Store
  Store
  Store
  Store
  Store
  Store

விபத்தில் சிக்கும் ஜாதகம்...!


    ன் மனைவி ஒரு ஜோதிட பைத்தியம் ஊரில் யாரவது ஜாதகம் பார்க்கிறார்கள் என்றால் இவள் தான் முதலில் போய் நிற்பாள் ஜோதிடர்கள் சொல்லும் எல்லா பரிகாரத்தையும் கனகச்சிதமாக செய்து முடிப்பதில் அவளுக்கு நிகர் அவள் தான் இத்தகைய புண்ணியவதியான என் மனைவி சென்ற வாரம் ஒரு ஜோதிடரை பார்த்திருக்கிறாள் அந்த பாழாய் போன மகாபுருஷர் உன் கணவனுக்கு கண்டம் சாலை விபத்தில் செத்தாலும் செத்துவிடுவான் ஜாக்கிரதையாக பார்த்துக்கொள் என்று சொல்லியிருக்கிறார் 

என் வேலையோ வாகனம் வாங்க வங்கி கடன் கொடுத்துவிட்டு அதை வசூல் செய்வதற்கு நாலு இடத்திற்கு நாயாய் அலையை வேண்டிய பிழைப்பு வாரத்திற்கு இரண்டு பேரிடமாவது வசூலாகவில்லை என்றால் மேலதிகாரி கழுகு கொத்தியே கொன்றுவிடும் இதற்காக மோட்டார் சைக்கிளில் பேய்மாதிரி ஓட வேண்டும் இதை உணராத மனைவி வீட்டை விட்டே பைக்கை எடுக்காதே என்கிறாள் 



  விபத்தில் தான் சாகவேண்டும் என்ற விதி இருந்தால் வீட்டுக்குள் பரண் மீது ஏறி உட்கார்ந்திருந்தாலும் ஓடு தலைமீது விழுந்து செத்துபோவோம் இது என் பெண்டாட்டிக்கு புரியவில்லை விளக்கி சொல்லப்போனால் கடுவன் பூனை மாதிரி விழுந்து புரண்டுகிறாள் தொல்லை தாங்க முடியவில்லை வெளியில் போகமுடியாமலும் போனால் நிம்மதி இல்லாமலும் தவியாய் தவிக்கிறேன் 

இந்த நிலையில் நீங்கள் எழுதும் ஜோதிட கேள்வி பதில்களை என் நண்பன் இன்டர்நெட்டில் படித்தானாம் உங்களை பற்றி ஆகா ஓகோ என்று புகழ்ந்து சொன்னான் அதை நான் நம்ப வில்லை இருந்தாலும் உங்கள் பதிவுகளில் சிலவற்றை படிக்கும் போது எதோ ஒரு உண்மை கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது 

உங்கள் மீது முழுமையான நம்பிக்கை இல்லாமல் தான் இந்த கேள்வியை கேட்கிறேன் நான் இப்படி சொல்வதனால் தயவு செய்து கோபப்பட வேண்டாம் எப்போதுமே உண்மை பேசுவது எனக்கு பிடிக்கும் அதனால் தான் என் அவநம்பிக்கையை முதலிலேயே சொல்லிவிட்டேன் 


ஒரு மனிதன் விபத்தில் சாவானா? வயதாகி சாவானா? என்பதை கூட ஜோசியத்தில் சொல்ல முடியுமா? அப்படி முன்கூட்டியே சொல்வதாக இருந்தால் தினசரி நடைபெறும் எதிர்பாரா விபத்துக்களை தடுத்துவிடலாமே என்ற எண்ணம் தோன்றுகிறது முடிந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள் 

அடுத்தது எவ்வளவு தான் குதர்க்கம் பேசினாலும் மனதில் எதோ ஒரு மூலையில் சிறிய அச்சம் ஒட்டிக்கொண்டு இருப்பதனால் என் ஜாதகத்தையும் இத்தோடு அனுப்பியுள்ளேன் அதையும் பார்த்து என் மனைவியின் பயம் நியாயமானதா? இல்லையா என்பதை சொல்லவும் தவறுதலாக நான் உளறி இருந்தால் மன்னிக்கவும் 
துரைசாமி, திண்டுக்கல்



    ண்பர் துரைசாமியின் கடிதத்தை படிக்கும் போது அவர் அடைந்துள்ள வெறுப்பும் எரிச்சலும் கூடவே மெலிதாக தெரியும் அச்சமும் நன்கு விளங்குகிறது நமது அன்றாட வேலைக்கு ஜோதிடம் குறுக்கே வரும் போது மனதில் விவரிக்க முடியாத குழப்பங்கள் ஏற்படுவது சகஜமானது 

ஒருவனின் ஜாதகத்தை வைத்து அவனுக்கு ஏற்படும் எல்லாவிதமான நன்மை தீமைகளை ஓரளவு ஆராய முடியும் எனும் போது விபத்துக்களையும் ஆராயலாம் என்பதே ஜோதிட சாஸ்திரத்தின் முடிவாகும் சரியான முறையில் கணிதம் செய்து சொல்லப்படும் ஜோதிட பலன்கள் எப்போதுமே தவறுவது இல்லை அதாவது ஜோதிடர்கள் தவறு செய்யலாம் ஜோதிடம் தவறு செய்யாது 

பொதுவாக ஒரு ஜாதகனின் உயிரை குறிப்பிடும் கிரகம் லக்கினாதிபதியாகும் உடலில் ஏற்படும் காயங்களை குறிக்கும் கிரகம் செவ்வாய் மரணத்தை சுட்டிக்காட்டுவது ராகு விபத்து மற்றும் அகால மரணத்தை செவ்வாயும் ராகுவும் குறிப்பதாக சப்தரிஷி நாடி ஜோதிட ஏடுகள் சொல்லுகின்றன 

லக்கினத்திலோ அல்லது லக்கினத்தின் திரிகோண அமைப்பிலோ செவ்வாய் ராகு ஆகிய இரண்டு கிரகங்களும் சேர்க்கை பெற்று இருந்தால் விபத்துக்களால் காயமோ மரணமோ ஏற்படும் என்று சொல்கிறார்கள் அதை போலவே லக்கினாதிபதி இருக்கும் இடத்திலிருந்து மூன்று ஐந்து ஒன்பது ஆகிய வீடுகளில் செவ்வாய் ராகு இருந்தால் ஜாதகருக்கு கண்டிப்பாக விபத்து மூலம் மரணம் ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது 

உங்கள் ஜாதகத்தை துல்லியமாக கணக்கிட்டு பார்த்தேன் அதில் உங்கள் மூன்றாம் வீட்டிற்கு உரிய கிரகம் உள்ள இடத்திலிருந்து திரிகோண ஸ்தானத்தில் செவ்வாய் மற்றும் ராகு இருக்கிறது இது உங்களுக்கு ஏற்பட போகும் விபத்தை பற்றி சொல்லவில்லை மாறாக உங்கள் இளைய சகோதரனுக்கு விபத்து ஏற்படும் என்றே சொல்கிறது எனவே ஜோதிடத்தின் அபாய எச்சரிக்கை உங்களுக்கு அல்ல உங்கள் தம்பிக்கு இதை ஜோதிடர் தவறுதலாக குறிப்பிட்டு இருக்கிறார் அதனால் நீங்கள் உங்கள் வேலையை தைரியமாக தொடர்ந்து செய்யலாம் ஆனால் உங்கள் தம்பியை ஆறுமாத காலத்திற்கு சற்று ஜாக்கிரதையாக இருக்க சொல்லுங்கள் 

மேலும் உங்கள் தம்பியின் ஆயுள் என்பது உங்கள் ஜாதகத்தை மையமாக வைத்து முழுமையாக சொல்லமுடியாது அது அவர் ஜாதகம் மற்றும் அவரின் குழந்தைகளின் ஜாதகத்தை பொறுத்தே அமையும் எனவே அவரும் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை சற்று பாதுகாப்பாக இருப்பதில் தவறும் இல்லை என்று கருதுகிறேன் 

மேலும் தினசரி நடைபெறும் விபத்துக்கள் மனிதர்களின் கவனதடுமாற்றத்தால் ஏற்படுவதாக விபத்தை பற்றி ஆராய்பவர்கள் சொல்கிறார்கள் சம்மந்தபட்ட மனிதர்கள் தங்கள் ஜாதக பலன்களை கவனத்தில் கொண்டு பயணம் செய்தால் விபத்துக்கள் குறையும் என்பது எனது நம்பிக்கை.


Contact Form

Name

Email *

Message *