( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

வயதான வீட்டை இடிப்பதா...?  • ங்கள் வீடு மிகவும் பழமையானது சுமார் எண்பது வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாகும் மிக சாரியான வாஸ்து சாஸ்திர கணிதப்படி வீடு அமைந்துள்ளது தலைமுறை தலைமுறையாக அதில் வாழும் நாங்கள் நலமாகவே இருக்கிறோம் இருந்தாலும் சிலர் எந்தவொரு வீட்டிலும் அறுபது வருடங்களுக்கு மேல் புதியதாக மாற்றியமைக்காமல் வாழக் கூடாது என்கிறார்கள் அப்படி என்றால் எங்கள் வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டித்தான் ஆக வேண்டுமா? விளக்கம் தரவும் 
சரவணன் திருச்செந்தூர்


   ல்ல முறையில் உறுதியாக உங்கள் வீடு அமைந்திருந்தால் அதை இடிக்க வேண்டிய அவசியம் இல்லை

ஆனாலும் வாஸ்து சாஸ்திரம் ஒரு வீட்டில் தெய்விக சக்திகள் அறுபது வருடங்கள் மட்டுமே தாங்கும் என்றும் அதன் பிறகு புதியதாக அந்த சக்திகளை வீட்டிற்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்று சொல்லுகின்றன

இப்படி சொல்வதை தான் சிலர் தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டு வயதான வீட்டை இடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்

புதியதாக தெய்வ சக்திகளை வீட்டிற்கு கொண்டுவர வேண்டுமென்றால் அதற்கு இடித்தலை தவிர வேறு சில நல்ல வழிகளும் உள்ளன

அதாவது சிறிய ஓட்டை உடைசல்களை சரி செய்து புதிய வர்ணம் தீட்டி நவக்கிரக ஹோமம் சுதர்சன ஹோமம் இவற்றுடன் வாஸ்து சாந்தி ஹோமம் போன்றவற்றை செய்ய வேண்டும்

மிக முக்கியமாக குலதேவதை இஷ்டதேவதை போன்றவைகள் வீட்டிற்குள் நிரந்தரமாக வாசம் செய்ய லஷ்மி நாராயண ஹோமம் செய்ய வேண்டும்

இப்படி செய்து வீட்டிற்குள்ளேயே அன்றைய தினத்தில் உறவினர் மற்றும் ஏழைகளுக்கு அறுசுவை விருந்து கொடுக்க வேண்டும்

இயன்ற வரையில் வஸ்திர தானம் செய்வது நல்லதாகும் இப்படி செய்தாலே போதுமானது

முப்பாட்டன் கட்டிய வீட்டில் சந்தோசமாக வாழலாம்

Next Post Next Post Home
 
Back to Top