும் இல்லாமல் போய்விடுமே என்று தோன்றும் என்ன செய்வது பதவி சுகத்திற்காக தலையை ஆட்டி பிழைப்பு நடத்த வேண்டியதுதான் 

சோனியா காந்தி 

    ந்த நாடு மிகவும் நல்ல நாடு இதுவே இத்தாலியாக இருந்தால் திருமணம் செய்து வந்த ஊரில் அதிகாரம் பண்ண அனுமதிப்பார்களா? அடடா இந்தியர்களின் பரந்த மனமே மனம் அரசியல் தெரியுமா நமக்கு நிர்வாகம் தான் செய்ய தெரியுமா? அட அவைகள் கூட வேண்டாம் இந்தியாவின் சரித்திரம் தான் தெரியுமா? இந்திர காந்தி ராஜுவ் காந்தி இவர்களை தவிர வேறு யார் வேறு எது நமக்கு தெரியும். ஒன்றுமே தெரியாமல் ஆட்சி நடத்தும் மாயாஜாலம் இந்தியாவில் தவிர வேறு எங்கு செய்ய முடியும். ஆயிரம் தான் கொள்ளையடித்தாலும். கொலைபாதக செயல்களுக்கு கூட்டு போனாலும். எதை பற்றியுமே கவலை படாது வாழ்கவென்று கோஷம் போடும் மக்கள் உலகில் எந்த மூலையில் தேடுனாலும் கிடைப்பார்களா? இந்தியாவில் அத்தகைய மக்கள் கூட்டம் தாரளமாக இருக்கிறதே பிறகென்ன கவலை குருடன் கையில் சிக்கிய விலாங்கு குரங்கு கையில் கிடைத்த பூமாலை போன்ற பழமொழிகள் நமக்கு தான் நன்றாக பொருந்தும் ஆனால் இது இங்கே யாருக்கு புரிய போகிறது. ஆடும் வரை ஆடுவோம் ஆட்டம் நின்றால் இருக்கவே இருக்கிறது இத்தாலி.


ராகுல் காந்தி 

   திறந்த வெளி பைத்தியக்கார ஆஸ்பத்திரி இந்தியா தான் ஒரு மாதத்துக்கு முன்பே டீ கடையை தேர்ந்தெடுத்து பாதுகாப்பு ஏற்பாடெல்லாம் பக்காவா செய்து ஓட்டை குவளைக்குள் நல்ல டம்ளரை சொருகி உயர்ரக தேயிலையில் போடுகின்ற தேனீரை தீடிரென்று யாரும் எதிர்பாராமல் வண்டியிலிருந்து இறங்கி போய் குடிப்பேனாம் அதையும் பாராட்டி பத்திரிக்கைகள் எழுதுமாம் ராகுலை போல் எளிமையானவர் யாருமே இல்லை என்று மேடையில் பேசுவார்களாம் மக்களும் கைதட்டுவார்களாம் இதை பைத்தியக்காரர்களின் கும்மாளம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல என்ன செய்வது பிரதமர் பதவியை பிடிக்க வேண்டுமென்றால் இப்படியெல்லாம் குட்டிக்கரணம் போட்டுத்தான் ஆகவேண்டியிருக்கிறது பதவியை பிடித்து விட்டால் மக்களை குட்டிக்கரணம் போடவைக்கலாம் அதுவரை இந்த பைத்தியங்களோடு ஆடவேண்டியது தான் எல்லாம் தலையெழுத்து 


ஜெயலலிதா 

   டுத்த பிரதமர் அத்வானியா நரேந்திர மோடியா இல்லையென்றால் இதே மன்மோகன் சிங்தானா என்று பேசுகிறார்களே இவர்கள் யாருக்கும் ஜெயலிதா என்ற ஒரு மாமேதை இருப்பது தெரியவே இல்லையே எனக்கு என்ன குறைச்சல் நன்றாக ஆங்கிலம் பேசுவேன் எழுதி கொடுத்ததை ஏற்ற இறக்கத்தோடு படித்து காட்டுவேன் வெளிநாட்டு தலைவர்களும் தூதர்களும் வந்தால் என்னை போல் சிரித்து வரவேற்க இவர்களில் யாருக்கேனும் தகுதி இருக்கிறதா என்ன? பதவி காலம் முழுவதும் அயல் நாட்டு சுற்று பயணத்திலேயே இருப்பேன் நான் நாட்டில் இல்லாத போது சசிகலாவை பொறுப்போடு நாட்டை கவனித்துக்கொள்ள கட்டளையிடுவேன் பிரதமரை போற்றி புகழ்வதற்கு என்றே தனி இலாக்கா ஏற்படுத்துவேன் மக்கள் பார்த்து சந்தோசப்பட துர்கா பூஜை காலத்தில் பார்வதி தேவியாகவும் மற்ற நேரங்களில் பாரத தேவியாகவும் என்னை சித்தரித்து நாடு முழுவது கட்டவுட் வைக்க சொல்வேன் பாராளு மன்ற கட்டிடத்தை ஒரே நாளில் சட்டம் போட்டு சென்னையில் மைய பகுதியில் வாஸ்து முறைப்படி சதுரமாக கட்டுவேன் டெல்லியில் உள்ள பழைய பாராளுமன்ற கட்டிடத்தை மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் கிரிக்கெட் மைதானமாகவும் ஆக்குவேன் விளையாட்டு இல்லாத நாளில் சினிமா சூட்டிங் நடத்தவும் பிரதமருக்கு பாராட்டு விழா நடத்தவும் பயன்படுத்த சொல்வேன் மிக முக்கியமாக தினசரி புதிய புதிய மந்திரிகளை நியமிப்பேன்


Contact Form

Name

Email *

Message *